அத்தியாயம் -14

“ஏன் ரியா? அங்கிள் தான் பெரிய ஹாஸ்பிடல்லே பண்ணாத்தான் நல்லது-னு சொன்னார்-னு சொன்னே இல்லே? அப்புறம் ஏன் திருப்பி திருப்பி நோண்டறே?”-னு சிரிச்சா ஆனந்தியா. ப்ரதீப் ஒரு டாக்டர் ஃபேமிலியை சேர்ந்தவன். அவங்கப்பாவும் ஒரு கார்டியாலஜிஸ்ட் தான். அவங்களுக்கு சொந்தமான நர்சிங் ஹோம் ஒண்ணு இருந்துச்சு. அங்கே தான் டிரெயினிங் போகணும்-னு ப்ரதீப் வற்புறுத்தி அவங்க அப்பாகிட்ட கூட்டிட்டுப் போகவும், அவ படிக்கற பொண்ணு நிறைய கத்துக்கணும்-னு அவரோட எக்ஸ்-பார்ட்னரும் ஃப்ரெண்டும் ஆன டாக்டர் ப்ரேம்நாத்திடம் அனுப்பினார். ப்ரேம்நாத் ஒரு பெரிய மல்டி ஸ்பெஷாலிடி ஹாஸ்பிடல் ரன் பண்ணிட்டு இருந்தார். அங்கே நிறைய கேசஸ் எல்லாம் இருக்கும்கிறது ப்ரதீப்போட அப்பா, டாக்டர் சந்திரனோட எண்ணம். அவர் டாக்டர் ப்ரேம்நாத் கூட பேசி, அவர் நேர்லே வர சொல்லி இருந்தார். அவரை பார்க்கத்தான் நாளைக்குப் போறாங்க. 

“ம்ம்ம்… வேறே வழி என்ன இருக்கு?”-னு சிரிச்சுட்டு, “நான் போய் ஃப்ரெஷ் ஆகிட்டு வர்றேன். சேர்ந்து சாப்பிடலாம்”-னு பேக்கை தூக்கிட்டு உள்ளே போனா. “எப்படி இருந்தவ? நல்ல மாற்றம் தான்”-னு சிரிச்சார் நித்தியானந்தம். “ம்ம்ம்… ஆமாம்பா… எல்லா ப்ரதீப்போட உதவி தான். தங்கமான பையன்”-னு சொன்னார் நித்தியவாசன். “ஈஸ்வரா… நல்லது நடக்கட்டும்”-னு சுபத்ரா சொல்லவும் கடுப்பானார் நித்தியவாசன். “உன் அந்த நினைப்பை கொஞ்சம் மூட்டைக்கட்டி வச்சுட்டு, போய் சாப்பாடு எடுத்து வை. கொஞ்ச நாளா இல்லையே-னு பார்த்தேன்”-னு சொல்லவும், ‘நான் பார்த்துக்கறேன்’னு கண்ணால ஜாடை காட்டி அனுப்பினான் பரத். அன்னிக்கு நாள் எல்லாருக்கும் சந்தோஷமா போச்சு. அந்த சந்தோஷத்தோடவே படுக்கப் போனாங்க. ஆறு மாசம் ஆகியிருந்தாலும் நிகேஷ் சித்தியோடவே ஒட்டிக்கிட்டு, மதுரியா கூடத்தான் படுக்கப்போனான். அதனாலேயோ என்னவோ மதுரியா அன்னிக்கு ராத்திரி நிம்மதியா தூங்கினா. விதுரனோட நினைப்பு அவ தூக்கத்தை விரட்டலே. ஆனால் ஒரு மாதிரி அமைதியா போகிற வாழ்கையில அன்னிக்குத் தொடங்கி நிறைய திருப்பங்கள் வரப் போகுது.

அடுத்த நாள் காலையிலே அடர் சிவப்பு நிற குர்தா, வெள்ளை நிற லெக்கின்லே ரெடியாகி வரும் போது ப்ரதீப்பும் வந்திருந்தான். அவனும் ஃபார்மல்லே வந்திருந்தான். “என்ன தீப்? இவ்வளோ சீக்கிரம்?”-னு கேட்டுட்டே வந்தா மதுரியா. “வேலை இருக்கு ரியா. உன்னை கூட்டிட்டுப் போயிட்டு வந்து ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு. அப்புறம் ஈஸ்வரன் சாரை பார்க்கணும்”-னு சொன்னான் ப்ரதீப். “ஓ… வாங்க… டிபன் சாப்பிட்டுட்டுக் கிளம்பலாம்”-னு கூப்பிட்டா. டிபனை முடிச்சுட்டு டாக்டர்.ப்ரேம்நாத்தை பார்க்க ஹாஸ்பிடலுக்கு போனாங்க. ரிசப்ஷன்லே சொல்லிட்டு வெயிட் பண்ணும் போதே மதுரியாவுக்கு இனம்புரியாத டென்ஷன்.

 “ரிலேக்ஸ் ரியா.. ப்ரேம் அங்கிள் ரொம்ப கூல் டைப்”-னு சிரிச்சுட்டே சொன்னான் ப்ரதீப். “ஹேய்.. ப்ரதீப் ஹவ் ஆர் யூ? வாட் அ சர்ப்ரைஸ் மேன்”-னு வாட்ட சாட்டமா ஒருத்தன் வந்து ப்ரதீப் கூட கைக் குலுக்கி ஹக் பண்ணான். அவனும் சுமாரா அழகாவே இருந்தான். “நல்லா இருக்கேன். ஹவ்ஸ் லைஃப்?”-னு பதிலுக்கு கேட்டான் ப்ரதீப். “ஆல் குட்… அப்பாவை பார்க்கவா?”-னு கேட்டான் அந்த புதியவன். “ஆமா.. உன் வைஃப் எப்படி இருக்கா? எப்போ வர்றாங்க?”-னு கேட்டான் ப்ரதீப். அந்த புதியவன் முகத்துலே லேசான சலனம், யோசனை. ஆனா அது பொய்யோ-னு நினைக்கற அளவுக்கு வந்த சுவடே தெரியாம போச்சு. “ம்ம்ம்… ஷீ ஈஸ் ஃபைன். மேடம் மேல் படிப்பு முடிக்காம வரமாட்டாங்க… சீக்கிரம் இண்ட்ரோட்யூஸ் பண்றேன்”-னு சொல்லிட்டு மதுரியாவை அளவெடுத்தான் அவன்.

“என்ன விஷயம்டா? இவ்வளோ காலையிலே அப்பாவை பார்க்க வந்திருக்கே?”-னு பாதிக் கண்ணுலே மதுரியாவை பார்த்துட்டே, “ஓ சாரி, மறந்தே போயிட்டேன். மீட் மை டியரெஸ்ட் ஃப்ரெண்ட் மதுரியா… டாக்டர் மதுரியா. இவளோட டிரெயினிங் விஷயமா நான் அங்கிளை பார்க்க வந்தேன். ரியா, இவன் அசோக். எம் பி பி எஸ் ஒண்ணா படிச்சோம். டாக்டர்.அசோக் ப்ரேம்நாத். ப்ளாஸ்டிக் சர்ஜன்”-னு ரெண்டு பேரையும் ரெண்டுப் பேருக்கும் இண்ட்ரோட்யூஸ் பண்ணான். அசோக்கோட பார்வை மதுரியாவை ஊடுருவி ஆராய்ச்சி பண்ணுச்சு. அது மதுரியாவுக்கு கொஞ்சம் கூட பிடிக்கலே. அசோக்கோட விஷமம் நிறைஞ்சச் சின்ன கண்ணு, அவளுக்குள்ளே அவனைப் பத்தி ஒரு நல்ல அபிப்ராயத்தை குடுக்கலே. “ஓ… ஹை!”-னு அசோக் ஸ்டார்ட் பண்றதுக்குள்ளே ஃப்ரண்ட் டெஸ்க்-லே டாக்டர் ப்ரேம்நாத் கூப்பிடறதா சொல்லவும், மூணு பேருமே அவர் ரூமுக்கு போனாங்க. அவன் ஏன் கூட வர்றான்-னு நினைச்சாலும் மதுரியா கண்டுக்கலே.

டாக்டர்.ப்ரேம்நாத் ரூமுக்கு போனதும், “வெல்கம் யங் லேடி. ஐ அம் டாக்டர்.ப்ரேம்நாத். ஹாவ் யுவர் சீட்”-னு சொன்னார். கேசுவலா பேசிட்டு இருந்தார். நல்ல கணீர் குரலோட ஆர்ப்பாட்டமா பேசற மனுஷன். அவர் வயசோட அனுபவமும், அறிவும் பேச்சுலே தெரிஞ்சுது. மதுரியாவுக்கு அவரோட வெளிப்படையான பேச்சு ரொம்ப பிடிச்சுப் போச்சு. “சரிம்மா… லேசா ஒரு குட்டி இண்டர்வியூ. கேட்கலாமா?”-னு கேட்டார் டாக்டர்.ப்ரேம்நாத். “ஷ்யூர் சார்”-னு தயாரானா. ஆனா லேசான டென்ஷன்லே பக்கத்துலே இருந்த ப்ரதீப்போட கையை கெட்டியா பிடிச்சுக்கிட்டா. அதை கவனிச்ச அசோக்கோட முகம் சுருங்கிப் போச்சு. “இவங்க ரெண்டுப் பேரும் இருக்காங்களே?”-னு டாக்டர் ப்ரேம்நாத் ஸ்டார்ட் பண்ணதுமே, “நோ ப்ராப்ளம் அட் ஆல் சார்”-னு கான்ஃபிடண்டா சொன்னா. அவர் கேள்வி கேட்கவும் டாண் டாண்-னு பதில் வந்துச்சு. ரெண்டாவது கேள்வியிலேயே டென்ஷன் போயிடுச்சு. கையை ப்ரதீப் கிட்டே இருந்து எடுத்துட்டு கான்ஃபிடண்டா பதில் சொன்னா. டிஸ்கஸ் பண்ணா. டாக்டர்.ப்ரேம்நாத்துக்கு மதுரியாவை ரொம்ப பிடிச்சுப் போச்சு. ப்ரதீப் அவளையே சிரிப்போட பார்த்துட்டிருந்தான். அசோக்கும் மதுரியாவைப் பார்த்து புருவம் உயர்த்தினான்.

“வெரி குட்.. ஐ அம் வெரி ஹாப்பி… கீழே அட்மின் மேனேஜர் கிட்ட போய் பேசி லெட்டர் வாங்கிக்கோ.. சீ யூ சூன்”-னு மதுரியாவை அனுப்பி வைச்சார். அவ போனதும், “என்னடா… உங்கப்பா திடீர்-னு தியாகி ஆயிட்டான்?இவ்வளவு சூப்பரான ரெசிடெண்ட் இண்டர்னை எனக்கு குடுத்திருக்கான்”-னு டாக்டர் ப்ரேம்நாத் கேட்கவும் சிரிச்சான் ப்ரதீப். “நான் கூட சும்மா சீண்டறதுக்கு-னு தான் கேள்வி கேட்க ஆரம்பிச்சேன். அடேங்கப்பா… பின்னிட்டா”-னு சிலாகிச்சார் டாக்டர்.ப்ரேம்நாத். “சும்மா இல்லே அங்கிள்? க்ளாஸ் போக மத்த நேரம் குடியிருக்கறது லைப்ரரியிலே தான்”-னு சிரிச்சான் ப்ரதீப். “அப்படின்னா?”-னு கேட்டார் ப்ரேம்நாத். “படிப்பு தான் சாப்பாடே.. மத்ததுக்கெல்லாம் கயிறைக் கட்டித் தான் இழுக்கணும்”-னு சொன்னான் ப்ரதீப். ப்ரேம்நாத் பையனை ஒரு முறைப்பு விட்டார். “அப்புறம்டா… இந்த கல்யாணம்லாம் எப்போ பண்ணிக்க போறே?”-னு கேட்டார் ப்ரேம்நாத். “எது? இந்த ஜனத்தொகை பெருக்கற வேலை தானே? பண்ணலாம்… முதல்லே தொழில்லே ஏதாவது சாதிக்கலாம்”-னு அலட்சியமா சொல்லவும், இப்போ நல்லாவே அசோக்கை முறைச்சார்.

ப்ரதீப் ஒரு பெருமூச்சு விட்டு, “சும்மா முறைக்காதீங்க அங்கிள். ஒரு வருஷமாவா இன்னும் கோபத்தை வைச்சுக்கிறீங்க? அவனே பயந்துட்டு ஆளே யாரு-னு சொல்ல மாட்டேங்கறான். விடுங்க… நான் கிளம்பறேன். ரியாவை கூட்டிட்டு போகணும்”-னு எந்திரிச்சான். “என்னடா, டாக்டர் மருமகளா?”-னு கிண்டலா கேட்டார் ப்ரேம்நாத். “அங்கிள் அவ பேர்… முழுபேர் ஒழுங்கா படியுங்க.. அதுக்கப்புறம் கேளுங்க”-னு ஒரு விரலை பத்திரம் காட்டிட்டு கிளம்பினான். “நான் இவனை அனுப்பி வைச்சுட்டு என் அப்பாயிண்ட்மெண்ட் பார்க்க போறேன்”-னு கிளம்பினான் அசோக். “அப்போ கூடவே சுத்தினாலும் நல்லது மட்டும் ஒட்டவே ஒட்டாது போல”னு போறப் போக்குல சொல்லிட்டு வேலையை பார்க்க ஆரம்பிச்சார் ப்ரேம்னாத்.

அசோக் கண்ணுலே கனலும் பொறாமையும் பறந்துச்சு. ப்ரேம்நாத்துக்கு அவர் பையன் பேர்லே நிறைய வருத்தம் இருக்கு. நல்லா படிக்கறவன் தான். புத்திசாலிதான். ஆனா சகவாச தோஷம். பன்னிக்குட்டி கூட சேர்ந்த கன்னுக்குட்டியா மாறி இன்னிக்கு வரைக்கும் சேத்துலே புரள்றான். இவர் ப்ரதீப் பத்தி பேசி பேசி, நண்பன் மேலேயே பொறாமை வர ஆரம்பிச்சுது. ஒரு வருஷம் முன்னாடி ரகசியமா கல்யாணம் பண்ணிட்டான். அதுலே அவருக்கு இன்னும் வருத்தம், கோபம் எல்லாம். என்னமோ ப்ளாஸ்டிக் சர்ஜரியாவது ஒழுங்கா பண்றானே-னு ஆறுதல் பட்டுக்க வேண்டிய நிலைமை அவருக்கு. ப்ரதீப்புக்கும் ஃப்ரெண்டோட போக்கு பிடிக்கலே தான். ஆனா அவனை வெறுத்து ஒதுக்கவும் முடியலே.

“ஹோய்… அசத்திட்டே… அங்கிள் வாஸ் ஸோ ஹாப்பி”-னு பிரதீப் கேட்கவும், “லெட்டர் குடுத்துட்டாங்க. தேதி போடலைன்னு சொன்னாங்க. டேட் தெரிஞ்சதும் ஒன் வீக் முன்னாடி கால் பண்ணி சொல்ல சொன்னாங்க”-னு விவரம் சொன்னா மதுரியா. “சூப்பர்… யூ டிசர்வ் இட்”-னு ப்ரதீப் சொல்லவும், தன்னை கவனிக்கலே-னு தொண்டையை கனைச்சு தன் இருப்பை காட்டிக் கிட்டான் அசோக். “யெஸ்… ஐ வாஸ் ஆல்சோ ஸோ இம்ப்ரெஸ்ட் மது”-னு சொன்னான் அசோக். ‘மது’ங்கற அழைப்புலே அதிர்ந்து விறைச்சா மதுரியா. “வாட்? மதுவா?”-னு டக்-னு கேட்டா. “அதுதானே உங்க பேரு? தட்ஸ் ஹவ் பீபிள் ஐ மீன் ஃப்ரெண்ட்ஸ் கால் யூ ரைட்?”-னு ஸ்டைலா கேட்கவும், “தட்ஸ் நன் அஃப் யுவர் பிசினஸ்… என் பேரை சுருக்கி கூப்பிட நீங்க இன்னும் என் ஃப்ரெண்ட் இல்லே.. கால் மீ டாக்டர்.மதுரியா”-னு கடுக்-னு சொன்னா. அசோக் அதிர்ந்தே போனான். “நான் யார்-னு தெரிஞ்சும் என்கிட்ட யாரும் இப்படி பேசினதில்லே”ன்னு சொன்னான் அசோக்.

“ஸோ?”-னு அலட்சியமா சொல்லவும், “ஊப்ஸ்… ரியாம்மா எனக்கு அவசரமா ஒரு மீட்டிங் இருக்கு.. நீ பத்திரமா வீட்டுக்கு போ. ஐ வில் சீ யூ டுமாரோ”-னு குறுக்குலே பூந்தான் ப்ரதீப். “ஓகே, நான் கிளம்பறேன்”-னு கிளம்பினா மதுரியா. “இந்த கடுவன் பூனையைவா இவனுக்கு பிடிச்சிருக்கு? ஒரு வார்த்தைக்கு வாயை திறந்தா பல்லை புடுங்கறா”-னு தலையை குலுக்கவும், ப்ரதீப்போட போன் அடிச்சுது. “ஹாய்.. சொல்லுங்க பரத்! யெஸ்.. ப்ரொக்ராம் ஈஸ் ஆன்.. இதோ வர்றேன்… ஆமா… ரியாவை அனுப்பி வைச்சாச்சு”-னு பேசி வைச்சான். “யார்டா?”-னு கேட்டான் அசோக். “ரியாவோட மாமா. நான் கிளம்பறேன் அசோக். அப்புறம் பார்க்கலாம்”-னு கிளம்பினான். “இந்த ராங்கியவா அவனுக்கு பிடிச்சிருக்கு? ஆனா ரெண்டு ஃபேமிலியோட சேர்ந்து பழகற அளவுக்கு வந்துருச்சா? நந்தாவுக்கு அப்புறம் மூவ்-ஆன் ஆகவே மாட்டான்-னு நினைச்சா இந்தளவு வந்துருச்சா? அந்த ராங்கி இங்கே தானே வரப்போறா  பார்த்துக்கறேன்… உங்க லவ்வை உடைச்சு உன்னை பைத்தியமா சுத்த விடலே… நான் அசோக் இல்லேடி”-னு கறுவினான் ப்ரதீப்போட ஆருயிர் நண்பன் அசோக்! 

ஹாஸ்பிடல்லே ப்ரேம்நாத்தை மீட் பண்ணிட்டுக் கிளம்பினா மதுரியா. ரீனாவுக்கு போன் பண்ணி, அடையாறு ஆவின் பார்க்குக்கு வரச் சொன்னா. ஏற்கனவே மண்டைக் குடைச்சல்லே இருந்த ரீனாவும் பறந்து வந்தா. ஆளுக்கொரு ஐஸ்க்ரீமை வாங்கிட்டு பார்க்லே ஒரு நிழலா பார்த்து உட்கார்ந்தாங்க. “என்ன ரீனா மேடம்? நைட் எல்லாம் தூங்கலியா?”-னு கேட்ட மதுரியா. “அது… அது… வந்து”-னு ரீனா இழுக்கவும், “ரொம்ப இழுக்காதே.. அது தெரிஞ்சு தான் ஹாஸ்பிடல் வேலை முடிஞ்சதும் நேரா உன்னை பார்க்க ஓடி வந்தேன்”-னு ஐஸ்க்ரீமை சாப்பிட்டே சொன்னா மதுரியா. “நான் உன்னை நினைச்சுத் தான் தூங்கலே”-னு சொன்னா ரீனா. “அதுவும் தெரியும்”-னு சொல்லவும் ரெண்டுப் பேரும் சிரிச்சுட்டாங்க. “நீயும் நந்துவும் இருக்கீங்களே… எப்போவும் விளையாட்டு”-னு அவ தலையை தட்டினா ரீனா. “ஆமாமா! நீயும் அகல்யாவும் சீரியஸா இருந்து இப்போ ஜனாதிபதி ஆயிட்டீங்கள்லே? போடீ! ப்ச்!! அகலும் நந்துவும் இருந்தா நல்லாயிருக்கும்… ம்ம்ம்… அகல் கல்யாண பேச்சு எடுக்கறாங்க-னு மைசூர்லே ரெசிடென்ஷியல் ஸ்கூல்லே ஜாயின் பண்ணிட்டா… இந்த நந்து ஏதோ அஃபிஷியல் டிரிப் போயிட்டா”-னு பேசிட்டே ஐஸ்க்ரீமை சாப்பிட்டாங்க.

“ஹேய்… ஹாஸ்பிடல்லே என்னாச்சு? பார்த்து பேசினியா?”-னு கேட்டா ரீனா. “போனேன் ரீன்ஸ்… டாக்டர் ப்ரேம்நாத்.. ரொம்ப நல்லா பேசறார். சீம் டு பி வெரி நாலெட்ஜபிள்… ஆர்ப்பாட்டமான மனுஷன்”-னு சொன்னா மதுரியா. “சூப்பர் ரியா… எக்ஸ்பீரியன்ஸ்ட் டாக்டர் தான் இம்பார்டண்ட்-னு யாதவ் சார் சொல்லுவார்”-னு சொன்னா ரீனா. “ஆமா ரீனா… ரெண்டு மாசம் கழிச்சு டிரெயினிங்லே சேர்ந்ததும் பாட்டியோட ரிப்போர்ட்ஸ் காட்டி செகண்ட் ஒபீனியன் கேட்கணும். சர்ஜரிக்கு ஆப்ஷன் இருக்கா-னு. ஆகாஷ் நல்ல டாக்டர் தான் ஆனாலும் கேட்கணும்”-னு பெருமூச்சு விட்டா மதுரியா. “எப்படி இருக்காங்க பாட்டி?”-னு கேட்டா ரீனா. மதுரியா முகத்துலே சொல்ல முடியாத வலி. “இருக்காங்க ரீனா.. டயட் மருந்து-னு வெயிட் இறங்கிட்டாங்க. ப்ளாக்-னால நடமாட்டம்லாம் குறைஞ்சிடுச்சு. அப்பா அவங்க ரெண்டு பேருக்கும்-னு மூணாவது கார் வாங்கி டிரைவர் போட்டிருக்கார். கோயிலுக்கு அதுலே தான் போறாங்க.. இவ்வளோ நாள்லே ஆஞ்ஜினா வரலேங்கறது ஒண்ணு தான் குட் நியூஸ்”-னு வருத்தமா சொன்னா மதுரியா.

“விடு ரியா… பாட்டிக்கு ஒண்ணும் ஆகாது. அந்த காலத்து மனுஷி. உழைப்புலேயே உரமேறினவங்க.. கவலைப்படாதே”-னு ஆறுதல் சொன்னா ரீனா. “நானும் அப்படி நினைச்சுத் தான் என்னை தைரியப் படுத்திக்கிறேன். ஹேய்.. சொல்ல மறந்துட்டேன். ப்ரேம் சாருக்கு ஒரு பையன் இருக்கான்… டாக்டர் அசோக். ப்ளாஸ்டிக் சர்ஜனாம். வாத்தியார் பிள்ளை மக்குங்கற மாதிரி இருக்கான்”-னு கடுப்பா சொல்லவும், ரீனா சிரிச்சுட்டா. “என்னாச்சு ரியா?”-னு கேட்டா. “ம்ம்ம்.. தீப்போட ஃப்ரெண்டாம்..”-னு ஸ்டார்ட் பண்ணி ஃபுல் கதையும் சொன்னா. “போதுமே… உன்னை மது-னு கூப்பிட்டாலே வில்லன் ஆயிடுவான்.. அதுக்கு மேலே ஜொள்ளு வேறே”-னு கடுப்பாகிற டர்ன் ரீனாவுக்கு. “ஆமா தெரியாம தான் கேட்கிறேன்… உன்னை மது-னு யாரும் கூப்பிடக் கூடாதா? சரி டீ! நான் இன்னியிலே இருந்து உன்னை அப்படித் தான் கூப்பிடுவேன்”-னு உர்னு முகத்தைப் பார்த்தா. மதுரியா ஸ்மைல் பண்ணாலும் கண்ணுலே இருந்து தண்ணி வந்துச்சு.

 

 “சாரி ரியா… உன்னை ஹர்ட் பண்ணணும்-னு சொல்லலே”-னு மனசு தாங்காம சொல்லி கண்ணை துடைச்சுவிட்டா ரீனா. “ஏன் ரியா இப்படி இருக்கே? எல்லாம் முடிஞ்சு பத்து மாசம் ஆகுது. அவன் இந்நேரம் அந்த பொண்ணை கல்யாணம் பண்ணி இருந்தாலும் இருப்பான். நீ ஏன் ரியா அவனை இன்னும் மறக்க மாட்டேங்கறே? அவன் கூப்பிட்டான்கிறதுக்காக அந்த பேரை கூட இன்னும் அடைகாத்துக்கிட்டு… தவறிப் போய் யாராவது கூப்பிட்டா, கூப்பிட்டவங்க மேலே கோபப்படறே… என்ன டீ?”-னு அலுப்பும் வருத்தமுமா கேட்டா ரீனா. “தெரியலே ரீனா… நானும் ஒவ்வொரு வாட்டியும் ஐ ஹாவ் மூவ்ட் ஆன்… ஐ அம் ஓகே-னு நினைக்கற போதெல்லாம் யாரோ நினைவு படுத்திடறாங்க… அப்போ தான் ரியலிடி உறைக்குது. நான் கொஞ்சம் கூட அந்த இடத்தை விட்டு நகரவே இல்லே-னு இப்போ இப்போ புரிய ஆரம்பிக்குது ரீனா.. என்னால எப்போவுமே விதுரனை கடந்து வரமுடியாது”-னு அப்படீனு மதுரியா சொல்லவும், ரீனா அதிர்ந்துப் போனா. “இந்த மாதிரி ஏதாவது பினாத்தினா சாவடிச்சுடுவேன். அப்படி என்ன டீ அவன் அசகாய சூரன். அவனை விட்டா வேறே யாருமில்லையா?”-னு கோபத்துலே பொங்கி எழுந்தா ரீனா.

ஒரு விரக்தி சிரிப்போட இல்லே-னு தலையாட்டினா. “சும்மா ஏதாவது உளறாதே. உன் மேலே அவ்வளோ அன்பு வைச்சிருக்காரே ப்ரதீப் அவர் கேட்டாலும் இதே பதில்தானா?”-னு கேட்டா ரீனா. “ரீனா.. ப்ரதீப் சொல்லி விதுரனை மறக்கற ரிலேஷன்ஷிப் இல்லே எங்களோடது.. விதுரனை என்னால வெறுக்கவே முடியாது.. அது ஆறு வயசுலே விழுந்த விதை”-னு சொன்னா மதுரியா. “ரியா.. நீ அவரை இன்னும் நேசிக்கிற?”-னு ரீனா கேட்கவும், “என்னால அவரை நேசிக்கவும் முடியாது. அந்த அளவுக்கு காயம் ஆழம். அதை ப்ரதீப்னால மாத்த முடியாது ரீனா… எனக்கும் தீப்-கும் நடுவுல எப்படி ஆரம்பிச்சுதுன்னு நீ தெரிஞ்சிக்கணும். அப்போ தான் புரியும் உனக்கு”-னு அழுத்தமா சொன்னா மதுரியா.

❤️ Loading reactions...
2 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top