சிவராஜ் மகள் கவிதா ஸ்வேதாவின் அண்ணனை தான் காதலித்து அவனை நம்பி ஓடி போய் திருமணம் செய்து கர்ப்பவதியான பின்பு தான் கணவனனின் உண்மை முகம் தெரிந்தது மனம் உடைந்து போய் தந்தையை பற்றி விசாரித்தவளுக்கு தந்தை இறந்து போன விசயம் கேள்வி பட்டு தினமும் குற்ற உணர்ச்சி ஆளானவளை புகுந்த வீட்டில் தேற்றுவதற்கு ஆள் இல்லாமல் பிரசவத்தில் சிக்கல் ஆகி இறந்து போய் இருந்தால் அதன் பின் தான் ஸ்வேதா சேகரை காதலித்து திருமணம் செய்தது
கவிதா தன் தந்தை சரோஜாவுடன் எடுத்த போட்டோவை பேரேம் போட்ட தன் கல்யாண போட்டோவுடன் இணைத்து வைத்து இருப்பாள் இங்கு சரோஜாவை பார்த்த ராஜேஷ்க்கு மதியை பழிவாங்க அங்கு இருந்து விரட்ட நல்ல ஒரு வழி கிடைத்தது.
“அட ராகேஷ் தம்பி வந்துட்டியா வா வா ருத்ரா நான் சொன்னேன்ல என் அண்ணன் பேரன் இந்த தம்பி தான் ராகேஷ் இது என் மூத்த பேராண்டி பொறுப்பா எல்லா பிஸ்னஸையும் பார்த்துகிறான் இவன் இரண்டாவது பேரன் சந்தோஷ் சரியான வாலு” ராகேஷை உட்கார வைத்து அறிமுக படுத்தினார் சரோஜா பாட்டி
“சாந்தினி குடிக்க தண்ணி எடுத்துட்டு வா”என்று குரல் கொடுத்தார்
ராகேஷை பார்த்ததும் வந்த பயத்தை வெளிகாட்டி கொள்ளாமல் சந்தோஷிடம் இருந்து தன் கையை உருவி ராகேஷிடம் சீறி பாய்ந்தாள் சரோஜா பேசியதை கவனிகாதவளாக
“நீ எப்படி டா இங்க வந்த மரியாதையா வெளியே போ…. போன்னு சொல்றேன்”கத்தியபடி அவன் சட்டை காலரை பிடித்து இழுத்தாள் வெண்மதி
“மதி செல்லம் நீ இங்க தான் இருக்கியா…என் மேல் ஏன் இவ்ளோ கோபம்” என தன் காலரை பிடித்த அவளை கையை அந்த நேரத்திலும் அவள் கையை உரசி தடவி கொடுத்து கொண்டு இருந்தான்
“செல்லம் கில்லம்னு சொன்ன இருக்கிற கொஞ்ச நஞ்ச மரியாதையும் போயிடும் நீ இங்கு இருப்பது அஷ்வத்க்கு மட்டும் தெரிஞ்சா ஒழுங்கா இருக்க கை காலை எதுக்கும் உதவாத படி பண்ணிடுவான்” கத்தி கொண்டு இருந்தவளை வினோதமாக ருத்ரன் பார்த்து கொண்டு இருந்தான்
“நர்மதா இங்கே பாரு இவளை….இந்த கூத்து எங்கயாது நடக்குமா….ஏய் நீயே ஒண்ட வந்த பிடாரி…. நீ என் பேரன் மேலேயே கைய வைக்கிறியா கையை எடு ”
சரோஜா மதியை திட்டினாரே ஒழிய ராகேஷின் பார்வை வித்தியாசத்தை கவனிக்க வில்லை ஆனால் ருத்ரன் கண்டு கொண்டான்
கோபமாக வந்தது மதியை அவனிடம் இருந்து உறுவி விட்டு தன் பக்கம் கொண்டு வந்து
“மதி இவனை உனக்கு தெரியுமா” என ருத்ரன் கேட்டதும் சமையல் அறையில் இருந்த பெண்கள் வந்தனர்
“மதி என்ன ஆச்சு ஏன் இப்படி கத்துற” நர்மதா அவளருகே வந்தாள்
நர்மதா ராகேஷை பற்றி கேள்வி பட்டு இருக்கிறாள் ஆனால் பார்த்தது இல்லை
“சி..சித்தி அவன் தான் ராகேஷ் சித்தி அவன் அவன் என்னை ஃபாளோ பண்ணி நேற்று தீம் பார்க் வரை வந்து என்கிட்ட….”
“மதி செல்லம் ஏன் என் மேல் இப்படி பழி போடுற நீயும் என்னை விட்டு வந்துட்ட…. என்னால அங்கே இருக்க முடியல அதான் என் சொந்தத்தை பார்க்கலாமேனு நினைத்து வந்தேன் ஆனா நீ என்னை….” என நீலி தண்ணீர் வடித்து நாடகத்தை போடவும்
“நடிக்காதடா பொறுக்கி அதான் சொத்தை பூராவும் உன் பெயருக்கு எழுதி வச்சுடேனே இன்னும் என்ன வேணும் உனக்கு”
“சொத்தா… என்ன சொத்து என் பெயருக்கு எப்ப மாத்தின…ஏன் இப்படி பொய்யா பேசுற…. அத்தை உனக்கு செல்லமா கொடுத்து கெடுத்து வச்சு இருக்காங்க ”
“கொஞ்சம் நிறுத்தறீங்கள என்ன நடக்குது இங்கே” என ருத்ரன் குரல் ஓங்கி ஒலிக்க அந்த ஹாலை நிறைத்தது அவன் குரல்
“ருத்ரா இவன் மதியோட மாமா மகன்…. தனியா இருந்த மதிகிட்ட இவன் மும்பையில் மதி அம்மாவோட சொத்துக்களை கேட்டு தொல்லை பண்ணி…. மதிக்கு டார்சர் கொடுத்துட்டே இருந்து இருக்கான்… அவன் டார்சர் தாங்கம சொத்துகளை இவன் பேருக்கு எழுதி கொடுத்துட்டு இங்கே வந்துட்டா இப்ப என்னடான்னா இங்கேயும் வந்து நிக்கிறான் ராஸ்கல்” என தன் தாயிடம் திரும்பிய நர்மதா
“இவனை பற்றி தான் சொன்னீங்களா இவன் சரியான ஃப்ராடு ” என்றார்
“அய்யோ அத்தை நான்…”
“யாருடா உனக்கு அத்தை பொறுக்கி ராஸ்கல் ”
“மதி இவர் உன்னைய தேடி தீம் பார்க்கிற்கு வந்ததா சொல்ற ஆனா நாங்களும் அங்கே தானே இருந்தோம் இவர் வரலயே அதோட பாட்டிய பார்க்க இங்கே வந்தவர் தீம் பார்கில் எப்படி இருந்து இருப்பார்” ஷிவானி தன் சந்தேகத்தை கேட்டாள்
ஷிவானிக்கு மதியை பார்த்ததில் இருந்தே பிடிக்கவில்லை ஷிவானி மாநிறமானவள் அதுவே மதிக்கு பிடிக்காமல் போக காரணமாக அமைந்தது தன்னை விட மதியை கீழே தாழ்த்தி வைக்க பார்த்தவளுக்கு லட்டு போல கையில் ராகேஷ் அவளை பற்றி கூறவும் அதை பிடித்துகொண்டால்
“இவன் சரியான ஃப்ராடு.…
சந்தோஷ் இவன் தான என் பக்கத்தில் உட்கார்ந்தான் நீ பார்த்த தானே நீ சொல்லு அப்ப தான் நம்புவாங்க”சந்தோஷை பற்றி தெரியாமல் சந்தோஷை சாட்சிக்கு அழைக்க
“நானா நான் எங்கே இவனை பார்த்தேன் நான் எப்பவும் பெண்கள் சேஃப்டியா இருக்கிறாங்களான்னு தான் பார்ப்பேன்” நேரம் காலம் தெரியாமல் மதியின் பொறுமையை சொதிக்க அதை தனக்கு சாதகமாக்கிக்க பார்த்தான் ராகேஷ்
“மதிம்மா நீ உன் அம்மா மாதிரி ரொம்ப பிடிவாதம் குணம் அதிகம்…. அந்த அஷ்வத் கிட்ட மட்டும் இல்ல நிறைய ஆண் நண்பர்கள் பழக்கம் வச்சுகாதன்னு நான் எவ்வளவோ சொல்லியும் கேட்காம இங்கே ஓடி வந்துட்ட….’மதியை மோசமானவளாக காட்ட முயற்ச்சிக்க ருத்ரனிற்கு அவனை அடித்து போட கை பரபரத்தது
“இங்கே பாருங்க பாட்டி மதி அம்மா என் அத்தையோட சொத்துகள் பூராத்தையும் மதி பேர்ல தான் இருக்கு” என தன் போனில் இருந்த ரிஜிஸடர் பத்திரத்தின் நகலை காண்பித்தான்
“நான் அப்பவே நினைச்சேன் இவ ஏதோ திட்டத்தோட தான் வந்து இருப்பான்னு… பாரு நர்மதா இவ லட்சணத்தை நம்ம வீட்லயும் இரண்டு வயசு பசங்க இருக்காங்க” பாக்கியம் சரோஜா மதியை ஏளனமாக பார்த்தபடி கூற
கலங்கிய விழிகளுடன் நின்றாளே தவிர வேறு எதுவும் பேசவில்லை அவள் மனம் அஷ்வத்தின் அருகாமையை தான் எதிர்பார்த்தது
“அப்பத்தா மதி சொன்னது ஏன் உண்மையா இருக்க கூடாது”என கடுங்கோபத்துடன் ராகேஷை முறைத்தபடி கத்தினான் ருத்ரன்
“என்ன சொன்ன ராகேஷ் என் அண்ணன் பேரன் அவன பொய் சொல்றான் சொல்றியா”
“அப்ப நானும் பொய் சொல்ல மாட்டேன்ல அப்பத்தா…. நேற்று ரைட்ல மதி சொன்ன மாதிரி யாரோ ஒருத்தன் அவனை வம்பு பண்ணதை நான் பார்த்தேன்…. நம்ம வீட்டுக்கும் தீம் பார்க்குக்கும் அப்படி ஒன்னும் தூரம் கிடையாது இவன் ஏன் மதிய தீம் பார்க்ல பார்த்துட்டு இங்கே வந்து இருக்க கூடாது” தான் கணித்ததை சொன்னான் ருத்ரன்
ராகேஷ் நிலைமையை சமாளிக்க “மதி உனக்கு என்ன நான் இங்கே இருக்க கூடாது அதுக்கு தானே…. சரி நான் போய்டறேன்….ஆனா உன் அப்பாவை பழி வாங்கறேன்னு உன் அம்மா கிட்ட செஞ்சு கொடுத்த கேவலமான சத்தியத்துகாக இந்த அழகான குடும்பத்தை கெடுத்துடாத…நீ அங்க எப்படி வேணும்ன…. ”
அவன் அடுக்கடுகாக மதியை மோசமானவளாக சித்தரித்து பேசி முடிப்பதற்குள் அவன் கண்ணத்திலே அறைந்து இருந்தால் நர்மதா
“என்னடா சொன்ன… உன்னை பற்றி எனக்கு எதுவும் தெரியாதுன்னு நினைத்தியா” என நர்மதா கத்த
“சித்தி மதியோட இவ்வளவு நாள் கூட இருந்தவர் அவர் சொல்றதை எப்படி நம்பாம இருப்பது” என்ற ஷிவானி ருத்ரனிடம்
“மாமா நீங்க என் கூட தானே இருந்தீங்க அப்ப எப்படி அவளை பார்த்துட்டு இருந்து இருப்பீங்க…. நமக்கு முன்னாடி சீட்ல மதி போனதால பார்த்து இருக்க வாய்ப்பு இருக்கு ஆனா அது இவர் தான்னு உங்களால உறுதியா சொல்ல முடியுமா”
“ருத்ரா உனக்கு என்ன ஆச்சு ஏன் அந்த கேடு…..”என சரோஜ பேச ஆரம்பிப்பதற்குள்
“நர்மதாதா” என ஓங்கி கதத்தினார் சேகர் இவர் எப்ப இங்கே வந்தார் என்று ராகேஷ் சரோஜா பாக்கியம் அதிர்ந்தனர்
உள்ளே வந்தவர் “நீ இங்கே என்ன பண்ற”ராகேஷிடம் கேடட்டார்
“மாமா நா….”
“நீ யார் எனக்கு மாமான்னு உரிமை கொண்டாடுர…விருந்துக்கு வந்தோமா போனோமான்னு இருக்கனும் அதை விட்டுட்டு… ” என்று சேகர் அவனை கடுமையாக முறைத்தபடி ஏதோ பேச வர
“சித்தப்பா அவர் ஒன்னும் பண்ணல மதி தான் பிரச்சினை பண்றா நீங்க வாங்க சித்தப்பா சாப்பிடலாம்” என சேகர் அருகில் நின்ற மதியை தள்ளி நிறுத்தி ஷிவானி போய் நின்று கொண்டாள்.
“இருக்கட்டும்டாம்மா நாங்க கிளம்பறோம் நர்மதா அவளை கூப்பிட்டு கிளம்பு ” என்று ஷிவானி தலையை வருடி கொடுத்து நர்மதாவை பார்த்து பேசவும்
மதியின் முகமோ செத்தே விட்டது
மொத்தமாக உடைந்தே போனால் தான் இங்கு வந்து இருக்கவே கூடாது யார் கண்ணிற்கும் படாமல் போய் விடலாமா என்று எண்ணும் அளவுக்கு மனம் வெறுத்து போனால் பெண்ணவள்
“வீட்டுல உள்ளவங்களா ஒரு வாய் சாப்பிட விடாம ஆட்டம் ஆடி முடுச்சாச்சு திருப்தியா உனக்கு” சரோஜா திட்டியதும் அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல்
“சித்தி நான் போறேன்”என கலங்கிய விழிகளை துடைக்க கூட தோன்றாமல் தன் கைபையை எடுத்து கொண்டு விறுவிறுவேன வெளியேறினால்
ருத்ரன் பார்வை மதியை தவிர எங்கும் அசைய வில்லை சேகர் மேல் தான் கோபமாக வந்தது என்ன தான் மகள் மேல் கோபமாக இருந்தாலும் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் மகளை காக்காமல் பேசி கொண்டு இருக்கிறாரே இதில் ஷிவானி தலையை வருடி கொஞ்சனுமா என ஷிவானி செய்ககையும் பிடிக்காமல் ஷிவானியை முறைத்து கொண்டு இருந்தான் அவனை போலவே நர்மதா சாந்தினியும் மதிகாக வருத்தப்பட்டு மனதில் சேகரை தான் பொருமினார்கள்
ருத்ரன் வண்டி சாவியை எடுத்து கொண்டு சரோஜா பாக்கியம் கத்துவதை காதிலே வாங்காமல் வெளியேறினான் அவன் மனம் முழுவதும் மதியின் கண்ணீரே வந்து போனது அவளை உடனே பார்க்க வேண்டுமென மனம் ஆர்பரிக்க கிளம்பி விட்டான்
ராகேஷிற்கு வழங்கும் உபசாரத்தை காண முடியாமல் ருத்ரன் சென்ற சிறிது நேரத்தில் நர்மதாவும் சேகருடன் சென்று விட்டாள்
கோபத்தில் வேகமாக நடந்து சென்று கொண்டு இருந்த வெண்மதி முன் தன் பைக்கை நிறுத்தி இருந்தான் ருத்ரன்
அவனை கவனிக்காமல் யாரோ என நினைத்து திரும்பி நடக்க திரும்பி வந்து வழிமறித்தான் ப்ச் என சலித்து கொண்டு மறுபுறம் சென்றவளை வழிமரித்து நிற்கவும் “ஏய் மிஸ்டர் என்ன வேணும்” என நிமிர்ந்து ருத்ரனை பார்த்தாள்
“உனக்கு கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா ” என்றான்
“இதை கேட்க தான் வந்தீங்களா…. தயவு செய்து போங்க நான் எங்கேயும் போயிட மாட்டேன்…. வீட்டுக்கு தான் போறேன் சித்தி கிட்ட சொல்லிடுங்க” என நகர்ந்து செல்ல போனவளை இடுப்பில் கை கொடுத்தது தூக்கி பின் சீட்டில் அமர வைத்தான்
“என்ன பண்றீங்க” என அவள் கத்தும் முன்னே வண்டி ரோட்டில் சீறி பாய்ந்தது
“இப்ப எங்க கூட்டிட்டு போறிங்க வீட்டுக்கு போற வழி இல்லயே இது ”
“உனக்கு அறிவு இருக்கா இல்லையான்னு செக் பண்ண போறேன் கொஞ்சம் நேரம் அமைதியா வர்றியா”
“என்னது ”
“அமைதியா வான்னு சொன்னது காதில விழல”
அப்போது நர்மதா வெண்மதிக்கு அழைக்கவும்
“வண்டிய நிறுத்துங்க சித்திதான் கூப்பிடறாங்க”
அவன் வண்டிய நிறுத்தாமல் வேகமாக சீறி பாயவும் அவன் வண்டியின் வேகம் தாங்க முடியாமல் ஒரு கையில் கம்பியை இறுக்கி பிடித்து மறு கையால் அவன் சட்டையை பிடித்து கண்ணை மூடி அமர்ந்து இருந்தாள்.