அசுரன் 27
நம்மை எதற்காக கூப்பிட்டு இருப்பார் என்று யோசனையில் மெதுவாக
நடந்து ருத்ராவின் அறையை அடைந்தாள் மலர்… கதவைத் தட்டி விட்டு
உள்ளே நுழைந்தாள்.
அவரின் அறைக்குள் இருந்த சோபாவில் கால் மேல் கால் போட்டு
முறைத்துக் கொண்டு இருந்தார் ருத்ரா.
அமைதியாக சேலையை நுனியின் பிடித்தபடி நின்று இருந்தாள் மலர்.
என்ன மலர்!… இப்ப எல்லாம் ரொம்ப திமிரா நடந்துக்கிறதா எனக்கு
நியூஸ் வருது…. என்னோட மகனையும், மருமகளையும் எதிர்த்து
பேசுறயாமே என்றார்.
அமைதியாக இருந்தாள் மலர் தரையை நோக்கிய படி.. அவளுக்கு
தெரிந்துவிட்டது ரதிதான் அன்று பார்ட்டியில் நிகழ்ந்த நிகழ்வைப் பற்றி
ருத்ராவிடம் கூறி ஏற்றி விட்டு இருக்கிறாள் என்று,
என் மருமகளோட சொத்து மதிப்பு உனக்கு என்னன்னு தெரியுமா அவளை
எதிர்த்து பேசுற அளவுக்கு நீ வளர்ந்துட்டியா என்ன!… என்றார் ருத்ரா.
மேடம்!… நான் அவங்கள எதிர்த்து எதுவும் பேசல.. அன்னைக்கு என்கிட்ட
வம்பு இழுத்தவங்கள மட்டும் தான் அடிச்சேன் என்றாள்.
அன்னைக்கு வந்தவங்க எல்லாருமே பெரிய தொழிலதிபரோட பசங்க!…
அவங்க கிட்ட எப்படி மரியாதையா நடந்துக்கணும்னு உனக்கு
தெரியாதா? என்றார். கைய புடிச்சதுக்கு போயி விரலை ஒடிச்சியாமே
என்றார் ஏளனமாக… அதுக்கு அப்புறமும் ரதி சொல்ல… சொல்ல.. ரதிய
முறைச்சிக்கிட்டே.. அவங்க கன்னத்துல அடிச்சியாமே… என்று கேட்டார்.
மேடம் அவங்க தப்பு.. தப்பா… பேசினாங்க அதனாலதான்… என்று
இழுக்க….
ஓ… தப்புத் தப்பா பேசுனதுக்கே அடிப்பியா அப்படின்னா என்னோட மகன்
உன்கிட்ட தப்பு தப்பா நடந்துக்கிட்டா என்ன பண்ணுவ என்று கேட்டார்
நாக்கில் நரம்பில்லாமல்… என்னோட பையன் ரொம்ப நல்லவனா இருக்க
போய் உன்ன கிட்ட கூட வராம வச்சிருக்கான்.. இந்த இடத்துல வேற
யாராவது இருந்தா இந்நேரம் உனக்கு ஒரு குழந்தையை கொடுத்து இந்த
வீட்ல வேலைக்காரிய இரு அப்படின்னு வச்சிருப்பாங்க என்றார்
அலட்சியமாக…
விலுக்கின்று அதிர்ந்து நிமிர்ந்து பார்த்தாள் மலர்.
ப்ளீஸ்! மேடம்… இனிமேல் இந்த மாதிரி அசிங்கமா பேசாதீங்க என்று
முகத்தை சுளித்தாள்…
உன்னோட நிலைமை இன்னும் மாறல மலர் அதனை மறந்துட்டு,
என்னையே எதிர்த்து பேசுறேன்னு நான் நினைக்கிறேன்…
உன்னோட வீட்டு டாக்குமெண்ட் ஒரிஜினல் என்கிட்ட தான் இருக்கு…
டூப்ளிகேட் தான் உங்க அம்மா கிட்ட இருக்கு… உன்னோட தங்கச்சியோட
புகுந்து வீட்டோட ரைஸ் மில் பத்திரம் என்கிட்ட தான்…. பத்த்திரமா…
இருக்கு… என்று பத்திரம் என்ற வார்த்தையில் ஒரு அழுத்தத்தை கூட்டி
கூறினார்.
அந்த மில்ல நம்பி தான் அவங்க குடும்பமே இருக்குமே… அந்த மில்ல
புடுங்கிட்டு அவங்கள தெருவுல நிப்பாட்டலாமா?… இப்பயும் அந்த
மில்லுல என்னோட ஆளுங்க வேலை பார்த்துகிட்டு தான் இருக்காங்க
உன்னோட தங்கச்சி ஏதோ மாசமா இருக்கிறதா கேள்விப்பட்டேன்
என்றார்… இப்போ அந்த மில்ல புடிங்கிட்டு துரத்தி விட்டா பலி எல்லாம்
உன் தங்கச்சி வயித்துல இருக்குற குழந்தை மேல தான் விழுகும் அவ
வாழாவெட்டியா உங்க வீட்ல வந்து உட்காருவா!… நீயும் வாழா வெட்டியா
உங்க வீட்டுக்கு போனா… உங்க அம்மா ரொம்ப சந்தோஷப்படுவாங்க
பரவாயில்லையா!… என்றார் விஷமமாக….
மேடம்!… ப்ளீஸ் மேடம்!… அது மாதிரி எல்லாம் எதுவும் பண்ணிடாதீங்க…
நீங்க சொல்றதெல்லாம் கேட்கிறேன் என்றாள் மலர்.
அப்படி வா வழிக்கு!… இந்த வீட்டுக்குள்ள வரும்போது எப்படி அமைதியா
இருந்தியோ!.. அதே மாதிரியே வாழப் பழகிக்கணும் திடீர்னு எங்களை
எதிர்த்து பேசுற வேலை எல்லாம் வச்சுக்க கூடாது… என்னோட
புருஷனுக்கு எதை..எதை.. எங்க.. எங்க.. வைக்கணும்னு அறிவு
இருக்காது… கண்டதையும் கூட்டிட்டு வந்து நடு வீட்டுல வைக்க
பார்ப்பாரு… அதுக்காக அதையெல்லாம் அட்வான்டேஜா எடுத்துக்கிட்டு
நடு வீட்ல உட்காரலாம்… அப்படின்னு நீ நினைக்காத என்றார் ருத்ரா
வன்மமாக…
அப்புறம் இந்த விஷயம் வேற யாருக்காவது தெரிஞ்சா நான் என்ன
பண்ணுவேன்னு உனக்கே தெரியும் திரும்பத் திரும்ப அதை நான், என்
வாயால சொல்ல விரும்பல என்று கூறிவிட்டு… போ போய்… வாய
மூடிக்கிட்டு வேலையை பாரு என்று மலரை அனுப்பி வைத்தார்…
******************
தோட்டத்தில் மாலை நேரம் சக்கரவர்த்தி, விக்ரம், ஆதி, மூவரும் மலர்
கொண்டு வரும் டீ மற்றும் ஸ்னாகிற்காக காத்துக் கொண்டு
இருந்தார்கள்…
அவர்கள் எதிர்பார்ப்பை வீணாக்காமல் வந்து கொண்டு இருந்தாள் மலர்
கையில் பலகார தட்டுடன்.
எப்பொழுதும் அவர்களுடன், ஒரு இருக்கையில் அமருபவள் இன்று ஆதி
உட்கார்ந்திருந்ததால் அமராமல் விக்ரமின் அருகே நின்று
கொண்டிருந்தாள்…
விக்ரம், மலர் செய்து கொண்டு வந்து இருந்த வெங்காய பக்கோடா
எடுத்து வாயில் போட்டு அதன் ருசியில் லயத்து கொண்டு இருந்தான்…
என்ன விக்ரம்.. உன்னோட தங்கச்சி வேண்டுதல் ஏதும் வச்சிருக்காங்களா
என்றான்… என்ன என்பது போல் பார்த்தனர் மலரும் விக்ரமும்..
எனக்கு வர்ற காத்த மறைச்சிகிட்டு உன் பக்கத்துல ரொம்ப நேரமா
நின்னுட்டு இருக்காங்க அதனால தான் கேட்டேன் என்றான் ஆதி.
இவ்ளோ பெரிய தோட்டத்துல நான் நிக்கிறதுனால தான் இவருக்கு
காத்து வரலையா? என்று மனதுக்குள்ளயே கருவிக்கொண்டாள் மலர்…
மலரை பார்த்த விக்ரம் ஏன் நின்னுகிட்டு இருக்க மலர் உக்காரு என்று
ஆதியின் பக்கத்தில் இருந்த இருக்கையை காண்பிக்க… அண்ணா..
ப்ளீஸ்!… நீங்க அந்த சேர்ல மாறி உட்காருங்க… என்று கூறிவிட்டு
சக்கரவர்த்திக்கும் விக்ரம் இருக்கும் நடுவில், ஆதிக்கு எதிரில் அமர்ந்து
கொண்டாள் மலர்.
நால்வரின் சுவாரஸ்யமான பேச்சுக்கள் தொடங்கியது… பேச்சுக்களின்
நடுவே குழந்தைகள் பற்றிய பேச்சு வர அப்போது…
என்ன விக்ரம் ஹாஸ்பிடல் போனியே என்ன சொன்னாங்க!.. என்று
கேட்டார் சக்கரவர்த்தி.
எல்லாமே நார்மலா இருக்கு எந்த பிரச்சனையும் இல்ல அப்படின்னு
சொல்லிட்டாங்க அங்கிள்..
சந்தோஷம்பா…
ஆனா அகல்யா தான் மனச போட்டு குழப்பிக்கிட்டு இருக்கிறா அங்கிள்
என்ன சொல்லி அவளை நார்மல் ஆக்குறதுன்னு எனக்கு தெரியல
என்றான் விக்ரம்.
“சின்ன பயம், குழப்பம், எல்லாமே இருக்கத்தான் செய்யும் விக்ரம்…
போகப்போக நார்மல் ஆகிடுவா நீ கவலைப்படாத” என்றார் சக்கரவர்த்தி.
அகிமாக்கு பயமா?… அப்படினா எந்த கடையில விக்குதுன்னு கேப்பா?…
அதுதான் எந்த பிராப்ளமும் இல்லைன்னு சொல்லிட்டாங்களே அப்புறம்
எதுக்கு குழப்பம்… பொண்ணுங்க நாளே இப்படித்தான் தேவையில்லாத
எல்லாம் மனசுல போட்டு குழப்பிட்டு இருப்பாங்க போல… என்றான் ஆதி.
அண்ணா பிரச்சனை இதுதான்னு தெரிஞ்சுட்டா… அதை சரி
பண்ணிடலாம்… ஈஸியா…. ஆனா நார்மலா இருக்கும் பொழுது ஏன்
குழந்தை பிறக்கல அப்படின்னு நெனச்சு மனசுக்குள்ள குழப்பிக்கிட்டு
இருப்பாங்க… என்று ஆதியின் சந்தேகத்திற்கு விக்ரமிடம் பதிலளித்தாள்
மலர்.
நார்மலா இருக்கும் போது குழப்பிக்க என்ன இருக்கு என்றான் ஆதி.
அண்ணா!… 60 கிலோ மீட்டருக்கு அந்தப் பக்கம் உள்ள ஒரு ஊருக்கு நம்ம
போகணும் அப்படின்னா அது கரடு முரடான சாலையாக இருந்தாலும்
நம்ம ஒரு நம்பிக்கையோட கஷ்டப்பட்டாவது கடந்து அந்த ஊருக்கு
போய்ட முடியும் நிம்மதியா, எந்த குழப்பமும் இல்லாமல் … ஆனா
நார்மலான சாலைல இலக்கே இல்லாமல் நம்மளால நிம்மதியா போக
முடியாது… எங்க போறோம்? ஏன் போறோம்? எதுக்காக போறோம்?
அப்படின்னு ஒரு குழப்பம் மனசுக்குள்ள இருந்துகிட்டே இருக்கும் அது
மாதிரிதான்… நம்ம நார்மலா இருக்கும் போது ஏன் இந்த ரெண்டு
வருஷமா நமக்கு குழந்தை இல்ல அப்படின்னு தேவையில்லாத
காரணங்களை எல்லாம் மனசு போட்டு யோசிக்க ஆரம்பிக்கும்… இந்த
நேரத்துல தான் நீங்க அகல்யா மேடம்க்கு ரொம்ப சப்போர்ட்டா
இருக்கணும் என்றாள் மலர் விக்ரமை பார்த்து…
மலரின் பேச்சைக் கேட்டு மெச்சுதலாக தலையை ஆட்டிக் கொண்டான்
ஆதி.
மலர் பேசுவதை, பக்கோடாவை சாப்பிட்டு கொண்டே, தலை அசைத்த
படி ஆர்வமாக கேட்டுக் கொண்டிருந்தான் விக்ரம், அவனுக்கும்
அகல்யாவின் குழப்பத்திற்கான காரணம் புரிந்தது.
இதை நான் சொல்லலாமா அப்படின்னு எனக்கு தெரியல!… இனிமேல்
நம்ம வீட்ல குழந்தை சம்பந்தப்பட்ட பேச்சுக்கள் அதிகமா இருக்கும்…
விழாக்கள் இருக்கும்… இது எல்லாத்துலயுமே எல்லாரும் அகல்யா மேடம்
கிட்ட தான் நிறைய கேள்விகள் கேட்பாங்க.. அதை எல்லாம் நெனச்சு
அவங்க மனசு இப்பயே சஞ்சலப்படும் என்றாள் எதிர்காலத்தில்
நிகழப்போவதை எடுத்துக் கூறி… அன்னைக்கு கல்யாண பங்க்ஷன்லையே
அவங்களோட முகமே சரியில்ல… நீங்க மட்டும் இல்ல அண்ணா
எல்லோரும் குடும்பமா இருந்து அவங்களுக்கு சப்போர்ட் பண்ணனும்
அவங்களுக்கு உறுதுணையா இருக்கணும் அப்பத்தான் அவங்களாலயும்
தைரியமா இருக்க முடியும்…
விக்ரமும், சக்ரவர்த்தியும் அகல்யாவின் நிலைமை புரிந்து கவலை
கொண்டனர்.
நிலைமையை சரி செய்யும் பொருட்டு சுமாரான பக்கோடாவையே இந்த
சாப்பிடு சாப்பிடற டா நீ என்று ஆதி, விக்ரமை கலாய்க்க…
மலர் , ஆதியை ஒரு பார்வை பார்த்துவிட்டு அவனுடைய தட்டை பார்க்க
அது காலியாக இருந்தது…
குடுக்குறத புல் கட்டு கட்டிட்டு… பின்ன அதையே குறை சொல்றது என்று
மனதிற்குள்ளே திட்டிக் கொண்டாள்.
அவள் பார்வையின் அர்த்தம் புரிந்தவன்..
நல்லா இருந்தாலும் நல்லா இல்லாட்டியும் நமக்கு கொடுக்கிறத வேஸ்ட்
பண்ணாம சாப்பிடணும் டா மச்சான்…
என்று ஜாடையாக விக்ரமுக்கு அறிவுரை வழங்க…
( இனிமேல் இந்த சார் முன்னாடி மனசுல கூட நினைக்க கூடாது… உடனே
கண்டுபிடிச்சிடுறாரு, என்று அப்பாவியாய் முழித்தாள் மலர் )
அதாண்டா மச்சான்!… நான் அங்கிளோட பிளேட்ல இருந்தும் பக்கோடா
எடுத்துக்கிட்டேன்… என்று வாயில் பக்கோடாவை மென்றபடி கூறினான்.
என்னோட… பிளேட்ல மட்டும் சீக்கிரம் பக்கோடா தீந்துருச்சு என்று
நினைத்துக் கொண்டிருந்தேன். நீ பண்ண வேலை தானா விக்ரம்!… என்று
அவன் தோலை தட்டி சிரித்தார் சக்கரவர்த்தி…
பேச்சின் இடையே அண்ணா!… எனக்கு ஒரு உதவி பண்ணனும் என்றாள்
மலர்.
நீ இன்னொரு பிளேட் பக்கோடா குடுத்துட்டு!… அவனோட சொத்தை
எழுதி கேட்டாலும் கொடுப்பான்!..மா என்றார் சக்கரவர்த்தி கிண்டலாக…
என்ன மலர்… உதவி அப்படி எல்லாம் கேக்குற என்ன பண்ணனும் மட்டும்
சொல்லு… என்றான் விக்ரம்.
அம்மாவ பாக்கணும் போல இருக்கு… அண்ணா… ஒரு மூணு நாள் அம்மா
வீட்டுக்கு போயிட்டு வரேன், அதுவரைக்கும் அருண் சார கொஞ்சம்
பாத்துக்க முடியுமா? என்று கெஞ்சுதலாக கேட்டாள் மலர்.
சக்கரவர்த்தியும் யோசித்துப் பார்த்தார்… திருமணம் ஆகி வந்த
நாளிலிருந்து மலர் வீட்டை விட்டு எங்கும் செல்லவில்லை… இப்பொழுது
அருணும் வீட்டிற்குள் தான் இருக்கிறான்… அதனால் எந்த பிரச்சினையும்
இல்லை… இப்பொழுது மலர் அவங்க அம்மா வீட்டிற்கு சென்று வருவதே
சரியாக இருக்கும் என்று நினைத்தார்.
நீ போயிட்டு வாமா நாங்க மூணு பேர் இருக்கும்ல பார்த்துக்கிறோம்…
என்று கூறினார் சக்கரவர்த்தி.
*****************
மூன்று நாட்கள் லீவு கேட்டு ருத்ராவின் அறையில் அக்மார்க்
வேலைக்காரியாய் நின்று இருந்தாள் மலர்.
நீ போய்ட்டா அருண யார் பார்த்துப்பா ? என்றார் ருத்ரா.
ஆதிசாரும் விக்ரம் சாரும் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லி
இருக்காங்க மேடம்!… நான் மூணு நாள்ல திரும்ப வந்துடுறேன் என்றாள்
மலர்.
அவளை மேலிருந்து கீழ் வரை ஒரு பார்வை பார்த்துவிட்டு போ!… ஆனால்
எனக்கு எதிரா ஏதாவது பண்ணலாம்னு நினைச்ச… அப்புறம் நான்
சொல்லி நீ தெரிஞ்சுக்க வேண்டியது இல்லை… என்று மிரட்டி அவளை
அனுப்பி வைத்தார் ருத்ரா.
**************
அடுத்த நாள் காலையில், தன்னிடம் இருக்கும் சேலைகளில் நல்ல
சேலையாய் எடுத்து அணிந்து கொண்டு, தோட்டத்தில் பூத்த ஒற்றை
ரோஜாவை எடுத்து தலையில் வைத்துக்கொண்டு, ஏனோதானோ என்று
ஊருக்கு செல்ல முடியாதே!… திருமணமாகி போன பெண் திரும்பி வரும்
பொழுது அவள் முகத்தில் உள்ள கலையை வைத்தே அக்கம் பக்கத்து
வீட்டினர் அனைத்தையும் கணித்து விடுவர்..
தனது ஊருக்கு செல்ல தயாராயினாள் மலர். அவளுக்காக சில
சம்பவங்கள் அங்கு சிறப்பாய் காத்துக் கொண்டிருந்தன…
❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்..
ஊக்கபடுத்த கருத்துகளையும் பகிருங்கள் .
நன்றி!❤️