அசுரன் 32

அசுரன் 32

அன்றைய இரவுக்கு பின், மறந்தும் அருணின் கண்ணில் படவில்லை 
மலர். 
அவனை முழுவதுமாய் தவிர்த்து விட்டாள். 
இன்டர் காமில் அழைத்து மலரிடம் டீ கொண்டு வர சொல்லுங்கள் என்று 
கூறினால் கூட.. 
சுதா அம்மாவிடம் தான் கொடுத்து அனுப்புவாள்… 
ஒரு நாள் டீ கொண்டு சென்ற சுதாமா திரும்ப வந்து… 
சந்தோசமான விஷயம் மலரு, இப்ப எல்லாம் அருண் ஐயா உன்னை 
ரொம்ப தேடுறாரு, நான் டீ கொண்டு போய் கொடுத்தா, கோபப்பட்டு 
வாங்காம உன்னை வர சொல்றாரு… இப்படியே போனால் சீக்கிரம் அவர் 
மனசு மாறிடும் மலரு… என்று கூற.. 

ஒரு மெல்லிய சிரிப்புடன்… மனசு மாறி என்ன பண்றது சுதாமா… நல்ல 
வேலைக்காரங்க நாலு நாள் இல்லாம போயிட்டா முதலாளி தேடத்தான் 
செய்வாங்க இதுல சந்தோஷப்பட என்ன இருக்கு ? …. என்று மலர் 
அவளின் நிதர்சனத்தை கூறிவிட்டு அவள் வேலையை தொடர்ந்தாள். 

இப்பொழுதெல்லாம் அருண் வீட்டில் இருப்பதால் மாலை நேர தோட்டத்து 
அரட்டையில் அவனும் பங்கேற்பான்…   ஆதியும் விக்ரமும் அவனை 
வீல்சேரில் வைத்து அழைத்து வந்து தோட்டத்தில் அமர 
வைத்திருப்பார்கள்… இவ்வாறு அமர்ந்து இலகுவாக பேசிக்கொண்டு 
சிரித்துக் கொண்டே இருப்பது… அருணின் மனதிற்கு இதமாக இருக்கும். 
சுட சுட பிளாஸ்க்கில் டீ பலகாரம் என சுதா கொண்டு வந்து கொடுப்பார்… 
அனைவருக்கும் டீ, காபி வந்தால் அருணுக்கு மட்டும் ஏதாவது ஒரு வகை 
சூப் வரும், அதுவும் சரியான பக்குவத்தில் ஆற்றி… அவன் கை கொண்டு 
குடிக்கும்படி கப்பில் வரும்… தனக்கான தனி கவனிப்பை நினைத்து 
மனதில் மெச்சிக் கொள்வான். ஆதியும், விக்ரமும் அருணுக்கு இருக்கும் 
கவனிப்பை பார்த்து  புருவத்தையும் தோள்களையும் ஒரு சேர உயர்த்தி 
தங்களுக்குள் பேசிக் கொண்டனர். 

மலர் எங்க? என்று சக்கரவர்த்தி, சுதாவிடம் கேட்க… 

வயித்த வலின்னு படுத்து இருக்குயா என்று சொல்லிவிட்டு 
செல்வார்…சுதா 

ஆனால் உண்மையான காரணம் என்ன என்று அங்கு அமர்ந்திருந்த 
நால்வர்க்கும் தெரியும். 
அருண் இருப்பதால் மலர் வரவில்லை அவ்வளவே…. 

உடம்பெல்லாம் திமிரு… ஏன் நான் கூப்பிட்டா வரமாட்டாளாமா?… 
என்னோட கால் மட்டும் சரியா ஆகட்டும் டி உன்னை பார்த்துக்கிறேன்…. 
என்று மனதிற்குள் கருவிக் கொண்டான் அருண். 

பேச்சின் நடுவே சக்கரவர்த்தியின் திருமண நாள் விழா பற்றி 
திட்டமிடப்பட்டது. ஆனால் சைத்ராவின் மறைமுக நிச்சயதார்த்த திட்டம் 
இங்கு யாருக்கும் தெரியாது.. 

நாட்கள் ஓட அருணின் காயங்கள் ஆறின… 

ஆனால் இந்தக் காயம் பட்ட நாட்களில் அருண் மனிதர்களின் மனதை 
புரிந்து கொண்டான்… 

வீட்டில் இருக்கும் அனைவரும் அவனை நன்றாக பார்த்துக் கொண்டனர்… 

ஆதியின் மேல் இருந்த சிறு வன்மம் கூட முற்றிலும் மறைந்து 
போயிருந்தது… சொல்லப்போனால் அவர்களின் நட்பின் நெருக்கம் 
அதிகரித்து இருந்தது… 
எங்கும் தலைவணங்காமல் கம்பீரமாய் சுற்றி திரியும் ஆதி… அருணுக்கு 
எந்த சேவையும் செய்ய முகம் சுளிக்கவில்லை… 
” விடுடா எனக்கு இந்த கை நல்லா தானே இருக்கு நான் பாத்துக்குறேன்” 
என்று அருண் கூறினால் கூட… 

“எல்லாம் எங்களுக்கு தெரியும் நீ மூடிட்டு படு” என்பான்… கால் 
விரல்களைப் பிடித்து நகம் வெட்டுவதில் இருந்து, அவனது முடிகளை 
ட்ரிம் பண்ணிவிட்டு, அவனை சுத்தம் செய்து அழுக்கு துணிகளை 
அப்புறப் படுத்துவது வரை.. விக்ரமும் ஆதியும் போட்டி 
போட்டுக்கொண்டு செய்வார்கள்… 

அருணுக்கே ஆதியின் மேல் எத்தனை நாள் இருந்த போட்டி 
மனப்பான்மையை நினைத்து வெட்கமாய் போனது… இவர்களின் 
நட்புக்காக என்ன வேணாலும் செய்யலாம் என்று மனதிற்குள் நினைத்துக் 
கொண்டான்… 

எப்பொழுதும் தன்னை தாழ்த்தி பேசுவதாக நினைக்கும் அவனது அப்பா 
சக்கரவர்த்தி கூட அவரால் முடிந்த சேவைகளை அவனுக்கு செய்வார்… 
சாப்பாடு ஊட்டி விட ஜூஸ் பருக கொடுக்க… அன்றொரு நாள் கால் 
மரத்து போயி அவன் வழியில் முனங்க… “கால் வலிக்குதா அருண் நான் 
வேணா அமுக்கி விடவா” என்று பாதங்களை மென்மையாக பிடித்து 
விட்டார்… சொல்லப்போனால் கண்கலங்கி போனான் அன்று அருண். 

தன்னிடம் சண்டையிட்டு வம்பு இழுக்கும் அகல்யா கூட பொறுமையாக 
வந்து சாப்பாடு ஊட்டி விட்டு செல்கிறாள்.. வேற ஏதாவது உனக்கு 
செய்யனுமா அண்ணா என்று கேட்பாள்… 

தன்னை சுற்றி இருந்தவர்களின் மேலிருந்த எண்ணங்கள் மாறி 
இருந்தன… 

மலரின் மீது “வாழ்ந்தால் இவள் கூட தான் வாழ வேண்டும் இவளை 
போன்ற ஒரு அன்பு தெய்வம் நமக்கு கிடைக்காது… அதனால் இவளை 
பொண்டாட்டியாக ஏற்று குடும்பம் நடத்த ஆரம்பிக்கலாம்…. என்ற 
அளவுக்கெல்லாம் அவனுடைய மனது மாறவில்லை ” 

முதலில் எல்லாம் அவனுக்காக அவள் செய்யும் அனைத்து வேலைகளிலும் 
அவனை மயக்குவதற்காக ஏதேனும் உள்நோக்கம் இருப்பதாக 
உணர்ந்தவன்… இப்பொழுதெல்லாம் அவளுடைய சேவைகளில் அதீத 
அக்கறை இருப்பதாக உணர்கிறான்…   

ஆனால் அப்பொழுது அவள் செய்த  சேவைகளுக்கும்  இப்போது அவள் 
செய்யும் சேவைகளுக்கும் இடையே, அவன் மீதான எண்ணம் முற்றிலும் 
மாறி இருந்ததை அருண் அறிய மாட்டான். 

நாம் பணி செய்யும் இடத்தில் எத்தனை பேர் ஒரு வேலையை முடித்துக் 
கொடுத்தாலும், முதலாளியின் நன்மதிப்பைப் பெற்ற பணியாளர் 
முடித்து கெடுக்கும் போது ஒரு திருப்தி ஏற்படும் அது போலவே… 

இப்பொழுதும் மலரை அவன் தேடுவது, என்னை மட்டும்  ஏன் தவிர்க்க 
வேண்டும் என்ற ஈகோ… எல்லார்கிட்டயும் சிரிச்சு சிரிச்சு நல்லாத்தானே 
பேசுறா என்கிட்ட பேசுறதுக்கு என்ன? என்ற கடுப்பு… 
ஆனால் அவனுக்கு ஒன்று புரியவில்லை மற்றவர்களுக்கும் அவளுக்கும் 
உள்ள உறவு வேறு அவனுக்கும் அவளுக்கும் உள்ள உறவு வேறு என்று… 
அவன் அருகே செல்ல அவள் உடல் அருவருத்தது.. அவன் அறைக்கு 
செல்ல உடல் கூசி போகிறது அவளுக்கு என்று அவன் அறிய மாட்டானே.. 

அதுவும் சக்கரவர்த்தியை சார்.. என்று அழைத்தாலும் மனதளவில் 
அவரை அப்பா ஸ்தானத்தில் ஏற்றுக்கொண்டு விட்டாள். விக்ரமை 
அண்ணன் ஸ்தானத்தில் ஏற்றுக்கொண்டு விட்டாள்.. அதனால் 
அவர்களுடன் இலகுவாக பழக முடிகிறது… ஆனால் இவனை எந்த 
ஸ்தானத்தில் அவள் வைப்பது.. என்ன உரிமையில் அவள் பழகுவது. 
வேலைக்காரியா இரு என்று அவன் நிறுத்தினான். அவள் வேலை 
செய்வதோடு அவள் நிறுத்தி விட்டாள். 
அவன் சொல்லிய வேலை நடக்க வேண்டுமே தவிர அவன் கண்முன் வர 
வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லையே… 

வார்த்தைகளால் வதைத்தவன் அவன் பேசிய வார்த்தைகளை 
மறக்கலாம்… ஆனால் காயம் பட்டவளால் மறக்க முடியுமா?… அவன் 
எதிரில் போய் நின்று தன் மனதை தானே காயப்படுத்தி கொள்ள அவள் 
விரும்பவில்லை… இந்த முடிவை அவள் பல நாட்களுக்கு முன்னதாகவே 
எடுத்திருந்தாள். ஆனால் அருணுக்கு இன்று தான் அது உரைக்கிறது. 

ருத்ரா சில நேரங்களில் அருணனின் பக்கத்தில் வந்து அமர்ந்து பத்து 
நிமிடம் பேசிவிட்டு செல்வார் அவருக்கு அதற்கு மேல் டைம் இருக்காது… 

ரதி சில நேரங்களில் மட்டுமே வீட்டிற்கு வந்தாள்.. மற்ற நாட்களில் 
அலுவலகம் முடிந்து தனது வீட்டிற்கு செல்வதாக கூறி விடுவாள். அப்படி 
இங்கு வரும் நேரங்களில் அருணின் உடலை நாட தவிர வில்லை… 
சொல்ல போனால் அருணை நாடுவதற்காக மட்டுமே அவனின் அருகில் 
வந்தாள் ரதி. அருண் வேணாம்…  என்று தடுத்தாலும் அவனை வற்புறுத்தி 
தான் செய்ய நினைப்பதே செய்து முடித்தே உறங்குவாள். எரிச்சலாக 
வரும் அவனுக்கு 
மறந்தும் அருணுக்கு எந்த உதவிகளையும் செய்ய அவளின் மனம் 
முன்வரவில்லை… 

மருத்துவமனையில் அருணின் கட்டுகள் பிரிக்கப்பட்டன…. சிறிய சிறிய 
அசைவுகளை சொல்லிக் கொடுத்து அவனது எலும்புகளை சோதனை 
செய்தார் மருத்துவர்… 

யூ ஆர் பர்பெக்ட்லி ஆல்ரைட்… அருண்… என்றார் மருத்துவர். 

இப்பொழுது தான் அவனுக்கு நிம்மதி பெரும் மூச்சு வந்தது… கிட்டத்தட்ட 
ஒரு மாதத்திற்கு மேல் ஒரே அறையில் ஒரே படுக்கையில் வாழ்ந்தது 
சிறைவாசம் போல் இருந்தது அருணுக்கு. 

மருத்துவமனையை விட்டு வெளியே வந்த அருண் நான் வீட்டுக்கு 
போயிட்டு ரெப்ரஷ் ஆகிட்டு… ஆபீஸ் போறேண்டா நீ இங்க இருந்து 
ஸ்ட்ரைட்டா ஆபீஸ் போயிடு…. என்று கூறிவிட்டு பிரிந்து அவர்கள் 
வேலையைக் காண சென்றனர்… 

உள்ளே வந்தவனின் கண்கள் முதலில் சமையலறை தான் நோட்டமிட்டது. 
அவன் தேடிய ஆள் அங்கு இல்லை… வீட்ல வேலையே பாக்கறதே இல்ல 
போல… எப்ப பாரு ரூமுக்குள்ள பூட்டிக்கிட்டு இருப்பா போல என்று 
பல்லை கடித்துக் கொண்டு புலம்பினான். ஆனால் அவனுக்கு தெரியாதே 
அவன் உள்ளே வருவதை பார்த்து தான் அவள் அறைக்குள் சென்று பூட்டிக் 
கொண்டாள் என்று. 

கடும் கோபத்துடன் சோபாவில் அமர்ந்திருந்தவனின் அருகில் வந்த 
சுதா.. 

ஐயா உங்களுக்கு ஏதாவது சாப்பிட கொண்டு வரவா என்று கேட்க… 

ஆமா… ஸ்ட்ராங் காபி என்று சொல்ல… தலையசைத்து விட்டு  திரும்பி 
நடந்த சுதாவிடம்…. 
மலர காபி போட்டு என்னோட ரூமுக்கு கொண்டுவர சொல்லுங்க 
என்றான் அழுத்தமாக… 

அவன் வார்த்தையில் இருந்த அழுத்தமே சொல்லியது மலர்தான் 
வரவேண்டும் என்று… 

ஐயா அது வந்து…. அந்த பொண்ணு தலைவலியில இப்பதான் மாத்திரை 
போட்டு படுத்து இருக்கு என்று கூறி மழுப்ப…. 

ஓஹோ என் முன்னாடி வரும்போது மட்டும் அவளுக்கு உலகத்தில் இருக்க 
எல்லா வியாதியும் வருதா… என்றான் கோபமாய்… 
இப்ப வருவா பாருங்க… என்று வேகமாய் தன் இருக்கையை விட்டு 
எழுந்தவன் அவள் அறையின் கதவை ஓங்கி தட்டப் போக…. 

“நான் தான் அருண் அவளை உன் முன்னாடி வரக்கூடாதுன்னு சொல்லி 
இருக்கேன்…” என்று ஒரு குரல் ஓங்கி ஒலித்தது. 

திரும்பிப் பார்க்காமலேயே அவனுக்கு தெரிந்தது அது யார் என்று… 
படியில் இறங்கி வந்து கொண்டே 
“என்ன அருண் ரொம்ப ஆர்வமா அவள தேடுற போல” என்று ரதி கேட்க… 

அதெல்லாம் ஒன்னும் இல்ல… அதென்ன நான் அவள வேலை சொன்னா… 
அவ வேற யாரையாவது அனுப்பி வைக்கிறது… இந்த வீட்ல எல்லாம் அவ 
எடுக்கிறது தான் முடிவா…. என்று அவன் கோபமாய் கத்த.. 

ஓஹோ அதனாலதான் இப்ப நீ அவளை தேடுன அப்படித்தானே என்று 
நக்கலாய் கேட்க… 

ஆமா பின்ன வேற எதுக்கு… என்றான் காட்டமாய்… 

என்ன அருண்…. ஒரு மாசம் உனக்கு ஆக்கிப்போட்டு நல்லா 
கவனிச்சுக்கிட்டான்னு… அவளை பொண்டாட்டியா ப்ரோமோட் 
பண்ணலாம் அப்படின்னு ஏதாவது நினைச்சு இருக்கியா என்ன?… என்று 
ரதி அருணின் முகத்தை பார்த்து ஏளனமாய் கேட்க… 

மச்… அப்படி ஒரு நாளும் இந்த அருண் நினைக்க மாட்டான். 
தேவையில்லாம பேசாத உன்னோட கற்பனைக்கு எல்லாம் நான் பதில் 
சொல்ல முடியாது… 

அருண் நான் உன்கிட்ட முன்னாடியே சொல்லிட்டேன்… அவ இந்த வீட்ல 
கடைசி வரைக்கும் வேலைக்காரியா இருக்கிறது நா மட்டும் இங்கே 
இருக்கட்டும்… இல்லனா நீ வேற மாதிரியான லீகல் இஸ்யூச பேஸ் பண்ற 
மாதிரி இருக்கும்… மைண்ட் இட்.. இன்று விரலை சொடுக்கினாள்… 

நானும் உன்கிட்ட முன்னாடியே சொல்லிட்டேன் என்னோட 
தகுதிக்கு…  அவளை ஏத்துக்க முடியலன்னு தான் நான் உன்னையே 
கல்யாணம் பண்ணி இருக்கேன் அதை நீ மறந்துடாத என்றான் அருண். 

அப்புறம் எதுக்கு இப்ப அவளோட கதவை தட்டுறதுக்கு நீ போற… உனக்கு 
தேவை காபி தானே அவங்க கொண்டு வந்து கொடுப்பாங்க என்றாள் ரதி. 

நான் என்ன பண்ணனும் பண்ண கூடாதுன்னு நீ எனக்கு ஆர்டர் 
போடாத..  எனக்கு என்ன தோணுதோ அதைத்தான் நான் பண்ணுவேன் 
என்றான் அருண். ஸ்டே ஆன் யுவர் லிமிட் என்று சொல்லிவிட்டு படி ஏறி 
மேலே சென்று விட்டான் அருண்… 

மலரை முறைப்பதாய் நினைத்து அவளுடைய அறையின் கதவை 
ஒருமுறை முறைத்து விட்டு நகர்ந்து விட்டாள் ரதி. 

வெளியில் நடந்த அனைத்தையும் கதவின் அந்த பக்கம் இருந்து மலர் 
கேட்டுக் கொண்டுதான் இருந்தாள். 

 

❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்.. 

      ஊக்கபடுத்த கருத்துகளையும் பகிருங்கள் .

      நன்றி!❤️
 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top