அத்தியாயம் -29

அதுக்கப்புறம் விதுரனோட கம்பெனி மின்னல் வேகத்துலே ஆரம்பிச்சுது. வேதமூர்த்தி நித்தியவாசனுக்கு போன் பண்ணி நடந்ததை எல்லாம் சொல்லவும், நித்தியவாசனுக்கு கொஞ்ச நாளா மகள் முகத்துலே இருக்கற தெளிவுகளுக்கான காரணம் புரிஞ்சுது. அவ சந்தோஷம் அவன் தான்-னு புரிஞ்சுது. ஆனா ரெண்டு அப்பாக்களும் கொஞ்ச நாள் விட்டுப்பிடிக்கலாம்-னு நினைச்சாங்க. விஷயத்தை அவங்களுக்காக அவங்களுக்குள்ளேயே வைச்சுக்கிட்டாங்க. அவர் பேசி முடிக்கவும் ரிஷி ஒரு ப்ரிண்ட் எடுத்துட்டு வந்தான். “இதான் பா அந்த டெண்டர். அவங்க வெப்சைட்லே இருந்து எடுத்தேன். கமர்ஷியல் கன்ஸ்டிரக்‌ஷன்ஸ் பண்ற பீனா பில்டர்ஸுக்கு போயிருக்கு”-னு ப்ரிண்ட் அவுட்டை குடுத்தான். 

“ம்ம்ம்… நம்ம இண்டெலிஜென்ஸ் கிட்ட சொல்லி, காம்பெடிடர்ஸ் டீடெயில்ஸ் கலெக்ட் பண்ண சொல்லு”-னு சொன்னார். அதுக்கு அப்புறம் ‘வேதம் டிசைன்ஸ் அண்ட் கன்சல்டண்ட்’ தயாராச்சு. விதுரனுக்கு அசிஸ்டண்டா வேதம்லே ரிஷியோட பி.ஏ வா இருந்த பிரபுவை அனுப்பினாங்க. பிரபு ரொம்ப பெரியவர். வேதாசலத்தோட காலத்துலயிருந்து இருக்கறவர். தொழில் நுணுக்கம், மனுஷங்களை கணிக்க தெரிஞ்சவர். அவரோட முக்கிய வேலை மூணு – ஒண்ணு விதுரனுக்கு தோள் குடுக்கறது, ரெண்டு மதுரியாவுக்கு உதவறது, மூணாவது அவங்க ரெண்டுப் பேரையும் கவனிக்கிறது. அவர் கூட ரெண்டு அட்மின் ஆட்கள். ரெண்டு டிசைனர்ஸ் எடுத்தான் விதுரன். இண்டர்வியூ, செலெக்‌ஷன் எல்லாம் பிரபு தான் முக்கியமா பார்த்து ஆட்களை எடுத்தார். அவருக்கு சரின்னு பட்டா மட்டும் தான் ரெஸுயும் விதுரன் பார்வைக்கே வரும். 

முதல் ஒரு மாசம் விதுரன் கஷ்டப்பட்டான். நித்தியவாசன், வேதமூர்த்தி மறைமுக பரிந்துரை மூலமா முதல் வேலை கிடைச்சுது. அன்னிக்கு, “ஹப்பா… ஒரு வழியா ஃபர்ஸ்ட் ஆர்டர் பிடிக்கவே ஒரு மாசம் ஆயிடுச்சு”-னு சந்தோஷமா விதுரன் அலுத்துக்கவும், “இப்படி தூங்கி எந்திரிச்சு வர்றா போல தாடியும், மீசையும், கலைஞ்ச தலையும், கசங்கின சட்டையுமா க்ளையண்ட் ஆபீசுக்கு போனா எவன் ஆர்டர் குடுப்பான்?”-னு தோளை குலுக்கவும், கூட இருந்த டிசைனர்ஸ் எல்லாரும் சிரிச்சுட்டாங்க. விதுரனும் கூட சேர்ந்து சிரிச்சான். ஆனா அடுத்த நாள் அவனை அவன் ஆபீசுலே இருந்த ஆம்பிள்ளைங்களே ‘ஆ..’-னு பார்க்கறா போல அவ்வளோ அழகா பழைய விதுரனா வந்து மதுரியாவையும் திகைக்க வைச்சான். 

“பார்டா… என் பேச்சுக்கு இவ்வளவு மரியாதையா?”-னு புருவம் தூக்கி கேட்கவும், “ம்ம்ம்… நீ நினைக்கறதை விட அதிக மரியாதை”-னு அவனும் ஒத்த புருவத்தை தூக்கி பதில் சொன்னான். அவ்வளவு தான்… அதுக்கு அப்புறம் அவங்கவங்க வேலையை பார்க்கப் போயிட்டாங்க. விதுரன் மதுரியா நட்பும் பலப்பட்டது. விதுரனை பொறுத்த வரை மதுரியா தவிர்க்க முடியாதவள். தோல்வியிலே நொந்துக்கவும் வேணும். வெற்றியை கொண்டாடவும் வேணும். தினமும் ஒரு வாட்டியாவது பார்க்கணும். பேசணும். அவ்வளோ இன்றியமையாதவள். இப்போ அவன் தொழில்லே, வெளியிலே எல்லாம் ஏறக் குறைய பழைய விதுரன் தான். நம்பிக்கை, திமிர் எல்லாம் ஒரு முதிர்ச்சியோட வந்திருந்தது. ஆனா மதுரியா கிட்ட மொத்தமா வேறே ஆள். சிரிக்க சிரிக்கப் பேசுவான். அவ கிட்ட மட்டும் லேசுலே கோபமே வராது. அவ ஆபீஸ், வீடு எங்கே வந்தாலும் அவ கூட இருக்கற நேரம் சுத்தியும் இருக்கற டென்ஷன் மறக்கற அளவுக்குப் பிடிக்கும். மதுரியாவுக்கும் அந்த நட்பு பிடிச்சாலும் காரியத்துலே கண்ணா இருந்தா. 

இப்படியே நாட்கள் வேகமா ஓடிடுச்சு. முதல் ஆர்டருக்கு அப்புறம் விதுரன் டைமே இல்லாம போற அளவுக்கு ஒண்ணு மேலே ஒண்ணு வந்து கொஞ்சம் வேகமாவே வளர்ந்தான். இதுக்கிடையே மதுரியா அப்பப்போ செங்கல்பட்டு போக வேண்டி இருந்தப்போ, காரை எடுத்துட்டு விதுரனே அவளை தேடிட்டுப் போயிடுவான். “அது.. இது”-னு ஏதோ சாக்கு சொல்வான். இப்படி இவங்க உறவு, நட்பை தாண்டி பயணிக்கறதை ரெண்டு பேருமே உணரலே. மூணு மாசம் நல்லபடியா ஓடிப் போயி அந்த பெரிய ப்ராஜெக்ட் கிடைச்சுது. அதோட சேர்ந்து பிரச்சினைகளும் வந்துச்சு.

“மது.. மது… எந்த உலகத்துலே இருக்கே?”-னு குலுக்கும் போது அவனோட அட்மின் மேனேஜரும், பிரபுவும் உள்ளே வந்தாங்க. அவளை திரும்ப உட்கார வைச்சுட்டு வந்தவங்கக் கிட்ட பேசிட்டு இருந்தான். அந்த அட்மின் மேனேஜர் பார்வை அடிக்கடி மதுரியா பக்கம் போய், போய் வரவும் கடுப்பானான் விதுரன். “அங்கிள், ரோஹனை கூட்டிட்டு போய் நீங்களே அவன் வேலையை முடிச்சுடுங்க”-னு கடுக்னு பிரபு கிட்ட சொல்லி அனுப்பினான். “ஹேய் இன்னிக்கு வெளியே டிரீட்டுக்கு போகலாமா? ஐ அம் ஸோ ஹாப்பி”-னு கேட்டான் விதுரன். “ம்ம்ம்… போகலாமே.. இந்த ப்ராஜெக்ட் முடிச்சப்புறம் போலாம்”-னு சிரிச்சுக்கிட்டே சொன்னா மதுரியா. 

“அதுவும் கரெக்ட் தான். மது… பை தி வே, ரிதேஷ் போன் பண்ணி இருந்தான் முந்தா நாள்… உன் கிட்ட சொல்ல மறந்துட்டேன்”-னு விதுரன் ஆரம்பிக்கவும், காதும் புத்தியும் கூர்மை ஆச்சு மதுரியாவுக்கு. “ஸோ? இதுலே ஸ்பெஷலா என்ன இருக்கு?”-னு அலட்சியமா கேட்கும் போதே பிரபு உள்ளே வந்தார். “ம்ம்ம்.. அவனுக்கு தெரிஞ்ச பொண்ணாம். டிரெயினீ டிசைனரா கொஞ்ச நாள் எடுத்துக்கிட்டா ஹெல்ப்ஃபுல்லா இருக்குமாம்.. அதான் நீயும் பிரபு அங்கிளும் என்ன சொல்றீங்க?”-னு கேட்டான் விதுரன். இந்த விதுரன் புதுசு. பழைய விதுரனா இருந்தா சரி-னு சொல்லி எடுத்திருப்பான். ஆனா இப்போ இருக்கற விதுரன் ஆலோசனை பண்ணி சொல்றேன்-னு சொன்னதே அதிர்ச்சி ரிதேஷ்க்கு.

“என்னை கேட்டா நாம தர்மசத்திரம் நடத்தலே… தேவைக்கு அதிகமா யாரும் தேவையில்லே-னு தான் சொல்லுவேன். ஆனா உங்க டியரெஸ்ட் ஃப்ரெண்ட் இல்லே?”-னு ஏத்த இறக்கத்தோட இழுக்கவும் “நானும் அதே தான் யோசிக்கிறேன் மது.. பிரபு அங்கிள் எப்போவும் போல நீங்களே இண்டர்வியூ பண்ணுங்க. உங்க முடிவு தான் லாஸ்ட்”-னு சொல்லிட்டே ரிதேஷ்க்கு போன் பண்ணி, “அந்த பொண்ணை இண்டர்வியூவுக்கு வர சொல்லுடா.. பார்க்கலாம்”-னு சொன்னான். அப்புறம் ஏதோ பேசிட்டு போனை வைச்ச அப்புறம், “ஒரு ஸ்மோக்குக்கு வெளியே போயிட்டு வர்றேன்”-னு எந்திரிக்கவும், “என்ன பழக்கமோ? நிறுத்தக்கூடாதா?”-னு சலிப்பா கேட்டா மதுரியா. “சீக்கிரமே நிறுத்திடறேன்”-னு சிரிச்சுட்டே எந்திரிச்சான். “சரி… உங்க போனை அன்லாக் பண்ணி குடுங்க. ஒரு போன் பண்ணணும். என் போன் டெட்”-னு கேட்கவும் மறுப் பேச்சில்லாமல் குடுத்துட்டு போனான்.

அவன் அந்த பக்கம் போன அடுத்த நிமிஷம் ரிதேஷ், விக்கி ரெண்டுப் பேர் நம்பரையும் ப்ளாக் பண்ணா. தன்னையே யோசனையா பார்த்த பிரபு பக்கம் திரும்பி, “அந்த பொண்ணு எவ்வளோ புத்திசாலியானாலும் கம்பெனிக்கு உள்ளே வரக்கூடாது அங்கிள்”-னு சொன்னா. “அப்போ எல்லாத்துக்கும் காரணம் இவங்களாம்மா?”-னு கேட்டார் பிரபு. “60% ஆமாம் அங்கிள். ஆனா இன்னும் கண்டுப்பிடிக்கணும். அது வரைக்கும் அவங்க யாரும் விதுரனை பார்க்கவோ பேசவோ கூடாது. ப்ளீஸ் அங்கிள் ஹெல்ப் பண்ணுங்க”-னு கெஞ்சலா முடிச்சா. “கண்டிப்பா பண்றேன்மா”-னு சொன்னார் பிரபு. அப்புறம் விதுரன் வரவும் ஏதோ பேசிட்டு கிளம்பவும் சரியா இருந்துச்சு. அதுக்கு அப்புறம் ஒரு நாள், விதுரன் கிட்டே பிரபு, “அது அறிவில்லாத அலங்கார பொம்மை-பா. நமக்கு சரி வராது”-னு க்ளோஸ் பண்ணிட்டார். 

அதை ரிதேஷ்க்கு சொல்லணும்-னு நினைச்சவன் வேலை பளுவிலே சொல்லலே. ரிதேஷ்க்கு விதுரனை போன்லே பிடிக்கவே முடியலே. எப்போவும் பிஸினே வந்துச்சு. விக்கி என்ன சொல்வானோங்கற பயத்துலே டெஸ்பரேட்டா விதுரனை ரீச் பண்ண முயற்சிப் பண்ணான். முடியலே. நேர்லே போகலாம்னா புது ஆபீஸ் அட்ரஸ் தெரியலே. அதை கேட்க விக்ரமை கூப்பிட்டா அவனும் டீடெயில்ஸ் சொல்லாம பிஸி, டூர்-னு இழுத்தடிச்சான். நாலு வாட்டி ரிதேஷ் போன் பண்ணவும், ரிஷி கிட்ட பேசி மதுரியா நம்பர் வாங்கி, அவளுக்கு போன் பண்ணிட்டான் விக்ரம். “ரியா, நான் விக்ரம். ரிஷி சார் கிட்ட நம்பர் வாங்கினேன்”னு சொல்லவும் யோசனையோட “சொல்லுங்க..”-னு சொன்னா. அண்ணா காணாம போனதை வலியோட உணர்ந்தான். “ரிதேஷ் விதுரனோட அட்ரஸை விரட்டி விரட்டி கேட்கிறான்.. ஏதோ இருக்கு.. உன்னை வார்ன் பண்ணலாம்-னு தான் கூப்பிட்டேன்”-னு சொல்லவும் முதல் வாட்டியா விக்ரம் மேலே நம்பிக்கை வந்துச்சு.

 “அப்போ, என் கணிப்புப்படி இவருக்கும் அதுலே சம்பந்தம் இருக்கு. தேங்க்ஸ் அண்ணா. என்னவானாலும் குடுக்காதீங்க.. எவ்வளோ தூரம் போகுது-னு பார்க்கலாம்”-னு போனை வைச்சவ மனசுலேயும் குழப்பம். எப்படியும் கொஞ்ச நாள்லே பண்ணிடுவானே? எப்படி தடுக்கறது? இந்த ப்ளாக் மேட்டர் தெரிஞ்சாலே என்ன தாண்டவம் ஆடுவாரோ இந்த மனுஷன்-னு யோசிச்சுகிட்டே ரீனாவுக்கு போன் பண்ணி ஐடியா கேட்டா. இந்த வாட்டி ரீனாகிட்டேயும் எந்த ஐடியாவும் இருக்கலே. “அம்மா… கற்பகமே! ஒரு வழி சொல்லும்மா”-னு வாய்விட்டு கேட்டா. ஆனா கற்பகாம்பாள் தேவி, மதுரியா கனவுலே கூட நினைக்காத வழி பண்ணா… 

நாள் பாட்டுக்கு போச்சு. அன்னிக்கு ஹாஸ்பிடல்லே லஞ்ச் சாப்பிடும் போது ப்ரதீப் மதுரியாவுக்கு போன் பண்ணான். “ரியா, நீ இன்னிக்கு விதுரனை ஆபீசுலே போய் பார்த்துக்கோ. நான் வீட்டுக்கு கூட்டிட்டு போக முடியாது”-னு மொட்டையா சொல்லவும், “தீப், விளையாடாதீங்க. ரெஃபரன்ஸ் வேலை இருக்கு. அப்புறம் ஆபீஸ் போக லேட் ஆகும்”-னு சொன்னா மதுரியா. “சாரி ரியா, பரத் மாம்ஸ் கூப்பிட்டிருக்கார். போகணும்… மேனேஜ் பண்ணிக்கோம்மா ப்ளீஸ்”-னு போனை கட் பண்ணிட்டான். “என்ன கேன்சல் பண்ணிட்டானா? அவன் அப்படித் தான். கமிட்மெண்டே இல்லாதவன்”-னு வந்து பக்கத்துலே உட்கார்ந்தான் அசோக். மதுரியா வெடுக்-னு எந்திரிச்சு போய் அவன் முகத்தை பார்க்கிற மாதிரி எதிர்லே உட்கார்ந்தா. “ஏன் ப்ரதீப் பக்கத்திலே மட்டும் உட்கார்றே? என் பக்கத்திலே மட்டும் உட்கார மாட்டியா?”-னு அவன் எகிர்ற நேரம் டாக்டர் ப்ரேம் அங்கே வந்தார். 

“ரியா, நீ இன்னைக்கு சீக்கிரம் கிளம்பறதுன்னா எனக்கு ஓகே. நாளைக்கு கொஞ்சம் காம்ப்ளிகேடட் சர்ஜரி… ரெஃபரன்ஸ் பார்க்க போய்க்கோ”-னு சொல்லவும், “தேங்க் யூ சீனியர். அப்புறம் உங்க பையனோட பிஹேவியர் எனக்கு அவ்வளோ உவப்பா இல்லே.. சாரி டு சே திஸ் சீனியர்”-னு நோகாம அவனை போட்டுக் குடுத்தா. அதுக்கு, “நோ ப்ராப்ளம் ரியா. இவன் என் பையன் இல்லேன்னா எப்படி ஹாண்டில் பண்ணுவியோ அப்படியே பண்ணிக்கோ”-னு சொல்லிட்டுப் போயிட்டார். மதுரியாவும் கிளம்பவும், அசோக் அங்கேயே பே-னு நின்னான். “ரொம்ப துள்ளாதேடி.. உன்னையும் அவனையும் சீக்கிரமே பிரிச்சு காட்டறேன்”-னு நினைச்சான்.

அதே நேரம் பீச் ரெஸ்டாரண்ட்லே ப்ரதீப்பும் பரத்தும் மீட் பண்ணாங்க. “என்னப்பா? உன் தங்கச்சியை கரெக்டா அவ லவரை மீட் பண்ண வைக்கறியா. எந்த அளவுலே இருக்கு அவங்க லவ்வு?”-னு நக்கலா கேட்டான் பரத். “மாம்ஸ்… உங்களுக்கு எப்படித் தெரியும்?”-னு இழுத்தான் ப்ரதீப். “ம்ம்ம்… தெரியும்.. அவ எங்கே போறா…. யாரை பார்க்கறா… எல்லாம் தெரியும்”-னு  காஃபியை உறிஞ்சுகிட்டே சொன்னான் பரத். “அப்போ பொண்டாட்டியை விட்டுட்டு மச்சினிச்சியை ஃபாலோ பண்றீங்க”-னு கிண்டல் பண்ணான் ப்ரதீப். “அடீங்க… ஏடா கூடமா பேசினா வாயை உடைச்சுடுவேன். என் மூத்த மகள்டா அவ.. அவளோட மாற்றம் என் கண்ணுக்கு எப்படித் தப்பும்? அதுக்கு அவனை தவிர வேறே யாரு காரணமா இருக்க முடியும்? ஆனா இந்த வாட்டி காயப்பட்டா அவளை யாராலும் நிமிர்த்தவே  முடியாது.. அதான் விசாரிக்கிறேன்”-னு கோபத்துலே ஆரம்பிச்சு, அழுத்தத்துலே முடிச்சான் பரத். “சாரி… மாம்ஸ்.. நான் கிண்டல் தான் பண்ணேன். ஐ டிட்ண்ட் மீன் இட்”-னு லேசாக்கினான் ப்ரதீப்.

ஒரு பெருமூச்சு விட்டு, “சொல்லு ப்ரதீப். என்ன நடக்குது?”-னு கேட்டான் பரத். “உண்மையில எதுவுமேயில்ல மாம்ஸ்… காதல் இருக்கு. ஆனா கேட்டாலும் ஒத்துக்க மாட்டேங்கறாங்க. அவ ரொம்ப நாள் கழிச்சு சென்னை வந்தப்போ ஷாப்பிங் போனோம்லே, அன்னிக்குத் தான் விதுரனை ரியா பார்த்தா. பார்த்த கணமே ஷாக்லே மயங்கிட்டா. அப்புறம் ஒரு மாசம் பழைய மாதிரி உர்-னு இருந்தா. அப்புறம் என்னாச்சு-னு தெரியலே.. மே பீ அந்த நிலையிலே பார்த்ததும் கோபத்தை பேக் சீட்லே போட்டுட்டாப் போல… ரியா தான் விதுரனை தேடிப் போனா”-னு ஸ்டார்ட் பண்ணி எல்லாத்தையும் சொன்னான் ப்ரதீப். “ஓ.. விதுரனா அவளை அவ்வளோ தாங்கறான்?”-னு கேட்டான் பரத். “ஆமாம் மாம்ஸ். ரொம்ப தாங்கறார்… பேப்பர்லே இல்லேன்னாலும் விதுரன் கம்பெனிக்கு இவளும் பார்ட்னர் தான்”-னு சொன்னான் ப்ரதீப். “ஓ.. ஐ…சீ… இது வேதா அங்கிளுக்குத் தெரியுமா?”-னு அதிர்ந்து கேட்டான் பரத். “தெரிஞ்ச மாதிரி எனக்கு தோணலே… விதுரன் ஆபீஸ் சி ஐ டி நகர்லே தான் இருக்கு… அவன் ஹெட் ஆபீஸ் போறப்போ ரியா ஏதாவது சாக்கு சொல்லி அங்கே போகமாட்டா”-னு தோளை குலுக்கினான் ப்ரதீப்.

“சரியான கேடி தான். அதான் அங்கிளுக்கு தெரியலே. தெரிஞ்சிருந்தா மாமா கிட்ட சொல்லி இருப்பாரே?”-னு சொல்லவும், “மாம்ஸ், விதுரன் நிறைய மாறியிருக்காரு.. நமக்கும் ரியாவோட சந்தோஷமும் நிம்மதியும் அவர் தான்-னு புரிஞ்சுப் போச்சு. பேசாம வீட்லே பேசி கட்டி வைங்க”-னு சொன்னான். “பண்ணலாம்பா.. இதுலே மூணு பிரச்சினை – ஒண்ணு விதுரனோட மாற்றம் எவ்வளோ தூரம்-னு தெரியணும்… ரெண்டு.. நீயே சொல்றே.. காதலை கிடப்புலே போட்டுட்டாங்க-னு… மூணு உன் தங்கச்சி கோபத்தை பேக் சீட்லே தான் வைச்சிருக்கா. இப்போ கல்யாணம்-னு ஒரு வார்த்தை சொல்லி பார்.. திரும்பி ஃப்ரண்ட் சீட்லே இல்லை மடியிலேயே வைச்சுக்குவா”-னு சொல்லவும் தான், “ஆமால்லே”-னு உறைச்சுது ப்ரதீப்புக்கு. “ப்ரதீப் இதெல்லாம் விட முக்கியமான விஷயம், யார் க்ரியேட் பண்ணது-னு தெரியலே.. ரியாவையும் விதுரனையும் பத்தி தப்பு தப்பா வதந்தி கிளம்புது. மாமா, தாத்தா காதுக்குப் போனா ரொம்ப பெரிய பிரச்சினை ஆயிடும். அவ அப்படி எதுவும் கிளம்பிட கூடாது-னு தான் உன்னை கூட்டிட்டு போறா-னு எனக்குத் தெரியும். அதுக்கு அப்புறமாவும் அப்படி வதந்தி கிளம்பி இருக்கு. ஸோ அந்த மூணு கன்ஃபர்மேஷனையும் சீக்கிரமா பண்ணணும்”-னு பரத் சொல்லவும், சிரிச்சுட்டே, “என்ன பண்ணப் போறீங்க?”-னு கேட்டான் ப்ரதீப். “போறீங்க இல்லே! போறோம்! முதல் படி நீதான் பண்ணப் போறே”-னு சொல்லி திகைக்க வைச்சான் பரத்.

“ஏது நானா? என்ன சொல்றீங்க மாம்ஸ்?”-னு அலறினான். “அது.. வந்து..”-னு ஆரம்பிச்சு ஃபுல் ப்ளானும் சொன்னான் பரத். “மாம்ஸ், நான் பேச்சுக்கு சொன்னதுக்கே உங்களுக்கு அவ்வளோ கோபம் வந்துச்சு… எங்களுக்குள்ளே இருக்கற உறவு புரிஞ்சும் நீங்க இப்படி பேசலாமா?”-னு வருத்தமா கேட்டான் ப்ரதீப். “ப்ரதீப்… ப்ளீஸ்… நம்ம எதையும் டைரக்டா சொல்ல முடியாது… சொல்ல போறதில்லே.. ஆனா விதுரனுக்கு வைக்கற லிட்மஸ் டெஸ்ட் இது. அத்தை வரன் பார்க்கறதை தடுத்து வச்சிருக்கோம். ஆனா இப்போ அடிப்படற பேச்சைக் கேட்டா கிடைக்கற வரனை பிடிச்சுக் கட்டி வைச்சிடுவாங்க. விதுரன் மாறி இருந்தா அவ விரும்பற ஆளையே கட்டி வைச்சு சிரிப்பும் சந்தோஷமுமா பழைய ரியாவா இருப்பா…. அதுக்காகத் தான் ஹெல்ப் பண்ண சொல்றேன்”-னு பொறுமையா சொன்னான். “எல்லாம் சரி தான். ஆனா மதுரியா கோபப்பட்டா… அவளை என்னால இழக்க முடியாது”-னு தயக்கமா சொல்லவும், “ரியா உன் மேலே கோபமே பட மாட்டா ப்ரதீப். அவளால முடியாது.. அப்படியே கோவிச்சுக்கிட்டாலும் நீ அவளை இழக்க மாட்டே. இட்ஸ் ஆன் மீ”-னு அழுத்தமா சொன்னான் பரத்.

“எப்படியும் என்னை பலி குடுக்கறதுன்னு முடிவு பண்ணிட்டீங்க. விடவா போறீங்க? பண்ணி தொலைக்கிறேன்”-னு சொன்னான் ப்ரதீப். அடுத்த நாள்லே இருந்து ஆரம்பிச்சான் அவன் வேலையை. இவங்க நினைச்ச அளவுக்கெல்லாம் இல்லாம ரெண்டாவது நாளே பீபி ஏற ஆரம்பிச்சுது விதுரனுக்கு. அப்போ தான் மதுரியா மேல தன்னோட அன்பை உணர்ந்தான் விதுரன்.

❤️ Loading reactions...
2 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top