அசுரன் 38
மண்டபத்தில் ராஜேஷிடம்… ருத்ரா மருமகளுக்காக வாங்கி வைத்த
வளையல்களை வீட்டில் வைத்து விட்டார் என்று எடுத்து வர சொல்லி
அனுப்பி இருந்தார்.
காரில் அருண் வீட்டிற்கு வந்தான் ராஜேஷ்.
காலில் சோபாவில் அமர்ந்து டீ அருந்தி கொண்டு இருந்தாள் மலர்.
அவள் ராஜேஷை கண்டு அவசரமாய் அதிர்ச்சியில் எழுந்து நிற்க… அங்கு
அந்த நேரத்தில் மலரை கண்டவனுக்கு விழி விரிந்தது.
ஹாய்… பிளவர்… இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க…
பங்ஷனுக்கு வந்தீங்களா… என்று ராஜேஷ் கேட்க..
திருதிருவன விளித்தவள்…. அது… வந்து…. என்று கூறியபடியே தன்
கழுத்தை மெதுவாக தடவி பார்த்தால் மலர் தாலி வெளியில் இருக்கிறதா
என்று, வெளியில் தெரியவில்லை என்ற நிம்மதி மூச்சுடன் … சார்….நான்
இங்க வேலைக்கு தான் இருக்கிறேன்… கொஞ்சம் உடம்பு சரியில்ல
அதனால விசேஷத்திற்கு வரல… என்று கூற…
(இப்பொழுதும் தாலியை மறைத்து தான் போட்டு இருந்தாள். அன்று
திருமண விழா நிகழ்வில் தாலியை மறைத்து போட்டு இருந்த மலரை
பார்த்த ருத்ரா… இதுவும் நல்ல ஐடியா தான் எங்க வீட்ல பங்க்ஷன்
வைக்கும் பொழுதெல்லாம் இப்படியே மறைச்சு போட்டுக்க… ஏன்னா
எங்க சொந்தக்காரங்க யாருக்கும் எந்த சந்தேகமும் வந்துட கூடாது…
கல்யாணம் ஆன பொண்ண ஏன் உங்க வீட்ல தங்க வச்சிருக்கீங்க… அவ
வீட்டுக்காரன் எங்க… வீடு எங்க… அப்படின்னு 1008 கேள்வி கேப்பாங்க
எதுக்கு தேவையில்லாத தலைவலி அதனால இந்த மாதிரி மறச்சு
போட்டுக்கோ… என்று புது கட்டளையிட்டார்)
அப்ப நீங்க விக்ரமோட தங்கச்சி இல்லையா? என்று கேட்டான் ராஜேஷ்.
தங்கச்சி மாதிரி தான்… ஆனா சொந்தகார தங்கச்சி இல்ல சார்…
தங்கச்சி மாதிரி என்ன…. நான் உங்கள விக்ரமுக்கு சொந்தக்கார
தங்கச்சியாவே ஆக்குறேன் பாருங்க… என்று அவன் ஏதோ ஒரு உள்
அர்த்தத்தில் கூற…
அப்ப நீங்க இந்த வீட்ல தான் தங்கி இருக்கீங்களா.. என்றான் ராஜேஷ்
ஆம்…. என தலையை மேலும் கீழும் அசைத்தாள்…
அப்ப நானும் இனிமேல் இங்க தான் தங்க போறேன் என்றான் ராஜேஷ்.
என்ன சார் சொல்றீங்க…
இல்ல ஒரு வேலை விஷயமா இனிமேல் நான் இங்கதான் வந்து தங்கணும்
அப்படின்னு சொன்னேன்… என்று கூறியவன், விசில் அடித்த படியே
ருத்ராவின் அறைக்கு சென்று வளையலை எடுத்துக்கொண்டு..,, “பாய்
ஃப்ளவர்” என்று கூறிவிட்டு சென்றான் ராஜேஷ்.
இனிமேல் இவரையும் சமாளிக்கணுமா? என்று மனதில் நினைத்துக்
கொண்டு தனது அறைக்குள் நுழைந்தாள் மலர்.
********************
அடுத்த நாள் காலையில் அருண் வீட்டில் அனைவரும் டைனிங் டேபிளில்
அமர்ந்து உணவருந்தி கொண்டு இருந்தனர்.
அப்பொழுது வெளியில் ஒரு கார் வந்து நிற்க அனைவரும் வாசலை
இப்போ யார் வராங்க என்ற கேள்வியுடன் நோக்கினர்.
அவர்கள் கேள்விக்கு விடையாக தனது சூட்கேசுடன் உள்ளே நுழைந்தான்
ராஜேஷ்.
அதிரடியாக உள்ளே நுழைந்தவன் அருண் பக்கத்தில் காலியாக இருந்த
இருக்கையில் அமர்ந்து உணவை எடுத்து போட்டு சாப்பிட ஆரம்பித்தான்.
அப்பொழுது அருண், வாடா ராஜேஷ்…. நேத்துதான் ஊருக்கு போன
இன்னைக்கு திரும்ப வந்திருக்க… அதுவும்
சூட்கேசோட வந்திருக்க.. என்ன விஷயம்? என்று கேட்டான்.
அது ஒன்னும் இல்ல அருண் ப்ரோ…. எங்க அப்பா தான்
இங்க மும்மூர்த்திகள் இருக்கீங்க இல்ல…. அவங்க கிட்ட போயி நல்ல
பிசினஸ் கத்துகிட்டு வா…. அப்டின்னு அனுப்பி வச்சாரு சோ இனிமேல்
நான் ஒரு ஆறு மாசம் என்று விரல் விட்டு எதையோ கணித்தவன்…. இல்ல
இல்ல… என் வேலை முடியிற வரைக்கும் இங்க இருந்து உன்கிட்ட தொழில்
ரகசியத்தை கத்துகிட்டு போலாம்னு இருக்கேன்… என்றான் வாயில்
தோசையை வைத்தபடி…
நீதான் உனக்கு பிசினஸ்ல விருப்பம் இல்ல எனக்கு ஷேர் மார்க்கெட்
இன்வெஸ்ட்மென்ட் , டிரேடிங்கில் தான் விருப்பம் அப்படின்னு சொல்லி
பிசினஸ் கத்துக்க மாட்டேன்னு சொல்லிட்டியே அப்புறம் என்ன…. இப்ப
மட்டும் உனக்கு பிசினஸ் பிடிக்குதா? என்று கேட்டான் அருண் சாப்பிட்டு
கொண்டே….
இல்ல ப்ரோ!… இதுவரைக்கும் எனக்கு பிசினஸ் பிடிக்காமல் தான்
இருந்துச்சு ஆனா… நேத்து இருந்து பிடிக்க ஆரம்பிச்சிடுச்சு என்று
கிச்சனை எட்டி பார்த்துக்கொண்டே ராஜேஷ் சொல்லி கொண்டு
இருந்தான்…
அவன் பார்வை சமையலறையை ஆராய்வதை பார்த்த விக்ரம்….அங்க
யார தேடுற!..என்று கேட்டான்…
அது கொஞ்சம் காரமா இருக்க மாதிரி இருக்கு… அதான் யாராவது
தண்ணி கொண்டு வந்து கொடுப்பாங்களா அப்படின்னு பார்த்தேன்
என்றான் ராஜேஷ்.
இந்தா தண்ணி என்று தன் அருகில் இருந்த தண்ணீர் டம்ளரை அவன்
பக்கத்தில் நகட்டி வைத்தான் விக்ரம்.
தேங்க்ஸ் மச்சான்….
என்னது மச்சானா…. எத்தனை நாளா விக்ரம் ப்ரோ னு தான் கூப்பிடுவே
இது என்ன புதுசா “மச்சான்”….
அது வந்து நமக்குள்ள பாண்டிங் அதிகமாக போகுது இல்ல…. நான் என்ன
சொல்றேன்னா இப்போ அகி அக்கா மேல எனக்கு ரொம்ப பாசம்… அப்ப
அக்காவோட வீட்டுக்காரரை மச்சான் என்று சொல்லலானா எங்க அக்கா
கவல படுவாங்க….
இனிமேல் அருண கூட அண்ணன்னு தான் கூப்பிட போறேன் இதோ
இவங்க எங்க அண்ணி என்று ரதியை கை நீட்டி காண்பிக்க….
ஏய்… இடியட்…என்ன எல்லாம் அந்த மாதிரி கூப்பிடாத கால் மீ ரதி….
என்றாள் காட்டமாய்…
(ஏற்கனவே எனக்கு வயசான மாதிரி இருக்கு இதுல இவன் வேற அண்ணி
“பண்ணி”ட்டு எங்க இருந்து தான் வரானுங்களோ இந்த குடும்பத்துக்குனு
இன்று வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டாள் ரதி )
ஓ அண்ணினு கூப்பிட்டா ஓல்ட் பேஷனா இருக்கும்னு
யோசிக்கிறீங்களா…. சரி விடுங்க இனிமேல் நான் உங்கள சில்
அப்படின்னு கூப்பிடுறேன்..
என்ன லூசு தனமா உளறுகிறான் என்ற முறையில் ரதி அவனைப்
பார்க்க…
சிஸ்டர்- இன் -லா சுருக்கி (SIL) சில் இப்போ ஓகே தானே… என்றான்
தோளை உயர்த்தி காட்டி பெருமிதமாக…
உனக்கு பல்லு இப்போ ஜில்லு ஜில்லா உடைய போகுது பேசாம
சாப்பிடுறா என்றான் விக்ரம்.
ஆமா டிபன் யார் பண்ணுது சும்மா டேஸ்ட் அள்ளுது…. என்றான் ராஜேஷ்.
என்னோட தங்கச்சி… என்றான் விக்ரம்.
யூ மீன் ஃப்ளவர்!… அதான் டேஸ்ட் அள்ளுது என்றான் ராஜேஷ்.
அது யார்ரா ஃபிளவர்… என்று விக்ரம் கேட்க..
மலர்…. இங்கிலீஷ்ல ஃபிளவர்…
இதைக் கூறும் போது அவனை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்துவிட்டு
மீண்டும் உணவருந்து வதில் கவனம் ஆனான் அருண்.
உணவு உண்டு முடித்தபின் ராஜேஷ் சோபாவில் அமர்ந்திருந்த
சக்கரவர்த்தியின் அருகில் அமர்ந்து அவர் படித்துக் கொண்டிருந்த
நாளிதழை பிடுங்கி படிக்க ஆரம்பித்தான்….
எடுத்ததும் அவன் படிக்க ஆரம்பித்தது ராசிபலன்… வீட்டில் உள்ள
அனைவரின் ராசியையும் கேட்டு அதற்கு செய்தி போல் வாசித்து
காண்பித்தான்.. முதலில் சக்கரவர்த்தியில் ஆரம்பித்தவன்
ஒவ்வொருவராய் வந்து ஆருணிடம் வந்தான்.
அருண் ப்ரோ உங்க ராசி என்ன என்று கேட்க…
ரிஷபம் என்றார் சக்கரவர்த்தி..
உங்களுடைய ராசியை பொறுத்த வரையில் இன்று உங்கள் மனைவியால்
உங்களுக்கு தொல்லை வரும் என்று வாசிக்க… அருகில் அமர்ந்திருந்த
ரதிக்கு பட்டு என்று பொறை ஏறியது… திரும்பி அருணை ஒருமுறை
முறைத்தாள் ரதி… அதே நேரத்தில் ஏதாச்சையாக சமையலறைக்குள்
நின்றிருந்த மலருக்கும் புரை ஏறியது…
இருவருக்கும் ஒரே நேரத்தில் புரையேறுவதை கவனித்த அருணுக்கு
இதழில் மென் புன்னகை வந்தது போனது.
ஹே பிளவர் என்ன ஆச்சு…. என்று கேட்டபடியே ராஜேஷ்
சமையலறைக்குள் நுழைய போக…
இவன் வேற… தொழில் கத்துக்க தானடா வந்த.. வாடா ஆபீஸ் போலாம்….
என்று சமையலறைக்குள் நுழைய விடாமல் அவனை தடுத்து
நிறுத்தினான் விக்ரம்…
வரேன் மச்சான்.. இன்னைக்கு தானே வந்திருக்கேன்… டயர்டா
இருக்கு… இன்னைக்கு ஒரு நாள் ரெஸ்ட் எடுத்துட்டு நாளைக்கு வரேன்…
ஓகேவா மச்சான்… என்று மச்சானில் ஒரு அழுத்தத்தை கொடுத்து அவன்
கன்னத்தை தட்டி விட்டு… எனக்கு இங்க கீழ எந்த ரூம் என்று கை
நீட்டியவன் மலரின் அறைக்கு பக்கத்தில் இருந்த ஒரு அறையை தேர்வு
செய்து, அங்க கரெக்டா இருக்கும்.. இனிமேல் நான் அந்த ரூம்ல
தங்கிக்கிறேன் என்று கூறிவிட்டு அவன் பையுடன் அந்த அறைக்குள்
நுழைந்தான்.
வர..வர… இது வீடா சத்திரமானே தெரியல… அது..அதுக.. வருதுங்க…
தங்குதுக..போகுதுங்க… என்று அருணின் காதில் படும்படி
முணங்கிவிட்டு கையை கழுவி விட்டு எழுந்து சென்றாள் ரதி.
சமையலறைக்குள் நுழைந்த விக்ரம் மலரிடம் ,
அருண் ஓட சித்தி பையன் ராஜேஷ் இங்க வந்திருக்கான் மலர்.. ம் கொஞ்ச
நாள் இங்க தான் தங்குவான் போல தெரியுது…. லொட லொடன்னு
பேசுவான் மத்தபடி ரொம்ப நல்லவன் தான்… உன்கிட்ட வந்து எப்படியும்
பேசி கழுத்தறுப்பான்னு எனக்கு தெரியும்.. நீ ஒன்னும் பயப்படாத.. ஹீ
இஸ் ஹார்ம்லெஸ்… ஜஸ்ட் லீவ் இட் என்று கூறிவிட்டு சென்றான்.
சரி என்று தலையாட்டி வைத்தாள் மலர்…
அனைவரும் அலுவலகத்திற்கு கிளம்பிய பின் தன் அறையை விட்டு
வெளியே வந்தான் ராஜேஷ்.
தனக்குத் தெரிந்த அத்தனை குரங்கு சேட்டைகளையும் செய்து
காண்பித்தான் மலரிடம்.. வாய் ஓயாமல் பேசி தீர்த்தான்… அவளை அமர
வைத்து சாப்பிட சொல்லி பரிமாறினான். ஐயோ சார்…. நான் இங்க
உட்காரல… நான் என்னோட ரூம்ல போய் சாப்பிட்டுக்குறேன். என்று
அவள் எல முயல.. ஏன் இங்க உக்காந்து சாப்ட்டா இந்த சேர் தேஞ்சிடுமா…
சொன்னா கேளு…. என்று கூறி சாப்பிட வைத்தான்.
சிறிது நேரம் கழித்து அவளுக்கு காபி கலந்து எடுத்து வந்து குடிக்க
சொல்லி வற்புறுத்தினான்…
முதலில் அவனின் இம்சைகளால் கலவரமாய் முழித்த மலர்…. ஒரு
கட்டத்தில் கடுப்பாகி பின் வாய்விட்டு சிரித்தே விட்டாள்.
அவள் சிரிப்பதை ரசித்துப் பார்த்த ராஜேஷ்.
சிரிச்சா… நீ ரொம்ப அழகா இருக்க பிளவர்.. என்று ரசனையாய் கூற…
அப்பொழுதுதான் உணர்ந்தாள்… அவள் இப்படி சிரித்து பல நாட்கள்
ஆகிவிட்டது பெரும்பாலும் இந்த வீட்டுக்கு வந்த பின்பு மென்புன்னகை
மட்டுமே அவள் சொந்தம்.
ராஜேஷ் சார்… எதுக்காக இப்படி எல்லாம் பண்ணிட்டு இருக்கீங்க… நீங்க
ஆபீஸ் போகலையா… என்று கேட்க…
போகணும் ஃப்ளவர் நாளையிலிருந்து போவேன்… ஏன் உனக்கு நான்
இங்கே இருக்கிறத ரொம்ப தொந்தரவா இருக்கா? தொந்தரவா இருந்தா
சொல்லு நான் என் ரூமுக்குள்ளேயே போய் உட்கார்ந்துகிறேன் என்று
கூறிவிட்டு வேகமாய் சோபாவை விட்டு எழுந்தவன்…. தரையில் விரித்து
இருந்த கார்பெட் தடுக்கி கீழே விழுக போக…
சார்.. பார்த்து சார்.. என்று அவனை தாங்கி பிடித்தாள் மலர்…
உடனே ராஜேஷை சுற்றி ஐந்தாறு வெள்ள உடை அணிந்த தேவதைகள்
லாலா லாலா லாலா என்று இசை வாசிப்புடன் சுற்றி வந்தனர் கனவில்….
ராஜேஷ் மலரின் கண்ணை பார்த்த படி அதே போஸில் நிற்க…
இவருக்கு என்ன ஆச்சு ஏன் இப்படி கனவு கண்டிட்டு நிக்கிறாரு என்று
விழித்துக் கொண்டிருந்தாள் மலர்.
சரியாக அந்த நேரத்தில் உள்ளே நுழைந்தான் அருண்.
❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்..
ஊக்கபடுத்த கருத்துகளையும் பகிருங்கள் .
நன்றி!❤️