“என்னால முடியல மீனா. நான் எவ்வளவு சொல்லிட்டேன் தெரியுமா? எங்க அப்பா கிட்ட. இந்த கல்யாணம் வேண்டாம் என்று. ஆனா, அவரு ஒத்துக்கவே மாட்டேங்குறாரு. நீ அவன தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு சொல்றாரு. எனக்கு என்ன பண்றதுனே தெரியலடி?” என்று தேம்பி தேம்பி அவளின் வார்த்தைகள் வெளிவர இறுக்கி அணைத்துக்கொண்டாள் மீனா..
“சுவாதி அவன் கொலை பண்றவன் மட்டும் இல்லடி பொண்ணு விஷயத்திலும் தப்பானவனா தான் இருக்கான்..” என்று கூற அதிர்ந்து அவளை நிமிர்ந்து பார்த்தாள்..
“ என்னடி சொல்ற ?”
“ஆமா, இப்போதான் அவன ஒரு பொண்ணு கூட பார்த்தேன். எனக்கு என்னமோ இது சரியா வரும்னு தோணல. உங்க அப்பா கிட்ட போய் சொல்லி எப்படியாவது இந்த கல்யாணத்தை நிறுத்து. உனக்கு இது செட் ஆகாது டி. வேண்டாம்! உன் லைஃபே மொத்தமா போயிரும்..” என்று சொல்ல
“ ம்ஹூம் அது கண்டிப்பா முடியாதுடி..” என்று உதடு பிதுக்கி சிறு குழந்தை போல அழுதவளை எப்படி தேற்றுவது என்று தெரியாமல் மீனா விழித்தாள்..
“அவன் எப்படி இருந்தாலும் சரி, நீ அவனை தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு சொல்லிட்டாரு. இப்ப இதையும் சொன்னா என்னதான் கன்வின்ஸ் பண்ணுவாரு. எனக்கு என்ன பண்றதுனே தெரியல மீனா..” என்று சுவாதி கூற
இருவருக்கும் அதற்கு மேல் என்ன செய்வது என்று புரியவில்லை..
அதேநேரம் சுவாதியின் போன் ஒலிர சுவாதி வேகமாக அதை அணைத்தாள்..
“ ஏன்? எடுத்துப் பேசு..” ஒன்னும் பிரச்சனை இல்ல..” என்று மீனா கூற
“இல்லடி..” என்றாள்
மீண்டும் மீண்டும் ஒலிக்க அவள் கட் செய்து கொண்டே இருந்தாள்..
“ திரும்பத் திரும்ப கால் பண்றாங்க நீ கட் பண்ற. என்ன நீ கல்யாணம் பண்ணிக்க போறவனா..” என்று மீனா கேட்க
“இல்லடி..” என்றாள்
“ அப்புறம் யாரு இத்தனை முறை விடாமல் கால் பண்றது..” என்று கேட்க
“கௌதம்..” என்றாள்
“ஹான்! கௌதமா அது யாரது?” என்று மீனா கேட்க
“என் கூட ஸ்கூல்ல படிச்சவன் டி. நான் டென்த் படிச்சப்ப அவன் 12th படித்தான். லவ் லெட்டர் கொடுத்தான். அப்ப இருந்த பயத்துல அதை கிழிச்சு போட்டு, அவனை திட்டி விட்டுட்டு வந்துட்டேன். அதுக்கப்புறம் விடாமல் ப்ரொபோஸ் பண்ணிக்கிட்டே தான் இருந்தான். ஒரு கட்டத்துல பயம் வந்திருச்சு. அதனால, அப்பா கிட்ட சொல்லிட்டேன்..”
“சொல்லல டி போட்டுக் கொடுத்துட்டேன்னு சொல்லு. எருமை! எருமை!” என்று திட்ட சுவாதியும் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டாள்
“அப்பா அவனை அடி பின்னி எடுத்துட்டாரு. அதுல இருந்து தான் அவனும் என்னை டிஸ்டர்ப் பண்ணல. அதனால, நானும் விட்டுட்டேன்..”
“ அப்புறம் இப்போ கால் பண்றான். அது.. இப்பவும் என்ன லவ் பண்றானாம். கல்யாணம் என்ற செய்தி அவன் ஃபிரண்டு மூலமா கேள்விப்பட்டானாம். ‘நான் இன்னும் உன்ன லவ் பண்றேன். நீ எப்படி என்ன விட்டுட்டு இன்னொருத்தனை கல்யாணம் பண்ணிக்கலாம்னு..’ போன் போட்டு என்கிட்ட சண்டை போட்டான்..”
“வாவ்! இப்படி ஒரு லவ் ஸ்டோரி இருக்குன்னு, நீ என்கிட்ட சொல்லவே இல்ல!” என்றாள் மீனா
அதிர்ச்சியாய் “நான்தான் லவ்வே பண்ணலையே..”
ஹாஹாஹா.. என்று மீனா சிரித்தவள் “உண்மைய சொல்லு. நீ லவ்வே பண்ணலையா..”
“ப்ச்.. எப்படி டி லவ் வரும். எங்க அப்பா உன்கிட்டேயே பேசக்கூடாது, பழகக் கூடாதுன்னு திட்றாரு. அவனும் உன்னை மாதிரி தான். கொஞ்சம் பேக்ரவுண்ட் வீக். அதனால், கண்டிப்பாக ஒத்துக்க மாட்டாரு. தெரிஞ்சே எதுக்கு ரிஸ்க் எடுப்பானே! அதனாலதான் அவனை அவாய்ட் பண்ணிக்கிட்டே இருந்தேன்..”
“ ம்ஹம் அப்படி.. அப்போ உனக்கு கௌதம பிடிக்காதா?” என்று சுவாதியின் முகத்தை கூர்ந்து கவனித்துக் கொண்டே கேட்க
அவளும் தலை கவிழ்ந்து இல்லை என்று தலை அசைத்தாள் மெதுவாக..
அவளின் தலை அசைப்பே மீனாவுக்கு உணர்த்தியது அவளுக்கும் விருப்பம் என்று..
ஆனால், தன் தந்தையினால் அவ்விருப்பத்தை அவளே மறுத்துக் கொண்டாள் என்பதும் விளங்கியது..
இப்போது மீனாவுக்கு ஒரு எண்ணம் உதிக்க, உடனே சுவாதியின் போனை வாங்கியவள் கௌதம் இருக்கு அழைத்தாள்..
“ என்னடி பண்ற?” என்று சுவாதி பதற
“ ஷூ” என்று வாயில் விரல் வைத்து கூறி கௌதமின் குரலுக்காக காத்திருந்தாள் எதிர் முனையில்..
போன் எடுக்கப்பட்டவுடன் “ஏன் சுவாதி இப்படி பண்ற? உனக்கு எத்தனை தடவை கால் பண்றது. எனக்கு.. என்னால.. என்னால நீ இல்லாம இருக்கவே முடியாது டி. ப்ளீஸ்! உன்னோட பதிலுக்காக தான் இத்தனை நாள் நான் காத்திருந்தேன். ஆனா, நீ கடைசி வரைக்கும் எனக்கு கிடைக்கவே மாட்டேன் என்ற போது என்னால முடியல. நான் வசதி இல்லாதவன் தான் ஒத்துக்கிறேன். ஆனா, கண்டிப்பா உன்ன சந்தோஷமா பாத்துக்குவேன். என்னால் அது முடியும். இதோ உனக்காக தான் நான் நல்லா படிச்சு நல்ல சம்பளத்தில் வேலையில் இருக்கேன். மாசம் எனக்கு 60,000 சம்பளம். அது பத்தாதா, நீயும் நானும் சந்தோஷமா வாழ. புரிஞ்சுக்கோ டி! என்னால நீ இல்லாம இருக்க முடியாது. எனக்கும் தெரியும் உனக்கும் விருப்பம் என்று. ஆனா, உங்க அப்பாவுக்காக தான் நீ ஒத்துக்காம இருக்க. எனக்கு தெரியும். ப்ளீஸ் டி! நீ மனசு வச்சா எல்லாம் நடக்கும் நீ எனக்கு கிடைக்க. கொஞ்சம் என்னையும் கன்சிடர் பண்ணு டி..” என்று கெஞ்ச
“ ஹலோ! ஹலோ பாஸ்! போன் பண்ணா எதிர்முனையில் யார் பேசுறாங்க? என்ன பேசுறாங்க? என்று கேட்கணும். புரியுதா! எடுத்தவுடனே நீங்க பாட்டுக்கு இவ்வளவு லெந்தியா டயலாக் பேசினா கேக்குறவங்களுக்கு தானே காதில் ரத்தம் வடியுது. ச்ச.. எவ்வளவு லவ். கேட்கிறே நானே உருகுறேன். கண்டிப்பா சுவாதியும் உருகிடுவா..” என்று கூற
எதிர்முனையில் கௌதம் திகைத்து, “ஹலோ! யாரது?” என்று பதறினான்..
“ ஹம்.. ரொம்ப லேட் பாஸ் நீங்க.. போன் பண்ண உடனே கேட்க வேண்டிய கேள்விய கிட்டத்தட்ட அஞ்சு நிமிஷம் கழிச்சு கேக்குறீங்க..” என்றாள் மீனா
“சா.. சா.. சாரி, நீ..நீ.. நீங்க யாருன்னு த.. தெரியல. இது சுவாதி ந.. ந.. நம்பர் தானே!”
“ஆ..ஆ.. ஆமா பாஸ்..” என்றாள் அவனைப் போலவே..
சுவாதிக்கு தான் என்ன பேசுவது என்று தெரியவில்லை..
அவள் மீனாவின் தலையில் நறுக்கென்று கொட்டினாள்..
“ஆஆஆ… எதுக்குடி இப்படி கொட்டுற. ஆமா உன் ஆளு என்ன திக்கு வாயா! இப்படி திக்குறாரு..” என்று கௌதமிருக்கு கேட்கும் படியே மீனா பேச
“அச்சோ!..”என்ற சுவாதி போனை வாங்கி மியூட்டில் போட்டாள்
“ஏன் டி ஃபோனை மியூட்டில் போட்ட. நான் அவர்கிட்ட பேசிட்டு இருக்கேன்ல..” என்று மீனா கத்த
“ லூசு எதுக்கு இப்போ அவன் கிட்ட இப்படி பேசுற. அவன் ஏதாவது நினைச்சுக்கிட்டா..” என்றாள் சுவாதி பதறியபடி
“ வேற எப்படி பேசணும். சரி சார், நீங்க ரொம்ப லவ் பண்றிங்க. வாங்க! அவங்க அப்பா பர்மிஷன் கொடுத்துட்டாரு. வந்து கூட்டிட்டு போங்க. அப்படியா சொல்லணும். பையன் லவ் பண்றான், பொண்ணுக்கு கல்யாணம் வச்சிருக்காங்க, வந்து தூக்கிட்டு போய் கல்யாணம் பண்ணுவானா! போன் போட்டு கெஞ்சிட்டு இருக்கான். லூசு! ”என்று அவளுக்கு தெரியாமலே மியூட்டை ஆன் செய்து பேசிக்கொண்டிருந்தாள்..
கௌதம் மொத்தமும் மீனா பேசியதை கேட்டிருந்தான்..
“ஹலோ!” என்றதும் சுவாதி தான் மறுமுனையில் “ஹலோ!” என்றாள்..
“ நான் அவங்க கிட்ட பேசணும், கொஞ்சம் போன் கொடு..” என்று கூற
“ எதுக்கு? நீ எதுவா இருந்தாலும் என்கிட்ட பேசு. அவ ஏதோ தெரியாம பேசிட்டா?” என்று பதற
“ஒன்னும் இல்ல நான் அவங்க கிட்ட பேசணும். நீ அவங்க கிட்ட ஃபோனை கொடு..” என்றதும்
சுவாதி முறைத்துக் கொண்டு மீனாவிடம் ஃபோனை நீட்ட
“ எனக்கு இப்ப பேச மூடு இல்ல. நான் பேசும் போது ஃபோனை புடுங்கனல்ல, நீயே பேசிக்கோ உன் ஆள் கிட்ட..” என்று இதழ் சுழித்து கூற
“ஆள் என்று சொன்ன மண்டையை தட்டிடுவேன்..” என்றாள் சுவாதி கடுப்பாக
“ ஓ! அப்படியா. மூனு நாளில் கல்யாணம். இன்னிக்கு வரைக்கும் உன் ஆள் கூட கடலை போட்டுட்டு இருக்க. ஆானால், ஆள் என்று மட்டும் சொல்லக்கூடாதா..” என்றாள் இவளும்
“ உன்ன..” என்று பல்லை கடித்தவள் அவள் கையில் ஃபோனை கொடுத்துவிட்டு சென்று கட்டிலில் அமர்ந்து கொண்டாள் கடுப்பாக
மீனாவும் நமட்டு சிரிப்பு சிரித்து விட்டு ஃபோனில் பேச தொடங்கினாள்..
பேசி முடித்தவள் ஃபோனை வைத்துவிட்டு, சுவாதி அருகில் வந்து அமர்ந்தாள்..
“எந்த தைரியத்தில் நீ அவன என் ஆளுன்னு சொல்லிகிட்டு இருக்க எனக்கு புரியல?”
“என் பிரண்டு மேல நான் வைத்திருக்கிற அன்பு என்கிற தைரியத்துல..” என்று மீனா கூற
சுவாதி மீனாவை நிமிர்ந்து பார்த்தாள்..
“ இதோ பார் சுவாதி, சொல்றத தெளிவா கேளு உங்க அப்பாவை நம்புனா உன் வாழ்க்கை தான் வீணா போகும். அதுக்கு பெட்டர் உன்னை காதலிக்கிறவன நீ கைப்பிடிக்கிறதுதான்..”
“ வேண்டாம் டி ரிஸ்க் எடுக்கிற. என்னால பாவம் அவனோட வாழ்க்கை வீணா போயிரும். அவனுக்கு குடும்பம் இருக்கு டி. எனக்கு எங்க அப்பா மட்டும்தான். ஆனா, அவனுக்கு அம்மா அப்பா தங்கச்சி தம்பி என்று பெரிய குடும்பமே அவனை நம்பி தான் இருக்காங்க. அவங்களுக்கு என்னால எந்த பிரச்சனையும் வேண்டாம். அதனால தானே! அவன் எனக்கு பிடிச்சிருக்குன்றப்ப கூட நான் எந்த பதிலும் சொல்லாம இருந்தேன்..” என்று கூறியவள் மீனாவை அதிர்ந்து பார்த்துவிட்டு தன் நாக்கை கடித்துக் கொண்டாள்
“ அப்படி வா வழிக்கு. அப்போ! அவனை நீ லவ் பண்ற. அப்படித்தானே!” என்று கேட்க
அதற்கு சுவாதி எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள்..
“இதோ பார்! எந்த பிரச்சினையும் வராது. எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம். வாழ்க்கை நமக்கு புடிச்ச மாதிரி அமையனும்னா சில ரிஸ்க் எடுக்கணும் பேபி! இது உன்னுடைய கல்யாணம். சந்தோஷமா இரு. நிம்மதியா தூங்கி எந்திரி. கல்யாணத்துக்கு ரெடியாகு. ஆனா, மாப்ள உங்க அப்பா பார்த்த அந்த ரௌடி இல்ல. நீ லவ் பண்ற, உன்ன அளவுக்கு அதிகமாக லவ் பண்ற கௌதம் தான் மாப்ள. புரியுதா!”
“ எனக்கென்னமோ ரொம்ப பயமா இருக்கு மீனா. எங்க அப்பாவை மீறி, அதுவும் அந்த ஈஸ்வர மீற ஒன்றுமே செய்ய முடியாது. எங்க அப்பா சொன்னாரு, ஈஸ்வர் எவ்வளவு மோசமானவர் என்று. அதனாலதான் சொல்றேன், ரிஸ்க் வேண்டாமே!”
“ சொன்னத செய். எந்த டென்ஷனும் நீ எடுத்துக்க வேண்டாம். உனக்கும் கௌதமுக்கும் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டியது என் பொறுப்பு. புரியுதா! எந்த பிரச்சனை வந்தாலும் அதை நான் ஃபேஸ் பண்ணிக்கிறேன். சந்தோஷமா இருக்கணும்..” என்று கட்டி அணைத்து நெற்றியில் முத்தமிட்டு “பாய் நான் கிளம்புறேன். உங்க அப்பா இவ்வளவு நேரம் உன்னை என்னிடம் பேச விட்டதே பெரிய விஷயம். இதுக்கு மேல இருந்தா கண்டிப்பா சந்தேகம் வந்துரும். அதனால, நான் கிளம்புறேன். முக்கியமான விஷயம் ரொம்ப சந்தோஷமா இருந்து நீயே உன்னை காட்டிக் கொடுத்துக்காத. அதே மாதிரி அழுது கிட்டும் இருக்காத. புரியுதா!”
“ புரியுது..”என்று சுவாதி கூற
“குட்.. இப்பவே கௌதம் கூட டூயட் பாடி ஆடு. பாய் நான் கிளம்புறேன். உன்ன டிஸ்டர்ப் பண்ண விரும்பல..” என்றவாறு கிளம்பி விட்டாள்