அசுரன் 57

அசுரன் 57 

 

விடுதியில் படுக்கையில் படுத்திருந்தவளுக்கு தூக்கமே வரவில்லை…  புரண்டு புரண்டு படுத்தவள் பின் மெல்ல எழுந்து வந்து… ஜன்னல் அருகே வந்து நின்றாள்… இன்று அவளுக்காக வாங்கி கொடுத்த வண்டி தான் அவள் கண் முன்னே நின்று இருந்தது…  அவள் இடுப்பில் இன்னும் அவனின் கைரேகை இருப்பது போல் ஒரு எண்ணம்… அவன் இரும்பு கைபிடித்ததில் மென்னிடை சிவந்து தான் போனது…

 

வாகனத்தை ஓட்டி பழகிவிட்டவன்… வாகனத்தை விட்டு இறங்கும் பொழுது தான் அவளுக்கு தெரிந்தது… வியர்வையில் உடல் முழுதும் நனைந்து அவனுடைய வெண்ணிற சட்டை உடம்புடன் உடம்பு ஒட்டி அவனுடைய கட்டுடல் அப்பட்டமாய் வெளியே தெரிய ஆரம்பித்தது… சிக்ஸ் பேக்கா, யேட் பேக்கா என்ற சந்தேகம் இப்பொழுது மலரின் மூளையில் தோன்றியது…

 

அவள் தனியே ஓட்ட பழகியதும்… 

பொண்ணுங்க பைக் ஓட்டறதுல எவ்வளவு சுதந்திரம் இருக்குதுன்னு பின்னாடி ஒரு நாள் புரிஞ்சுப்ப…. 

 

இன்னும் ஒரு ரெண்டு நாளைக்கு காலையில ரெண்டு மணி நேரம் உங்க ஹாஸ்டல் பக்கத்துல ஒரு கிரவுண்ட் இருக்கு அங்க போய் ஓட்டி பழகு…  மூணாவது நாள் நீ தான் இந்த வண்டியை ஓட்டிட்டு நம்ம ஆபீஸ் வரணும்…. ஓகே… என்று அவன் கட்டளை இட…

 

ஐயோ தனியாவா? அதுவும் இந்த ட்ராபிக்கலையா… ஒருவேளை கீழே விழுந்துட்டா…

 

அவள் மண்டையில் ஒரு கொட்டு கொட்டியவன்…

ஒரு விஷயத்த தொடங்கும் போதே விழுகிறத பத்தி யோசிச்சா பின்ன எப்படி ஆரம்பிக்கிறது….. ட்ராபிக்கா இருக்கும்னு பயந்தா காலையில் சீக்கிரமாகவே ஆபீஸ்  கிளம்பி வந்துடு… ஒரு ஒன் வீக் கஷ்டமா இருக்கும் அதுக்கப்புறம் டிராபிக்  பழகிடும்…

அவள் தலையில் ஹெல்மட்டை மாட்டிவிட்டு..

எப்போ வண்டி எடுத்தாலும் கண்டிப்பா ஹெல்மெட் போடணும்….

என்று அவள் கண்ணைப் பார்த்துக் கொண்டே கூற… அவனின் அக்கறை அப்பட்டமாய் தெரிந்தது அவளுக்கு…. அவளும் அவன் கண்ணை தான் பார்த்தாள்….  அவன் உடல் தான் இரும்பு ஆனா கண்கள் காந்தம் என்று உணர்ந்து கொண்டாள்… புதிதாய் ஒரு உணர்வு… அவளுக்கு தெரியுமே அவளுக்காக அவன் செலவு செய்யும் இந்த நேரங்களில் அவனுக்கு எவ்வளவு வேலைகள் இருக்கும் என்று…. 

 

அவன் கண்களை பார்த்துக் கொண்டே எதுக்காக இதெல்லாம் செய்றீங்க என்று அவள் கேட்க…

 

தோள்களை உயர்த்தி காட்டி எனக்கே தெரியல செய்யணும்னு தோணுது செய்றேன்… நோ ரீசன் பிஹைண்ட் தட்… என்று அவன் விளக்கம் கொடுக்க…

 

என்னதான் மனம் பாறையாய் இருந்தாலும் இந்த பாலாய் போன  அன்பிலும் அக்கறையிலும் பனியாய் உருகி தான் போகிறது… 

 

நான் இன்னொரு விஷயம் சொல்லணும்… என்று ஒரு நிமிடம் தயங்கியவன்… பொதுவா பெண்களோட உடை விஷயத்துல ஆண்கள் தலையிடுவது தப்பு தான்… பட் ஆபீஸ்க்கு இனிமேல் சுடிதார் போட்டுட்டு வாயேன் கொஞ்சம் கம்பர்ட்டபிளா இருக்கும்… ( மலரின் நலன் கருதி சொன்னது தான் அனைவரும் நம்புங்கள் )

 

நடந்ததை நினைத்து பார்த்தவள் இதழில் மெல்லிய புன்னகையுடன்… படுக்கையில் படுத்தவள் சிறிது நேரத்தில் உறங்கியும் போனாள். 

 

இரண்டு நாட்கள் அவன் சொன்னது போல் வண்டி ஓட்டி பழகி விட்டு மூன்றாவது நாள்…. ஆதியின் வேண்டுகோளுக்கிணங்க  இன்று ஒரு வெண்மை நிற சுடிதார் எடுத்து அணிந்து கொண்டாள்… கூந்தலை பின்னலிடாமல் சிறிது எடுத்து கிளிப்பிற்குள் அடக்கி இருந்தாள்.  துப்பட்டாவை அடுக்கடுக்காக எடுத்து இரண்டு பக்கமும் பின் குத்தி இருந்தாள்…. பின் தயக்கமாய்.. வண்டியில் ஏறி உட்கார்ந்தவள் கண்ணை மூட “தைரியமா ஓட்டுங்க நான் இருக்கேன்” என்று அவள் காதில் ஆதியின் குரல் கேட்டது… மெல்ல தயங்கி படியே  சாலையில் ஓட்ட ஆரம்பித்தாள்… ஒரு நிமிடம் ….  கொஞ்சம் பயம் இருந்தாலும்… வாகன நெரிசல் இல்லாத காரணத்தினால் அவளால் கொஞ்சம் இலகுவாகவே ஓட்ட முடிந்தது…  உண்மையில் இந்த நிமிடம் அவள் மனம் இறக்கை கட்டி பறந்தது… ஏதோ சாதித்து விட்டது போல்… அப்பொழுதுதான் கண்ணாடியில் கவனித்தாள்… அவளுடைய ஆபீஸ் கேப் அவளைப் பின்தொடர்ந்து வந்தது…. அய்யய்யோ… டிரைவர் அண்ணா கிட்ட சொல்லாம விட்டுட்டோமே பாவம் அவர் நம்மள தேடி வந்துட்டாரு போல என்று மனதுக்குள் நினைத்தாள்…

 

அலுவலகத்தில் இறங்கியவுடன் டிரைவரிடம் சென்று “அண்ணா இனிமேல் நீங்க என்ன கூப்பிட வர வேணாம் நான் இனிமேல் பைக்ல வந்துடுறேன் என்று அவள் கூற… 

சார் சொன்னாருமா… இனிமேல் நீங்க பைக்ல தான் வர போறீங்கனு… ஆனா ஒன் வீக் உங்க பாதுகாப்புக்காக பாலோ பண்ண சொல்லி இருக்காரு… என்று கூறியதைக் கேட்டு… அவள் உள்ளம் பூரித்தது..  

 

ஓஹோ..  ஓகே-ண்னா…  தேங்க்ஸ்… என்று கூறிவிட்டு அலுவலகத்திற்குள் நுழைந்தாள் மலர். ஏனோ இப்பொழுது உடனே ஆதியை பார்க்க வேண்டும் என்று தோன்றியது. இதோ அவன் கேட்டதற்காக அணிந்து வந்த சுடிதார் உடன் அவன் கண்முன்னே காட்சியளிக்க வேண்டும்.

 

வேகமாய் ஆதியின் அறைக்குள் நுழைந்தாள் மலர்.. சுற்றும் முற்றும் பார்த்தாள் ஆதி இன்னும் வரவில்லை… அவனுடைய பெயர் பலகையை கையில் எடுத்து ஒவ்வொரு எழுத்துக்களாக மெதுவாக தடவி பார்த்தாள்… தேவாதித்யன்… அவனைப் போலவே இந்த பெயரிலும் ஆளுமை இருப்பதாக உணர்ந்தாள். இதையெல்லாம் இரு கண்கள் கண்காணிப்பு கேமராவில் பார்க்கத் தவறவில்லை…

 

அவனுடைய அறைக்குள் தான் அவளுடைய கேபினும்… அவளுக்கென புதிதாய் அமைத்துக் கொடுத்திருந்தான்….. இனி அவளுக்கு முழு நேர வேலையும் இங்கேதான்..  பயிற்சி காலம் முடிந்து அப்பாயிண்ட்மெண்ட் லெட்டரை கையில் வாங்கும் பொழுது, உண்மையில் மலரால் இது தன் வாழ்க்கை தானா என்று நம்பவே முடியவில்லை கிள்ளி பார்த்துக் கொண்டாள்.

 

தன்னுடைய கேபினில் ஆதிக்காக காத்திருக்க ஆரம்பித்தாள் மலர்.

 

அவள் தன்னை எதிர்பார்க்கிறாள் என்று ஆதிக்கும் புரிந்தது… ஆனால் இன்று வெளியில் சில வேலைகள் முடித்துவிட்டு மதிய வேளைக்கு மேல் தான் அலுவலகத்திற்கு திரும்புவான்…  அவள் காத்திருப்பை புரிந்தவன்… மலருக்கு போன் செய்தான்…

 

போனை எடுத்து காதில் வைத்தவள் குட் மார்னிங் சார்…. என்றாள்

 

குட் மார்னிங்…  இன்னைக்கு ஆபீசுக்கு பைக்ல வந்தீங்க போல… குட்…

இன்னைக்கு நான் ஆப்டர்நூன்க்கு மேல தான் ஆபீஸ்க்கு வருவேன்…. 

 

இதைக் கேட்டவுடன் மலரின் முகம் சுருங்கியது… ( அதை அவனும் கவனித்தான், இதழில் மெல்லிய புன்னகையுடன் )

 

சோ… நீங்க டிசைனிங் டிபார்ட்மெண்டுக்கு போயி ஆர்கிடெக்சர் டிசைனிங் டெமோ பாருங்கள்… இன்னும் 5 மந்த்ஸ்ல ஒரு   ஆர்கிடெக்சர் டிசைனிங் காம்பெடிஷன் வரும்…. அதுல நீங்களும் பார்ட்டிசிபேட் பண்ணனும்… சோ இப்ப இருந்தே… நல்லா ட்ரெயினிங் எடுத்துக்கோங்க… என்று அவன் கூற…

 

பட்…. அதுக்கு… நிறைய எக்ஸ்பீரியன்ஸ் வேணுமே சார்…

 

இட்ஸ் நாட் எ மேட்டர்…. தனித்துவமான டிசைன்களுக்கு மட்டுமே அங்கே மதிப்பு…. 

சோ ஸ்டார்ட் யுவர் ஐடியா டுடே… நிறைய யூனிட் டிசைன்ஸ் பற்றி ஸ்டடி பண்ணுங்க நான் வந்த உடனே டிஸ்கஸ் பண்ணலாம்…

 

ஓகே சார்… ஐ வில்…

 

ஒரு கணம் அமைதியாக இருந்தான்… வேற ஏதாவது சொல்லனுமா மலர்… என்று அவன் கேட்க…

 

இல்லை எனும் விதமாக தலையசைத்தாள்…..

 

தலையசைக்கிறது எல்லாம் போன்ல தெரியாது மலர் எனக்கூறி விட்டு சிரிக்க…

 

போனால் தனது முன் தலையில் அடித்துக் கொண்டாள் சிரித்தபடியே…

 

இருவருக்கும் போனை வைக்கும் எண்ணம் இல்லை… ஆனால் பேசுவதற்கும் எதுவும் தோணவில்லை… மனமில்லாமல் போனை வைத்தார்கள்…

 

டிசைனிங் டிபார்ட்மெண்டிற்கு சென்று, அங்கு அனுபவம் வாய்ந்த சக ஊழியர்களின் அனுபவத்தை பற்றி கேட்டு தெரிந்து கொண்டு இருந்தாள்… மற்றும்  அவர்களின் முந்தைய டிசைன்கள் அது உருவாக எடுக்கும் நாட்கள்… அங்கிருக்கும் பைல்களை எடுத்துப் பார்த்து தெரிந்து கொண்டு இருந்தாள்…

 

செய்ய வேண்டிய வேலையை செய்து விட்டால் கூட ஒரு நிமிடத்தில் மனம் அந்த வேலையை மறந்துவிட்டு அடுத்த வேலைக்கு தாவி விடும் ஆனால் செய்யாமல் விட்டால் மூளை அதைப் பற்றிய நினைத்துக் கொண்டிருக்கும் அதுபோல…

 

ஆதியை பார்க்க வேண்டும் என்று எண்ணம் தோன்றிய மனதிற்கு அவனை ஒரு கணம் பார்த்து இருந்தால் கூட அடுத்த வேலையில் முழு மனதில் ஈடுபட்டு இருக்கும்… இப்பொழுது முழு மனதும்  ஆதி எப்பொழுது வருவான் வந்து விட்டானா? என்று யோசிக்க சொல்லியது…

 

ஆனால் இன்று ஏன் இந்த பரவசம் என்று அவளை அவளையே கேட்டுப் பார்த்தாள் பதில் தான் கிடைக்கவில்லை…

 

மதிய வேளையில் அலுவலகம் வந்து சேர்ந்தான் ஆதி…

 

மலரை காண போகும் புத்துணர்வுடன் வேகமாய் கதவு திறந்து அறைக்குள் நுழைய… கன்னத்தில் கை வைத்த படி கவலை தோய்ந்த முகத்துடன் அருணும்…. பக்கத்தில் கொஞ்சம் சோர்வாய் விக்ரமும் அவனை எதிர்பார்த்து காத்திருந்தார்கள்…

 

அருணை பார்த்த மாத்திரத்தில் ஆதியின் முகத்தில் இருந்த புத்துணர்வு வடிந்தது….

 

வாங்கடா… எப்ப வந்தீங்க… ஒரு போன் கூட பண்ணல… சொல்லி இருந்தா நானே உன்னோட ஆஃபீஸ்க்கு வந்து இருப்பேனே…. என ஆதி கேட்க…

 

டேய் மச்சான் இவன்… இப்பல்லாம் ரொம்ப ஓவரா பண்றான்டா என்னால இவனோட தொல்லை தாங்க முடியல… ஃபுல் சரக்கு போட்டு மட்டையாகிறான்டா… ரித்து வேற கத்து கத்துன்னு கத்துறான்… ரதி கிளம்பி ஆபீஸ் போயிடுது… இவன் ரூமுக்குள்ளேயே வாமிட் பண்ணிட்டு உருண்டு கிடக்கான்…. அதனாலதான் அவனை இங்கே இழுத்துட்டு வந்தேன்.

 

ஏண்டா இப்படி எல்லாம் பண்ணிட்டு இருக்க அன்னைக்கு ரொம்ப நல்லவனாட்டம் என்னோட புள்ளைக்கு நல்ல அப்பாவா இருப்பேன் அப்படின்னு சொல்லிட்டு போன…  இன்னைக்கு என்ன இப்படி வந்து நிக்கிற… என்று கர்ஜித்தான் ஆதி.

 

இவன் கொஞ்ச நாளைக்கு உன் கூட ஆபீஸ் வரட்டும் என்று விக்ரம் கூற …

 

அமைதியாக இருந்தான் அருண்.

 

வாய தொறந்து ஏதாவது சொல்றானானு பாருடா மச்சான்….

 

அமைதியாய் ஒரு இடத்தை வெறித்து பார்த்துக் கொண்டிருந்த அருண்…. எனக்கு மலர பாக்கணும்…  அவ கிட்ட பேசணும்… என்றான் விட்டேதியாய்.. 

 

தாகத்திற்கு தண்ணீர் அருந்தி கொண்டிருந்த ஆதிக்கு படார் என்று புற ஏறியது… பின் அவனது வாயை கைக்குட்டையினால்  துடைத்துக் கொண்டே… அருணை ஆழ்ந்த பார்வை பார்த்தான் ஆதி.

 

போன் பண்ணி பேச வேண்டியது தானடா…. என விக்ரம் கேட்க…

 

என்னோட நம்பர் பிளாக் பண்ணிட்டா…. வேற நம்பர்ல இருந்து கூப்பிட்டாலும் பேச மாட்டேங்கிறா கட் பண்ணி பிளாக் லிஸ்டில் போட்றா…. அவங்க வீட்டுக்கு இன்னும் போகல…  இந்த ஊர்ல தான் தங்கி வேலை பாக்குறா… எங்கன்னு கண்டுபிடிக்கணும்…

 

இப்போ அதுக்கு என்னடா பண்ண முடியும் உன் கூட பேச விருப்பம் இல்லாம தானே அந்த பொண்ணு பேச மாட்டேங்குது… அதுவும் இல்லாம உங்க ரெண்டு பேத்துக்குள்ள பேசுறதுக்கு என்னடா இருக்கு… உன்ன பொறுத்த வரைக்கும் அவ நம்ம வீட்டுக்கு வேலைக்கு வந்த பொண்ணு வேலை முடிஞ்சுது போய்ட்டா… அவ்வளவுதான்.

 

அப்படி சொல்லாதடா மச்சான்…. கடைசி நாள் அவளை என் பொண்டாட்டியா தாண்டா நான் நினைச்சேன்…

 

மாத்தி சொல்ற மச்சான்..   நீ பொண்டாட்டியா நினைச்சதுனால தான் அந்த பிள்ளைக்கு அது கடைசி நாளா போச்சு….. 

 

அருணும் ஆமோதிப்பாய் தலையசைத்தான்…

 

அருண் பேசுவதை கேட்க கேட்க ஏசி அறையிலும் ஒருத்தனுக்கு ரத்த கொதிப்பு எகிறியது.

 

அருண்…. ஒன்னு புரிஞ்சுக்க இனிமேல் மலர் உன் வாழ்க்கையில் இல்ல…. அதே மாதிரி மலரோட வாழ்க்கையிலையும் நீ இல்ல… சொல்லப்போனா உங்க ரெண்டு பேத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை…. என்று விக்ரம் நிதர்சனத்தை கூற…

 

எந்த வீட்ல புருஷன் பொண்டாட்டி சண்டை போடாம இருக்காங்க… சண்டை போட்டுட்டு தாலியை கழட்டி வீசிட்டு போறதில்லையா….  அதுக்காக சேர்த்து வைக்காமல் அப்படியே விட்டுடுவீங்களா?… நீங்க எல்லாம் பிரண்ட்ஸாடா… என்று அருண் கேட்க….

 

இங்கு ஒருவனுக்கு கழுத்து நரம்புகள் புடைத்து கை நரம்புகள் முறுக்கேறின.

 

அருண்… உன்ன சாவடிச்சிடுவேன் டா… புரியாம பேசாத… நீயும், ரதியும்  சண்டை போட்டா கண்டிப்பா உங்க கூட பேசி நாங்க சேர்த்து வைப்போம். ஆனா மலர பத்தி பேசாத… அந்த பொண்ணுக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்கு வாழட்டும் அதைக் கெடுக்க பாக்காத…

 

நான் மலர் கூட ஒரே ஒரு தடவை நேரில் பேசணும்டா… எனக்கு தெரியும் அவ மனசுல நான் இருக்கேன்..   நான் பேசினா அவ மனசு மாதிரி என் கூட வாழ சம்மதிப்பா….. என் காதல அவ புரிஞ்சிப்பா…. என் மேல அவளுக்கும் காதல் இருக்கும்… என் கூட இருந்த வரை என்னை எப்படி கவனிச்சுக்கிட்டானு நீங்க பார்த்தீங்க தானே…

 

காதலா இது எப்ப இருந்துடா… என்றான் விக்ரம் அதிர்ச்சியாய்.

 

தெரியல…. ஆனா அவ போன பின்னாடி புரியுது.

 

டேய் நீ ரதியவே காதலிக்கிறேனு சொல்லி தானடா கல்யாணம் பண்ண…

 

அருண் அமைதியாய் யோசித்தான்…

விக்ரம் கேட்ட கேள்வி சரிதான்…. திருமணத்திற்கு முன் ரதியை காதலிப்பதாக அவனின் மனம் அடித்துக் கூறியது… எப்பொழுது இருந்து இந்த மாற்றம் ஏன் இந்த மாற்றம்….. அருணின் மனதிற்கு ஒன்றுமே புரியவில்லை…. ஆனால் ஒன்று மட்டும் புரிந்தது அவன் மலரை பார்த்து பேசிய ஆக வேண்டும்..  அவள் வேண்டும் என அவன் மனம் அடம் பிடித்தது… இல்லையேல் அவன் மனம் நிம்மதி அடையாது.

 

எஸ் ஐ நோ…  இப்ப நான் மலர பார்த்தே ஆகணும் பேசியே ஆகணும்… நீங்க என்ன செய்வீங்களோ ஏது செய்வீங்களோ எனக்கு தெரியாது….. எனக்கு அவ வேணும்..  என்று அழுத்தமாய் கூறிவிட்டு மேஜையில் முழங்கையை ஊன்றி தனது தலையை அழுத்த பிடித்துக் கொண்டு கண்ணை மூடி தலை கவிழ்ந்தான் அருண்.

 

அருண் நீ என்ன பண்ணாலும் எங்களால மலர கூட்டுவர முடியாது… அவ போனவ போனவதான்… மலர மறந்துட்டு ரதி கூட சேர்ந்து நிம்மதியா வாழ முயற்சி பண்ணு…

 

இவர்கள் பேசிக் கொண்டு இருக்கும் பொழுதே… “ரவி…. என்னுடைய அறைக்குள் மலரை அனுமதிக்க வேண்டாம்..  அவங்கள வீட்டுக்கு கிளம்ப சொல்லுங்க…” என்ன மெசேஜ் டைப் செய்து ஆதி அனுப்புவதற்குள்… 

 

கதவை திறந்து கொண்டு குட் ஆப்டர்நூன் சார்… என்று புத்துணர்ச்சியுடன் புன்னகை முகமாய் உள்ளே நுழைந்தாள் மலர்.

 

❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்.. 

      ஊக்கபடுத்த கருத்துகளையும் பகிருங்கள் .

      நன்றி!❤️

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top