அசுரன் 60
தன்னருகே நெருங்க வந்த மலரை கை நீட்டி தடுத்திருந்தான் ஆதி…
பொங்கி வரும் தாபங்களை… கட்டு படுத்தவே அவன் அரும்பாடுபட்டு கொண்டிருக்க… அதில் மலர் கைபட்டால் அவன் உணர்வு பிழம்புகள் கொந்தளிக்க வாய்ப்புண்டு… அவன் உணர்வுகளால் அவள் மனம் காயப்படுவதை அவன் விரும்பவில்லை… இப்போது அவனுக்கு வேண்டியது அவள் மனதில் ஒரு இடம்… அவனுக்கே அவனுக்கான இடம்… அசைக்கமுடியாதப்படி…
என்ன ஆச்சு…. என்பது போல் மலர் பார்க்க….
Maybe…. the flower scent triggered my cells.. என்றான் ஆதி… அவளை நிதானமாய் பார்த்துக் கொண்டே…
அவன் உண்மையைத்தான் கூறினான்…
மலர், சுற்றியிருக்கும் பூக்களின் வாசம் சேரவில்லை போலும் என நினைத்து கொண்டாள்.
பின் இருவரும் பேசிய படி நடந்து, காரை வந்தடைந்தனர்.
அவன் கிளம்பும்போதுதான் மலரின் கண்கள் அவனை முழுமையாக ஆராய்ந்தது… களைத்த முகம் கலைந்த தலை, மதியம் அவன் அணிந்திருந்த டக்கின் செய்யப்பட்ட சட்டையை வெளியே எடுத்து விட்டிருந்தான்… அதுவும் அவனுக்கு ஸ்டைலாக தான் இருந்தது… இன்னும் உணவு உண்டு இருப்பான் என்று தோணவில்லை… அவள் என்ன நினைத்தாளோ? என்ற குழப்பத்திலேயே அவளை தேடி வந்து விட்டான் என்று புரிந்து கொண்டாள்.
பின் என்ன நினைத்தாளோ… பசிக்குது சாப்பிட போலாமா? என்று கேட்டாள்…
அவனுக்கும் பசி தான்… மதியமும் இவளை காணும் ஆர்வத்தில் சாப்பிடவில்லை… இரவும் இவ்வளவு நேரம் ஆகியும் இன்னும் சாப்பிடாததால்… வயிறு கொஞ்சம் என்னை கவனி என்று கூறியது…
சரி போகலாம் என ஆதி கூற…
பட்.. ட்ரீட் நான் தான் கொடுப்பேன்… என்று மலர் கூற…
சரி என தலையசைத்தான் ஆதி…
டூ மினிட்ஸ் டிரஸ் மாத்திட்டு வந்துடறேன்… எனக் கூறிவிட்டு குடுகுடுவென்று உள்ளே ஓடியவள்… ஐந்து நிமிடத்தில் காலையில் அவள் அணிந்திருந்த சுடிதாரை அணிந்து கொண்டு முடியை ஒரு கிளிப்புக்குள் அடக்கி நெத்தியில் ஒரு சிறு பொட்டு மட்டும் வைத்து, தன் கைப்பையை எடுத்துக்கொண்டு கிளம்பி வந்து விட்டாள்…
ஏதாவது ஹோட்டலுக்கு செல்லலாம் என்று செல்ல பார்க்க… அருகில் இருந்த ஓட்டல்கள் அனைத்தும் பூட்டி இருக்க… ஒரு கையேந்தி பவனில் காரை நிறுத்திவிட்டு இறங்கப் பார்க்க… சார் நீங்க இருங்க… நான் போய் வாங்கிட்டு வரேன்… எனக் கூறிவிட்டு அவள் இறங்கினாள்.. கூடவே அவனும் இறங்கினான்… இருவரும் தங்களுக்கு தேவையானதை வாங்கிக் கொண்டு… காரின் பென்னெடில் ஏறி அமர்ந்து கொண்டு உண்டார்கள்… ஆள் அரவமற்ற சாலையில் வாடைக்காற்றுக்கு நடுவே
இந்த சூழல் இருவருக்குமே ரம்யமாய் அமைந்தது…
கையேந்திபவனில் FM ல் பாடல் சத்தம்… பாடலை ரசித்துக் கொண்டே இருவரும் உணவை உண்டனர்…
ஆண் : எந்த மேகம் இது
எந்தன் வாசல் வந்து
எங்கும் ஈரமழை தூவுதே
பெண் : எந்த உறவு இது
எதுவும் புரியவில்லை
என்ற போதும் இது நீளுதே
ஆண் : யார் என்று அறியாமல்
பேர் கூட தெரியாமல் இவளோடு
ஒரு சொந்தம் உருவானதே
பெண் : ஏன் என்று கேட்காமல்
தடுத்தாலும் நிற்காமல்
இவன் போகும் வழி எங்கும்
மனம் போகுதே
ஏனோ இந்த வரிகளை கேட்கும் பொழுது மலர் ஆதியை ஒரு கணம் பார்த்து மீண்டாள்…
ஃபுட் நல்லா இருக்கா சார்… சரி உங்கள இந்த மாதிரி ரோட் ஓரத்துல சாப்பிட வச்சுட்டேன்…
ஒரு பெருமூச்சுடன், ருசிக்கு சாப்பிட்டு பல வருஷம் ஆச்சு… இப்ப எல்லாம் வெறும் பசிக்கு மட்டும் தான் சாப்பிடுறது.. எனக்கு எங்கனாலும் ஓகே, நானும் இந்த மாதிரி கடையில எல்லாம் பசிச்சா இறங்கி சாப்பிட்டுருவேன்…
வீட்ல சமைக்கிறதுக்கு ஆள் இருப்பாங்களே… உங்களுக்கு என்ன தேவையோ சொன்னா செஞ்சு தரப் போறாங்க…
நான் சமைக்க ஆள் வைக்கல மலர்… எனக்கு ஒருத்தனுக்கு தானே நானே ஏதாவது செஞ்சு சாப்பிட்டுப்பேன்… இல்லன்னா ஹோட்டல் தான்… எனக்கு என்ன வேணும் புடிக்கும், அப்படின்னு தேடிப்பார்த்து ஆசையா சமைச்சு கொடுத்தது அம்மா தான்.. அந்த அன்ப சமையல் வேலைக்கு வர்றவங்க கிட்ட எதிர்பார்க்க முடியுமா?… என் வீட்டில் நான் மட்டும் தான் இருப்பேன் வேலைக்கு ஒரே ஒருத்தர் இருக்காரு மணி அண்ணா அவர்தான் வாட்ச்மேன், தோட்டக்காரர் எல்லாமே…
ஓ நீங்க தனிமை விரும்பியா…
ஹா ஹா என்று சிரித்தவன்.. பல வருஷமா என் கூட தனிமை மட்டும் தான் இருக்கு மலர் அத நான் விரும்பி தான் ஆகணும்..
ஆதியை ஆச்சரியமாய் பார்த்தாள் மலர். இவ்வளவு பேசுவானா?.. பழகுவதற்கு இவ்வளவு எளிமையானவனா?… அவன் கஷ்டத்தை இவ்வளவு அழகாக கடந்து வருபவனா.. உண்மையில் ஒவ்வொரு நிமிடமும் அவன் புதிதாய் தெரிகிறான்… அவளின் கண்களுக்கு…
சாப்பிடறவங்களை இப்படி வச்ச கண்ணு எடுக்காம பார்த்தா எப்படி சாப்பிடுவது…
With you, the world feels different.. என்று மலர் கூற…
May be… என்று தோளை உயர்த்தினான் ஆதி.
நைஸ் ட்ரீட்… ஐ என்ஜோய்ட்…
பொய் சொல்லாதீங்க சார்…
ஆக்சுவலி இன்னைக்கு இருந்த மைன்ட்செட்டுக்கு நான் போயி செஞ்சு சாப்பிட்டு இருக்க மாட்டேன் மே.. பி.. அப்படியே படுத்து தூங்கியிருப்பேன்… சோ டையர்ட்…
அது அவளுக்கு தெரிந்து தானே ஆதியை சாப்பிட அழைத்து வந்தாள்…
பட்… இது எனக்கு ஒரு ரிலாக்ஸ் ட்ரீட்… நோ டவுட்… ரியலி ஐ என்ஜோய்ட்… அவன் சாப்பிட்டுக் கொண்டிருந்த கையை உயர்த்தி காட்டிய படி, உணவை வாயில் வைத்தான்…
பட் ஐ லிட்டில் பிட் டிஸ்அப்பாயிண்டெட்…
ஏன்? என்பது போல் பார்த்தான் ஆதி..
நீங்க சுடிதார் போட்டா புடிக்கும் சொன்னால தான் இன்னைக்கு போட்டு வந்தேன்… பட் நீங்க ஒண்ணுமே சொல்லல என்று ஏமாற்றமாய் முகத்தை வைத்துக்கொண்டு அவள் கூற…
(இப்படி கேட்கும் உரிமை எல்லாம் அவளுக்கு எப்படி வந்தது என்று அவளுக்கே தெரியாது, அவனிடம் தன் எண்ணங்கள் அனைத்தையும் சொல்ல நினைக்கிறாள்… எதையும் தயங்காமல் கேட்க விளைகிறாள்… அருணிடமிருந்த பயமும் தயக்கமும் ஆதி இடம் இல்லை… தாலி கட்டிய ஒருவனிடம் உணராத உரிமையை, தாலி கட்டாத ஒருவனிடம் உணர்ந்தாள்.)
காலையில் அவள் விக்ரமுடன் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே அவளை அணுவாக கண்ணுக்குள் படம் பிடித்து வைத்துக் கொண்டான்… உண்மையில் சுடிதாரில் கண்டவனுக்கு மனமெல்லாம் பூரிப்பு… மற்ற நாளாய் இருந்தால் நாளெல்லாம் எதிரே உட்கார வைத்து ரசித்திருப்பான்… இன்று இருவருக்கும் இனிய நாளாக தொடங்க வேண்டியது… தள்ளி போய் இனிய இரவாக முடிந்தது…
எனக்கும் சேலை கட்டுனா தான் மலர் பிடிக்கும்… ஆனா இப்போ சுடிதார் போடுறது தான் நம்ம ரெண்டு பேருக்கும் நல்லது .. என்ன அவன் விஷமமாக கூறிவிட்டு காரை விட்டு கீழே குதித்து இறங்கி கை கழுவ சென்று விட்டான்…
ஙே.. என விழித்தவள்…
எனக்கு நல்லது ஓகே…. இவருக்கு என்ன நல்லது?… என்று வானத்தைப் பார்த்து விரலை நாடியில் வைத்தபடி யோசித்துக் கொண்டிருந்தவளை… ஒரு சிரிப்புடன் பார்த்து கொண்டே காற்றில் பறந்த அவள் துப்பட்டாவிலேயே கையை துடைத்தான்..
மலர், கை கழுவிட்டு வந்து நட்சத்திரத்தை எண்ணலாம்… என்று அவன் கேலியாய் கூற…
சார் நீங்க சொல்லிட்டு போனது எனக்கு புரியல… உங்களுக்கு என்ன நல்லது?
பணம் நீ குடுக்குறீயா? இல்ல நான் கொடுக்கவா? என்று அவன் கேட்க…
சார் நானே கொடுத்துடறேன்… ஒன் மினிட் வெயிட் பண்ணுங்க… என்று சொல்லிவிட்டு சாப்பிட்ட தட்டுடன் கீழே குதித்து குடுகுடுவென ஓடினாள் மலர்… ( திரும்ப வரும் பொழுது கண்டிப்பாக அவனிடம் கேட்ட கேள்வி ஞாபகம் இருக்காது.)
காரில் வந்து அவளை ஹாஸ்டலில் இறக்கிவிட்டு, தனது வீட்டை நோக்கி சென்றான் ஆதி. காரில் கேட்ட இளையராஜா பாடல்கள் அனைத்தும் இவனுக்காகவே எழுதியது போல் இருந்தது…. அலுவலகத்தை விட்டு கிளம்பும்போது இருந்த ஆயிரம் குழப்பங்களையும்… ஒரு நிமிடத்தில் தெளிய வைத்து விட்டாள் அவன் தேவதை… என் மனதை புரிந்து கொண்டாளா?… என்னை புரிந்து கொள்ளும் அளவுக்கு என்னை நெருங்கி விட்டாளா?… அவனுக்காக தான் அவள் சாப்பிட அழைத்தாள் என்பதும் ஆதிக்கு தெரியும்.. அவளுக்குத்தான் பசி என்றால் ஹாஸ்டலில் அவளுக்கான உணவு இருக்குமே… இது அவனுக்காக வந்த பசி… என் விருப்பத்திற்காக ஆடை அணிந்தாளா?… நான் ரசிக்கவில்லை என்றால் ஏமாற்றம் அடைகிறாளா?.. என்னுடன் நேரம் செலவழிக்க அவளுக்கு பிடித்திருக்கிறது,… அவளை நினைக்க நினைக்க றெக்கை இல்லாமல் பறப்பது போல் இருந்தது ஆதிக்கு. மனம் முழுவதும் பூரிப்புடன் வீட்டை அடைந்தான் ஆதி.
************
ரித்துவை தோளில் போட்டு தட்டிக் கொடுத்த படி அருண் மலரை பற்றி தான் யோசித்து கொண்டு இருந்தான்.
தன் பக்கம் அவள் கவனத்தை எப்படி ஈர்ப்பது என்று…
இப்பொழுதெல்லாம் அருணுக்கு, மலரை திருமணம் செய்து வாழ்ந்து இருந்தால் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று கற்பனைக்கும் மூழ்கி போகிறான்… அவளை நினைத்து ஏங்க ஆரம்பித்து இருந்தான்.. மலர் இல்லாமல் ரித்துக்குட்டி ஒரு மாதம் தவியாய் தவித்து விட்டான்… அவன் கூட சேர்ந்து அருணும் தான் தவித்தான். இதற்கெல்லாம் முழுமுதற் காரணம் ரதியின் நடவடிக்கை தான்…
காதலர்களாய் வாழும் போது தேவை படாத அன்பும் அக்கறையும்.. குடும்ப வாழ்க்கையில் அருணுக்கு தேவைப்பட்டது.
காதலர்களாய் இருக்கும் பொழுது, “சாப்டியா பேபி” என்று கேட்டால் மட்டும் போதும் கணவனாய் இருக்கும் பொழுது, “சாப்பிடு போ” என வலியுறுத்துவதும், உன் கூட சேர்ந்து சாப்பிடுவதற்காக காத்திருந்தேன் என்பதும், சாப்பிடும் பொழுது ஒருவருக்கொருவர் ஊட்டி கொள்வதும்… இருவரும் ஒன்றாய் இருக்கும் நேரங்களில் காமம் இல்லா கழுத்து முத்தமும்.. தாய் சேய் பிணைப்பு… ஏதோ ஒரு வகையில் அவனுக்கான அக்கறையை அவன் மனம் எதிர்பார்க்கிறது.
இதெல்லாம் மலரிடமிருந்து கிடைத்ததாக அவன் உணர்கிறான்… ஒருவேளை ரதி இதை எல்லாம் அவனுக்கு வழங்கி இருந்தால்… இப்பொழுதும் அவன் மனம் மலரை தேடி இருக்குமா? என்பது சந்தேகமே…
மலரை தேடும் அவன் மனம் அதேநேரம் ரதியை விட்டு விலகுவதை பற்றி யோசிக்கவில்லை…
ரதி அருணின் அறைக்குள் நுழைந்தாள்….
அவளைப் பின்தொடர்ந்து இரண்டு பேபி சிட்டர்கள் வந்து குழந்தையை வாங்கி சென்றனர்..
அதுதான் இந்த வீட்டின் வழக்கம்… ரதி அறையுனுள் வரும் வரை தான் ரித்துக்குட்டிக்கு அந்த அறையில் இருக்க அனுமதி… ஒரு ஆழ்ந்த மூச்சு உடன் தோளில் இருந்த மகனை பேபி சிட்டர்களிடம் கொடுத்துவிட்டு படுக்கையில் போய் அமர்ந்தான் அருண்.
அருணை ஓரக்கண்னில் பார்த்துவிட்டு ஒரு கேலி புன்னகையுடன் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு, அருணை நெருங்கினாள் ரதி.
அந்த மூன்று நாட்களைத் தவிர… மற்ற அனைத்து நாட்களிலும், ரதிக்கு அருண் வேண்டும். மலர் சென்ற அடுத்த நாட்களில்… அருணின் அருகே வர…. மச்… இப்ப வேணாம் மூடு இல்ல.. என்று அருண் திரும்பி படுத்துக்கொள்ள…
ரதிக்குத் தெரியாதா? அருணின் உடலை பற்றி.. தீண்டலிலேயே அவனின் உணர்வுகளை தூண்டிவிட்டு சிறுது நேரத்தில் அவனே ரதியை தேடி வரும்படி செய்து விடுவாள்.
இப்பதான் கோவமா படுத்த மாதிரி இருந்தது அதுக்குள்ள என்ன இந்த பக்கம்…. என்று அவள் கேலியாய் கேட்க…
நான் இப்பயும் கோவமா தான் இருக்கேன்…. ஆனால் இவன் தான் உன்கிட்ட ஏதோ பேசணும்னு சொல்றான்… என்று கூறி கண்களால் அவனின் கீழே காண்பித்து ரதியின் கையை எடுத்து அவன் உடலில் வைக்க… அதற்குப் பின் எங்கு கோபத்தை இழுத்து பிடித்து வைத்திருப்பது… முணங்களிலும் முத்தங்களிலும் கரைந்து விடும்….
கலவியல் படத்தில் இருவரும் முதுகலை முடித்தவர்களே… ஆனாலும் இப்பொழுதெல்லாம் அருணுக்கு… காதல் இல்லா இந்த காமம் சலிக்கவே செய்தது ..
திருமணத்திற்கு முன்பே அவன் பல பெண்களுடன் கூடி கழித்து, இந்த காதல் இல்லா காமத்தில் முக்தி பெற்றவன்தான்.. ஆனால் அப்பொழுதெல்லாம் தோன்றாத ஒரு ஆற்றாமை… இப்பொழுது ரதியுடன் வாழும் இல்லறத்தில் அவனுக்கு தோன்றுகிறது… காமத்திற்காக தான் மலரை தேடுகிறானா? என்று கேட்டாள்… இல்லை… அதற்கு அவனைத் தேடி வரும் அழகிகளே போதும்… இவன் மனது இப்பொழுது தேடுவது மலர் காட்டிய அன்பையும் அக்கறையும்… ஒரு காலத்தில் இவனை மயக்குவதற்காக செய்கிறாள் என்று நினைத்து அவன் உதாசீனப்படுத்திய அனைத்து செயல்களும்… இப்போது இவன் வாழ்வில் கிடைத்ததற்கு அரிய பொக்கிஷமாய் தெரிகிறது.
இரு உயிர்கள் இனிய இரவு தந்த மயக்கத்தில் உறங்க, ஒரு உயிர் மனம் முழுதும் குழப்பத்தில் உறங்கியது…
காலையில் எப்பொழுதும் போல், புத்துணர்ச்சியுடன் தேவாதித்யன் என்ற பெயரை படித்த படி.. குட் மார்னிங் சார்… என்று உள்ளே நுழைந்தாள் மலர்.
குட்…. மார்னிங் மலர்… என்று இரண்டு குரல் அவளுக்கு கேட்டது…
மலர் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்க்க… அங்கே…
❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்..
ஊக்கபடுத்த கருத்துகளையும் பகிருங்கள் .
நன்றி!❤️