கார் நின்னதும் இறங்கி உள்ளேப் போக வேண்டியவ, கதவு வழியா பார்த்த காட்சியிலே அப்படியே நின்னுட்டா. கதவுக்கு அந்தப் பக்கம் விக்கியும் சுவாதியும் கடுமையான வாக்கு வாதத்துலே இருந்தாங்க. சுவாதி கெஞ்சறதும், விக்கி அவளை விரட்டறதும் அவங்க உடல்மொழியிலே தெரிஞ்சுது. இவங்க ரெண்டு பேருக்கும் என்ன சம்பந்தம்? ஏன் இவன் கிட்ட கெஞ்சறா? ப்ரேம் சார் பார்ட்டியிலே பார்த்தது கோயின்சிடென்ஸ் இல்லையா? என்ன நடக்குது?-னு யோசிச்சா. மனசு முழுக்க அதான் யோசனை. அவ தலை முடியோட நுனியை சுருட்டிட்டே யோசிச்சா. அதே சமயம் காரை நிறுத்தின விதுரன், “சே.. அவசரப் பட்டுட்டியேடா விதுரா? சும்மாவே ஆடுவா.. இதுலே நீ வேறே கோபப்பட்டுட்டியே?”-னு தன்னைத் தானே திட்டிக்கிட்டான்.
காருக்கு முன்னாடி சிலையா நின்னவளை பார்த்தான். “மது… சாரி டீ.. உன்னை அன்பாலேயே ஜெயிக்கிறேன். என்னை புரிய வைப்பேன்”-னு சொல்லிட்டு கீழே இறங்கினான். அவளை நோக்கி நடந்து போய், அவ கையை பிடிச்சு தன்னை நோக்கி இழுக்கவும் திகைச்சுப் பதறினா. தவறி விழப் போனவ விதுரன் தோளைப் பிடிச்சு சுதாரிக்கவும், அவனும் அவ இடுப்பை சுத்தி கையை போட்டு அவளை விழாம நிறுத்தினான். “ஐ அம் சாரி மதும்மா.. வெரி சாரி… தப்பும் பண்ணிட்டு நான் கோபப் பட்டிருக்க கூடாது தான். இப்போலே இருந்து நாம் பழைசை பேச வேண்டாம். அதைக் கடக்க முயற்சிப் பண்ணுவோம். உன்னை கல்யாணம் பண்ண நிமிஷத்துலே இருந்து எனக்கு உன்னைத் தான் பிடிக்கும். உன்னை மட்டும் தான் பிடிக்கும். மத்ததெல்லாம் அப்புறம் தான்”-னு நெத்தியிலே அழுத்தமா முத்தம் குடுத்தான்.
மதுரியாவுக்கும் சண்டை போட்டப்போ இருந்த கோபம், அவனை தேவையில்லாம ஹர்ட் பண்றோம்-னு வந்த குற்றவுணர்ச்சி எல்லாம் சேர்ந்து, “ம்ம்ம்… ஓகே”-னு சொல்ல வைச்சது. “பார்டா, நீ இன்னிக்கு ரொம்ப அழகா இருக்கே”-னு ஸ்மைல் பண்ணி கன்னத்துலே பட்டும் படாம ஒரு முத்தம் குடுத்தான். அதுலே சுயத்துக்கு வந்தவ, “தேங்க்ஸ்… என்ன பண்றீங்க? இது கார் பார்க்..”-னு திமிறினா. அவனும் ஒரு சாரி சொல்லி அசட்டு சிரிப்போட விடுவிச்சான்.
அதுக்கப்புறம் அவ கையை கோத்துக்கிட்டு உள்ளேப் போனான். அங்கே போனதும் தான் தெரிஞ்சுது. அதுக்குள்ளே ‘டேன்ஸ் ஃப்ளோரு’ம் இருந்துச்சு-னு. அந்த ஹாலுக்கு போற வழியிலே தான் விக்ரமையும் அவன் காதலி மோகனாவையும் சந்திச்சாங்க. மோகனா அவனோட முறைப் பொண்ணு. கட்டுப்பாடான குடும்பத்துல வளர்ந்தவ. இப்போ ரெண்டு மூணு வருஷமா தான் வேலைக்கு-னு இங்க இருக்கா. அவளுக்கு வேலை வெளியுலகறிவு எல்லாம் வேணும்-னு தான் கல்யாணத்தை தள்ளிப்போட்டான் விக்ரம். பரஸ்பரம் அறிமுகம் முடிஞ்சு பேசிட்டே உள்ளே நுழைய கதவைத் திறந்தா தான் அது சாப்பாடு, ‘டிரிங்க்ஸ் அண்ட் டேன்ஸ்’ கலந்திருக்கிற இடம்ன்னு புரிஞ்சுது. மதுரியா முகத்தை சுளிச்சா. அவ கூட சேர்ந்து மோகனாவும் அதையே தான் செஞ்சா. “ஹேய் வாங்க..”-னு ஒரு பக்கம் பதிவுப் பண்ண டேபிள்லே இருந்து விக்கி கையை ஆட்டவும் நாலு பேரும் போனாங்க. அங்கேயே தான் ரிதேஷும் இருந்தான். “ஹேப்பி பர்த்டே டா..”-னு அவனை கட்டிப் பிடிச்சாங்க விதுரனும் விக்ரமும். மதுரியாவும் பேருக்கு வாழ்த்து சொல்லிட்டு உட்கார்ந்தா.
நண்பர்கள் நாலு பேரும் ஏதேதோ பேசினாங்க. ஆனால் எல்லாமே ஆண்களோட விருப்பங்களும் பொழுதுப்போக்காவும் இருந்துச்சு. கொஞ்ச நேரத்துலே மதுரியாவுக்கு தன்னை வெறுப்பேத்தணும்னு தான் விக்கி இதை எல்லாம் பண்றான்-னு புரிஞ்சுது. விதுரனுக்கும் சரி, விக்ரமுக்கும் சரி, விக்கியோட சில்மிஷம் புரியலே. “சாரிடா.. எல்லாரும் என்னை சாப்பிடறீங்க?”-னு உபச்சாரமா கேட்கவும், “இங்கே என்ன கும்பகோணம் டிகிரி காபியா சாப்பிட முடியும்? ஏதோ ஒரு ஜூஸ் தான்”-னு கிண்டலா சொன்னா மதுரியா. “அப்போ பார்ட்டியை டீ கடையிலே தான் வைச்சு இருக்கணும்”-னு அவளுக்கு கொஞ்சமும் குறையாத நக்கல் குரல்லே சொன்னான் விக்கி. “அங்கேயே வைச்சிருக்கலாம் விக்கி சார். அதுவே பரவாயில்லாம இருந்திருக்கும்.. இதைப் பார்த்தா குடும்ப பொண்ணுங்க வர்ற இடமாவே தெரியலியே?”-னு வந்த பதில் மோகனாவோடது. விக்ரமும் விதுரனும் ஒரு பக்கம் நெளிஞ்சாங்கன்னா இன்னொரு பக்கம் சிரிப்பும் வந்துச்சு. விதுரன் மதுரியா காது கிட்ட குனிஞ்சு, “எங்கேப் போனாலும் உன் வேவ்-லெங்க்துக்கு ஆள் கிடைச்சுடுது போல”-னு கிசுகிசுத்து சிரிக்கவும் அவன் தொடையிலே நறுக்-னு கிள்ளினா. அவனுக்கு வலியை விட அவளோடத் தொடுகை சிலிர்த்துச்சு.
உண்மையிலேயே விக்கி மதுரியாவை சீண்டி கோபம் வர வைக்க, அவளை உசுப்பேத்த முயற்சிப் பண்ணான். ஆனா அவன் திட்டம் எல்லாம் மோகனாவால சொதப்பலா போக அவனுக்கு என்ன பண்ணனும்-னு தெரியாம திணறினான். “அவங்களுக்கு ஜூஸ்… உங்களுக்கு என்னடா? வைன், பீர், ஹாட் டிரிங்க்ஸ்?”-னு கேட்டான் விக்கி. “மாமா குடிப்பீங்களா? என்ன இதெல்லாம்?”-னு நேரடியா கேட்டா மோகனா. “டேய்.. விக்கி…ஏன் டா? அதெல்லாம் இல்லை மோகனா. எனக்கும் ஜூஸ் தான். விக்கி சும்மா ஜோக் அடிக்கிறான்”-னு சமாதானம் பண்ணவும், “ம்ம்ம்… அதானே பார்த்தேன்?”-னு ஒத்த விரல் காட்டி மிரட்டவும் மதுரியாவும் விதுரனும் சிரிச்சுட்டாங்க. “எனக்கும் ஆரஞ்சு ஜூஸ் தான் டா… சேம் ஏஸ் மது”-னு சொன்னான் விதுரன். “ஏன் டா? நீ எப்போவும் பீர் தானே? இன்னிக்கு ஒரு நாள் விடக் கூடாதாம்மா?”-னு விதுரன்கிட்ட ஆரம்பிச்சு மதுரியா கிட்ட முடிச்சான் விக்கி. “என் மாமியாரே அவர் மாறிட்டாருனு சொல்றதில்லே. நீங்க என்னடான்னா பார்த்தன்னையிலே இருந்து சொல்றீங்க? இதுக்கு பதில் சொல்லி எனக்கு போர் அடிக்குது”ன்னு தோளை குலுக்கி சிரிச்சா மதுரியா. “அப்படியே மாறினாத்தான் என்ன ரியா? நாம இவங்களுக்காக மார்றது இல்லையா?”-னு கிண்டலா சொன்னா மோகனா.
கடைசியா விக்கி இறங்கி வந்து எல்லாருக்கும் ஜூஸ் சொல்ல வேண்டியதாப் போச்சு. ஆனா தோல்வியை ஒத்துக்கிட்டா அவன் விக்கியே இல்லையே. அப்புறம் ஏதோ பேசிட்டே ஜூஸை குடிச்சு சாப்பாடும் சொன்னாங்க. அதுக்கும் முன்னாடி டேன்ஸ் போறதுக்கும் இதே மாதிரி வாக்குவாதம் நடந்து, கடைசியிலே விதுரன் பொண்டாட்டி பக்கம் எடுத்து விக்கியோட கோபத்துலே எண்ணெயை ஊத்தினான். “டேய் விதுர்… அந்த சுவாதி என்ன ஆனா?”-னு வெகுளியா கேட்கிறாப் போல கேட்டான். விதுரன் 1000 வோல்ட் மின்சாரம் பாய்ஞ்ச மாதிரி ஆனான். “நீ.. நீ.. யாரை சொல்றே?”-னு தடுமாறினான். ஆனா மதுரியாவுக்கு அவ்வளோ நேரம் மண்டையிலே அவனும் சுவாதியும் பேசிட்டு இருந்தது பின்னுக்கு போனது மறுபடியும் மேலே எழும்புச்சு. “எந்த சுவாதி?”-னு அலட்சியமா கேட்டா மதுரியா. “உன் ஹஸ்பெண்ட் கம்பெனியிலே வேலை செஞ்ச பிசினஸ் மேனேஜர்”-னு ஒரு வித சுவாரசியத்தோட சொன்னான் விக்கி. “ஓ.. ஐ.. ஸீ… வேதம்லே எப்படியும் ஒரு 60-100 பேர் வேலை செய்வாங்க. உங்களுக்கு எல்லாரையும் தெரியும் போல?”-னு அவனுக்கு தெரியாம துருவ ஆரம்பிச்சா மதுரியா.
அவளுக்கு இவங்க ரெண்டுப் பேருக்கும் எப்படி ஒருத்தரை ஒருத்தர் தெரியும்-னு தெரியணும். “எல்லாரையும் தெரியாது.. சுவாதி இவனோட க்ளோஸ் ஃப்ரெண்ட்.. அவ இவனை லவ் பண்ணா போல இருக்கு.. இல்லையா டா?”-னு சொன்னான். “ஓ.. இண்டரெஸ்டிங்… உங்களுக்கும் க்ளோஸ் ஃப்ரெண்ட் போல.. அவங்க லவ் பண்ணதெல்லாம் தெரியுது”-னு மேலே கேட்கவும், எப்படியும் பிரச்சினை ஏற்படுத்தற நோக்கத்துலே, “சே.. சே… எனக்கு அவ யார்-னு கூட தெரியாது”-னு சொன்னான் விக்கி. அடுத்த கணம் மதுரியாவுக்கு சுவாதியும் இவன் திட்டத்திலே ஒண்ணு-னு புரிஞ்சுது. ஆனா எப்படி-னு புரியலே. முதல் தடவையா விதுரன் பேர்லே சுவாதி விஷயத்துலே முழு தப்பில்லையோ-னு யோசிக்க ஆரம்பிச்சா. ஆனா விக்கியை சும்மா விடவும் மனசு இல்லே. “ஓகே.. ஓகே… அப்போ இந்த விவகாரம் எல்லாம் உங்களுக்கு எப்படி தெரிஞ்சுதோ?”-னு மேலே கேட்கவும், “வேறே யார். அவன் சொல்லித் தான்”-னு சொல்லவும் விக்ரம் அவனை பார்வையாலேயே பொசுக்கினான்.
விதுரன் முகம் பாவமா இருந்துச்சு. “ம்ம்ம்… இட்ஸ் ஃபர்தர் இண்டரெஸ்டிங்.. பட் யூ நோ வாட்… ஆள் அழகா புத்திசாலியா கொஞ்சம் உயரத்துலே இருந்தா, சம்பாதிச்சா, குறிப்பா அப்பன் சொத்தை உட்கார்ந்து அழிக்காம, பொறுப்பா, மேன்லியா, சுய புத்தியோட கல்மிஷம் இல்லாம இருந்தா நாலு ப்ரோபோசல் வரத் தான் செய்யும். இட்ஸ் காமன்”-னு அவன் மூஞ்சி மேலே நச்-னு அடிக்கறாப்போல சொன்னா மதுரியா. விக்ரமுக்கு சிரிப்புன்னா விக்கியும் ரிதேஷும் பேயறைஞ்ச மாதிரி ஆனாங்க. “அப்புறம் என்ன சொன்னீங்க? க்ளோஸ் ஃப்ரெண்டா? ஸோ வாட்… மனுஷன்-னு இருந்தா ஃப்ரெண்ட்ஸ் இருக்கத் தான் செய்வாங்க. ஏன் நீங்க இல்லே? அதே மாதிரி இருக்கத் தான் செய்வாங்க… ஸோ வாட்?”-னு தோளை குலுக்கினா மதுரியா.
விதுரன் தலை தன்னால நிமிர்ந்து, தன்னை போல நிமிர்வு வந்துச்சு. “இது என்ன மாமா? இவர் உங்க ஃப்ரெண்ட் தானே? ஃப்ரெண்ட் பத்தி, ஃப்ரெண்ட் வைஃப் கிட்டேயே புரளி பேசறாரு. எதைப் பேசணும் எங்கேப் பேசணும்னு கூட புரியாதா?”-னு விக்ரம் காதோட பகிரங்க ரகசியமா சொல்லவும் இஞ்சி தின்ன குரங்கு மாதிரி ஆனான் விக்கி. “மோகனா! நாம காத்தாட நடந்துட்டு வரலாமா? ஆம்பிள்ளைங்க அவங்க பேசட்டும்.. போகலாமா?”-னு மதுரியா கேட்கவும் மோகனாவும் கிளம்பிட்டா.
அவங்க தலை மறைஞ்சதும் “சே… நீ எல்லாம் திருந்தவே மாட்டியா? சும்மா பொசஸிவ்னெஸ் மண்ணாங்கட்டி-னு அவங்களுக்குள்ளே கலகம் பண்ணிட்டே இருக்கே? ஃப்ரெண்டோட சந்தோஷம் முக்கியம்-னு புரியாத நீ எல்லாம் ஒரு ஃப்ரெண்ட்”-னு தலையிலே அடிச்சுக்கிட்டான் விக்ரம். “ஏன்… கேசுவலா ஏதாவது சொன்னா சண்டை போட்டுட்டு போறவளுக்கு என்ன லவ் இருக்கு? அந்த மூச்சு முட்டற லைஃபுக்கு தேவை என்ன?”னு- கேட்டான் விக்கி. “நீ எல்லாம் திருந்தவே மாட்டே.. உன்கிட்ட மனுஷன் பேச முடியுமா. விதுரா கிளம்பலாம்”னு சொன்னான் விக்ரம்.
“விக்கி… ஏதோ வகையிலே உனக்கு மதுவை பிடிக்கலே. நீ அவளை சரியா புரிஞ்சுகிட்டா உனக்கும் அவ மேலே அன்பு வரும்.. அவ ரொம்ப நல்லவ.. அப்புறம் என்ன கேட்டே? மூச்சு முட்டற லைஃபா? என் மூச்சே அவ தான் விக்கி. அவ தான் என் சந்தோஷம், ஃப்யூச்சர் எல்லாம்.. நீ புரிஞ்சுக்க டிரை பண்ணுடா.. ப்ளீஸ்”-னு வருத்தமா சொன்னான் விதுரன். விக்கிக்கு அவன் ப்ளான் ஃபெயிலியர்-னு புரிஞ்சுது. “எங்கே போயிடப் போறீங்க. இல்லை உன் ஈகோ உன்னை விட்டு எங்கே போயிடப் போகுது?”-னு எகத்தாளமா நினைச்சு அதோட விட்டுட்டான். “சரி விடுடா… ஃபீல் பண்ணாதே. நான் ஜோவியலா தான் சுவாதி பத்தி பேசினேன்.. ஐ டிட்ண்ட் ரியலி மீன் எனிதிங்”-னு அமர்ந்த குரல்லே சொல்லவும், “எனக்கு தெரியாதா டா? வா கிளம்பலாம்”-னு சொன்ன நேரம் ரெண்டு பொண்ணுங்களும் வந்தாங்க. அதுக்கப்புறம் கொஞ்ச நேரம் சாதாரணமா பேசிட்டு கிளம்பினாங்க.
எல்லாரும் வெளியே வந்தப்போ தான், வெளியே விக்கியோட அப்பா கோபாவேசமா அவங்க எதிர்லே வந்து ஒரு தபால் கவரை விக்கி முகத்துலியே எறிஞ்சார். “எதுக்குடா யூஎஸ்லே இருந்து வந்தே?”-னு எகிறவும், “நா… நான் விதுரனோட வெட்டிங்க்கு வந்தேன்”னு சொன்னான் விக்கி. விதுரன் உருகித்தான் போனான் அவன் நட்புலே. “போச்சுடா..”-னு நினைச்சா மதுரியா. “ஆமா! பெரிய கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு இவங்களோடது…அறிவு இருந்தா இப்படி பண்ணிட்டு வந்திருப்பியா? வந்து வாச்சிருக்கு பார் எனக்கு-னு” அப்படின்னு பொது இடம்ன்னு கூட பார்க்காம திட்டினார். “என்னாச்சு அங்கிள்?”னு தணிவா கேட்டான் விதுரன். “சாரிப்பா… உன்னை ஹர்ட் பண்றது என் நோக்கம் இல்லே. அவ்வளோ பணம் குடுத்து சேர்த்த கோர்ஸை டெஃபர் பண்ணிட்டு வந்திருக்கான்… இப்படி பொறுப்பில்லாம சுத்தினா நான் என்னப்பா பண்ண முடியும்?”-னு அங்கலாய்ப்பா சொல்லவும் உருக்கம் போய் ஆற்றாமையும் கோபமும் வந்துச்சு.
“என்னடா இது? ஏன் டா நிதானமாவே இருக்க மாட்டியா?”-னு கேட்டான் விதுரன். “நிதானம் இருந்துட்டாலும்…உலகம் அழிஞ்சுடாது?? 29 வயசாகுது. இன்னும் காலேஜ் பையன் மாதிரி இருந்தா என்னாகும்-னு யோசனை வேண்டாம்? சம்பாதிக்க வேண்டாம். சம்பாதிச்சு சேர்த்து வைச்சிருக்கறதை காப்பாத்த வேண்டாமா?”-னு வருத்தமா கேட்கவும் எல்லாருக்குமே கஷ்டமா போச்சு. “இவன் இப்படி எதுவும் செய்யக் கூடாது-னு தான், விதுரன் அவன் ரிசப்ஷன் விஷயத்தை விக்கிக்கு சொல்ல வேண்டாம்-னு சொன்னான் அங்கிள். ரிதேஷ் சொல்லிட்டான் போல. ரிதேஷ்.. அவ்வளோ சொல்லியும் என்னடா இது?”-னு கேட்டான் விக்ரம். “ம்ம்ம்… ஃப்ரெண்டா இல்லாம பாஸா பார்த்துட்டார் போல”-னு சொல்லி புன்னகைச்சா மதுரியா. விக்கியோட அப்பா அவளை பார்க்கவும், “அங்கிள், என் வைஃப் மதுரியா”-னு அறிமுகம் பண்ணான் விதுரன். “வெரி குட்.. நீ நித்தியம் ஃபேமிலி பொண்ணு தானேம்மா? உங்க தாத்தா உங்க ரெண்டு பேரோட உழைப்பு, விதுரன் மீண்டு வந்தது பத்தி அவ்வளோ பெருமையா பேசறார்… நல்லா இருங்கம்மா”-னு சொல்லவும் விதுரன் முகம் பெருமையிலேயும் காதல்லேயும் ஜொலிச்சுது.
கடைசியா அவர் விக்கியை கூட்டிட்டு கிளம்பினதும் மழை பெய்து ஓய்ஞ்ச மாதிரி இருந்துச்சு எல்லாருக்கும். ஆனா இது விக்கிக்குள்ளே இருந்த வெறியை அதிகமாக்கிடுச்சு. எல்லாரும் வீட்டுக்கு கிளம்பினாங்க. மதுரியா மண்டை முழுக்க ஒரே யோசனை. “விக்கிக்கும் சுவாதிக்கும் என்ன சம்பந்தம்? எப்படி ப்ளான் பண்ணாங்க? என்ன ப்ளான்? எப்படி விதுரனை விழ வைச்சாங்க. அவன் அவளை லவ் பண்ணலேன்னா ஏன் கூட்டிட்டு சுத்தினான்? ஏன் கட்டிப்புடி…. சே… கடவுளே..”-னு கொடைஞ்சு கொடைஞ்சு முணுமுணு-னு தலைவலி வந்தது தான் மிச்சம். எப்படி வீட்டுக்குள் வந்தா, யார் கிட்ட என்ன பேசினா, எப்போ வேற உடைக்கு மாறினா, எப்போ வந்து படுத்தா-னு கூட தெரியாது அவளுக்கு. விதுரன் அவ பக்கத்துலே உட்கார்ந்து அவ தலையை இதமா பிடிச்சு விடவும் கண்ணை திறந்தா.
அவனை கூர்ந்து பார்த்து புன்னகைச்சா. “பொண்டாட்டி தலையை, காலை அமுக்கி விட்டே கரெக்ட் பண்ணிடுவீங்க போல இருக்கு”-னு கிண்டலா சொன்னா. விதுரனுக்கு இவ்வளோ நாள் கழிச்சு அவ கிட்டே இருந்து வந்த முதல் இணக்கமான பேச்சு. “ம்ம்ம்.. பொண்டாட்டி கரெக்ட் ஆயிடுவா-னு தான் எனக்கும் இப்போ தோணுது”-னு நமுட்டு சிரிப்போட சொல்லவும், “ஓஹோ… உலகத்துலேயே கட்டின பொண்டாட்டியை கரெக்ட் பண்ண முயற்சி பண்ற புருஷன் நீங்க மட்டும் தான் விது”-னு சிரிச்சா. “மது… நீ மாறிட்டியா?”-னு இழுத்தான். “விது… இப்போ உங்க மனசுலே நான் இருக்கேன்-னு நம்பறேன். ஆனா எனக்கு சுவாதி விஷயத்துலே கொஞ்சம் நம்பிக்கையும் தெளிவும் தேவைப்படுது. கொஞ்சம் டைம் தேவை. அதோட ஒரு வாட்டி விட்டுட்டுப் போயிட்டீங்க.. போனது மட்டுமில்லாம சுவாதி கூட வேற.. ப்ச்ச்ச்… அதனால உங்க அன்பு மேலே ஆழமான நம்பிக்கை வரணும்.. இதெல்லாம் இல்லாம நடிக்க முடியாது விதுரன் என்னால. ஐ நீட் மை டைம் அண்ட் ஸ்பேஸ். அதைத் தருவீங்களா?”-னு கேட்டா மதுரியா.
விதுரனுக்கு அவ இவ்வளோ பொறுமையா பேசறதே பெரிய ஆச்சர்யம் தான். “ஷ்யூர் மது… தேங்க்ஸ் ஸோ மச்.. நீ இவ்வளோ தூரம் அண்டர்ஸ்டாண்ட் பண்ணதே எனக்கு சந்தோஷம்”-னு அவ கன்னத்தை கையிலே பிடிச்சு நெத்தியிலே அழுத்தமான முத்தம் குடுத்தான். அவன் மனசுலேயும் “கண்டிப்பா தான் நினைக்கறாப் போல வாழ்கை மாறும்”-னு நம்பிக்கை வந்துச்சு….. “ம்ம்ம்… தூங்கலாமா… லேட் ஆச்சு”-னு மதுரியா சொல்லவும் அவனும் சிரிச்சுட்டே, “சரி.. ஆனா தூங்கறப்போ கையை பிடிச்சுக்கலாமா?”-னு கேட்டான். அவளும் மறுக்கலே. எப்போவும் அவளுக்குத் தெரியாம அவளை கைக்குள்ளே வைச்சுட்டு தூங்கறதை விட இப்போ கையை பிடிச்சுட்டு தூங்கறது சுகமா இருந்துச்சு. ரொம்ப நாள் கழிச்சு ரெண்டு பேருக்கும் நிம்மதியான தூக்கம்.