ராவணா 15

பரபரப்பாக பேசப்பட்ட முன்னால் அமைச்சர் பரந்தாமனின் கொலை வழக்கில் புதிய திருப்பம்!

தலைமறைவாக இருப்பதாக கருதப்பட்ட அமைச்சரின் பினாமி வீர பாண்டியன் குண்டடிபட்டு நிலையில் போலீசாரால் கண்டுபிடிப்பு.

விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்! கொலைக்கான காரணத்தை கண்டு பிடித்துவிட்டதாக தமிழக காவல் துறை அறிவிப்பு!

கிரானைட் பிஸ்னஸ், ஐந்து நக்ஷத்திர ஹோட்டல்கள், கல்லூரிகள், பெரிய மருத்துவமனை என தனது பெயரில் ஏகப்பட்ட நிறுவனங்களை நடத்திவந்த முன்னால் அமைச்சர் பரந்தாமன் மறைமுகமாக பல சட்டவிரோதமான தொழில்களில் ஈடுபட்டு வந்திருக்கிறார், அவருடன் தொழில் செய்துவந்த வெளிநாட்டை சார்ந்த டானியல் என்பவருக்கும் பரந்தாமனுக்கு பல ஆண்டுகளாக தொழில் விடயமாக பல கருத்துவேறுபாடு இருந்து வந்த நிலையில் இப்பொழுது சில மாதங்களாக இருவருக்கும் இடையே உள்ள பிரச்சனை வலுப்பெற்றிருக்க,  வெறும் வாக்குவாதம் கைகலப்பாக மாறிய நிலையில் பரந்தாமன் டானியலை தாக்க டானியல் குணடிப்பட்டு இறந்துள்ளார். அதனால் கோபம் அடைந்த டானியல் தரப்பினர் பரந்தாமனை தாக்கியுள்ளனர் ஆக இரு பிரிவினருக்கும் நடந்த சண்டையில் பரந்தாமன் கொடூரமான முறையில் கொலைசெய்யபட, குண்டடி பட்டு போலீசாரால் மீட்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்ட அவரது பினாமி வீர பாண்டியன் கொடுத்த வாக்குமூலத்தை அடிப்படையாக கருதி போலீசார் விசாரணை நடத்தி உண்மையை உறுதிப்படுத்தியுள்ளனர்.

முன்னால் அமைச்சர் பரந்தாமனின் கொலை வழக்கில் துரிதமாக செயல்பட்ட காவல் துறை அதிகாரிகளை தமிழக முதல்வர் பாராட்டியுள்ளார்.

ஏற்கனவே பாலியல் வழக்கில் சிக்கி கட்சியில் இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்டு பின்பு அது பொய் வழக்கு என்று நீதிமன்றத்தில் நிருபிக்கப்பட்ட பரந்தாமன் மீது ஏற்கனவே அதிருப்தியில் இருந்த பொதுமக்கள்  இப்பொழுது வெளியான செய்தியில் மிகவும் கொதித்தனர், இதற்கிடையில் தந்தை குறித்து வந்த செய்தி, தேவை இல்லாது அவரது பெயரை கெடுப்பதற்காக எதிர்க்கட்சி செய்த சதி என்று பரந்தாமனின் மகனும் அவரது அடுத்த அரசியல் வாரிசுமான ஜிபி என்ற ஜிக்னேஷ் பரந்தாமன் பேட்டியளித்துள்ளார்.

இதற்கிடையில் காவல் துறை தரப்பில் கொடுக்கப்பட்ட ஆதாரம் மற்றும் விசாரணை அறிக்கை குறித்து திருப்தி தெரிவித்த  நீதிபதி, பரந்தாமனின் கொலை வழக்குக்கான இறுதி தீர்ப்பை அளித்தார், என்று  இன்று காலை வெளியான இந்த செய்தியை இந்திரா வாசித்து முடித்த பொழுது, தான் என்ன மனநிலையில் இருக்கின்றோம் என அஜூதியாவுக்கே புரியவில்லை.

எங்கே தன்னை தேடி போலீஸ் யாரும் வருவார்களோ? தன்னால் ஆஷ்ரமத்தில் உள்ளவருக்கு ஏதும் பிரச்சனை வந்துவிடுமோ என? பயத்துடன் எத்தனை தூங்கா இரவுகளை கழித்திருப்பாள். இதோ சற்று நேரத்திற்கு முன்பு வரை கூட, நான் அப்படி என்ன தவறு செய்தேன்? தனக்கு ஏன் இத்தனை சோதனைகள்? என்று மனதிற்குள் வருத்தத்துடன் இருந்தவள் இப்பொழுது தான் கொஞ்சம் நிம்மதி அடைந்தாள்.

“என்ன நடக்குமோன்னு ரொம்ப பயந்துட்டே இருந்தேன் இந்து, இப்போ தான் நிம்மதியா இருக்கு, ஆமா நீ சொன்ன மாதிரி சிசிடிவி ஃபுட்டேஜ்ல என் முகம் விழுந்திருக்கும்ல அப்போ ஏன் போலீஸ் என்கிட்ட விசாரிக்க கூட வரல” சந்தேகத்துடன் அஜூதியா இந்திராவிடம் வினவ, 

“ம்ம் அதை பத்தி தான் நானும் நினைக்கிறன் அஜூ, உன்னை ஒருத்தன் காப்பாத்தினான்ல”

“ம்ம்”

“அவன் வந்ததுக்கு அப்புறம் என்ன நடந்துச்சு கொஞ்சம் தெளிவா சொல்லு” என்று இந்திரா கேட்கவும் அன்று நடந்ததை அஜூதியா விளக்கமாக சொல்ல அப்பொழுது சட்டென்று, “ஏய் ஸ்டாப் ஸ்டாப்” என இடைவெட்டியவள், “அப்போ அவனோட மோட்டிவ் பரந்தாமனை கொலை பண்றதில்லை”

“ம்ஹூம்”

“உன்னை கூட்டிட்டு போக பார்த்திருக்கான் பரந்தாமன் தடுத்திருக்கான் அவன் அவனை ஷூட் பண்ணிருக்கான் ஸோ பரந்தாமன் மர்டர் முழுக்கு முழுக்க உனக்காக நடந்தது”

“ம்ம் ஆமா இந்து”

“சரி அப்பறோம் என்ன நடந்துச்சு” இந்திரா ஆர்வத்துடன் வினவ, அஜூதியா தோழியை ஒருகணம் பார்த்துவிட்டு அதன் பிறகு நடந்த அனைத்தையும் கூறி முடிக்க, லேசாக புன்னகைத்தபடி அஜூதியாவை பார்த்த இந்திரா, “எனக்கென்னவோ இந்த கேஸ்ல உன் பேர் வராம பார்த்துக்கிட்டது அவன் தான்னு தோணுது டி”

“அதெப்படி முடியும்”

“நீ சொன்னதை வச்சு பார்க்கும் பொழுது அவன் ஒரு கேங்ஸ்டரா தான் இருக்கணும் ஸோ நிச்சயம் பெரிய பெரிய காண்டக்ஸ் இருக்கும் அது மூலமா கூட பண்ணிருக்கலாம்.”

“எப்படி இவ்வளவு உறுதியா சொல்ற”

“நடந்த விஷயங்கள், அப்புறம் முக்கியமா கடைசியா அவன் உன்கிட்ட சொன்னது இதெல்லாம் வச்சு நான் சொல்றேன். எனக்கு அப்படி தான் தோணுது எனிவே உன் அவரு கேங்ஸ்டரா இருந்தாலும் நல்லவர் தான் எப்படியோ பிரச்சனை எல்லாம் சால்வ் ஆகிடுச்சு இனியாவது நீ நிம்மதியா இரு” என்ற இந்திராவிடம் சரியென்பதாய் தலையாட்டிய அஜூதியாவின் மனம் ‘பரந்தாமன் மர்டர் முழுக்கு முழுக்க உனக்காக நடந்தது’ என்ற இந்திரா பேசிய வார்த்தைகளிலே உழன்று கொண்டிருந்தது.

!!!!!

“என்ன திடீர்ன்னு எல்லாரும் பரப்பாக இருக்காங்க, என்னாச்சு வேணி” என்ற இந்திராவிடம், 

“எனக்கு தெரியாது பா நீ ஜானகி மாகிட்டையே கேளு” என்று மென்னகையுடன் கூறிய தன் தோழி  வேணியை குழப்பமாக பார்த்த இந்திரா, ‘என்னாச்சு?’ என்று அஜூதியாவிடம் கேட்க, “உன்கூட தானே இருந்தேன் எனக்கும் தெரியல டி” என்றாள்.

உடனே இந்திரா வேணியிடம், “ஏய் வேணி சொல்ல போறியா இல்லையா ஓவரா பண்ணாத” என்க,

“நான் சொல்ல மாட்டேனே”என்ற பெண்ணவள் புன்னகைத்தபடி அறைக்குள் சென்று கதவை சாற்றிக்கொள்ள, வேணியின் விசித்திர நடவடிக்கை பார்த்து விழித்த பெண்கள் இருவரும்,

“ஒரு ஆறு டீ ரெடி பண்ணிரு மாரி அப்புறம் என் ஆபிஸ் ரூம்ல ஒரு மூணு சேர் மட்டும் எக்ஸ்ட்ராவா போடு” என்று மாரியிடம் வேலை சொல்லிக்கொண்டிருந்த ஜானகியின் அருகே வந்து,

“என்னாச்சு மேம் எல்லாரும் பரபரப்பா இருக்காங்க, யாரும் முக்கியமானவங்க வாறாங்களா” என்ற இந்திராவிடம்,

“ம்ம் வேணிய பொண்ணு பார்க்க வாரங்க, நான் மேட்ரிமோனில அன்னைக்கு உங்களுக்காக பதிவு பண்ணிருந்தேன்ல அதுல வேணியோட ஃபோட்டோ பார்த்து புடிச்சு கேட்குறாங்க. ரிஜிஸ்டர் பண்ணின புதுசுல இவங்க அவங்க மூத்த பையனுக்கு நம்ம அஜூதியாவை கேட்டாங்க ஆனா அஜூ வேலைக்கு போகாம கல்யாணம் வேண்டாம்ன்னு சொன்னா, நானும் விட்டுட்டேன். இப்போ அவங்களோட இளைய பையனுக்கு கேட்குறாங்க, பெங்களூர்ல இருக்காங்க. ரொம்ப வசதியான குடும்பம் இந்த சம்பந்தம் மட்டும் முடிஞ்சிது வேணி ராணி மாதிரி இருப்பா” என மகிழ்வுடன் கூறிய ஜானகி, “சரி போய் உங்க ஃபிரண்டை  அலங்காரம் பண்ணுங்க” என்றவர் இதர வேலைகளை பார்க்க செல்ல. 

“ஏய் இந்து பார்த்தியா இந்த கள்ளிய நம்ம கிட்டையே மறைச்சிட்டா வா போய் கலாய்க்கலாம்” என்று துள்ளிய அஜூதியாவை ஒரு பார்வை பார்த்த இந்திரா,

“ஏய் இப்ப இந்த கல்யாணம் ரொம்ப அவசியமா?”

“அது”

“என்ன அது? வேலைக்கு போய்ட்டு அட்லீஸ்ட் ஒரு வர்ஷம் கழிச்சாவது கல்யாணம் பண்ணிக்கலாம்ல”

“அதுக்கு அவ படிச்சிருக்கணும்ல”

“ஏன் படிச்சா தான் வேலைக்கு போக முடியுமா என்ன ? அவ காலேஜ் போய் படிக்காட்டாலும் டைப் ரைட்டிங்  முடிச்சிருக்கால்ல ஒரு செராக்ஸ் கடையில வேலை பார்த்தா கூட மாசம் எட்டாயிரம் தருவான் டி”

“நாம இதெல்லாம் சொல்ல முடியாதுல, ஜானகி மேம் முடிவு பண்ணிருக்காங்க அவளுக்கு வேணும்ன்னா அவ தான் பேசணும்”

“அதுக்கில்ல அஜூ நீயோ நானோ வெளில போய் படிச்சோம் கொஞ்சம் வெளியுலகம் தெரியும் ஆன வேணி இங்கையே இருந்து வெளியுலகம் தெரியாம இருக்கா. இப்போ உடனே கல்யாணம் பண்ணி வச்சா அவ உலகம் குடும்பம் புருஷன் புள்ளைகுட்டின்னு முடிஞ்சு போய்டும் அதான் சொன்னேன்”

“அப்படி சொல்ல முடியாது இந்து கல்யாணத்துக்கு அப்புறம் படிச்சு வேலைக்கு போறவங்க நிறைய பேர் இருக்காங்க. நீ எதையும் யோசிக்காம வா” என்றவள் இந்திராவின் கரம் பிடித்து வேணியிடம் அழைத்து சென்றாள்.

“எல்லாம் சரியா இருக்குல்ல” கண்ணாடியில் தன்னை ஒருமுறை பார்த்துக்கொண்டபடி அஜூத்தியாவிடம் வினவினாள் வேணி.

“உனக்கு என்னடி வெள்ளைகட்டி மாதிரி அவ்வளவு அழகா இருக்க, மாப்பிளை கையோட கூட்டிட்டு போகாம இருந்தா சரி” என்று வேணியின் கன்னத்துடன் கன்னம் வைத்து அஜூதியா கூற, வேணியின் முகம் அந்திவானமாய் சிவந்தது.

“அதெல்லாம் இல்லை உங்க ரெண்டு பேருக்கும் புடிச்சாதான் கல்யாணம் எல்லாம்” என்ற வேணி, “ஆனா அவரை உங்களுக்கு கண்டிப்பா புடிக்கும்” என்று கண்களில் எதிர்கால கனவுகள் மின்ன கூற, “பாருடா ம்ம்ம்” என்று அவளது தோளில் விளையாட்டாக இடித்த அஜூதியா, “இப்போ தான் உங்களுக்கு சிரிச்சு பேசவே தோணுதுல” என்று சொல்ல,

“ஏது நானு அடி வாங்குவ, நான் எப்பவும் போல தான் பேசுறேன். நீ தான் கொஞ்ச நாளா எதையோ பறிகொடுத்த போல திரிஞ்ச, நீ என்கிட்ட நல்லா பேசி எத்தனை நாள் ஆச்சு தெரியுமா. இந்துட்ட மட்டும் தனியா போய் பேசுவ நான் வந்தா ரெண்டு பேரும் அமைதியாகிருவீங்க. ரெண்டு கூட்டு களவானிங்களும் ஏதோ பண்றீங்கன்னு போய்டுவேன்” என வேணி ஓரக்கண்ணால் இந்துவை பார்த்தபடி கூற, 

“அதுவா உன்கிட்ட சொன்னா ஓட்டைவாய் போல யார்கிட்டையும் சொல்லாதீங்கன்னு சொல்லியே எல்லார்கிட்டயும் சொல்லிருவியா அதான் சொல்லலை” என்று கேலியாக பேசி வேணியின் எண்ணத்தை திசை திருப்பினாள்.

“ஏய் அது சின்ன வயசுல பண்ணினது டி அதை இப்போ வர சொல்லி கிண்டல் பண்ணுவியா உன்னை” என்ற வேணி இந்துவை பார்த்து “இந்து ஏன் எதுவுமே பேச மாட்டிக்கிறா? என்னாச்சு” என்று அஜூதியாவுடன் கேட்டவள் அவள் பதில் சொல்லாமல் இருக்கவும் எழுந்து இந்திராவின் அருகே சென்று அவளது கரத்தை பிடித்துக்கொண்டு,

“என்னாச்சு இந்து என் மேல எதுவும் கோபமா, இந்த கல்யாண பேச்சு உனக்கு பிடிக்கலையா” என் கேட்க, அதற்கு இந்து ஏதோ சொல்ல வரவும் அவளை தன் கண்களாலே சொல்லாதே என்பது போல அஜூதியா தடுக்க,

“அதெல்லாம் இல்லை, உன் விருப்பம் தான் முக்கியம்” என்ற இந்திராவை அணைத்துக்கொண்ட வேணி,

“உன் மனசு எனக்கு புரியுது இந்து நிச்சயம் நான் சந்தோஷமா இருப்பேன் நீ வீணா கவலைப்படாத அப்படியே ஒரு பிரச்சனை வந்தாலும் நீங்க ரெண்டு பேரும் என்னை பார்த்துக்க மாட்டிங்க” என்று அவள் சொல்லவும், “கண்டிப்பா” என்று பெண்கள் இருவரும் சேர்ந்து சொல்ல மகிழ்ச்சியாக சிரித்த வேணி, 

“ஏய் மூணு பேரும் ஒரு செல்ஃபி எடுத்துக்கலாம்” என்று சொல்ல, மூன்று பேரின் அழாகான சிரிப்பும் இந்துவின் அலைபேசியில் அழகாக பதிவுசெய்யப்பட்டது.

“டென்ஷன் ஆகாத வேணி, உன்னை போய் யாரவது வேண்டாம்ன்னு சொல்லுவாங்களா” பதற்றத்தில் தன் கரங்களை பிசைந்து கொண்டு ஜானகியின் அறைக்கு வெளியே நின்றிருந்த வேணிக்கு ஆறுதல் கூறினாள் அஜூதியா.

“இல்லை அஜூ அவங்க அம்மா பேசினது தான் கொஞ்சம் உறுத்தலா இருக்கு”

“என்ன அப்படி சொல்லிட்டாங்க பொண்ணு கொஞ்சம் படிச்சிருந்தா நல்லா இருக்கும்ன்னு சொன்னாங்க ஆன அதுக்கு தான் உன் ஆளு படிக்கலைன்னா என்ன கல்யாணத்துக்கு அப்புறம் படிச்சிக்கலாம்ன்னு சொல்லிட்டாரே அப்புறம் என்ன ரிலாக்ஸ்சா இரு டி” என்று வேணியை திடப்படுத்திய அஜூதியா அவள் இன்னும் பதற்றமாக இருக்கவும், “ஏய் இந்து நீ கொஞ்சம் சொல்லு டி நான் சொன்னா கேட்கவே மாட்டிக்கிறா” என்று இந்துவை அழைக்க, சலிப்பாக தான் அமர்ந்திருந்த நாற்காலியில் இருந்து எழுந்து அவர்களிடம் வந்தவள்,

“இப்போ என்ன இவன் இல்லைன்னா இந்த உலகத்துல வேற ஆம்பளைங்களே இல்லையா. வேண்டாம்ன்னா போறாங்க வேற மாப்பிள்ளை பார்த்துக்கலாம் இதுக்கு ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம்” என இந்த அலட்டிக்கொள்ளாமல் சொல்ல, வேணி தன் கண்களில் நீர் கூர்க்கா “என்ன அஜூ”என அஜூதியாவை பரிதாபமாக பார்க்க இந்துவை முறைத்த அஜூதியா,

“என் டி உன்னை சமாதானம் செய்ய கூப்பிட்டா நீ அவளை இன்னும் அழ வைக்கிற” என்றாள்.

“நான் சொன்னதுல என்ன தப்பு. வேணி படிக்கலைன்னு தெரிஞ்சு தானே வந்தாங்க இப்போ பொண்ணு படிக்கலைனா என்ன அர்த்தம் இதுல அந்த மாப்பிள்ளை சார் கல்யாணத்துக்கு அப்புறம் படிச்சா போச்சுன்னு  சொல்றாரு.”

“ஏய் இதுல என்னடி தப்பு இருக்கு?”

“இருக்கு அஜூ ஏன் இல்லை. வேணிக்கு விருப்பம்ன்னா கல்யாணத்துக்கு அப்புறம் வேணும்ன்னா படிக்கட்டும்ன்னு சொல்றது சரி. அதை விட்டுட்டு படிச்சே ஆகணும்ன்னு ஒருவிஷயத்தை திணிக்கிறது தப்பில்லை.”

“ஏய் வேணி படிச்சா நாளைக்கு பிறக்க போற குழந்தைங்க படிப்புக்கு நல்லதுன்னு நினைச்சு சொல்லிருக்கலாம்ல”

“இவ்வளவு பெரிய கோடீஸ்வரன் குழந்தைங்க படிப்புக்கு ஒரு ட்யூஷன் வைக்க மாட்டானா. எனக்கு என்னமோ  இவங்களை புடிக்கவே இல்லை. இவன் படிக்க போன்னு சொல்றான், அந்த அம்மா இவகிட்ட பீரியட்ஸ் எல்லாம் ஒழுங்கா வருமா? எப்ப வரும்? தைராய்டு இருக்கா பிசிஓடி இருக்கான்னு எல்லாம் கேட்குது எனக்கு புடிக்கலை”

“ஏய் இதெல்லாம் சில பேர் கேட்குறது தான்”

“எப்போ பொண்ணு பார்க்க வந்தன்னைக்கே வா. இவங்க கல்யாணத்துக்கு பொண்ணு தேடுறாங்களா இல்லை குழந்தை பெத்து குடுக்குறதுக்கு மெஷின் தேடுறாங்களா. அவங்க கிட்ட நல்லா பணக்கார திமிர் தெரியுது” என்று இந்து தீவிரமாக சொல்ல, 

“ஏய் இல்லதாவங்களே சிலர் திமிரா இருக்கும் பொழுது பணம் இருக்கிறவங்க கொஞ்சம் திமிரா இருக்கிறதுல தப்பில்லையே, எல்லாத்துக்கும் மேல எனக்கு இவங்கள பார்த்தா அவ்வளவு திமிர் இருக்கிறவங்களா தெரியல. இவங்கள விட மோசமானவங்க எல்லாம் இருக்காங்க. நம்ம கிட்ட நல்லா தான் டி பேசினாங்க உன் கண்ணுக்கு தான் எல்லாம் தப்பாவே தெரியுது.” என்று சொல்ல,

‘இல்லை’ என்பது போல தன் தலையை இடவலமாக ஆட்டி மறுத்த இந்திரா, “பணம் உங்க கண்ணை மறைச்சிருச்சு முக்கியமா வேணி” என்று அவள் பக்கம் திரும்பிய இந்திரா, “அவன் பணம் உன்னை யோசிக்கவே விட மாட்டிக்கிது” என்று சொல்ல, கண்கள் கலங்க இந்திராவை பார்த்த வேணி,

“ஆமா பணம் என் கண்ணை மறைச்சிருச்சு அதுல என்ன இருக்கு. நான் கட்டியிருக்க இந்த புடவை” என தன் புடவையின் முந்தானையை உயர்த்தி அதில் தையலிட பட்டிருந்த கிழிந்த பாகத்தை காட்டியவள், “எனக்கே எனக்குன்னு ஒரு டிரஸ் நான் விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து போட்டதே கிடையாது. யாராவது வேண்டாம்ன்னு தூக்கி போட்ட ட்ரெஸை தான் இப்போ வரை தச்சு தச்சு போட்டுட்டு இருக்கேன். இதோ” என தன் விரலை காட்டியவள், “இன்னைக்கு காலையில தைக்கும் பொழுது என விரல்ல ஊசி குத்தினது, ஒன்னு இல்லை பல தடவை குத்தியிருக்கு காயம் சின்னது தான்” என தன் விரலை சுருக்கி அளவை காட்டியவள், “ஆனா வலி ரொம்ப பெருசு” கண்ணீர் வழிய கூறினாள். வேணிக்கு தொண்டை அடைத்து கொண்டு வந்தது பேசவே முடியவில்லை ஆனாலும் பேசினாள் கண்ணீரை துடைத்து கொண்டு பேசினாள்.

“இந்த செருப்பு” என தன் காலில் பொருந்த மறுக்கும் காலனியை காட்டியவள், “என் சைஸ்க்கு நான் போட்டதே கிடையாது டி.”என நீண்ட பெருமூச்சை விட்டவள்.

“ரொம்ப கஷ்டபட்டுட்டேன் இனியாவது எனக்கு புடிச்ச மாதிரி வாழணும்ன்னு நினைக்கிறது தப்பா. உங்கள மாதிரி என் வாழ்கை இல்லை” என்றவள் அஜூதியாவை பார்த்து, “உனக்கு அப்பா அம்மா இல்லைனாலும்  அவர் உனக்காக விட்டிட்டு பணம் இருக்கு, உனக்கு” என இந்திராவை பார்த்தவள், “மாமா உன்னை பார்த்துக்காட்டாலும் மாசம் மாசம் ஏதோ உன் செலவுக்காக அனுப்புறார்ல ஆன எனக்கு என்ன இருக்கு? அடுத்தவங்க கழிச்சு போடுற கிழிஞ்ச ட்ரேஸும், வேண்டாம்ன்னு ஒதுக்குற சேராத செருப்பையும் தவிர வேற என்ன இருக்கு? எதுவுமே இல்லை. இதே சாபமான வாழ்க்கை என் வாழ்நாள் முழுக்க எனக்கு வேண்டாம்ன்னு நினைக்கிறதுல என்ன தப்பு இருக்கு.  நான் வசதியா வாழணும்ன்னு ஆசை படுறேன் டி. இந்த சம்பந்தம் ஒன்னும் நாம தேடி போலையே அவங்களே விரும்பி வந்திருக்காங்க. என்னை மாதிரி பொண்ணுக்கெல்லாம் இப்படி பட்ட சம்பந்தம் அமைவது பெரிய விஷயம். ஸோ இந்த சம்பந்தம் கிடைச்சா  நான் சந்தோஷமா இருப்பேன்னு எனக்கு தோணுது அவ்வளவு தான்” என்றவள் அப்படியே நாற்காலியில் தோய்ந்து அமர, வேணி பேசியதில் அஜூதியாவுக்கே கண்களெல்லாம் கலங்கிவிட, இந்திராவுக்கே ஒருமாதிரி ஆகிவிட்டது அவள் வேணியின் நலனுக்காக பேசியிருக்க அது வேறு மாதிரி அவளை காயப்படுத்திவிட்டதே என வருந்தியவள்.

“சாரி வேணி இனிமே இது பத்தி பேச மாட்டேன் உன் விருப்பம் எதுவா இருந்தாலும் எனக்கு ஓகே. எப்பவும் நான் உன் கூடவே இருப்பேன்” என்று சொல்ல இந்திராவை அணைத்துக்கொண்ட வேணி, “தேங்க்ஸ் டி” என்று சொல்ல, தோழிகள் மூவரும் அணைத்து கொள்ள, “எதையும் யோசிக்காம ரிலாக்ஸ்சா இரு, இந்த அலையன்ஸ் கண்டிப்பா நல்லபடியா நடக்கும்” என்ற இந்திரா வேணியை ஆறுதல்படுத்திய நேரம், அங்கு வந்த ஜானகி அஜூதியாவை அழைத்து,

“தம்பி வேணிக்கிட்ட தனியா பேசணும்ன்னு சொல்றாங்க ரெண்டு பேரையும் கார்டனுக்கு கூட்டிட்டு போ மா”  என்று சொல்ல, சரி என்றவள் வேணியையும் வேணியை பெண்பார்க்க வந்த திலீப்பையும் அழைத்து கொண்டு கார்டன் சென்றவள் அவர்கள் அமர்ந்து பேச இரு நாற்காலிகளை போட்டுட்டு, “பேசிட்டு இருங்க” என்று இருவரையும் பார்த்து பொதுவாக கூறியவள், தன் தோழியின் காதில், “போல்டா பேசு”என்று சட்டென்று கூறிவிட்டு நாகரிகம் கருதி விலகி சென்றுவிட, வேணிக்கு முதன் முறை ஒரு ஆடவனுடன் தனியாக அமர்ந்திருப்பதை எண்ணி முகமெல்லாம் வியர்த்து விட, தலை கவிழ்ந்த நிலையில் அமர்ந்திருந்தாள்.

❤️ Loading reactions...
2 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top