அத்தியாயம் -38

இன்னொரு வாரம் ஓடிப் போச்சு. மதுரியாவும் விதுரனும் அவங்கவங்க வேலையிலேயும் யோசனையிலேயும் மூழ்கியிருந்தாங்க.. விதுரனுக்கு புதிர்கள் கூடிட்டுப் போச்சே தவிர விடை கிடைக்கவே இல்லை. அதே சமயம் மதுரியாவை பொறுத்த வரைக்கும் அசோக்–விக்கி ரெண்டுப் பேருக்கும் எதிரா நிறைய ஆதாரம் கிடைச்சுப் போச்சு. ஆனா காரணம் என்ன-னு மட்டும் தெரியலே. அது தெரியாம எதுவும் செய்ய முடியாத நிலை. அதுலேயும் அவ வேலை செய்யற மேலாளர் குடுத்த ஆதாரத்துக்கு அப்புறம் அதிக நாள் கடத்த முடியும்-னு தோணலே. ஆனா அவங்கக் கிட்டே இருந்து உண்மையை எப்படி வாங்கறது-னு தெரியலே. அதே நினைப்போட காலையில் தயாராகி படிக்கட்டுலே இறங்கும் போது, அன்னிக்கு அலுவலகத்தில ஆனா போல கால் மடங்கவும் பயந்து அலறினா. அவங்க அறையிலே தூங்கிட்டு இருந்த விதுரன் பதறி ஓடி வந்தான். மத்தவங்களும் ஓடி வந்தாங்க. ஓடி வந்த விதுரன் அவ உருண்டு விழறதுக்கு முன்னாடி தன்னோடச் சேர்த்து அணைச்சுப் பிடிச்சுக்கிட்டான்.

மதுரியா பேயறைஞ்ச மாதிரியானா. “மது… என்னாச்சு? என்னம்மா?”-னு அவன் பிடியிலே இருந்து விடாம கேட்டான் விதுரன். “உடனடியா டாக்டர் கிட்ட போகணும் விது. சம்திங் ஈஸ் டெரிபிளி ராங்”-னு தீர்க்கமா சொன்னா. “அன்னிக்கு ஆபீசுலே நடந்துச்சே அப்படியா?”-னு கேட்கவும், “அதுக்கப்புறம் ரெண்டு வாட்டி அப்படி நடந்துச்சு. மொத்தமா நாலு வாட்டி”-னு சொல்லவும் விதுரன் அதிர்ந்துப் போனான். “என்னம்மா என்னாச்சு?”-னு பதறிப்போய் கேட்டார் வேதமூர்த்தி. “அது.. வந்து மூர்த்திப்பா..”-னு மதுரியா தடுமாறவும், “அப்பா.. அன்னிக்கு மயங்கி விழுந்தப்போ எங்கேயோ அடிப்பட்டிருக்கும் போல. முதுகுலே ரொம்ப வலி வந்து கால் மடங்குதாம்.. உடனே டாக்டரை பார்க்கணும்பா. நான் இதோ வரேன்”-னு உள்ளேப் போனான். அவ அலறல்லே காலையிலே ஆறு மணிக்கே எல்லாரும் எந்திரிச்சுட்டாங்க. அவன் ரெடியாகப் போனதும், ஒரு டாக்டரான மதுரியாவுக்கு தனக்குள்ளே என்ன நடக்குது-னு ஓரளவு புரிஞ்சுது. அதனாலேயே எப்போவும் தைரியம் நிறைஞ்ச நெஞ்சுலே பயப்பந்து உருண்டது. விதுரன் ப்ரார்த்தனைகள் கடவுள்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அவன் அன்பை மதுரியா கிட்டே நிரூபிக்கிற வேளை வந்துச்சு.

அவளைக் கூட்டிட்டு, விரட்டிட்டுப் போனது அவ வேலை செஞ்ச மருத்துவமனைக்குத்தான். மூணு மணி நேரம் டெஸ்ட், ஸ்கேன், எக்ஸ்-ரே எல்லாம் முடிஞ்சு, இதோ ஒரு நியூரோலஜிஸ்ட் முன்னாடி உட்கார்ந்து இருந்தாங்க. “டாக்டர், ரிப்போர்ட்ஸ் எப்படி இருக்கு?”-னு மதுரியா தடுமாறவும், “ரிலேக்ஸ்… ரிலேக்ஸ்… ரியா கொஞ்ச நாள் முன்னாடி கீழ விழுந்து மயங்கிட்டீங்கல்ல? அன்னிக்குத் தான் ப்ராப்ளம் ஸ்டார்ட் ஆகியிருக்கு. நீங்க ஏதோ கூரான பொருள் மீது விழுந்து இருக்கணும். ஸ்பைன் பக்கத்துலே அடிப்பட்டு பெரிய அளவுல நீர் சேர்ந்திருக்கு. நீர் கட்டி-னு சொல்லுவோம்லே? அதுதான்!! அதோட சைஸ் கொஞ்சம் பெரிசுதான்.  அதுதான் நீங்க அசையும் போது முதுகுத் தண்டுல வலுவா அழுத்தம் குடுக்குது. அதனால தான் அந்த பயங்கர வலியும், மரத்து போறதும்.. ஸோ… அவசர கதியில ஆபரேஷன் பண்ணியாகணும். இல்லேன்னா கீழ்ப்பகுதியிலே மொத்தமா சென்ஸ் போயிடலாம்”-னு சொல்லி முடிச்சார். 

விதுரன் உடனே, “அரேஞ்ஜ் பண்ணலாம் டாக்டர்! நாங்கத் தயார்”-னு சொன்னான். “ஓகே.. நாலு நாள்-ல என்னால அரேஞ்ச் பண்ணிக்க முடியும்.. அப்புறம் நூறுலே ஒரு பங்கு குழந்தை பிறக்கறதுலே பிரச்சினை வரலாம் ஆனா அப்படிதான்னு ஊர்ஜிதம் ஒண்ணும் இல்ல. சர்ஜரிக்கு அப்புறம் 2 வாரம் பெட்-ரெஸ்ட் எடுத்தா எல்லாம் நார்மல் ஆகும். ரியா… நான் ப்ரேம் சார் கிட்ட பேசறேன். யூ வில் நீட் அ ப்ரேக் ஆஃப் அட்லீஸ்ட் 4 வீக்ஸ். மிஸ்டர்.விதுரன் டேக் எ ப்ரேக் ஃபர் டூ வீக்ஸ்!! புரியும்மென நினைக்கிறேன்?”-னு டாக்டர் சொல்லவும், விதுரன் கூச்சத்தோட “சரி..”-னு சொன்னான்.

மதுரியா பேச்சற்ற மௌன சாமியாரா மாறிப் போனா. ஓரளவு சுதாரிச்ச விதுரன், அவளுக்கு இன்னும் அதிர்ச்சி-னு நினைச்சான். அதனால ஒண்ணுமே பேசலே. வீட்டுக்கு வந்து எல்லாருக்கும் விவரம் சொன்னான். அன்னிக்கு சாயந்திரம் மதுரியா வீட்டுலே இருந்து வரச் சொல்லி, அவங்க கிட்டேயும் விவரம் சொன்னான். மதுரியா எப்போவும் போல கற்பகவல்லி மடியிலே படுத்துக்கிட்டு இருந்தா. சங்கரியும் சுபத்ராவும் அழுதே கரைஞ்சாங்க. 

“பயப்படறியா குட்டிம்மா?”-னு கேட்டாங்க கற்பகவல்லி. “இல்லே பாட்டி… நான் இதை எதிர்பார்த்தேன். ஆனா சைட் எஃபெக்ட் தான்”-னு மதுரியா சொல்லவும், “4 வீக்ஸ் ரெஸ்ட்லாம் ஒரு எஃபெக்ட்-னு புலம்பாதே”-னு சொல்லி மேலே சொல்லாதே-னு கண்ணுல ஜாடைக் காட்டினான். மதுரியாவுக்கு குழப்பமாச்சு. இதை சொல்லலேன்னா எப்படி என்னை பிரிய முடியும்-னு யோசிச்சா. “போதும்… ரெண்டு பேரும் எவ்வளோ நேரம் தான் அழுவீங்க? சுபா, சங்கரி ரெண்டு பேரும் நிறுத்துங்க… ஏதோ நடந்து போச்சு. அதை எப்படி சரி பண்றது-னு யோசிக்கணும். சும்மா நீங்களும் அழுது ரியாவோட தைரியத்தை குறைக்காதீங்க… மூணு நாள்லே அட்மிட் பண்ணணும் நாலாவது நாள் காலையிலே சர்ஜரி.. நிறைய வேலை இருக்கு. சின்னவனே இவளை மேலே கூட்டிட்டு போ. ரெண்டு நாள் நல்லா ரெஸ்ட் எடுக்கட்டும்”-னு அதட்டலா சொன்னாங்க நீலவேணி.

அதுக்கப்புறம் சாப்பிட்டுப் போய் படுத்தப்புறம் கூட ரெண்டுப் பேரும் முழிச்சிட்டிருந்தாங்க. “விதுரன்! உங்கக்கிட்ட பேசணும்”-னு மொட்டையா ஆரம்பிக்கவும், “ம்ம்ம்… சொல்லு”-னு கேட்டான். “நீங்க ஏன் சைட்-எஃபெக்டை வீட்டுலே யார் கிட்டேயும் சொல்லாம இருக்கீங்க?”-னு கேட்கவும், “எதுக்கு சொல்லணும்?”-னு பதில் கேள்வி கேட்டான் விதுரன். “சொன்னா நம்ம பிரிவு ஈசியா இருக்கும்… வீட்டு சம்மதத்தோட பிரியலாம்”-னு மதுரியா சொல்லவும், “வாட்??”-னு எந்திரிச்சு உட்கார்ந்தான். 

“ஆமா.. தேவையில்லாத பாரத்தை நீங்க ஏன் சுமக்கணும்? ரீசனை கூட கடவுளே உங்களுக்கு சாதகமா குடுத்துட்டார்”-னு சொல்லவும், “மூடுடீ வாயை.. நானும் பார்த்துக்கிட்டே இருக்கேன்.. லூசு மாதிரி பேசிக்கிட்டேப் போறே? இவ்வளோ நாள் நல்லாத் தானேடீ இருந்தே? திரும்ப என்ன?”-னு கத்த ஆரம்பிச்சான். “ம்ம்ம்… ஸோ ஃபார் யாரும் சொல்லலியே எனக்கு குழந்தை பிறக்காது, நான் மேரீட் லைஃபுக்கு லாயக்கு இல்லே-னு. எல்லாத்துக்கும் மேலே, கொஞ்சம் ஏமாந்தா கூட என் இடுப்புக்கு கீழே சுரணையில்லாம போகும்”-னு வருத்தமா சொன்னா. விதுரன் ஆத்திரமா, “என்னை மூழ்கிற கப்பல் எலியா மட்டும் தான் யோசிக்க முடியுதில்லே? ஆமா.. உன் மனசுக்கு என்னை பிடிக்காது.. அப்புறம் ஏன் உனக்கு தாம்பத்யம், குழந்தை பத்தியெல்லாம் கவலை?”-னு புருவத்தைத் தூக்கினான்.

ஒரு நிமிஷம் மௌனம். “நீங்களேப் போகறதுக்கு முன்னாடி நானே விட்டுக் குடுக்கறது கொஞ்சம் கௌரவமா இருக்கும். அதோட நட்பு மட்டுமாவது மிஞ்சும். அதுக்குத் தான்”-னு இரக்கமே இல்லாம சொன்னா மதுரியா. விதுரன் கண்ணுலே அப்படி ஒரு வலி. “மது.. என் கண்ணுலே இவ்வளோ நாள்லே ஒரு நிமிஷம் கூட நீ உண்மையான அன்பைப் பார்த்தது இல்லையா? ஏன் மது என்னை நம்ப மாட்டேங்கறே? நான் வெயிட் பண்றேன். ரெசிப்ரோகேஷனை எதிர்பார்க்கலே-னு சொன்னேன் தானே? ஆனா உன் பேச்சு எனக்கு வலிக்குதுடீ”-னு உணர்ச்சிவசப்பட்டுச் சொன்னான் விதுரன். 

“சாரி விதுரன்.. எனக்கு இந்த தியாகத்துலே எல்லாம் நம்பிக்கை இல்லை. இப்போ வேணா ஒரு வேகத்துலே ஹீரோயிசமா தெரியலாம்.. நாளாக நாளாக சலிப்பும் கோபமும் வரும்”-னு சொல்லவும், “மது இப்போ நாம வாழற இந்த லைஃப், அப்பா வீட்டுலேன்னாலும் நம்ம எக்ஸ்பென்ஸ், ஸ்பெண்டிங், வண்டி பெட்ரோல் எல்லாம் நம்ம ஏர்னிங்லே இருந்து பண்றது தான். கண்டிப்பா நீ முன்னாடி வாழ்ந்தத் தரம் இல்லை தானே? அப்போ நீ எனக்காக சேக்ரிஃபைஸ் பண்ணியா?”-னு கேட்டான். “இல்லே.. அ.. அது”-னு இழுக்கவும் “அதே மாதிரி தான். நானும் சேக்ரிஃபைஸ் பண்ணலே. எனக்கு என் வாழ்க்கையிலே நீ வேணும்.. நீ மட்டும் தான் வேணும். உன்னை இவ்வளோ பாதிக்கற மாதிரி நான் பண்ண விஷயம்… அது என்ன-னு எனக்கு தெரிய வேண்டாம். ஆனா நான் கல்யாணம் ஆன அப்புறம், திரும்ப அதே மாதிரி செஞ்சேனா?”னு கேட்டான். இல்லேன்னு அவ மண்டையை உருட்டினா. 

“அப்புறம் ஏன் மது, பெனிஃபிட் ஆஃப் டவுட் எனக்கு தரக் கூடாது?”-னு கேட்டான். மதுரியா பேச்சு இல்லாம ஸ்தம்பிச்சு போனா. “இப்போ சொல்றேன். என் லைஃப்லே உன் இடத்துலே நீ மட்டும் தான் எப்போவும்”-னு அழுத்தமா சொல்லவும், ஒரு கேவலோட முதுகு குலுங்கிச்சு மதுரியாவுக்கு. அவ பக்கமா படுத்து, “மது… மது… என்னடா?”னு தோள்லே கை வைக்கவும், அவனை கட்டிப்பிடிச்சு கதறிட்டா. அவளோட பயம் அழுகையா வெளிவந்துச்சு. அது அவனுக்கும் புரிஞ்சுது. அவளை அணைச்சு ஆறுதல் படுத்தி தட்டிக் குடுத்து தூங்க வைச்சான். அன்னிக்கு ராத்திரி தூக்கத்துலே கூட விதுரனை விட்டு விலகலே மதுரியா. நாளும் வேகமா ஓடி அறுவை சிகிச்சை நாளும் வந்துச்சு. காலையிலே 5 மணிக்கு ஆரம்பிச்சு 7 மணி வரை நடந்துச்சு. விதுரன் – மதுரியாவோட மொத்த குடும்பமும் அங்கே தான் இருந்துச்சு. ப்ரதீப்பும் ரீனாவும் கூட வந்து உதவிப் பண்ணாங்க. மதுரியாவோட சீனியர் கூட வந்து விசாரிச்சுட்டுப் போனார். “பரத் மாம்ஸ்.. வயசான மூணு பேரையும் கூட்டிட்டு போய் டிபன் வாங்கி குடுங்க.. பாட்டி மருந்து சாப்பிடணும்-னு ரிமைண்டர் அனுப்பிட்டுத் தான் உள்ளே போயிருக்கா.. கூட்டிட்டுப் போங்க”-னு அனுப்பினான் ப்ரதீப். “விதுரன்! உங்களுக்கு டீ இல்ல காஃபி என்ன வேணும்?”-னு ரீனா கேட்கவும், “மது வேணும்”-னு பதில் சொன்னான்.

இப்படி பல பதட்டத்துக்கு அப்புறம் மதுரியாவை தீவிர சிகிச்சைப் பகுதிக்கு மாத்தி, எல்லாரும் போய் பார்த்தாங்க. அரை மயக்கத்திலே எல்லாரையும் பார்த்தா.. “மது…”-னு அவ கன்னத்தை விதுரன் தடவும் போதே திரும்ப மயக்கமானா. ஒரு பெருமூச்சோட கிளம்பிப் போய் டாக்டரை பார்த்தான் விதுரன். “வாங்க விதுரன்! சர்ஜரி வாஸ் எ க்ரெட் சக்சஸ்… கட்டியோட சைஸ் எதிர்பார்த்ததை விட கொஞ்சம் பெரிசு. அதான் லேட் ஆச்சு. இட் வாஸ் எ காம்ப்ளிகேடெட் ஒன். ஸோ.. ஏதாவது சைட் எஃபெக்ட் இல்ல சர்ஜிகல் டேமேஜ்லாம் இருந்தா ரெகவரி டைம்லே தான் தெரியும். ஸோ… பேர் வித் அஸ் ஃபார் தி நெக்ஸ்ட் டூ டேஸ்.. அப்போ தான் பார்க்க முடியும்”-னு சொன்னார் டாக்டர். “ஷ்யூர் டாக்டர்.. ஒரு ரிக்வெஸ்ட்.. டூ டேஸ் ஐ.சி.யூ வேண்டாம். ரூமுக்கு மாத்திடுங்க. நான் பார்த்துக்கறேன். தனியா ஐ.சி.யூவிலே இருந்தா அவ கான்ஃபிடன்ஸ், பாசிடிவிடி எல்லாம் அஃபெக்ட் ஆயிடும்”-னு சொன்னான் விதுரன். “ம்ம்ம்.. தட்ஸ் எ குட் பாயிண்ட். ஒரு ஃபோர் ஹவர்ஸ் கழிச்சு மாத்தறோம். பட்.. உங்களைத் தவிர விசிட்டர் யாரும் வேண்டாம் டூ டேஸ்க்கு”-னு சொல்லவும் அவனும் கூட இருந்த ப்ரதீப்பும் ஒத்துக்கிட்டாங்க.

ப்ரதீப்புக்குத்தான் யோசனை.. “விதுரன் நம்மால முடியுமா? அவ ஐ.சி.யூவிலேயே இருக்கட்டுமே”-னு சொல்லி கூட பார்த்தான். ஆனா விதுரன் ஒத்துக்கலே. கடைசியிலே சந்திரனோட ஐடியா படி ப்ரதீப்பும் விதுரனோட ஹெல்ப்புக்கு அங்கேயே அவன் கூடவே இருக்கறதா முடிவாச்சு. விதுரன் வீட்டு ஆளுங்க எல்லாரையும் ரெண்டு நாள் வரவேண்டாம்-னும் தானே பார்த்துகிறதாகவும் சொல்லிட்டான். அன்னிக்கு சாய்ந்திரம் வீட்டு ஆளுங்க எல்லாரும் கிளம்பிப் போனதும், மயக்க மருந்து வேகத்துலே மனசுலே இருக்கறதை புலம்ப ஆரம்பிச்சா மதுரியா. சிகிச்சைக்கு முன்னாடி விதுரன் கூட பேசினது அவளை பாதிச்சதால பேச்சு எல்லாம் அதை சுத்தியே இருந்துச்சு. 

விதுரனுக்கும் அவனோட இவ்வளோ நாள் புதிருக்கு விடை தெரிஞ்சுது. “விது.. நீ.. நீ… ரொம்ப நல்லவன்டா… நான் எல்லாம் திமிரெடுத்த ராங்கி. என்னை போய் லவ் பண்றியே ஏன்டா? பாவம்டா நீ.. ஆனா அந்த ஒரு வேலை நீ பண்ணி இருக்கக் கூடாது.. அதைப் பண்ணிட்டியேடா லூசு. என்னால அதனால தான் உன்னை ஒதுக்கவும் முடியலே ஏத்துக்கவும் முடியலே. அதை மறக்கவும் முடியலே. ஏன் டா அப்படிப் பண்ணே? ஏன்? ராஸ்கல்!!! எல்லாம் பண்ணிட்டு இப்பொ வந்து லவ் யூ.. பவ் யூ-னு.. போடா… அதுலே கூட நான் தான் ஃபர்ஸ்ட்… உனக்கும் முன்னாடியே ‘டி அமொ’ சொன்னேன். ‘டி அமோ’-ன்னா ஸ்பானிஷ்லே ஐ லவ் யூ-னு அர்த்தம். பட் யூ டோண்ட் டிசர்வ் இட்”-னு மயக்கத்துலே கத்தினா.

அண்ணனுக்கும் புருஷனுக்கும் அவ பேச்சு தூக்கி வாரிப் போட்டது. ஒரு நேரம் காதல் புன்னகையும் இன்னொரு நேரம் கோபம், ஆக்ரோஷம், கண்ணீர்-னு இருந்துச்சு அவ பேச்சு. விதுரன் பதறவும், “ரிலேக்ஸ் விதுரா.. உள்ளே அடக்கி வைச்சதெல்லாம் அனீஸ்தீஷியா எஃபெக்ட்னால அடிச்சுட்டு வெளியே வருது. வரட்டும். எந்திரிக்கும் போது ஒரு தெளிவு இருக்கும்”-னு சொன்னான் ப்ரதீப். “நீ ஏன் டா அப்படி பண்ணே? அதுவும் நான் பார்க்கிறேன்-னு தெரிஞ்சும் அப்படி பண்ணே? என்னை வருத்தப்பட வைக்கவா? அதைப் பார்த்ததும் சாகணும்-னு தோணிச்சுடா. செத்துட்டேன்… ஒவ்வொரு நாளும் நான் செத்துக்கிட்டே உயிர் வாழறேன்டா உன்னாலே”-னு அழுதா மதுரியா. 

“போய் பேசு.. போ.. டூ இட்… எதுவானாலும் நம்ம ரெண்டுப் பேருக்குள்ளே முடியட்டும்.. போ”-னு விரட்டினான் ப்ரதீப். கொஞ்சமும் தாமதிக்காம அவ கையை பிடிச்சுட்டு அவ பக்கத்திலே உட்கார்ந்து, “மதும்மா.. அப்படியெல்லாம் பேசாதேடா… நீ என் உயிர்டா”-னு சொன்னான். “பொய் சொல்லாதே. அன்னிக்கு நம்ம பெரிய சண்டைக்கு அப்புறம், ஒன் வீக் அப்புறம் என் ஃபைனல் இயர் ஸ்கோரும் நீட் எக்ஸாம் ரிசல்ட்டும் வந்துச்சு. உன்கிட்டே தான் முதல்லே சொல்லணும்-னு சர்ப்ரைஸா வந்தா நீ உன் ரூம்லே அந்த கோத்தியை.. சுவாதியை கட்டிப்பிடிச்சு கொஞ்சிட்டு இருக்கே? எவ்வளோ தைரியம்? என் கண் முன்னாடி அவ கூட.. போ டா… திமிர் பிடிச்ச சனியனே. நான் அப்படி பண்ணி இருக்கணும்.. அப்போ தெரியும் அந்த வலி உனக்கு.. தறுதலை”-னு அழுதுட்டேச் சொல்லவும் அதிர்ந்துப் போனான் விதுரன்.

“என்ன இது?”-னு நிமிர்ந்தா ப்ரதீப்பும் அவனை தீப்பார்வை பார்த்தான். “டேய்… சத்தியமா இல்லேடா”-னு சொன்னான் விதுரன். “என்ன சத்தியமா இல்லே? அதான் சுவாதி சொன்னாளே.. நான் வர்றேன்-னு தெரிஞ்சு என் மெசேஜை பார்த்துட்டு, வேணும்னே தான் அவ வேணும்-னு எனக்கு காமிக்கறதுக்குத் தான் நீ பண்ணே-னு.. போடா.. யூ டோண்ட் லவ் மீ.. நான் தான் லூசு மாதிரி உன் பின்னாடி அலைஞ்சேன்”-னு தேம்பி தேம்பி அழவும், விதுரன் ஆழ்ந்த மூச்சு எடுத்து, “மதும்மா ஐ லவ் யூ டூ.. ஐ அம் மேட் ஆஃப் யூ.. எப்போவும்.. அன்னிக்கும் சரி.. இன்னிக்கும் சரி”-னு அவன் முடிக்கறதுக்குள்ளே “நீ பொய் சொல்றேடா.. பொய் சொல்றே.. எனக்கு நீ வேண்டாம்.. மதுக்கு விது வேண்டாம்”-னு அலறினவளோட வார்த்தைகளை அவனுக்குள்ள விழுங்கி முத்தம் தந்து அவள் அலறலை அடக்கினான். “ஹேய்.. ஆபரேஷன் முடிஞ்சு 12 மணி நேரம் கூட ஆகலே படுபாவி.. பிரச்சனை ஆகிடப் போகுதுடா.. அதை விட நர்ஸ் உள்ளே வந்தா போலீஸ்ல புகார் குடுத்திடப் போறாங்க”-னு முதுகுலே குத்தினான் ப்ரதீப். ஆனா விதுரன் விலகின உடனே மதுரியா முகத்துலே அழகான வெட்க முறுவல். “அது சரி..”-னு சிரிச்சான் ப்ரதீப்.

“அன்னிக்கு ஏதோ பிசினஸ் டீல் கிடைச்சதுக்கு ஹேண்ட் ஷேக் பண்ணவ, நான் எதிர்பார்க்காம இருக்கற நேரத்துலே என்னை ஹக் பண்ணிட்டா மதும்மா. அவளை நான் விலக்கற அந்த நேரத்துலே தான் நீ பார்த்திருக்கணும். மத்தபடி நீ வந்ததோ பார்த்ததோ.. ஏன் அதுக்கப்புறம் அவ உன்கிட்ட பேசினதோ எதுவுமே எனக்கு தெரியாது டா. ப்ளீஸ் நம்பும்மா. உன்னைத் தவிர என் மனசுலே யாரும் இல்லை.. வரவும் முடியாது.. இது சுவாதிக்கும் தெரியும்.. நான் பண்ண ஒரே தப்பு உன்னை வழிக்கு கொண்டு வர நான் அவளை யூஸ் பண்ணது மட்டும் தான். ஐ அம் சாரி டியர்.. சாரி பேபி.. சாரிடீ”-னு அவன் நெத்தியை அவளோட நெத்தியிலே வைச்சு மெதுவான குரல்லே பேசினான். மதுரியாக்கு அவன் பேசினது எவ்வளோ கேட்டுச்சு-னு தெரியலை, ஆனா மனசுலே இருந்த அலைக்கழிப்பு,   கேள்விகள், வருத்தம் எல்லாம் படிப்படியா கம்மியாகி அப்புறம் மதுரியா அமைதி அடைஞ்சு ஆழ்ந்த உறக்கத்துக்குப் போனா. விதுரனும் அவ நெத்தியிலே முத்தம் குடுத்து விலகினான். “மவனே… ஜஸ்ட் மிஸ்.. அவ மட்டும் இன்னிக்கு ஐசியூவிலே இருந்திருந்தா, உன் கதை முழுவதையும் வில்லுப் பாட்டு மாதிரி வாசிச்சிருப்பா..அங்கே இருந்தவங்களுக்கு செம்ம entertainment -ஆ போயிருக்கும். அடேங்கப்பா என்ன மரியாதை.. என்ன பாசம்.. கெட்ட வார்த்தை மட்டும் தான் பேசலே”-னு கிண்டல் பண்ணான் ப்ரதீப்.

விதுரனோட முகம் கல்லு மாதிரி இருந்துச்சு. எந்த ரியேக்‌ஷனும் இல்லை. அதே நேரம் உள்ளே வந்த நர்ஸ், “சார்… டாக்டர் ரவுண்ட்ஸ் வர்றாங்க.. நீங்க கொஞ்சம் வெளியிலே வெயிட் பண்ணுங்க ப்ளீஸ்”-னு சொல்லவும் ரெண்டுப் பேரும் வெளியே போனாங்க. விதுரனும் வீட்டுக்கு போன் பண்ணி தகவல் சொல்லிட்டு, ரெண்டு பேரும் சாப்பிடப் போனாங்க.

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top