அசுரன் 86

 அசுரன் 86

 

சிலை போல் நின்றிருந்த மலரின் அருகில் வந்தவன்…

 

ராஸ்கல்..  காலையிலேயே டிரிங்க் பண்ணி இருக்கான்… அதனால ஏதேதோ உளறிட்டு போறான்… வீட்ல புருஷன் பொண்டாட்டிக்குள்ள ஏதாவது சண்டையா இருக்கும்..  அதனால அந்த கோபத்தை எல்லாம் இங்க வந்து கொட்டிட்டு போறான்… நீ ஒன்னும் அத பத்தி கவலைப்படாத..  அவனுக்காக நான் உன்கிட்ட சாரி கேட்கிறேன்… 

 

அவள் கைகளைப் பிடித்து “சாரி” என்றான்….

 

தப்பு பண்ணது நான்.. நீங்க ஏன் சாரி கேக்குறீங்க…  என்ன தவிர இந்த இடத்துல வேற யாரு இருந்திருந்தாலும் உங்களுக்கு இவ்வளவு அவமானமோ கெட்ட பெயரும் வந்திருக்காது… எல்லாம் என்னால தான்.. நான் இத பத்தி எல்லாம் முன்னாடியே யோசிச்சு இருக்கணும். தப்பு பண்ணிட்டேன்… என்றாள் வெறுமையாய்.

 

இரு கைகளாலும் அவள் முகத்தை தாங்கி அவனைப் பார்த்து நிமிர செய்தவன்… என்னடி சொல்ற… அவன் ஏதோ தப்பா புரிஞ்சுகிட்டு லூசுத்தனமா உளறிட்டு போறான்னா அதுக்கு நீ என்ன பண்ணுவ.. 

 

நம்ம விஷயத்தை கேள்வி பட்ட எல்லாருமே அப்படித்தான் யோசிப்பாங்க ஆதி… நாளைக்கு உங்களை கொண்டு போய் எங்க அம்மா முன்னாடி நிறுத்தினாலும் எங்க அம்மாவும் அத தான் சொல்லுவாங்க.. என்றாள் அவன் கண்ணை மாறி மாறி வெறுமையாய் பார்த்துக் கொண்டே…

 

ஆனா உண்மை அது இல்லையே டி… சேர்ந்து வாழ போற நம்ம ரெண்டு பேத்துக்கும் உண்மை தெரிஞ்சா போதாதா…

 

உங்களுடைய இத்தனை வருஷம் ஃப்ரெண்ட்ஷிப் என்னால் கேட்டுப் போச்சே… 

 

அது ஏதோ கோபத்தில் திட்டிட்டு போறான்டி நாளைக்கு வாங்குன அடியை கூட மறந்துட்டு வந்து என் முன்னாடி நிப்பான் பாரு… என்று மலரை சமாதானப்படுத்த… 

 

என்னால… நல்லா போய்கிட்டு இருக்கிற உங்க வாழ்க்கையை ஏன் குழப்பிக்கிறீங்க…

 

அவள் பேச்சைக் கேட்டு… ஆத்திரமானவன் 

So…  அதுக்கு என்ன பண்ணலாம்… சொல்லு…. என்று பல்லை கடித்தபடி கோவமாய் கேட்டான்…

 

அவன் கேட்ட தோரணையில் பயந்து எச்சில் கூட்டி விழுங்கியவள்.. நான்..  உங்களுக்கு வேணாமே… வேற…  நல்ல பொண்ணாப் … பா.. என்று அந்த வார்த்தையை முடிப்பதற்குள் அவளின் கண்ணாடி டேபிள் சில்லு சில்லாய் உடைந்து நொறுங்கியது…

 

இரு கைகளாலும் காதை பொத்தி கண்ணை இறுக மூடிக் கொண்டாள்… 

கண்ணை திறந்த போது அவள் பார்த்தது கண்ணாடி சில்களால் கையில் அடிபட்டு ரத்தம் வடிந்து கொண்டிருந்த ஆதியின் கையை தான்…

 

ஐயோ… தேவா… கையில எப்படி அடிபட்டு இருக்கு பாருங்க… இவ்வளவு ரத்தம் போகுது… வாங்க முதல்ல என்று அவன் கையைப் பிடித்து இழுக்க… அசைக்கக்கூட முடியவில்லை அவளால்… 

 

போயிருடி இங்கிருந்து போயிரு… நான் இப்படியே செத்துப் போறேன் நீ இந்த இடத்தை விட்டு போயிரு… என்று அவன் பல்லை கடித்த படி கூற…

 

ஐயோ… ப்ளீஸ்… ஏன் இப்படி பண்றீங்க… நான் சொன்னது தப்பு தான் மன்னிச்சிடுங்க… சாரி… இப்ப வாங்க… எதுனாலும் நம்ம அப்புறம் பேசிக்கலாம் ரத்தம் நிறைய போகுது… என்று பதறியவள்.. அவன் அசையாமல், அழுத்தமாய் இருப்பதை பார்த்ததும்…

 

ஓகே… என்னால தானே இந்த காயம்… அப்பா ஃபர்ஸ்ட் பனிஷ்மென்ட் எனக்கு தான் கொடுக்கணும்… என்று கூறிவிட்டு தனது காலணியை கழட்டியவள்… சிதறி கிடந்த கண்ணாடி சில்லின் மேல் ஏற முயன்றாள்…

அடுத்த நொடி காற்றில் மிதந்தாள்… அருகில் இருப்பவன் ஏற விட்டு விடுவானா அவன் கண்மணியை…. தூக்கி வந்து அவனின் தனிப்பட்ட அறையில் இறக்கி விட்டவன்… தனது கைகளை சிங்கில் குழாயை திறந்து விட்டு அதன் கீழ் காண்பிக்க நீர் செந்நீராய் மாறி ஓடியது…

 

அவனை இழுத்து வந்து படுக்கையில் அமர்ந்தவள்…  ஒவ்வொரு சில்லாய்… ஊப்ப்.. ஊப்ப்.. என்று ஊதியப்படியே… எடுத்து விட்டாள்… Anti செப்டிக் கிரீம் போட்டுவிட்டாள்… அவளைத்தான் பார்த்துக் கொண்டே இருந்தான் ஆதி… கடந்த கால நினைவுகள் ஆட்டிவித்தது..  ஹாஸ்பிடல் போகலாம் என்றாள்… அவள் இதழை பார்த்துக் கொண்டே ஒரு கையால் அவளது கழுத்தை சுற்றி பிடித்தவன்…

 

மே ஐ கிஸ் என்றான்.. 

 

இப்ப வா…

 

தோணுதே…

 

Take deep breath… என்று மூச்சை இழுத்து விட்டாள்…

 

இதழை கவ்வி கொண்டான்… நீண்ட நெடிய முத்தம்… ஒருத்தருக்கு ஒருத்தர் இதழ்கள் ஆறுதல் சொல்லிக் கொண்டன… பின் ஒன்றுக்கொன்று சளைக்காமல் சண்டை போட்டுக் கொண்டன…  “நான் வேணாமே” … என்று சொன்னதற்கு.. கீழ் இதழுக்கு தண்டனையும் கொடுக்கப்பட்டது பற்களால்… கோவத்தில் ஏறிய வெப்பத்தை எச்சில் தீர்த்தம் கொண்டு தனித்து கொண்டன… இதழ்கள் இசைத்த “சப்” என்ற இசை கோவத்தில் சுரந்த அட்ரீனல்  உற்பத்தி குறைந்து டோப்பமைனின் அளவு அதிகரித்து மூளையை புத்துணர்வு அடைய செய்தது.  

காதல்,  தவிப்பு, ஏக்கம், ஆசை, தண்டனை, என அனைத்தும் அடங்கி இருந்தது இந்த ஆழ்ந்த முத்தத்தில்…

முத்தம் முடியும் வேளையிலே இருவரின் மனமும் ஏதோ ஒரு வகையில் அமைதி அடைந்து இருந்தது.. 

 

இரவு வீட்டிற்கு சென்றவர்கள்… ஒருத்தருக்குள் இருந்த கவலையை மற்றவருக்கு தெரியாமல் மறைத்துக் கொண்டனர்..  சகஜமாய் பேசி உண்டு முடித்து தூங்க செல்ல..  உச்சி முகர்ந்து நெத்தியில் ஆழமாய் முத்தமிட்டு… கவலைப்படாமல் போய் தூங்கு எல்லா பிரச்சனையும் நான் பாத்துக்குறேன்… என்று கன்னம் தட்டி உறுதி கொடுத்து உறக்கத்திற்கு அனுப்பி வைத்தான் ஆதி… 

 

காலையில் குளித்து முடித்து புத்துணர்வாய் சேலையில் வீட்டைச் சுற்றி வலம் வந்தாள் பெண்… சுறுசுறுப்பாய் இயங்கினாள்… இன்று ஆதி இருந்த மனநிலையில் முத்த வேட்டையை பற்றி அவன் நினைக்கவில்லை… ஏதேதோ நினைவில் சுழன்று கொண்டு இருந்தான்… மலர்தான் அவன் முகத்தை வெறிக்க, வெறிக்க பார்த்தாள்…காலை டிபன் உண்டு முடித்து… மதிய உணவையும் ஹார்ட் பேக்கில் அடைத்துக் கொடுத்து விட்டாள்.. 

 

இது எதுக்கு…

 

பரவால்ல…. இன்னைக்கு எனக்கு புடிச்சது சமைச்சிருக்கேன் சாப்பிடுங்க என்றாள்… 

மறுப்பில்லாமல் அதை  எடுத்துக்கொண்டு… அலுவலகம் கிளம்பியவனை… அவள் குரல் தடுத்து நிறுத்தியது…

 

ஒரே நாள் ல என்னோட கிஸ் போர் அடிச்சுருச்சா உங்களுக்கு… என்றாள்… 

 

நீ என்ன மனநிலையில இருக்கன்னு தெரியாம உன்னை தொந்தரவு பண்ண வேணாம்னு நினைச்சேன் என்றான்…

 

அட்லீஸ்ட் ஒரு சென்ட் ஆப் கிஸ் கூட இல்லையா… என்று அவள் பாவமாய் கேட்க…

 

பாய்ந்து வந்து கட்டிக் கொண்டான்..  அவனுக்கும் அது தேவைதான்… அவளின் அணைப்பு அவளின் ஸ்பரிசம்… கண்கள் மெல்ல கலங்க அவள் முகத்தை இரு கைகளால் தாங்கி பார்த்தவன்… சாரி… அவன் அப்டி பேசிருக்க கூடாது… என்று கூறிய படியே…

 

நெத்தியில் முத்தமிட ஆரம்பித்தவன் கண்கள், கன்னம், மூக்கு, நாடி என முத்தமிட்டு கொண்டே இறுதியாக இதழில் முத்தம் மிட தொடங்கினான்.. ஆழ்ந்த முத்தம் தான்… ஆனால் இந்த முத்தம் அவனை கிறங்க செய்தது… எப்பொழுதும் அவனின் ஆளுமையின் கீழ் வரும் முத்தபோர்…  இந்தமுறை முத்தத்தில் அவளின் ஆளுமை அதிகமாக இருந்தது… ஆடவன் மெய் மறந்தான்… அழுத்தமும் வேகமும் கூடியது… எச்சில்கள் தெறித்தன… அவனின் பிடரி முடி சிலிர்த்துக்கொண்டு நின்றது…  கன்னியவள் கையோ சிலிர்த்த பிடரியை தன் கை கொண்டு அடக்க… அது அவனை மேலும் போதை கடலில் தள்ள… அவளைத் தூக்கி தன் இடுப்பில் வைத்தவன் முத்தமிட்டு கொண்டே  நடந்து சென்று சோபாவில் சாய்த்து தானும் மேலே சாய்ந்தான் .  முத்தம் மட்டும் நிற்கவில்லை..  காரிகையின் கையோ ஆடவனின் முதுகை அழுத்தி பிடிக்க… மலரின் ஒத்துழைப்பில் தேன் குடித்துக் கொண்டிருந்த வண்டு நாடியை தழுவி கழுத்திற்கு வந்தது… அவளின் புடைத்துக் கொண்டு இருந்த கழுத்து எலும்பில்… ஆழ்ந்த முத்தம் வைத்து மூக்கு உரச..  

ஹா… தேவா..  என்ற முணங்கள் வர…   அது ஆடவனை மாய உலகத்திற்கு இட்டு சென்றது… 

 

அவன் மூளை எதைப் பற்றியும் யோசிக்கவில்லை… அப்டி ஒரு மயக்கம்… அவள் கைகள் எதையும் தடுக்க வில்லை… சொல்ல போனால், அவனை கிறங்க வைக்கும் அத்துணை வேலைகளையும் அது செய்தது…

 

அவள் ஒத்துழைப்பில் திணறியவன், உடலின் வெப்பம் தாங்காமல் தனது மேல் சட்டையை கழட்டி எறிந்தான்…  இதழ்கள் எல்லை தாண்டி முத்தவேட்டை நடத்தியது…  மங்கை அவளோ கழுத்து நரம்பு விரிவடைய… தலையை நிமிர்த்தி கண்ணை மூடி  லயத்திருந்தாள்…  நெஞ்சுக்குழியில் வைக்கப்பட்ட முத்தத்திற்கு தண்டனையாய் அவன் பிடரி தன் நெஞ்சுடன் அழுத்தி பிடிக்க..  அதன் எதிர்வினையாய் கைகள் ரெண்டும் கலசங்களை களவாட… 

ஹக்.. அ… டோன்ட்… தேவா…. முயங்களின் நடுவே 

தேவியின் கால்கள் தேவனை பின்னிக்கொள்ள… மலரின் மொட்டுகளை முத்தம் வைத்து முத்தம் வைத்து மலர வைக்க எண்ணினானோ என்னவோ… அவள் மேலாடை முழுவதும் அவன் எச்சிலால் நனைந்தது… 

 

அதன் கீழ் ஊர்ந்து சென்ற அவன் இதழ்கள்… மன்னனை  மயக்கும் வெண்ணை இடுப்பில் தன் மீசையால் சிவக்க வைத்தவன்… இதழின் முத்தங்களால் பெண் அவளை கூச செய்து… மத்தியில் இருந்த நாபியை கண்டு நாடி நரம்பு புடைத்து நிற்க… நாபிக்குழியை முத்தம் வைத்தே எச்சிலால் நிரப்பினான்… இங்கயே வண்டு போதை மயக்கம் கொண்டு கிடக்க… கைகளோ நான் கீழே இறங்கி வரமாட்டேன் என்று அடம் பிடித்துக் கொண்டு இருக்க..  பெண்ணவளும் காதல் மயக்கத்தில் உடலை வளைத்து, நெளித்து துடிதுடித்துக் கொண்டு இருக்க…

 

அலைபேசியில் மீட்டிங்கிற்கான ரிமைண்டர் சத்தமாய் ஒலிக்க…   மாய வலை பாதியிலேயே அறுபட்டு நின்றது… 

 

சொர்க்கத்தில் இருந்தவனை திடீரென பூமியில் தள்ளி, பாலைவனத்தில் வந்து விழுந்தவன் போல் அப்பொழுதுதான் சுயநினைவுக்கு வந்தான் ஆடவன்… இருவர் இருக்கும் நிலை அப்பொழுதுதான் மூளைக்கு உரைத்தது…

கடவுளே என்ன பண்ண பார்த்தேன்.. என்று அவன் வேகமாய் விலகப் போக… 

 

மங்கை அவளோ… அவனது பிளாட்டினம் செய்னை கைகளால் பிடித்து இழுத்தாள்… இழுத்த வேகத்தில் அவள் மேல் பாரம் போடாமல் இரு பக்கம் கையை ஊன்றி மேலே விழுந்தான் ஆடவன்… 

 

என்னடி… ஏகத்துக்கும் கிறக்கம் வழிந்து ஓடியது அந்த சிங்க குரலில்.. 

 

எங்க போறீங்க… இப்படி பாதியிலேயே விட்டுட்டு… கேட்டாள்  ஹஸ்கி வாய்ஸில்…

 

ஏய்.. மீட்டிங் இருக்குடி… இருதலைக்கொள்ளியாய் தவித்தான் ஆடவன்…

 

அப்ப நான் வேணாமா… சிணுங்கினாள்…

 

அவள் கேட்ட தோரணையில் தாபம் தலைக்கேறியது.. அவள் இதழை பார்த்துக் கொண்டே எச்சில் கூட்டி விழுங்கியவன்.. வேணும்தான்… முழுசா வேணும்… ஆனா இப்ப இல்ல… 

 

ஆனா எனக்கு இப்பவே வேணும்… சமத்து பிள்ளையாய் இருந்தவள் இப்போது அடம் பிடித்தாள்…

 

இப்ப அப்படிதாண்டி தோணும்… கொஞ்ச நேரம் கழிச்சு தெளிவாக யோசித்துப் பார்த்தா… தப்பா தோணும்… ரொம்ப கில்டியா ஃபீல் பண்ணுவ… கற்பு போச்சி… கரப்பான் பூச்சின்னு புலம்பிட்டு இருப்ப…. தேவையா.. 

 

பீல் பண்ண மாட்டேன்..  புலம்ப மாட்டேன்… எடுத்துக்கோ… என்றாள்.. அவன் கூர்மூக்கை, குட்டி மூக்குடன் உரசிய படி…

 

எச்சில் விழுங்கியபடியே… நிஜமா எடுத்துக்கட்டுமா… என்று அவள் கண்ணை பார்த்து கேட்க… 

 

Take yourssss… என்று ஹஸ்கி வாய்ஸில், அவன் இதழை பார்த்து பதில் கூறினாள்…

 

சங்கு கழுத்தில் பாய்ந்து தனது லீலைகளை தொடங்க இருந்த வேளையில்… ரவியிடம் இருந்து அழைப்பு வந்தது… தொடர் அழைப்புகள்..  அவனால் சங்கமிக்க முடியவில்லை…

 

ஒரு நிமிஷம் பொறுடி வரேன்… என்று அவள் மேல் இருந்து எழுந்து போனை எடுத்துக் கொண்டு சென்றவன்.. ரவியிடம் ஐந்து நிமிடங்கள் பேசிவிட்டு.. முன்நெற்றியை தேய்த்துக் கொண்டே தயக்கமாய் அவளிடம் வந்தவன்..  அவளை தயங்கிய படி பார்க்க…

 

சோபாவில் எழுந்து அமர்ந்து ஆடைகளை சரி செய்து கொண்டிருந்தவள்… எனக்கும் அது எவ்வளவு முக்கியமான மீட்டிங்ன்னு தெரியும் தேவா..  நீங்க ஆபீஸ் போங்க என்றாள்.. 

 

சொல்லாமல் புரிந்து கொண்டவளை கன்னம் தாங்கி நெத்தியில் முத்தமிட்டவன்… சாரி… ஏமாத்திட்டனா?… என்று கேட்க…

 

சிறு புன்னகையுடன் இல்லை என்று தலையசைத்தவள்… என்னைக்கா இருந்தாலும் எனக்கு தானே… பொறுமையா முழுசா வாங்கிக்குறேன்… என்றவளை… உச்சந்தலையில் முத்தமிட்டு… தனது அறைக்கு நகன்று சென்றவன்…. 

மீண்டும் புத்துணர்வுடன் அலுவலகம் கிளம்பி வந்தான்… அங்கும் இங்கும் பரபரப்பாய் அலைபவனை அவளின் கண்கள் ஒரு நொடி கூட விடாமல் அவன் பின்னால் வட்டமடித்துக் கொண்டு இருந்தது…

 

கிளைன்ட் வெயிட் பண்ணிக்கிட்டு இருக்காங்க டா..  நான் முன்னாடி ஆபீஸ் போறேன் நீ சீக்கிரம் கிளம்பி வா..  என பெருமூச்சுடன் கூறிவிட்டு அவசரமாக கிளம்ப போனவனை… நிறுத்தி..  இதழில் அழுத்த முத்தம் வைத்து அனுப்பி வைத்தாள் பேதை.. 

 

இன்னைக்கு டை கட்டி விடல…

 

உங்களுக்கு பிடிக்காத விஷயத்தை எனக்காக பண்ண வேண்டாம் எப்போமே.  சர்ட் பட்டன் மட்டும் போட்டுட்டு போங்க போதும்… என்று அவளே பூட்டி விட்டாள்.. அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் பார்வையின் நோக்கம் மாற… 

 

இந்த வீணா போன மீட்டிங்க… நான் இன்னைக்கு தான் வைக்கணுமா… கொல்ற டி ராட்சஷி…  என்று புலம்பியபடியே… முதல் நாள் பள்ளிக்கு செல்லும் குழந்தை போல்…  போகவே மனம் இல்லாமல் திரும்பி திரும்பி பார்த்தபடி.. டாடா காண்பித்து… சீக்கிரம் கிளம்பி வா… என கூறி விட்டு..  கீழே உருண்டு விழுந்து அழுக மட்டும்தான் செய்யவில்லை…. கையெசைத்தபடி நின்றுந்தவளை கண்ணில் நிரப்பி கொண்டு, அலுவலகம் வந்து சேர்ந்தான் ஆதி.

 

அலுவலகத்தில் மீட்டிங் முடித்துவிட்டு விக்ரமை அழைத்து… தன்னை பற்றியும் மலரை பற்றியும் அவனுக்கு நடந்ததை எடுத்துக் கூறிக் கொண்டிருந்தான்… வாய் தான் அவனிடம் பேசிக் கொண்டு இருந்தது…

 

கை…  அவளுக்கு மெசேஜ் type செய்து கொண்டு இருந்தது…

 

எங்க இருக்க…

 

வீட்ல… 

 

(அவளின் உடனடி பதிலில் அவனின் முகத்தில் புன்னகை பரவியது..)

 

எப்போ வருவ…

 

ரெம்ப டயர்டா இருக்குப்பா… கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு afternoon மேல வாரேன்…

 

எதுக்கு டயர்டா இருக்கு…

 

குரங்கு ஓன்று கண்ணை மூடி வெட்கப்படும் எமோஜி ஒன்றை அனுப்பி வைத்தாள் 

 

இதைப் பார்த்து புரிந்து புன்னகைத்தபடியே விக்ரமிடம் முழு கதையையும் சொல்லிக் கொண்டிருந்தான் ஆதி… 

 

ஆதியின் முகத்தில் இருந்த புன்னகையை சொல்லியது… மலர் அவன் வாழ்வில் எவ்வளவு முக்கியம் என்று… விக்ரம் புரிந்து கொண்டான்..

 

இவர்கள் இங்கு பேசிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில்… பெங்களூர் செல்லும் பேருந்தில் மனதில் பாரத்துடன் பயணித்துக் கொண்டிருந்தாள் மலர்.

 

நாளைக்கு 3epi  போடுகிறேன் 

❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்.. 

      ஊக்கபடுத்த கருத்துகளையும் பகிருங்கள் .

      நன்றி!❤️

 

 

 

 

 

 

❤️ Loading reactions...
7 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top