அசுரன் 89

 அசுரன் 89

 

வீடு முழுதும் ஆட்கள் குழுமி இருக்க என்ன செய்வது என்று தெரியாமல் எப்படி சொல்வது என்றும் தெரியாமல் திருத்திருவென முழித்துக் கொண்டு தனது சேலையின் தலைப்பை கசிக்கிய படி, அன்னையை கண்டதும் எழுந்து நின்றாள் மலர்… 

 

வாம்மா மலர்… வாங்க மாப்ள… எப்ப வந்தீங்க… இப்பதான் வெளில கடைக்குப் போயிருந்தேன்..  ஏம்மா மலர், வரதுக்கு கொஞ்சம் முன்னாடி சொல்லிட்டு வர மாட்டியா ஏதாவது சாப்பிட செஞ்சு வச்சிருப்பேனே… பொறுங்க போய் மோர் எடுத்துட்டு வரேன் என்று கூறிவிட்டு சமையல் அறைக்குள் வாசுகி செல்லும் முன்…

 

இப்பதான் அத்தை வந்தோம்..  ஒன்னும் பிரச்சனை இல்ல அத்தை… நம்ம வீடு தானே… வரும்போது வழியில் சாப்பிட்டு வந்தோம்… இப்போ கவிப்பிரியா தண்ணி கொடுத்தாங்க குடிச்சோம் என்றான் தன்மையாக…

 

“வாங்க மாப்ள” என்று அழைத்ததில் அங்கேயே சுயநினைவு தப்பிவிட்டது மலருக்கு…

அம்மா!.. என்ன சொல்லிட்டு போறாங்க… அடையாளம் தெரியாம சொல்லிட்டு போறாங்களா?… இல்ல தெரிஞ்சி தான் சொல்லிட்டு போறாங்களா… அவ என்னமோ மாமாங்கிறா இவர் என்னமோ கவிபிரியா  என்கிறார்.. சகலையும் சகலையும் பேசிகிறாங்க… எதுவும் கற்பனை லோகத்தில் இருக்கோமா… என்று தனது கையை அழுத்தி கிள்ளி பார்த்தாள்…

 

வலித்தது ஸ் ஸ்… ஆ… ஆ… என்று தேய்த்து கொண்டாள்.

 

அவள்  செய்கைகளிலேயே அவள் என்ன நினைக்கிறாள் என்பதை புரிந்து கொண்டான் ஆதி.. அவளின் நிலை கண்டு வந்த சிரிப்பை இதழுக்குள் ஒளித்துக் கொண்டான்…

 

பெரியப்பா சித்தப்பா முறையில் இருந்தவர்கள்… திருவிழா சமய ஊருக்கு வந்துட்டு சாமி கும்பிடாமல் போகக்கூடாது… ரெண்டு நாள் இருந்த திருவிழாவை முடிச்சிட்டு கிளம்புங்க தம்பி… என்று அன்பு கட்டளை பிறப்பிக்க…

 

இல்ல நாங்க டிரஸ் எதுவும் எடுத்துட்டு வரல அதனால கிளம்புறோமே என்று மலர் சொல்ல போவதற்கு முன்…

 

அதான் நீங்க இத்தனை பேர் பெரியவங்க சொல்றீங்களே திருவிழாவை முடிச்சுட்டே போயிடுறோம் என்று குரல் கொடுத்தான் ஆதி…

 

அதிர்ச்சியில் எழுந்து நின்றவளை  இழுத்து தன் பக்கத்தில் அமர வைத்தவன்…

தாவணில பொண்ணுங்கள பாக்க அழகா தான் இருக்காங்க… என்னோட டேஸ்ட்டுக்கு கிராமத்தில் தான் பொண்ணுங்க இருப்பாங்க போல.. என்று அவன் தலையை கோதியப்படி அவள் காதுக்குள் கிசு கிசுபாக சொல்ல…..

 

அடுத்த வாரம் வர வேண்டிய அக்னி நட்சத்திரம்… இன்றே மலரின் முகத்தில் பிரதிபலித்தது…

 

அதை மேலும் அனலாக்க… 

 

ஹாய் மாம்ஸ் எப்படி இருக்கீங்க… என்று காரின் அருகில் பார்த்த  பெண்கள் ஆதியிடம் பேச வர…

 

ஹாய்… நான் நல்லா இருக்கேன்.. நீங்க… என்றான்…

 

ஹய்யோ… மாம்ஸ் உங்க குரல் அர்ஜுன் தாஸ் குரல் மாதிரியே இருக்கு… என்று அந்த இளம் பெண்கள் கூற…

 

நிஜமாவா என்றான் ஒன்றும் தெரியாதவன் போல்… இதுவரைக்கும் எனக்கு இப்படி ஒரு கிரெடிட் யாருமே கொடுத்ததில்லை… 

 

( ஒருவளுக்கு  முகம் அனலாய் தகித்தது போயி இப்பொழுது வயிறும் எரிந்தது )

 

அது இருக்கட்டும்… நீங்க எல்லாம் மலருக்கு யாரு? என்று கேட்டான் ஆதி…

 

நாங்கல்லாம் மலர் அக்காவோட சித்தி பொண்ணுங்க பெரியம்மா பொண்ணுங்க… உங்களோட மச்சினிச்சிங்க… 

 

ஆதி மெதுவாய் திரும்பி மலரை பார்க்க… அவள் ஒன்றும் அறியாதவள் போல் அந்த பக்கம் திரும்பிக் கொண்டாள்…

 

மாம்ஸ் உங்க பேர் என்ன என்று அவர்கள் கேட்க…

 

மலர் சிடுசிடுப்பாக… அதைக் கேட்டு இப்ப…  நீங்க என்னடி பண்ண போறீங்க… என்றாள் 

 

இங்க நிறைய மாமா இருக்காங்க..  அதனால பிரபு மாமா, முத்து மாமா ணு கூப்பிடறதுக்கு…

 

என்னோட பெயர் தே… என்ற ஆதி ஆரம்பிக்க.. 

 

அவரோட பேரு ஆதி போதுமா.. ஆதி மாமா என்று கூப்பிடுங்கள்..  என்று அவசரமாய் முடித்தாள், அந்த வார்த்தையை மலர்..

 

அப்பொழுது அந்தப் பக்கம் வந்த கவி பிரியா… ஆனா அக்கா நீ போன தடவ வரும்பொழுது மாமாவோட பேரு வேற என்னவோ சொன்னியே… என்று மலரிடம் கேட்க…

 

இல்லடி இந்த பேரு தான் சொன்னேன்… என்று சமாளித்தாள்…

 

இல்லக்கா எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு… ஏதோ தேவ் ஒ…. தேவாவோ..   சொன்ன…..

 

(முதல் முறை கவி வீட்டுக்கு போன  பொழுது உன் வீட்டுக்காரர் பெயர் என்னக்கா என்று கேட்க.. அருண் என்று சொல்ல விரும்பாததால்… தேவ் என்று கூறி இருப்பாள்)

 

என்னோட முழு பெயர் தேவாதித்யன்… உங்க அக்கா தேவானு தான் கூப்பிடுவா… அதனால அப்படி சொல்லி இருப்பா… என்று விளக்கம் கொடுத்து சந்தேகத்தை தீர்த்து வைத்தான். 

 

பேசிக் கொண்டிருந்த அவர்களை பெரியவர்கள் சாப்பிட அழைத்தார்கள்…. 

 

ஒரு நிமிஷம் இருங்க அம்மாகிட்ட பேசிட்டு வரேன்… கூறிவிட்டு எழுந்து சென்றாள் மலர்..

 

சமையல் அறைக்கு சென்று தனியே இருந்த வாசுகி இடம்… அம்மா அவரு என்று மலர் தயங்கியபடி ஆரம்பிக்க… தம்பிய உன்னோட ரூம்க்கு கூட்டிட்டு போ… அவர் அங்க தங்கிக்கட்டும்.. நீ என்னோட ரூம்ல வந்து தங்கிக்க… என்று கூறினார்…  

 

அவர் உங்களுக்கு யார்னு தெரியுமா?… 

 

சொந்தக்காரங்க எல்லாம் போகட்டும் ரெண்டு நாளுக்கு அப்புறம் பேசிக்குவோம்… போ போய் தம்பியை கவனி… என்று அனுப்பி வைத்தார் வாசுகி… அவளுக்கும் அதுவே சரியன பட்டது..  சொந்தக்காரர்களிடம் அரசல் புரசலாக ஏதாவது தெரிந்தாலும் அதை ஊதி பெரிதாக்கி விடுவார்கள்… என்று மேற்கொண்டு எதுவும் பேசாமல் அங்கிருந்து நகர்ந்து விட்டாள்…

 

ஆதியை தனது அறைக்கு அழைத்து சென்றாள் மலர்… 

 

என்ன தேவா நடக்குது இங்க… எனக்கு ஒண்ணுமே புரியல.. உங்க எல்லாருக்கும் உங்களை எப்படி தெரியும்… யாருமே என்கிட்ட எதுவுமே கேட்கலையே… என்று கேட்க…

 

சொல்றேன், ரெண்டு நாள் கழிச்சு  நம்ம வீட்டுக்கு போய் பேசிக்கலாம் டி… என்றான்.

 

சரி என்ன தலையசைத்தவள்…

 

இதுதான் என்னோட ரூம் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க… மாத்திக்க டிரஸ் என்ன பண்ணுவீங்க… 

 

கார்ல ரெண்டு மூணு டிரஸ் இருக்கு நான் யூஸ் பண்ணிக்கிறேன்.. என்றான்…

 

நீங்க ரெஃப்ரஷ் ஆயிட்டு வாங்க நான் வரேன் என்று கூறிவிட்டு சென்றவள் உணவு தட்டுடன் உள்ளே வந்தாள்..

எல்லார் கூடையும் சேர்ந்து உக்காந்து சாப்பிடுவோம் வா…

 

உங்களுக்கு கைல அடிபட்டு இருக்கேன்னு சித்தி தான் உள்ள போய் சாப்பாட ஊட்டி விட்டு வர சொன்னாங்க…

 

ஆஹா… இதுவல்லவா குடும்பம்… வாடா செல்லம்… வந்து இப்படி உக்காந்து ஊட்டி விடு… என்று அவன் தன் மடியை காட்டி அழைக்க… ஒரு சிறு செல்ல முறைப்புடன் அவன் எதிரே அமர்ந்து ஊட்டி விடலானாள்…

 

அது இருக்கட்டும் எதுக்கு என்னோட மச்சினிங்க கிட்ட என் பேரை சொல்ல விட மாட்டேங்குற…

 

அப்புறம் அவளுங்க தேவாமாமா-ன்னு கூப்பிடுவாளுங்க…

 

நல்லா தானே இருக்கு கூப்ட்டு போட்டுமே…

 

( பத்ரகாளியாய் மூன்று முறை ஸ்லொவ் மோஷனின் நிமிர்ந்து ஆதியை முறைத்தவள் )

 

எதுக்குடி முறைக்கிற நீதான் கூப்பிட மாட்டேங்குற.. ஆசையா அந்த பொண்ணுங்களாவது கூப்பிட்டு போட்டுமே…

 

எவ வாயிலையாவது தேவாமாமான்னு வந்துச்சு வாயை கிழிப்பேன்… என்று தனது சேலை முந்தியை உதறி இடுப்பில் சொருகி கொண்டாள்…

 

அடேங்கப்பா… பெரிய சண்டைக்காரி தான் போல… என்று மெச்சி கொண்டவன்…

நீ டிரஸ் சேஞ்ச் பண்ணலையா… என்று பேசிக்கொண்டே இரண்டு கைகளையும் தோதாக அவள் இடுப்பில் வைத்துக் கொண்டான்…

 

இங்க தூங்கும்போது தான், நைட் டிரஸ் போடுவேன்… கைய எடுங்க தேவா..  உங்களை யாரு ஆசையா மாமானு கூப்பிடறாங்களோ அங்க கொண்டு போய் வையுங்க.. என்று கூறிவிட்டு எழுந்து செல்ல முயன்றளிடம்… 

 

அதுக்குள்ள எங்கடி போற கொஞ்சூண்டு ஊட்டி விட்டு ஏமாத்த பார்க்கிறாயா…

 

மூணு இட்லி தான் சாப்பிடுவீங்க அஞ்சு இட்லி ஊட்டி விட்டு இருக்கேன் போதும்…

 

சரி நைட்டு பால் எடுத்துட்டு மாமா ரூமுக்கு வந்துரு..  என்று ஆதி வில்லங்கமாய் கூற…

 

வெட்கத்தை மறைத்து முறைப்பை பரிசளித்தவள்… 

 

இன்னைக்கு நைட்டு பொண்ணுங்க எல்லாம் சேர்ந்து மருதாணி வைப்போம்… அவ்வளவு சீக்கிரத்தில் தூங்க மாட்டோம்..  நிம்மதியா தூங்குங்க குட் நைட்.. எனக் கூறிவிட்டு அவனுக்கு தேவையானதை எல்லாம் எடுத்துக் கொடுத்துவிட்டு சென்றாள் மலர்.

 

அவள் இல்லாமல் புது இடத்தில் ஒன்றும் ஓடவில்லை ஆதிக்கு..  தூக்கம் வராமல் அங்குமிங்கும் அலைந்தவன் ஒரு கட்டத்தில்.. 

 

இரவு உடைக்குமாறி தோழிகள் கூட்டத்துடன் உட்கார்ந்து மருதாணி வைத்துக் கொண்டிருந்தவளை… உள்ளே வா என்னும் விதமாய் கண் ஜாடை காட்டினான்… 

 

மாட்டேன்…  சுத்தி எல்லாரும் இருக்காங்க வர முடியாது என்னும் விதமாய் அவள் கண்கள் அசைக்க…

 

நான் என்ன சொன்னாலும் கேட்பேன்னு ப்ராமிஸ் பண்ணி இருக்க… என்று அவன் கையில் சைகை செய்ய…

 

ஐயோ… என்று கண்களை சுழற்றியவள்..  நீங்க போங்க நான் வரேன் என்னும் விதமாய் கண்ணிலையே சொல்லி அனுப்பி வைத்தாள் கள்வனை.

 

கைகள் இரண்டையும் கரகரவென தேய்த்துக் கொண்டு சுறுசுறுப்பாக அங்கும் இங்கும் நடந்து கொண்டு இருந்தான் அறையில்… 

 

இரண்டு கைகளிலும் மருதாணியுடன் பதுங்கி பதுங்கி உள்ளே வந்தவளை… வாசலிலேயே இடுப்புடன் தூக்கி சுழற்றி நிறுத்தியவன் காலை பின்னால் நீட்டி ஒரு உதை உதைத்து கதவை அடைத்தான்… சுவரில் சாய்த்து நின்ற அவளின் இரு பக்கத்திலும் கைகளை அணை கொடுத்து நகர விடாமல் செய்தவன்…

 

என்னடி டிரஸ் இது…

 

எங்க வீட்ல இதுதான் நைட் டிரஸ்… மேலே ஒரு ஆண்கள் அணியும் சட்டையும் கீழே ஒரு பாவாடையும் அணிந்து இருந்தாள்… 

 

அவளை மேலிருந்து கீழ் வரை ஒரு பார்வை பார்த்தவன்… இதுவும் பாக்குறதுக்கு நல்லா கிளுகிளுப்பா தாண்டி இருக்கு… ஆமா… இது நேத்து நான் போட்டு இருந்த சட்டை தானே… என்று கேட்க…

 

கள்ள முழி முழித்தவள்… அது நான் தான் உங்க ஞாபகமா…  கூறியபடி தரையை பார்க்க…

 

ஏண்டி அழுக்கு சட்டைய எடுத்துட்டு வந்த…

 

அது உங்களுடைய இந்த வாசனை என்று அவள் கண்ணை மூடி முகத்தை பக்கவட்டாய் திருப்பி அவன் சட்டையில் இருந்த அவனது வாசனையை ஆழ்ந்து உள்ளே இழுக்க… உள்ளே சென்று வந்த அவள் மூச்சு காற்றில் முழுவதும் கலந்தது அவனது ஆண் வாசனை… 

 

அவள் செய்கையை ரசித்த ஆடவனின் உடல் சிலிர்த்து சூடேறியது…

 

என் வாசனையும், உன் வாசனையும் சேர்ந்த மாதிரி… நினைக்கும் போதே சும்மா ஜிவ்வுன்னு இருக்குடி … எனக் கூறிக்கொண்டே… முகத்தை அவள் தோளில் தேய்த்த படி சுவரில் இருந்த கைகள் மெல்ல ஊர்ந்து அவள் சட்டைக்குள் சென்றது…

என்னடி… உங்க வீட்டுக்கு வந்த உடனே என்ன கண்டுக்கவே மாட்டேங்குற… என்று குறைபட்டுக் கொண்டான் சிணுங்களாக..

 

என்ன கண்டுக்கல… இப்பதானே வந்து சாப்பாடு ஊட்டி விட்டு போனேன்… ஏன் இன்னும் ஏதாவது வேணுமா.. பசிக்குதா?.. என்று அவள் பச்சை புள்ளையாய் வினவ…

அவன் விரல்கள் இடுப்பில் ஊற கூச்சத்தில் மெல்ல நெளிந்தாள்… கையை எடுங்க தேவா… இப்பெல்லாம் நீங்க நல்ல பிள்ளையாவே நடந்துக்க மாட்டேங்கறீங்க என்று அவனைப் பற்றி அவனிடமே புகார் தெரிவிக்க…

 

பசிக்குது தான்… செம பசியில இருக்கேன்… இனிமேல் நல்ல பிள்ளையா எப்படி இருக்க முடியும்? சாப்பாடே பாக்காம ஒருத்தன் பல நாள் பட்டினி கிடக்க முடியும் டி… சோபால… தலை வாழை இலை விரிச்சு… அதுல முத்து முத்தா  தண்ணி தெளிச்சு… உதடு வரைக்கும் சாப்பாட கொண்டு வந்துட்டு… அதுக்கப்புறம் முழுசா சாப்பிட விடாமல் தடுத்தா… எப்படி இருக்கும்… என்றான்   கிறக்கமாக… 

 

சாதாரண பசி… கொலை பசி  ஆயிடும்… என்றாள் அப்பாவியாய்…

 

சிரித்து கொண்டே… கரெக்ட்… ஃபுல் மீல்ஸ் சாப்பிட முடியாமல் கொல பசியில இருக்கவன்… என்ன பண்ணுவான்…

கேட்டு கொண்டே அவன் கைவிரல் நின்ற இடம்… வயிற்றுசுழி… 

 

தேவா.. கைய எடு… ப்ளீஸ்… ஒருமாதிரி இருக்கு… என்றாள்.. உதடு கடித்து உடம்பெல்லாம் சிவந்தவள்… 

 

சொல்லு டி… என்ன்ன்ன பண்ணுவான்… என்று சுழியை கிள்ள..

 

ஹா.. ஸ்னாஆ…க்ஸ் ஏதாஆ …வது சாஆ..ப்பிட்டு  ஆஹ்…. ஜூஊ..ஸ் ஏதா…வது குடிச்சு பசியை கண்ட்ரோல் பண்ணிப்பான்.. என்று அவனின் ஒவ்வொரு தீண்டலுக்கும் தகுந்தபடி ராகம் இசைத்து ஏற்றி இறக்கி… திக்கி திணறி… ஒரு வழியாய் அவள் விளக்கம் அளிக்க…

 

அவள் வாய்யில் இருந்து வார்த்தை வந்த விதத்தை கண்டு ஆடவனின் உணர்வுகள் தறி கெட்டு ஓட… கைகள் மெல்ல மேலே ஏற.. தேவா டோன்ட் டூ திஸ்… என்று கூறவந்தவள்.. அவனின் இரு கைகள் சரியான இலக்கை அடைந்ததும் சுழல ஆரம்பிக்க… ஹக்… என துள்ளி எழுந்து… எக்கி கால் பெருவிரலில் நின்றாள் மங்கை… 

உணர்ச்சி பிழம்பாய் கண்கள் மூடி உதடு கடிக்கும் அவள் முக பாவனைகள் தான், அவனின் செய்கைகளை மிக சுவாரசியமாக்கின… இரண்டு கையிலும் மருதாணி இருந்தது… மங்கைக்கு பாதகமானது… மன்னவனுக்கு சாதகமானது…

அவள் உணர்ச்சியில் துடித்துக் கொண்டிருப்பதை பார்த்து கொண்டே… இதழில் முத்தமிட ஆரம்பிக்க… கடும் பசியில் இருப்பவனின் கைகள் சிற்றுண்டி( ஸ்னாக்ஸ் ) சாப்பிட்டு கொண்டிருக்க… இதழ்கள், இதழ் ரசத்தை பருகி இளமைபசியை தனித்து கொண்டிருந்தது… 

 

❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்.. 

      ஊக்கபடுத்த கருத்துகளையும் பகிருங்கள் .

      நன்றி!❤️

❤️ Loading reactions...
1 Comment
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top