அசுரன் 91
கழுத்தில் விழுந்த மாலையுடன் ஒன்றும் புரியாமல் அய்யர் கொடுத்த மாலையை கையில் வாங்கியவள் தன் பக்கத்தில் திரும்பி பார்க்க… பட்டு வேட்டி சகிதம்… ஆணழகின் மொத்த உருவமாய் புன்னகையுடன் அவள் நாயகன் நின்று இருந்தான்…
கல்யாண பொண்ணு.. என்ன ரொம்ப யோசிக்கிறீங்க…
மாப்பிள்ளைய பிடிக்கலையா!… என்று கூறி ஒற்றை கண்ணடிக்க…
என்ன சொல்வதென்றே புரியாமல் கண்கள் சிவந்து புன்னகைத்தவள்… அஞ்சு பிள்ளையோட அப்பாவ எப்படி கட்டிக்கிறதுனு யோசிக்கிறேன்.. என்றாள் கண் சிமிட்டி…
அத அந்த அஞ்சு பிள்ளைங்களோட அம்மாவே யோசிக்க கூடாது சிட்டு.. என்று அவன் கூறி, அவள் கன்னம் தட்ட…
அவள் அதிர்ச்சி அடையாமல் இருப்பதை பார்த்தவன்… நீதான் சிட்டுன்னு தெரியுமா என்றான்…
ஆம் என மேலும் கீழும் உணர்ச்சிபூர்வமாய் தலையசைத்தாள் மங்கை…
எப்படி… யார் சொன்ன? இரு புருவங்களை உயர்த்தி ஆச்சரியமாய் கேட்டான்…
படிக்கிறவர்களுக்கே தெரியும் பொழுது… கூட வாழறவளுக்கு தெரியாதா… சில விஷயங்கள் சொல்லி தெரிஞ்சுக்கிறது இல்ல… உணரணும்…
என்ன உணர்ந்தவ தான் விட்டுட்டு போக பார்த்தாளா…
ஹா க.. என்ன ஒரு குறு சிரிப்பு சிரித்துவிட்டு… இதெல்லாம் எப்ப பண்ணீங்க… என்றாள் தழுதழுத்த குரலில்…
வீட்ல போய் சொல்றேன்…
எனக்காகவா?…
நமக்காக டி.. என்றான் அழுத்தமாய்…
கிரேட் பிஸ்னஸ் மேன் ஆதியோட கல்யாணம் இப்படித்தான் கோவில்ல சிம்பிளா நடக்கிறதா?…
எங்க நடந்தா என்ன… யார் கூட நடக்குதுன்றதுல தான் சந்தோஷமே அடங்கி இருக்கு…
உங்களுக்குனு எந்த ஆசையும் இல்லையா…
அவளை ஒரு கணம் ஆழ்ந்து பார்த்தவன்… என்னோட ஒட்டு மொத்த ஆசையும் நீ தான்மா… என்றான்.
இதைக் கேட்டு அவளுக்கு அழுகை பீறிட்டு வந்தது… சுற்றுப்புறத்தை உணர்ந்து அடக்கி கொண்டாள்…
என்னப்பா பேசிகிட்டே இருக்க போறீங்களா… சட்டு புட்டுனு கல்யாணத்தை பண்ணுங்க… என்று ஒரு பெரியவர் குரல் கொடுக்க…
மனம் எல்லாம் பூரிப்புடன்… முகம் எல்லாம் புன்னகையுடன்… கண்கள் கலங்க… தேவாவின் கழுத்தில் மாலையை போட்டாள் மலர்…
அம்மன் சன்னதியில் வைத்து தாலியை எடுத்துக் கொண்டு வந்து… மணமக்களின் முன்னே வந்து… பையன் சைடுல இருந்து யார் வந்து தாலி எடுத்து கொடுக்க போறது என்று ஐயர் கேட்க…
என் பையனுக்கு நான் தான் எடுத்து கொடுப்பேன் குடுங்க.. என்று தாலியை எடுத்து அம்மனை பார்த்து கையை தூக்கி வணங்கி மனமாற வாழ்த்தி… தேவாவின் கையில் கொடுத்தார் சக்கரவர்த்தி…
தாலியை கையில் வாங்கும் பொழுது… ஆடவனின் உணர்ச்சி பெருக்குகோ அளவே இல்லை… கைகள் கூட மெல்ல நடுங்கியது… கண்கள் கலங்க… காது மூக்கெல்லாம் சிவக்க… தாலியை வாங்கி தன் உயிரானவளின் கழுத்தில் கட்டினான்… தேவா…
மூணாவது முடிச்சு நாத்தனார் போடணும் என்று ஐயர் சொல்ல… நான் இங்கதான் காத்துட்டு இருக்கேன்… என்று கூறி விட்டு, அண்ணா குடுங்க… என்று வாங்கி மூன்றாவது முடிச்சை இட்டு தனது உரிமையை நிலைநாட்டினாள் அகல்யா…
வாசுகி, கவி, பிரபு, கனகவல்லி ரங்கசாமி, இன்னும் சுற்றி இருந்த அனைத்து சொந்த பந்தங்கள் மட்டும் இல்லாமல் திருவிழாவிற்கு என்று வந்த மொத்த கூட்டமும் அவர்களை அச்சதை தூவி ஆசிர்வாதம் செய்தது..
மலரவள் கண்ணில் இருந்து… ஆனந்த கண்ணீர் தாறுமாறாய் வழிந்தது… அதை வாசுகி பார்த்து ஆச்சரியப்பட்டார்…
தாலி கட்டி முடியும் வரையில் தன்னவன் முகத்தைத் தான் கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் மங்கை. எங்கே கண்ணிமைக்கும் நொடியில் இது கனவாய் மாறிவிடுமோ என்ற பயம்… அவளைப் பார்த்து கண்சிமிட்டினான் கள்வன்.
இருவரும், உணர்ச்சி குவியல்களின் மொத்த உருவமாய் இருந்தனர்.
அப்படியே நெத்தியில ஒரு கிஸ் பண்ணுங்க… என்று கூறியவன் ராஜேஷ்… தனது iphone-ல் புகைப்படங்களாக எடுத்து தள்ளினான் இந்த உணர்ச்சிமிக்க காதல் காட்சியையும்… இந்த திருமணம் முழுவதும் கைதேர்ந்த புகைப்பட கலைஞர்களால் போட்டோ மட்டும் வீடியோ பதிவு செய்யப்பட்டது…
கன்னம் ஏந்தி நெற்றியில் அழுத்த ஒரு முத்தமிட்டான்… இதயம் தொட்டு ஒரு ஆத்மார்த்தமான முத்தம். அக்கணம் அவன் கண்ணிலும் கண்ணீர் வழிந்தது…
அவளின் நெற்றி முட்டி ”Feeling complete as a Mr.தேன்மலர் .” என்று அவன் உணர்வு பூர்வமாய் கூற…
அவன் கண்களையே ஆழ்ந்து பார்த்தவள்… ” I am speechless, Proud to be Mrs.தேவாதித்யன்.” என்று அவன் நெத்தியிலும் முத்தமிட்டாள்..
அங்கிருந்த இளம் பெண்கள் ஆண்கள் அனைவரும் இப்படி ஒரு காதலா என்று… கண்ணில் நீர் கசிய… பார்த்துக் கொண்டிருந்தனர்…
குங்குமத்தை கொடுத்து மங்கையின் நெற்றியில் வைக்க சொன்னார் ஐயர். அவள் நூதலிலும், தாலியிலும் வைத்து விட்டான்.
இருவரும் மாலை மாற்றி கொண்டனர்…
இருவரின் ஆடைகளும் முடிச்சிட பட்டு.. கோபுரத்தை சுற்றி வந்தனர்… வலம் வரும்போது… கவி பிரியாவின் பெண் குழந்தையை வாங்கி கையில் வைத்துக் கொண்டான் ஆதி… ஒரு பூரணமான தருணம்..
மணப்பெண்ணின் காலில் மெட்டி போட சொல்ல.. ஒரு காலை மடக்கி அமர்ந்தவன் அம்மியில் வைத்திருந்த அவள் காலை எடுத்து தனது தொடையில் வைத்து… தன் விரலால் அவள் பாதங்களை கள்ள தனமாய் வருடி விட்டு… அந்த குட்டி விரலில்… அவன் ஆசையாய் வாங்கிய முத்து வைத்த மெட்டியை அணிவித்தான்….
மாப்பிள்ளைக்கு மெட்டி போடணும்… பொண்ணோட அண்ணன், தம்பிய வர சொல்லுங்க என்று அழைக்க…
இங்கதான் நிக்கிறேன்… என்று மலரின் பின்னால் இருந்து வந்தான் விக்ரம்…
கீழே அமர்ந்து, ஆதியின் கால்களை பிடித்து தான் வாங்கி வந்த மாப்பிள்ளை மெட்டியை அணிவித்தான்…
மணமக்கள் இருவரும் அருந்ததியை பார்க்க அழைத்துச் சென்றார்கள்…
மேல வானத்துல கை நீட்டி அருந்ததிய பாருங்கோ… என்று ஐயர் கூற…
இருவருக்கும் வெயிலில் ஒன்றும் தெரியவில்லை… திருதிருவன விழித்தனர்…
ஒரு நிலாவே நட்சத்திரத்தை பார்க்கிறதே அடடே ஆச்சரிய குறி என்றான் ராஜேஷ்…
இந்த வெயில விட உன்னோட மொக்க கவிதை தான்டா எங்களுக்கு வறுத்து எடுக்குது… என்று விக்ரம் கூற
அனைவரும் புன்னகைக்க…
மலரின் காதருகில் வந்த ராஜேஷ்… நான்தான் அன்னைக்கே சொன்னேனே… இந்த நிலாவுக்கு பின்னாடி அந்த சூரியன்… (ஆதியின் பக்கம் கண்ணை காட்டினான் ) எப்பவுமே இருக்கும் அதுவரைக்கும் இந்த நிலா பிரகாசமா இருக்கும்ன்னு… என்று கூறி அவன் கண் சிமிட்ட…
என்ன சொல்ற… என்பது போல் அதிர்ந்து விழித்தாள் மலர்… எதையோ நினைத்தவள் கண்ணில் இருந்து ஒரு துளி நீர் வடிய…
மலரின் கண்ணீரை பார்த்த விக்ரம்…
ஏம்மா அழுகுற மாப்பிள பிடிக்கலைன்னா சொல்லு… அண்ணே.. உனக்கு வேற நல்ல மாப்பிள்ளையா பார்க்கிறேன்… என்று கேலி பேச…
சிரித்தபடி ஆதியின் கையை இறுக்கி பிடித்தாள் மலர்…
அப்போ உன்னோட தங்கச்சிய எனக்கு கட்டி கொடுக்க மாட்டியா டா… மச்சான் என்றான் ஆதி.
Code wordஐ புரிந்து கொண்டவன்… யோசனையுடனே விழி விரித்தவன் டேய் மச்சான்… அத இன்னும் நீ ஞாபகம் வச்சிருக்கியாடா? என்னை மண்ட காய விட்ட பாரு… மறக்க மாட்டேன்… என்று ஆதியின் வயிற்றில் குத்தினான் விக்ரம்.
எப்டியோ…மச்சான், உன் தங்கச்சியை எனக்கு கட்டி கொடுத்ததுக்கு, என் தங்கச்சிய உனக்கு கட்டிக் கொடுத்து பழி வாங்கிவிட்டேன் டா நானு… என்றான் நெஞ்சில் கை வைத்து சிரித்தபடி..
பாவம் இடுப்பில் கைவைத்து முறைத்த அகல்யாவை பார்க்கவில்லை… அவன்.
தேவா- மலர் திருமணத்தை முன்னிட்டு, ஊர் மக்கள் அனைவருக்கும் திருமண விருந்து பரிமாறப்பட்டது… வேட்டி சேலையுடன் தாம்பூல பை கொடுக்கப்பட்டது… திருவிழாவின் மொத்த செலவையும்… ஆதி ஏற்றுக் கொண்டான்….
அவர்களுக்கு என சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு ஆதிக்கு பரிவட்டம் கட்டி முதல் மரியாதை கொடுக்கப்பட்டது…
ஆதியின் மச்சினிச்சிகளின் கூட்டத்தை பார்த்த விக்ரம்.. டேய் மச்சான்… சிட்டிலயே வாழ்ந்து வாழ்க்கை தொலச்சுட்டோம் போல டா… இந்த பக்கம் வந்து பார்த்து இருக்கலாம்… என்று புலம்ப…
அவன் புலம்பிக் கொண்டிருந்த இடத்திற்கு அகல்யாவை கொண்டு வந்து நிறுத்தினான் ராஜேஷ்…
“இந்தப் பக்கம் வந்து பார்த்து இருந்தா என்ன பண்ணி இருப்ப விக்கி” என்றாள் அகல்யா…
அவள் குரலை கேட்டு திடுக்கிட்டவன்… வேற என்னமா பண்ணி இருப்பேன் ஒரு ரெண்டு மூணு ஏக்கர் வாங்கி போட்டு இருப்பேன் அவ்வளவுதான்… பாரு கிராமமே பார்க்க குளு குளுனு இருக்கு… என்று பச்சையாய் சமாளித்தான்…
அப்ப இதெல்லாம் என்ன என்று.. சுற்றி இருந்த இளம் பெண்களின் கூட்டத்தை கண்ணால் காண்பிக்க… இவங்க எல்லாம் உன்னோட அண்ணனோட மச்சினிச்சிங்க… அப்ப எனக்கு தங்கச்சிங்க… சும்மா பேசிகிட்டு இருந்தேன் மா… என்றான் வடிவேல் பாணியில்…
அவர்களைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்த ஆதியை கட்டி அணைத்தார் சக்கரவர்த்தி… உண்மையிலே உனக்கு நானும் நன்றி கடன் பட்டு இருக்கேன் ஆதி… ஒரு பொண்ணோட வாழ்க்கையை கெடுத்து குட்டிச்சுவர் ஆக்கிட்டோமே அப்படின்னு மனசுக்குள்ள குற்ற உணர்ச்சியில் தவிச்சுக்கிட்டு இருந்தேன்… உன்னால அதுக்கு ஒரு விமோசனம் வந்திருக்கு… என் வாழ்க்கை அனுபவத்துல சொல்றேன் மலர் ரொம்ப நல்ல பொண்ணு உன்ன ரொம்ப நல்லா பாத்துப்பா… என்று அவர் கண்கள் கலங்க… கட்டியணைத்துக் கொண்டான் ஆதி.
இங்கு நடந்த அனைத்து நிகழ்வுகளும் அருண் அனுப்பிய ஒற்றன் மூலம் வீடியோவாக லைவ் டெலிகாஸ்ட் பண்ணப்பட்டது…
தாறுமாறான குடியில் ஒன்று விடாமல் பார்த்து கண்கள் சிவந்து கொண்டிருந்தான் அருண். நா இல்லாம எல்லாரும் ரொம்ப சந்தோசமா இருக்கீங்க போல… என்று சொல்லி கொண்டே தானாக சிரித்து கொண்டான்…
மணமக்கள் கவிப்பிரியாவின் வீட்டிற்கு சென்று… பாலும் பழமும் சாப்பிட அனுப்பி வைக்கப்பட்டார்கள்… திருமணம் முடிந்து எங்கள் வீட்டிற்கு தான் வர வேண்டும் என்பது கனகவள்ளியின் அன்பு கட்டளை . அதனால் அதை மீற முடியவில்லை… வீட்டிற்குள் நுழைய போகும் மணமக்களை கையில் குழந்தையுடன் ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்தால் கவிப்பிரியா…
மாமா ஆரத்தி தட்டுல காசு போடுங்க.. இந்த தடவை ஆயிரம் ரூபாய் கொடுத்தா நான் வாங்க மாட்டேன் எனக்கு நிறைய வேணும் என்றாள் கவி…
சிரித்துக் கொண்டே, விக்ரமிடம் ஒரு நகை பெட்டியை வாங்கி அதிலிருந்து தங்கசெயினை எடுத்து குட்டிப் பாப்பாவின் கழுத்தில் போட்டு விட்டான்…
அதை கண்டு சந்தோஷத்தில் அதிர்ந்தாள் கவி.. தேங்க்ஸ் மாமா…
உங்க அக்காக்கு சொல்லு அத… அவதான் தேடி தேடி வாங்குனா… உன்னோட குழந்தைக்கு, உங்க அக்காவோட கிஃப்ட் என்றான்.
ஆரத்தி தட்டை அருகில் இருந்த பெண்ணிடம் கொடுத்து அனுப்பியவள் தனது அக்காவை கட்டிக் கொண்டாள்,தேங்க்ஸ் அக்கா…
மணமக்களை உள்ளே அழைத்து சோபாவில் அமர வைத்தனர்…
பாப்பா க்கு நகை எப்போ வாங்குனீங்க… இன்னும் என்ன என்ன எல்லாம் பண்ணி இருக்கீங்க.. எத்தனை தடவை என்னை அழுக வைக்க போறீங்க… என்று அவனிடம் கிசுகிசுக்க…
ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் 20 முத்தம்ன்னு கணக்கு வச்சு, வட்டியும் முதலும் சேர்த்து மொத்தமா வாங்கிக்கிறேன்… என்றான்.
மணமக்களுக்கு பாலும் பழமும் கொடுக்கப்பட்டது…
என்ன தம்பி நீங்க ஆசைப்பட்டபடி கல்யாணம் முடிஞ்சதா என்றார் ரங்கசாமி…
முன்னாடி இருந்து எல்லாம் நல்லபடியா முடிச்சு கொடுத்தீங்க ரொம்ப நன்றிங்க என்றான் ஆதி…
இவங்கள கூட உங்களுக்கு தெரியுமா என்று கேட்டாள் ஆதியிடம் கிசுகிப்பாக…
இப்பதான் இந்தப் புள்ளையோட முகத்தை பார்க்குறதுக்கே நிறைவா இருக்கு… அன்னைக்கு வந்தப்ப இருளடிஞ்சு போய் இருந்துச்சு… எதுக்காக அப்படி ஒரு கல்யாணம் பண்ணனும்… கஷ்டப்படணும்… பெரியவங்கள சொந்த பந்தத்தை மதிக்க வேணாமா… என்று கனகவல்லி மனதில் இருந்ததை சொல்லிக் கொண்டே செல்ல…
என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் திரு திருவென முழித்துக் கொண்டு இருந்தாள் மலர்.
❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்..
ஊக்கபடுத்த கருத்துகளையும் பகிருங்கள் .
நன்றி!❤️