அசுரன் 97

அசுரன் 97

 

ஒரு வாரமும்… பல காரணங்களை கூறி மலர் ஆதியை நெருங்க விடவில்லை… அவளுக்கு என்று நேரம் கொடுக்க விரும்பியவன்…

 

இன்று விடாப்பிடியாக நின்றான்….. 

இதுக்கு மேல என்னால பொறுக்க முடியாது… என்னை நீ ரொம்ப சோதிக்கிற டி… இன்னைக்கு இதுக்கு ஒரு முடிவு தெரிஞ்சே ஆகணும்…

என்று கையில் இருந்த பைலை தூக்கி எறிந்தான்…

 

ப்ளீஸ் தேவா… இப்படி எல்லாம் பண்ணாதீங்க?” உங்கள பாக்கவே எனக்கு பயமா இருக்கு…

 

வேற எப்படி பண்ண சொல்ற..  என்னோட பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு…

 

கொஞ்ச நாள் போகட்டுமே…

 

புரிஞ்சுக்கடி, என்னால என்ன கண்ட்ரோல் பண்ண முடியல…

 

நான் உங்கள ரொம்ப நல்லவர்னு நினைச்சேன்…

 

நல்லவனா இருக்க விட மாட்ட போல…

 

என்று ஆரம்பித்து… இருவரும் ஒருவருக்கொருவர் வாக்குவாதம் செய்து… 

 

மூச்சிரைக்க…. அப்ப இதுக்காக தான் என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டிங்களா… என்று கோபத்தில் மலர் கேட்க…

 

அந்த வார்த்தையை கேட்டவன் 

ஆமாம் னு சொன்னா என்னடி பண்ணுவ… என்று கேட்டுவிட்டு..

கோபத்தில்  அங்கிருந்த பூ ஜாடியை கைகளால் உடைத்து விட்டு காயத்துடன் ஆதி வெளியேற…

 

நீங்க என்ன பண்ணிட்டு போறீங்கன்னு உங்களுக்கே தெரியுதா… ஐ ஹேட் யூ என்று கத்தினாள் மலர்.

 

திரும்பி பார்த்தவன்..  தேங்க்யூ என்று கூறிவிட்டு, இப்ப என்னோட பீலிங் எப்படி இருக்குன்னு உனக்கு புரிஞ்சிருக்கும் என்று கூறிவிட்டு சென்று விட்டான்… 

 

காயத்துடனே அலுவலகம் சென்றான்.

 

இன்று அலுவலகத்தில்… மால் கன்ஸ்ட்ரக்ஷன்… ரெக்வெயர்மென்ட் அண்ட் டெவலப்மெண்ட் மீட்டிங் இருந்தது… மால் ஓனர்கள் வர வைக்கப்பட்டிருந்தார்கள்..  கன்ஸ்ட்ரக்ஷன் சார்பில் அருணும் ஆதியும் கலந்து கொண்டார்கள்… மீட்டிங் ஆதியின் அலுவலகத்தில் தான் நடந்தது… சொல்லப்போனால் இந்த மீட்டிங்கை ஏற்பாடு செய்ததே ஆதி தான்… அதிமுக்கிய மால் உரிமையாளர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்து இருந்தான்… வந்ததிலிருந்து ஆதியின் முகத்தை கூட அருண் பார்க்கவில்லை… ஆனால் அருனின் முகத்தை ஆதி ஆராய்ந்து கொண்டு தான் இருந்தான்… ஏதோ சரி இல்லை என்று புரிந்து கொண்டான்… 

 

மிக முக்கியமான முடிவுகள் மற்றும் பேச்சுவார்த்தைகள் நடந்து முடிய… 

 

சிறிது ரிலாக்சேஷனாக காமெடியாக பேச ஆரம்பித்தனர்… மதிய உணவில் ஆரம்பித்த அவர்களின் பேச்சு வார்த்தை… மனைவியின் சமையலில் வந்து நின்றது… ஒவ்வொருத்தரும் அவரவர் வீட்டில் நடந்த சமையல் சொதப்பல்களை கூறி சிரித்துக் கொண்டிருந்தனர்…

அப்பொழுது சரியாக ஒரு வயதான நபர் ஒருவருக்கு அவருடைய மனைவியை அழைத்து இருந்தார்…

சரியான நேரத்திற்கு உணவு அருந்துமாறு அறிவுறுத்திவிட்டு ஃபோனை வைத்தார்… 

 

இப்பொழுது அனைவரின் பேச்சும் மனைவியின் அக்கறை மேல் சென்றது… 

நிஜமாவே நீங்க கொடுத்து வச்சவங்க சார்… இத்தனை வருடத்திற்கு அப்புறமும் உங்களுக்கு போன் பண்ணி சரியான டயத்துக்கு சாப்பிட சொல்றாங்க ரொம்ப அக்கறையான மனைவி கிடைச்சிருக்காங்க… இது மாதிரி எத்தனை பேருக்கு கிடைப்பாங்க… ரியலி யூ ஆர் வெரி லக்கி… என்று ஒருவர் புகழ்ந்து தள்ள.. 

 

கூட்டத்தில் இருந்த மற்றவர்களும் தங்களது மனைவிகளை விட்டுக் கொடுக்க எண்ணாமல் எங்களுடைய மனைவியும் இப்ப போன் பண்ணுவாங்க பாருங்க. வி ஆர் ஆல்சோ லக்கி… என்று அவரவர் மனைவிக்கு முட்டுக் கொடுக்க…

 

ஓஹோ…  அப்படியா… அப்ப சரி… இத கொஞ்சம் இன்ட்ரஸ்டிங்கா மாத்தலாம்….

 

எல்லாரோட மொபைலையும் டேபிள் எல்லாம் வைங்க… யார் யாரோட மனைவி எல்லாம் இப்ப கால் பண்ணி லஞ்ச் சாப்பிட்டீங்களா அப்படின்னு விசாரிக்கிறார்கள் என்று பார்ப்போம்… என்று ஒருவர் கூற…

 

சிலர் அதை வேணாம் என்று மறுக்க சிலர் அதற்கு ஒத்துக் கொண்டார்கள்…

 

உங்க மனைவி மேல நம்பிக்கை இருக்கவங்க வைங்க என்று சொல்ல அதற்கு மேலும் மறுக்க முடியுமா…

 

அனைவரும் டேபிளில் வைத்தார்கள்…

 

இன்னும் சிங்கிளாக இருப்பவர்கள் போட்டியில் கலந்து கொள்ளவில்லை…

 

ஒருத்தர் மாத்தி ஒருத்தருக்கு ஒரு வகையில் வீட்டிலிருந்து போன் வந்தது… 

 

மீதம் இருந்தது அருணும் ஆதியும் மற்றும் இரண்டு பேர் தான்..

 

இறுதியாக ரதியிடம் இருந்து அருணுக்கு போன் வந்தது… லஞ்சுக்கு வெளியே போகலாமா என்று கூப்பிட்டாள் ரதி… வேலை இருப்பதாக மறுத்து விட்டான் அருண்.

 

ஆதிக்கு போன் வராததால்… அவனின் முகத்தை தான் அருண் பார்த்துக் கொண்டிருந்தான்…

 

ஆதி காலையில் நடந்த நிகழ்வை பற்றிய சிந்தனையில் இருந்தான்.

 

எல்லோரும் போட்டியை முடித்துவிட்டு மதிய உணவு வேலைக்கு கிளம்பலாம் தோற்றவர்கள் தான் மற்ற அனைவருக்கும் சேர்த்து பில் கட்ட வேண்டும் என்று முடிவு செய்து இருந்தார்கள்… அதனால் எல்லோரும் எழுந்து போக முற்பட… ரவி உள்ளே வந்தார்.. “சார் உங்களுக்கு  மலர் மேடம் சாப்பாடு கொண்டு வந்து இருக்காங்க… உங்களோட ரூம்ல வெயிட் பண்ணிட்டு இருக்காங்க ” என்று கூறிவிட்டு செல்ல… 

 

சுற்றி இருந்தவர்கள்… “வாவ் இட்ஸ் ரியலி சர்ப்ரைஸ்…”  எல்லாருக்கும் போன் கால் தான் வந்தது… உங்களுக்கு ஆள் நேரிலேயே வந்துட்டாங்களே…  அமேசிங் கப்புள்.. என்று பாராட்டி விட்டு சென்றனர்..

 

ஆதி சாப்பிட சென்றான்.. 

 

அங்கே ஏற்கனவே விக்ரம் அவனுக்காக காத்துக் கொண்டு இருந்தான்… 

 

அறைக்குள் நுழைந்த ஆதி விக்ரமை பார்த்தவுடன்… வாடா… சாப்பிடலாம்… மீட்டிங் ஹால் ல மூஞ்சிய தூக்கி வச்சுக்கிட்டு அவன் உக்காந்து இருக்கான்… போய் கூட்டு வா… சாப்பிடலாம்… என்று விக்ரமை அனுப்பி வைத்தான் ஆதி.

 

வரவே மாட்டேன் என்று அடம் பிடித்த அருணை… அழைத்து வந்து, இருவருக்கும்  சாப்பாடு பரிமாறினர்… ஆதியும் மலரும்…

 

சாப்பாடு எடுத்து ஒரு வாய் வைத்ததும்… விக்ரமிற்கு கண்கள் கலங்கியது… 

 

என்னாச்சுடா காரமா இருக்கா என்றான் ஆதி.

 

இல்லடா மச்சான் என்று தலையசைத்தவன்…

 

உனக்கு ஒன்னு தெரியுமா மலர்… பொதுவா பசங்க காலேஜ் ஹாஸ்டல்ல தங்கி படிக்கும்போது… என்னதான் வெரைட்டி வெரைட்டியா சாப்பாடு சாப்பிட்டாலும்… நம்ம வீட்டுக்கு வந்து ஒரு வாய் சாப்பாடு சாப்பிடும்போது… அந்த டேஸ்ட்ல ஒரு உணர்வு இருக்கும்… இது நம்ம வீட்டு சாப்பாடு… நம்ம அம்மாவோட கை ருசி இருக்கும்.. அது ஒரு ரசம் சாப்பாடாவே இருந்தாலும் ஒரு நிம்மதி இருக்கும்… ஆனா அத நாங்க மூணு பேருமே பீல் பண்ணதே கிடையாது… எங்க வீட்டு சாப்பாடுன்னு ஒரு உணர்வே கிடையாது… ஆதிக்கு அம்மா இல்ல… எங்க வீட்ல இருந்தாலும் அவங்க சமைக்க மாட்டாங்க… மாறி மாறி வேலைக்காரங்க தான் சமைப்பாங்க… அதனால அந்த மாதிரி ஒரு ஃபீல் நாங்க பீல் பண்ணதே இல்ல…. ஆனா இப்போ… ரொம்ப நாளைக்கு அப்புறம் உன் கையால சாப்பிடும் போது… ஐ… நம்ம வீட்டு சாப்பாடு அப்படின்னு ஒரு ஃபீல்… இத்தனை நாள் தொலச்ச ஏதோ ஒன்னு கிடைச்ச நிம்மதி… தேங்க்ஸ் டா மலர்… என்றான் விக்ரம்.

 

அவனை இலகுவாக்கும் பொருட்டு, வறுவல் வேணும்னா கேட்டு வாங்கி சாப்பிடுடா… அதுக்கு எதுக்கு இவ்ளோ பெரிய டயலாக் பேசுற… என்றான் ஆதி.

 

அருண் எதுவும் பேசவில்லை அமைதியாக சாப்பிட்டான்… 

 

நீயும் உட்காரு ஆதி சாப்பிடலாம்…

 

அண்ணா அது வந்து… நீங்க சாப்பிட்டு போங்கனா..  அவர் அடுத்து சாப்பிடுவாரு… என்று மலர் சொல்ல…

 

ஏம்மா அவனுக்கு மட்டும் ஏதாவது ஸ்பெஷல் ஐட்டம் சமைச்சு எடுத்துட்டு வந்து இருக்கியா…

 

இல்லண்னா… அது வந்து… அவர் கையில அடிபட்டு இருக்கு சாப்பிட முடியாது, ஊட்டி விடணும்… 

 

ஓஹோ அப்படி வரீங்க… சரி நாங்க சீக்கிரம் சாப்பிட்டு கிளம்புறோம்… கூறிவிட்டு இருவரும் சாப்பிட்டு முடித்து வெளியே வர..

 

ஆதியை முறைத்தவாறே தட்டில் சாப்பாடு இட்டு… ஊட்ட முன் வந்தாள் மலர்… 

 

இவ்வளவு நேரம் உங்க அண்ணன் கூட பேசும் போதெல்லாம் முகம் நல்லா தானே இருந்தது… என்ன பார்த்த உடனே மட்டும்  ஏன் மூஞ்சுறு மாதிரி மாறுது…

 

காலைல நீங்க பண்ண வேலைக்கு… உங்கள பாத்து முறைக்காம பின்ன மடியில வச்சு கொஞ்சுவாங்களா…

என்று கேட்டாள் மலர்.

 

நான் கொஞ்சு வேண்டி… என்று அவளை இழுத்து தனது மடியில் உட்கார வைத்து “இப்போ ஊட்டு” என்றான்.

 

முறைத்தபடியே தான் ஊட்டி விட்டாள்.. 

 

இடையே சுற்றி வளைத்திருந்த கைகள்… சும்மா ஒன்றும் இல்லை… தன்னால் முடிந்த அளவு அவளை இம்சித்தது…

 

காலையில எதுக்கு அப்படி ஆவேச படனும் இப்படி கை எல்லாம் புண்ணாக்கிக்கணும்… நான்தான் கொஞ்சம் பொறுங்கன்னு சொல்றேன்ல… சொல்ல சொல்ல கேட்காம ஏதாவது பண்ணிட்டு எனக்கும் கஷ்டம் உங்களுக்கும் கஷ்டம்… என்று அவள் கூற…

 

மடியில் உட்கார்ந்து இருந்தவளின் இதழைத் தான் பார்த்துக் கொண்டே இருந்தான்… 

அதை மட்டும் ஞாபகப்படுத்தாத… மூட மாத்தாத… என்று உருமி விட்டு… அவள் இதழை மெல்ல கொய்தான்…

இருவரும் நிதானமாக முத்தமிட்டு கொண்டு இருந்தனர்…

 

இவர்கள் முத்தமிட்டுக் கொள்வதை இரண்டு கண்கள் கதவின் இடைவெளியில் பார்த்து விட்டு சென்றது.

 

சாப்பாட்டு ஊட்டி விட்டு சென்றவளுக்கு புது போனை பரிசளிதான் ஆதி…

 

இப்ப எதுக்கு இந்த போன் எனக்கு பழைய போனே போதும் என்றாள் மலர். 

 

உன்னோட போன்ல கேமரா எதுவும் ஒர்க் பண்ணலையே… அவசரத்துக்கு gpay எல்லாம் எப்படி பண்ணுவ… என்று அவளிடம் கொடுத்து அனுப்பினான்…

 

இரண்டுமனதாய் வாங்கி வைத்துக் கொண்டாள் மலர்.

 

அன்று இரவும் அவனுக்கு பால் கலந்து கொடுத்து விட்டு… ஆதி உறங்கிய பிறகு… அவளுக்கு அழைப்பு வந்தது…

 

போனை எடுத்து காதில் வைத்தாள்…

 

மேடம்.. இன்னைக்கு ரொம்ப குஷியா இருக்கீங்க போல… காலையில சண்டை போட்டு கையில அடிபட்டு போன புருஷனை மதியானம் போய் சமாதானம் பண்ணி கூட்டிட்டு வந்து இருக்கீங்க போல… சத்தமான ஒரு ஏளன சிரிப்புடன்…

நீ அவன விட்டு விலகி இருக்கணும்னு நான் சொல்லி இருக்கேன்… 

நான் சொன்னதை மீறி அவனுக்கு சாப்பாடு ஊட்டி விடுற, கிஸ் கொடுத்து இருக்க…  ம்ம்… அப்போ என் மேல இருக்க பயம் போயிடுச்சு…

அதுக்கு உனக்கு, உடனே நான் பனிஷ்மென்ட் கொடுத்தே ஆகணுமே…

இப்போ நீ என்ன பண்ற… உன்னோட புருஷன் ஆசையா புதுசா வாங்கி கொடுத்த மொபைல் போன்ல… எனக்கு வீடியோ கால் பண்ற… நான் இப்பவே உன்ன பாக்கணும்… டூ இட் நவ்… என்று மிரட்டினான்…

 

அவனே வீடியோ கால் செய்தான்..

 

மலர் போனை அட்டென்ட் செய்தாள்…

 

முகமூடி அணிந்த ஒருவன் தெரிந்தான்… போனில் மலரின் முகத்தை சிறிது நேரம் ரசித்தவன்… 

கொடுத்து வச்சவன் தான் உன் புருஷன்…

என்ன பண்றான் இப்போ…

 

தூங்குறாரு…

 

அவன் இருந்த திசையில் கேமராவை காண்பிக்க ஆதி தூங்கிக் கொண்டு இருப்பது தெரிந்தது…

 

நல்ல தூக்கம் போல… என் பேச்சை மீறி அவனுக்கு எப்படி நீ முத்தம் கொடுக்கலாம்… ம்ம்ம்… எனக்கும் இப்ப அந்த முத்தம் வேணும்… அதுவும் நேர்ல… இப்பவே உங்க வீட்டுக்கு வரேன் என்றான்…

 

மலர் மிரண்டு முழிக்க…

 

டேய் pa*u… தைரியமான ஆம்பளையா இருந்தா நேர்ல வந்து அவகிட்ட முத்தத்தை வாங்குடா பாக்கலாம்…  என்று மலரின் பின்னால் ஒரு சிங்கக்குரல் சத்தமாய் ஒலிக்க…

 

சத்தத்தில் திடுக்கிட்டு போனாள்  மலர்… ஒரு நிமிடம் தன் நெஞ்சில் கை வைத்து தன்னை நிதானப்படுத்திக் கொள்ள…

 

எனக்கு முத்தம் கொடுக்க கூடாதுன்னு சொல்றதுக்கு நீ யாருடா வெண்ண…  என்று கூறிய வாரே பக்கத்தில் இருந்த மலரின் தலையை இழுத்து… அவள் இதழில் ஆழ்ந்த முத்தமிட்டான் தேவா… போனில் இருந்தவன் கண் முன்னே…

 

❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்.. 

      ஊக்கபடுத்த கருத்துகளையும் பகிருங்கள் .

      நன்றி!❤️

❤️ Loading reactions...
4 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top