அசுரன் 100
(இந்த காட்சி இதற்கு முன்னால் எபிசோட் 97 இல் வந்திருக்கும், அன்று உண்மையில் நடந்தது இதுதான்)
தங்களது அந்தரங்கத்தை எவனோ ஒருவன் ஒட்டு கேட்பது இருவருக்கும் பிடிக்காமல் ஒரு வாரமும் விலகியே இருந்தார்கள் கணவனும் மனைவியும்…. மனைவியை ஏக்கமாய் பார்த்துவிட்டு அலுவலகத்திற்கு கிளம்ப அவளுக்கு மட்டும் ஏக்கம் இருக்காதா என்ன.. வேற என்ன செய்ய அவர்களது உணர்வுகளை காட்சி பொருளாக்க விரும்பவில்லை இருவரும்…
அதற்காக ஒரு முத்தத்திற்கு கூட முட்டுக்கட்டை போட்டு விட்டாள் பெண்… யாரோ நம்மளோட பெட் ரூமை எட்டி பார்க்கிறது போலவே இருக்கு என்று அவள் எழுதி காண்பிக்க…
பொங்கி வந்த உணர்ச்சியை முத்தமிட்டு கூட அணைக்க முடியாத சூழ்நிலையில் ஏக்கத்துடன் கிளம்பி செல்கிறான் அலுவலகத்திற்கு…
அலுவலகத்திற்கு கிளம்பியவன்… திடீரென்று ஏதோ பைலை எடுப்பதற்காக மலரின் அறைக்குள் நுழைய… அப்பொழுதுதான் குளித்து முடித்து வந்தவள்… வீட்டில் தான் மட்டும் இருக்கும் தைரியத்தில், கண்ணாடி முன் நின்று, தளர்வாக புடவை மடிப்பை எடுத்துக் கொண்டிருந்தாள் பெண்..
கள்ள பூனை சத்தம் இல்லாமல் வந்து அவளை பின்னால் இருந்து அணைத்தது… அதிர்ந்து அவனை விலக்கிவிட்டு நகர முயன்ற அவளை இழுத்து அணைத்தவன்… இருவரின் உருவத்தையும் கண்ணாடியில் பார்த்தான், சிவப்பு நிற ஜாக்கெட்டும் சிவப்பு நிற பாவாடையும் அணிந்து இருந்தால்… அவன் கட்டிய மஞ்சள் தாலி மட்டும் நாடு நாயகமாக அவள் நெஞ்சில் உரிமையோடு தொங்கி கொண்டு இருந்தது… வேறு எந்த அணிகலன்களும் இல்லை… தழைய தழைய அவள் மார்பை உரசிய தாலியே அவனை போதை ஏற்றியது… அவளை கண்ணாடியில் பார்த்துக்கொண்டே… அவள் தோளில் அவன் நாடியை பதித்த படி..
இதுக்கு மேல என்னால பொறுக்க முடியாது… என்னை நீ ரொம்ப சோதிக்கிற டி… இன்னைக்கு இதுக்கு ஒரு முடிவு தெரிஞ்சே ஆகணும்…
என்று கூறியபடியே அவளது வெண் பஞ்சு இடையை அழுத்தி பிடிக்க… கையில் இருந்த பைல் நழுவி தரையில் விழுந்தது…
ப்ளீஸ் தேவா… இப்படி எல்லாம் பண்ணாதீங்க?
என்று உணர்ச்சி வேகத்தில் மலர் கூறியபடியே அவனை விட்டு விலக பார்க்க… மோகத்தில் சிவந்த அவனது முகத்தையும், மோக பித்தேறிய காந்த கண்ணையும், அவனின் மோக நிலையும் பார்த்தவள்… உதட்டை கடித்து தலை குனிந்தபடியே…
உங்கள பாக்கவே எனக்கு பயமா இருக்கு… என்றாள்.
குளித்து முடித்து, ஈர கூந்தலில் நீர் சொட்ட நின்று இருந்தவளின் கூந்தலை ஒரு பக்கமாய் ஒதுக்கி… அவளது முதுகில் முத்து முத்தாய் வீற்றிருந்த நீர் துளியை அவன் உதட்டால் உறிஞ்சியப்படியே… மதி மயங்கினான்…
வேற எப்படி பண்ண சொல்ற.. என்னோட பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு…
(இப்படி வந்து நின்னு மனுஷனை சோதிக்காத டி என்று அவளது காது மடல்களுக்குள் அவன் கிசுகிசுக்க, அந்த வெப்பம் அவளை ஏதோ செய்தது. )
அவன் உதடு செய்த மாயத்தில் வானத்தைப் பார்த்தபடி துள்ளி துடித்தவள்…
கொஞ்ச நாள் போகட்டுமே… என்றாள்.
சிவப்பு நிற உடைகளின் இடைவெளியில்… வெண்ணை கட்டி போல் தெரிந்த இடுப்பில்…
மெல்ல அவன் கைகள் ஊர்வலம் வந்து அவளின் நாபிக்குழியை வருடி… பின் கைகள் தானாய் மெல்லமாய் மேலே ஏற… மலரின் கைகள் அதற்கு முட்டுக்கட்டை போட்டது… தனது பாதையை தடை செய்த செயலில் எரிச்சலானவன்
புரிஞ்சுக்கடி, என்னால என்ன கண்ட்ரோல் பண்ண முடியல…
அவள் சொல்வதை கொஞ்சமும் மதிக்காமல்… அவளை முன்னே திருப்பி பற்களால் கொக்கியை கழட்ட முயற்சித்தவனின் முகத்தை பிடித்து நிமிர்த்தி…
நான் உங்கள ரொம்ப நல்லவர்னு நினைச்சேன்… என்றாள்…
அந்த வார்த்தை அவனைச் சிரிக்க வைத்தது. காலையில் நல்ல பிள்ளையாய் அலுவலகம் கிளம்பியவனை… அரையும் குறையுமாய் நின்று, மோகம் ஊட்டியவளை மனதில் நினைத்து,
என்ன நல்லவனா இருக்க விட மாட்ட போல… உன்ன பார்த்தாலே பத்திகிட்டு வருது…
என்று ஆரம்பித்து… இருவரும் ஒருவருக்கொருவர் வாக்குவாதம் செய்தது போல் தங்களது ஊடலை அமோகமாய் நடத்திக் கொண்டு இருந்தார்கள்…
ஐ மிஸ் யூ மை பாப்ஸ்… என்று அவள் காதில் கிசுகிசுத்தவன்… எடுப்பாக நின்ற அவள் முன்னழகை கைகளால் ஏந்தி, முகத்தில் தேய்த்து, அவன் தாடியால் குறுகுறுப்பு செய்து, மெல்லமாய் இதழ் பதிக்க.. உணர்ச்சிப் பிழம்பில் இதழ் கடித்து..
( தன்னை மிஸ் யூ என்று சொல்லாமல் தனது அங்கத்தை சொல்கிறானே என்று முறைத்தபடியே )
மேலும் கீழும் மூச்சிரைக்க…. அப்ப இதுக்காக தான் என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டிங்களா… என்று தனது நெஞ்சை காட்டி மலர் செல்லக் கோபத்தில் கேட்க…
அந்த வார்த்தையை கேட்டவனின் கண்கள் குறும்பை தத்தெடுத்தன… கண்கள் சொருகி, கீழ் உதடு கடிக்கும் அவளின் முகபாவனையை பார்த்து ரசித்தபடியே…
ஆமாம் னு சொன்னா என்னடி பண்ணுவ…. என்று பல்லைக் கடித்து கேட்டுவிட்டு, பொண்டாட்டியை வம்புக்கு இழுத்தபடி, மீண்டும் அவளைத் தன் வசப்படுத்தினான் தேவன்…
அவளை தூக்கி அருகில் இருந்த மேஜையின் மேல் உட்கார வைத்தவன்… கால்கள் இரண்டையும் அவன் இடுப்பை சுற்றி கட்டிக் கொள்ள வைத்தான்…
அவனின் ஆவேசம் கண்டு,
கொஞ்சம் பொறுமையா இருங்க தேவா.. என்று அவன் நெஞ்சில் கை வைத்து அவனை சாந்தப்படுத்த முயல…
தன்னை தடுக்கும் அவளின் இரண்டு கைகளையும் தன் ஒற்றை கையில் அடக்கி, மேல்நோக்கி உயர்த்தி சுவரில் அழுத்திப் பிடிக்க… அவள் கையில் இருந்த கண்ணாடி வளையல் உடைந்து… அவனது கையில் கிழித்து காயம் ஆக்கியது.. ஆனால் அதை உணரும் மனநிலையில் இருவருமே இல்லை… காயத்தில் வந்த ரத்தத்தின் சூட்டை விட அவர்கள் இருவருக்குள் இருந்த மோகத் தகிப்பு அதிகமாக இருந்தது. கைகள் இரண்டும் மேலே ஏறிய சூழ்நிலையில்.. புடவை மறைக்காத முன்னழகு… தலைவனை வா வா என்று அழைக்க… மூச்சு முட்ட முட்ட முத்தமிட்டு, முகம் புதைத்து, எச்சிலால் நனைத்து, மெல்லமாய் பல் பதித்தான்.
மாயகள்வனின் மாயவித்தையில்… கண்கள் சொருகி, “க்ஹ ” என முனங்க சென்ற அவளின் இதழை தனது இதழால் வேகமாய் அணைத்தான்… ராகம் இல்லாத மோகனமாய்… சத்தம் வராத கூடல்… தலைவனின் கையில் தங்க கட்டிகள் தாறுமாறாய் சிக்கித் தவித்தன… மெல்லமாய் ஆரம்பித்த முத்தம் அதி தீவிரமானது… இருவரின் தீவிர முத்தக் கூடலில் அதிர்வில் மேஜையில் இருந்த பூ ஜாடி கீழே விழுந்து உடைந்தது… அப்பொழுது மங்கையின் கழுத்தில் இருந்த தாலி ஆடவனின் கையை குத்த… அப்பொழுது தான் அவனுக்கு ஒரு சிந்தனை வந்தது… மெல்ல மலர் அறியாமல் அந்த தாலியை தலைவழி கழட்டினான்.. பெண்ணவளோ மோன மயக்கத்தில் இருந்தாள், உடனே அவளை விட்டு விலகியவன்.. தாலியை தனது பாக்கெட்டில் வைத்துக்கொண்டு, அலுவலகம் கிளம்ப நினைக்க…
திடீரெனத் தன்னைத் உணர்ச்சியின் பிடியில் தவிக்க விட்டு கிளம்பும் கணவனை கண்டு
நீங்க என்ன பண்ணிட்டு போறீங்கன்னு உங்களுக்கே தெரியுதா..
என்று கேட்டபடி அவனின் சட்டையை பிடித்து தன் பக்கம் இழுக்க முயல…
சிங்க குரலோன் தனது உடலை பின்னால் இழுத்துக் கொண்டு அவள் பிடியில் சிக்காமல் தப்பித்து விட்டான்.. தன்னை ஏமாற்றிய கணவனை கோபித்துக் கொண்டு,
ஐ ஹேட் யூ என்று கத்தினாள் மலர்.
கதவின் அருகே சென்று, அங்கிருந்த ஒரு காகிதத்தில், தாலி என்னிடம் உள்ளது தேடாதே… என எழுதி வைத்தான், பின் அவள் பக்கம் திரும்பி பார்த்தவன், முகம் சிவந்து மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க கவர்ச்சிகன்னியாக மோக உணர்ச்சியின் பிடியில் இருந்தவளை பார்த்து, காற்றில் உதடு குவித்து முத்தமிட்டு,
தேங்க்யூ… என்று கூறிவிட்டு, இப்ப என்னோட பீலிங் எப்படி இருக்குன்னு உனக்கு புரிஞ்சிருக்கும் என்று கண் சிமிட்டி குறும்பாய் கூறிவிட்டு சென்று விட்டான்… ( மோகநிலை முத்தி அவளின் கிட்ட வரும் பொழுதெல்லாம், ப்ளீஸ் வேணாம் தேவா, என்று அவள் விலகி சென்றதற்கு ஒரு இனிமையான பழிக்கு பழி வாங்கியாயிற்று )
இங்கு நடந்த அனைத்தையும் ஒட்டு கேட்ட ஒரு ஜீவன் இருவரும் கோவத்தில் சண்டையிட்டு கொண்டார்கள் என்று நினைத்துக் கொண்டது.. பாவம் அவன் அறியவில்லை அங்கு நடந்தது கோவ சண்டை அல்ல .. மோக சண்டை என்று.
அலுவலகம் சென்று முதல் வேலையாக அந்த தாலியை எடுத்து மஞ்சள் கயிறை தனியாக பிரித்தான்… அதை ஆழ்ந்து நுகர்ந்து பார்க்க… தன்னவளின் தன்னிகரில்லா வாசம் அவனின் சுவாசம் நிறைத்தது… அதை தனியே பாக்கெட்டில் பத்திரப்படுத்திக் கொண்டான்.. பின் அந்த தாலியை எடுத்து வந்து விக்ரம் மற்றும் ராஜேஷின் முன்னணியில் திறந்து பார்க்க.. அதில் அரக்கு வைக்கும் இடத்தில் மெல்லிய மைக்ரோஃபோன் ஒன்று இருந்தது… ஒரு வழியாக இத்தனை நாள் அவர்கள் தேடிய பொருள் கிடைத்தது… அந்த பொருள் சொல்லிவிட்டது… அவன் சந்தேகப்பட்ட ஆள் சரி என்று..
அன்று நடந்த மீட்டிங்கின் உணவு இடைவெளியில்,
தங்கள் அறையில் ஆதியும் மலரும் முத்தமிட்டு கொண்டு இருப்பதை ஒருவன் பார்த்துவிட்டு சென்றதை ஆதியும் கவனித்தான்… மெல்லிய புன்னகையுடன் “black sheep” என முணுமுணுத்துக் கொண்டான்.
அலுவலகத்தில் சாதம் ஊட்டி முடித்து கிளம்பி வந்தவளுக்கு புது போன் வாங்கி கொடுத்தவன் வரும் வழியில்… நகை கடைக்கு அழைத்து சென்று.. அவளுக்கு பிடித்த வகையில் ஒரு மலர் முகப்பு வைத்த தாலிச் செயினும், அவனுக்கு பிடித்த வகையில் ஒரு மெல்லிய தங்க கொலுசும்… வாங்கி கொண்டான்…
இடையில் காரை ஒரு கோவிலில் நிறுத்தி, சாமியின் முன் வைத்து பூஜை செய்து தாலி செயினை அவளது கழுத்தில் போட்டு விட்டான்…
புது தாலி செயின் பிடித்து இருக்கா என்று மலரிடம் கேட்க..
” பிடிச்சிருக்கு… இருந்தாலும் எனக்கு அந்த தாலி ரொம்ப ஸ்பெஷல் தெரியுமா?..” என்று வருத்தப்பட்டாள் மலர்.
அது என்கிட்ட தான் இருக்கு, தனது பாக்கெட்டில் இருந்த அந்த உதிரி மஞ்சள் கயிற்றை எடுத்தவன்… அவள் கையில் கொடுத்து… தனது கையில் கட்ட சொன்னான்…
ஐயோ வேணாம்.. சாமியார் மாதிரி இருக்கும்… என்றாள்.
இத்தனை நாள் உன் மார்புக்கு உள்ளே ஒளிஞ்சிருந்த கயிறு டி… கைல கட்டிக்கிட்டா உன் வாசம் என் கூடவே இருக்கிற மாதிரி செம பீல்… நீயே கட்டி விடு என்றான்…
பாக்குறவங்க என்ன நினைப்பாங்க… நல்லா இருக்காது… எனக்கு பிடிக்கல என்றாள்…
இந்த கைல கட்டு இதுக்கு மேல நான் வாட்ச் கட்டிக்கிறேன்… வெளில தெரியாது… எப்போ உன்னோட வாசம் தேவை தோணுதோ… அப்ப எடுத்து ஸ்மல் பண்ணி பாப்பேன்… ஐ லவ் தட் மொமெண்ட்…
சிரித்தபடி அவன் கையில் கட்டி விட்டாள்…
கட்டியவுடன் வேகமாய் மணிக்கட்டை ஆழ்ந்த நுகர்ந்து… வாசத்தை நிரப்பிக் கொண்டான்.
இரவு உணவை வெளியில் உண்டு விட்டு வீட்டுக்கு வந்து அடைந்தனர்…
இன்றும் அந்த கருப்பு ஆடு போன் செய்யும் என்று காத்திருந்தவன்…
அவன் போன் செய்யும் வேலையில் தூங்குவது போல நடித்தான்… இன்று புது போன் வாங்கி கொடுத்ததால், கண்டிப்பாக வீடியோ கால் வருவான் என்று எதிர்பார்த்தது போல் ஆடு சிக்கியது… தன்னை முத்தமிடக் கூடாது என்று மிரட்டிய கருப்பு ஆட்டின் கண் முன் தன் மனைவியை முத்தமிட்டான் ஆதி.
மலரின் இதழில் இருந்து தன் இதழை பிரித்தவன்…
போன் திரையில் தெரிந்தவனை பார்த்து,
பொண்ண மிரட்டி காரியம் சாதிக்க பாக்றீயே .. தப்பு.. தப்பு… தப்பு… என்று தனது ஆள்காட்டி விரலை அங்குமிங்கும் அசைத்தவன்.. என்ன பழி வாங்கணும்னா என்கிட்ட நேரடியா மோதி இருக்கணும்…
அத விட்டுட்டு இவ கிட்ட வந்தது ரொம்ப தப்பு…
ஒரு வாரமா அவள பிளாக் மெயில் பண்ணி.. மன உளைச்சலுக்கு ஆளாக்கி.. எங்க ரெண்டு பேரையும் பிரிச்சு… இதெல்லாம் தேவையே இல்லாத வேலை.. இதுக்கு நான் என்ன பனிஷ்மென்ட் உனக்கு கொடுக்கலாம்… ம் ம்ம்… எதை வேணா மன்னிப்பேன்… அவளை அடையணும்னு நெனச்ச பாத்தியா… அதை மட்டும் மன்னிக்கவே மாட்டேன்… உன் வாழ்நாள்ல செஞ்ச மிகப் பெரிய தப்பு அது..
ஏய் ஆதி… நான் யாருன்னு தெரியாம நீ பேசிகிட்டு இருக்க… நான் நெனச்சா இப்பவே உன்னை இந்த உலகத்தில் இல்லாம பண்ணுவேன்… என்று மிரட்ட
ஹா ஹா.. என்று கைதட்டி சிரித்தவன்…. நீ யாருன்னு எனக்கு தெரியும் “ராகேஷ் சர்மா…” தெரிஞ்சு தான் பேசிகிட்டு இருக்கேன்…
போனில் தெரிந்தவனின் முகமூடியின் இடைவெளியில் தெரிந்த கண் விரிந்து சுருங்கியது…
என்ன சொன்ன நீ?…. நீ நினைச்சா இப்பவே என்ன இந்த உலகத்துல இல்லாம பண்ணுவியா… நைஸ் ஜோக்… அருகில் இருந்த சோபாவில் கால் மேல் கால் போட்டபடி அமர்ந்தவன்…
நான் நெனச்சா, இந்த நிமிஷம், இப்பவே உன் தல, நீ உட்கார்ந்த இடத்திலேயே சிதறும் பாக்குறியா… என்று ஆதிக்கூற..
ராகேஷ் சர்மாவின் தலையின் பின்புறம் “கிளக்” என்று துப்பாக்கியை அன்லாக் செய்யும் சத்தம் கேட்டது. ராகேஷ் சர்மாவின் கண்கள் இப்பொழுது பயத்தை வெளிக்காட்டியது..
❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்..
ஊக்கபடுத்த கருத்துகளையும் பகிருங்கள் .
நன்றி!❤️