அத்தியாயம் 19

முதலிரவு என்றதும் அதிரூபனுக்கு அவனையும் மீறி ஒரு வித பதற்றம் உள்ளுக்குள் இருந்தது…

 

ஏற்கனவே பலவித குழப்பங்களில் சிக்கித் தவித்து ஒரு வித அழுத்தத்தில் இருப்பவன் அவன் …

 

இப்போது புதிதாய் மற்றொரு அழுத்தம் சேர்ந்து அவனை நிலைகுலைய செய்தது எனலாம் …

உள்ளே அழகு பதுமையாய் வந்த அவந்திகாவை கண்டதும் அவனையும் மீறி தொண்டைக்குள் எச்சில் இறங்கியது..

 

ஒருவித இருக்கும் இறுக்கம்  உருவாகிட கஷ்டப்பட்டு தன் உணர்வுகளை அடக்கிக் கொண்டு நின்று கொண்டிருந்தான் அதிரூபன் …

 

அவனையே பார்த்தவாறு வந்தவள் செம்பை வைத்துவிட்டு அவனை நோக்கி நெருங்கி வரவும் சட்டென அவனது விழிகள் விரிந்து கொண்டது…

 

போதாத குறைக்கு அவனது சட்டையை பிடித்து தன்னை நோக்கி அவந்திகா இழுத்திடவும் வெளிப்படையாகவே தடுமாறிய அதிரூபன்,

 

” அதி…”  என அவனையும் மீறி அத்தனை மென்மையாக அழைத்து இருந்தான் …

 

தன் முகத்திற்கு அருகே மிக மிக நெருக்கத்தில் இருந்த அதிரூபனின்  விழிகளை மாறி மாறி பார்த்த அவந்திகா ஒற்றை விரல் கொண்டு அவனது ட்ரிம் செய்யப்பட்ட தாடி இருந்த கன்னத்தை மெல்ல வருடியவள்,

 

” என்ன அதிரூபன் என்னை பார்த்ததும் உங்களுக்கு எதுவும் தோணலையா..??.. எனக்கு தெரியும் .ஏன்னா நீங்க தான் கே ஆச்சே..”  என வார்த்தைகளால் அவனை உடைத்து இருந்தாள் அவந்திகா …

 

அவளது வார்த்தையில் திகைத்து இருந்தவனை சட்டென தள்ளிவிட்டவள் அவனையே பார்த்தவாறு கைகளில் இருந்த வளையல்களை எல்லாம் கழட்டி மேசையில் வைத்து  விட்டு கழுத்தில் அணிந்திருந்த நகைகளையும் கழட்டியவாறு,

 

” உங்களை கல்யாணம் பண்ணது எனக்கு கொஞ்சம் கூட இஷ்டமே இல்ல தான்.. ஆனா இதுல எனக்கு ஒரு பெனிஃபிட் இருக்கு ..ஏன்னா என் மேல உங்களுக்கு பீலிங்க்ஸே வராதுல.. அதுவரைக்கும் நான் தப்பிச்சேன் ..

 

ஏன்னா உங்க சுண்டு விரல் கூட என் மேல படுறதை ரொம்ப அசிங்கமா நினைக்கிறேன்..”  என்ற நொடி அதிரூபன் எப்படி உணர்ந்தான் என அவனுக்கே தெரியாது…

 

“உங்க கிட்ட நான் ஒரு வாக்கு கேட்டு இருக்கேன்.. அது இப்போ உங்களுக்கு ஞாபகம் இருக்கும்னு நினைக்கிறேன்.. கூடிய சீக்கிரமே அது என்னன்னு நான் சொல்றேன்.. இப்ப தள்ளி போனீங்கன்னா நான் அந்த பெட்ல படுத்துப்பேன் ..” என்றதும் அதிரூபன் அவள்  பேசிய வார்த்தைகளில் கூனிக்குறுகி தான் போனான்..

 

கண்களை இறுக மூடி திறந்து அவளுக்கு வழியை விட.. அவனை தாண்டி சென்றவள் சட்டென நின்று தலையை பக்கவாட்டாக திருப்பி அவனைப் பார்த்து,

 

” உங்களுடைய இந்த லீலை எல்லாம் ஆபீஸ்ல மட்டும் தானா.??  இல்ல இந்த வீட்டுக்குள்ள இந்த  பெட்லையும் பண்ணி இருக்கீங்களா..??” என நக்கலாக கேட்டதும் இப்போது அவளை சடார் என்று தலை திருப்பி முறைத்துப் பார்த்த அதிரூபன்,

 

” ஓவரா பண்ற நீ ..??” என பல்லை கடித்து கூறியதும் இதழ் வளைத்து அவனை நக்கலாக பார்த்த அவந்திகா,

 

” நான் பண்றேனா இல்ல நீங்க பண்றீங்களானு  தான் எனக்கு தெரியல..”  என கூறியவாறு உறங்கச் சென்று விட்டாள்.. 

 

தெளிவான முடிவு எடுத்தது  படுத்ததும் உறக்கத்திற்கு சென்று விட்டிருந்தாள் அவந்திகா…

 

அவளையே பார்த்தவாறு வெகு நேரம் அசையாமல் நின்று கொண்டிருந்தான் அதிரூபன்…

 

முதன் முறையாக அவனது வீட்டில் அவனது அறைக்குள் ஒரு பெண்ணின் வாசம் வருகிறது.. அதுவும் அவனது மனைவியின் வாசம் அது ..

 

அவள் கூறிய வார்த்தைகளை தனக்குள் ஓட்டி பார்த்தவன் தலையை அழுந்த கோதி கொண்டு பெருமூச்சுடன் அந்த பெரிய மெத்தையில் அவளுக்கு நன்றாக இடைவெளி விட்டு படுத்துக் கொண்டான் அதிரூபன்…

காலையில் எழுந்த அதிரூபனின் நாசியில் ஒரு வித மணம் நுழைந்து சுகந்தத்தை அனுபவித்தான்…

 

கண்களை நன்றாக திறந்து பார்த்திட அங்கு தலையை துவட்டியவாறு பட்டு புடவையில் நின்று கொண்டிருந்தாள் அவந்திகா…

 

புது புத்தம் புது ரோஜா போல நின்றிருந்தவளை கண்டதும் அவனுக்குள் ஏதோ ஒன்று செய்தது…

அவன் பார்த்ததை அவள் உணர்ந்தாள் போல சட்டென தலை திருப்பி பார்த்திட.. அதற்குள் அவன் மெத்தையிலிருந்து வேகமாக எழுந்து குளியல் அறைக்குள் புகுந்து கொண்டான்..

செல்பவனது முதுகை அலட்சியமாக பார்த்துவிட்டு தலையை துவட்டினாள்…

 

குளியலறையில் ஷவருக்கு அடியில் நின்றிருந்தான் அதிரூபன் ..கண்கள் மூடி வெகுநேரம் அவன் நின்று இருக்க அவனது மன கண்ணில் அவந்திகாவின் முகமே வந்து வந்து போனது..

 

அடி வயிற்றில் இருந்து ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டு தன்னை சமன் செய்து கொண்டு ஒரு வழியாய் குளித்து முடித்து வெளிவந்த நேரம் அவள் அங்கு இல்லை .‌

 

அவள் இல்லாததால் ஆசுவாசமடைந்தாலும் மனதில் ஒரு ஓரம்  சின்ன ஏமாற்றம் பரவுவதை அவனால் தடுக்க முடியவில்லை ..

 

அதன் பின் அதிரூபன் ட்ராக் பேண்ட்டும் டி-ஷர்ட்டும் அணிந்து கொண்டு படியிறங்கி கீழே வந்த நேரம் அவந்திகாவை  அதியமான் பூஜை அறைக்கு அழைத்துச் செல்வதை தான் பார்த்தான் …

 

மகன் வருவதை கண்டதும் அதியமான்,

 

” வா அதி சாமி கும்பிடலாம்..”  என்றதும் சிறு தலையசைப்புடன் அவர்களுக்கு பின்னாடி சென்றாள் அதிரூபன்…

 

அவந்திகா விளக்கேற்றி தீபத்தைக் காற்றிட அதியமானும் அதிரூபனும் கைகூப்பி இறைவனை வணங்கியவாறு நின்று கொண்டிருந்தனர்..

 

முதலில் தன் மாமனாருக்கும் பிறகு தன் கணவனுக்கும் தீபத்தை காட்டினாள்.. இருவரும்  கண்களில் உச்சி கொண்டவர்கள் பிறகு விபூதியையும் வைத்துக்கொண்டனர்..

அவளும் குங்குமத்தை எடுத்து தனது உச்சியிலும் நெற்றிலும் வைத்துக் கொண்டு தன் மாமனாரை பார்த்து பளிச்சென்று சிரித்தவள்,

 

” குட் மார்னிங் மாமா ..” என வாய் நிறைய அழைத்ததும் அவளை ஆச்சரியமாக பார்த்த அதியமான்,

” நீ இப்படி மாமானு சொன்னதும் எனக்கு மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு அதிம்மா..”  என சொன்னதும் முத்து பற்கள் தெரிய சிரித்து வைத்த அவந்திகா ,

 

“சரி காபி குடிக்கலாமா..?”  என கேட்டதும் ,

 

“கண்டிப்பாம்மா…” 

 

வேலையாள் காபி வந்து தந்திட அதை அதியமானுக்கு முதலில் எடுத்து தந்தவள் நின்று அதிருபனைத்தான் பார்த்தாள்…

 

தன் தந்தையையும் மனைவியையும் பார்த்தவாறு ஓரமாய் ஒதுங்கி நின்றிருந்தான் அதிரூபன் …

 

“அங்கே ஏன் நிக்கிறீங்க..??  இங்க வாங்க..”  என அவந்திகா ஆசையாக அழைத்ததும் பெருமூச்சுடன் அவளை நோக்கி சென்றவன் தன் தந்தைக்கு அருகே சென்று அமர்ந்து கொண்டான்..…

 

அவனுக்கும் காஃபியை நீக்கியவள் தானும் ஒரு கப்பை எடுத்துக்கொண்டு சோபாவில் அமர்ந்தாள்…

 

“எப்பவும் இந்த காஃபியை தான் குடிப்பேன்.. ஆனா அதே காஃபிய தான் இன்னைக்கும் குடிக்கும் போது  மனசுக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு அதிம்மா..

 

நீ வந்த அப்பறம் தான் இந்த வீடே நிறைஞ்ச மாதிரி இருக்கு ..

 

நான் சாகுற வரைக்கும் என் வீடு இப்ப இருக்க மாதிரி எப்பவும் சந்தோஷமா நிறைஞ்சு இருக்கணும் அது மட்டும் தான் என் ஆசை..”  என்றதும் அதிரூபனும் அவந்திகாவும் அவரது வார்த்தையில் சற்று பதறி தான் விட்டனர்…

 

“அப்பா… காலையில் என்னப்பா பேச்சு இது?”  என அதிரூபன் வெளிப்படையாக கடிந்துக் கொள்ளவும்..அவந்திகாவும்,

 

“இப்படி பேசாதீங்க மாமா ..நான் வந்த முதல் நாளே இப்படி பேசுறீங்களே..!”  என உண்மையான வருத்தத்துடன் அவள் கூறியதும் வாய்விட்டு நகைத்தவர் ,

 

“என்னோட‌ ஆசையை தான்  நான் சொல்றேன்ம்மா… சரி  இன்னிக்கு ஈவ்னிங் உங்களுக்கு ஒரு பார்ட்டி இருக்கு.. அதுக்கு ரெடியாகணும்..”  என்றதும் அவந்திகாவிற்கு அதை பற்றி தெரியாது என்பதால் கணவனை தான் விழிகள் சுருக்கி கேள்வியாய் பார்த்து வைத்தாள்…

 

அதை புரிந்து கொண்டு அதிரூபனும், 

” மேரேஜ் முடிஞ்சதால பிசினஸ் பார்ட்னர்ஸ் எல்லாருக்கும் பார்ட்டி அரேஞ்ச் பண்ணி இருக்கோம் ..ஈவினிங் தான் பார்ட்டி ..” என்றதும் சரியென தலையசைத்து வைத்தாள்…

 

அதன் பின்னர் காலை உணவை மூவரும் தான் ஒன்றாக அமர்ந்து உண்டனர்…  கட்டிய கணவனை விட தன் மாமனாரிடம் தான் மனதார பேசி சிரித்து கொண்டு இருந்தாள் அவந்திகா…

 

அவருக்குமே மகள் இல்லாத குறையை மருமகளிடம் தீர்த்துக் கொண்டார் …

இருவருக்கும் இடையில் அமர்ந்திருந்த அதிரூபன் ஏனோதானோவென உணவை கொறித்தவன் வேகமாக உண்டு விட்டு  எழுந்து சென்று விட்டான் …

அவன் சென்றதை மற்ற இருவரும் கடைக்கண்ணால் பார்த்து வைத்தவர்கள் பின் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்…

 

வெளியவும் செல்ல பிடிக்காமல் யாருடனும் பேச பிடிக்காமல் திருமணம் முடிந்த முதல் நாளே அவனுக்கு வெறுப்பாகி போனது …

 

தன் அறை பால்கனியில் பாலை தட்டியபடி அமர்ந்திருந்தான் அதிரூபன்.. அச்சமயம் அங்கு வந்த அவந்திகா அவனை அவ்வாறு கண்டு விட்டு ஒரு கணம் நின்று பார்த்தவள் பின்பு ‘அவன் கிடக்கிறான் லூசு ‘ என்கிற மனநிலையில் தன் வேலையை பார்க்க தொடங்கி விட்டாள்…

 

படித்து விட்டு கருத்தினை தெரிவிக்கவும் நன்றி 🙏 🙏 🙏 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top