அத்தியாயம் -44

ராத்திரி சாப்பாட்டுக்கு வேதமூர்த்தி, சங்கரி, நீலவேணி, கிருத்திகா, ரிஷிநந்தன், விதுரன், மதுரியா எல்லாரும் உட்கார்ந்தாங்க. விதுரன் கொஞ்சம் பதட்டம், கொஞ்சம் குற்றவுணர்ச்சி-னு உட்கார்ந்திருந்தான். அவனுக்கு மதுரியா எப்படி சொல்ல போறா-னு யோசனை. “மூர்த்திப்பா, உங்க எல்லார்கிட்டேயும் முக்கியமான விஷயம் சொல்லணும். சாப்பிட்டு ஹால்லே பேசலாமா?”-னு மெதுவா கேட்டா. எல்லாரும் அவளை யோசனையா பார்த்தாலும் சரி-னு சொன்னார் வேதமூர்த்தி. விதுரன் சாப்பிடாம சாப்பாட்டை அலையறதை பார்த்து, “விது, லீவ் இட் வித் மீ. அப்பா கிட்ட நான் பேசிக்கிறேன். சுமுகமா முடிஞ்சுடும். நிம்மதியா சாப்பிடுங்க”-னு சொன்னா. ம்ம்ம்-னு தலையாட்டிட்டு சாப்பிட ஆரம்பிச்சான். விதுரன் குழப்பமா இருந்தது, அப்புறம் மதுரியா சமாதானம் பண்ணது எல்லாம் பார்த்து அந்த குழப்பத்துலேயும் பெரியவங்களுக்கு சந்தோஷமா இருந்தது.

எல்லாரும் சாப்பிட்டுவிட்டு ஹால்லே உட்காரவும், “சொல்லு ரியா.. என்ன விஷயம்?”-னு கேட்டார் வேதமூர்த்தி. “அது… நிறைய சொல்லணும் மூர்த்திபா… ஆனா என்னையோ விதுரனையோ தப்பா நினைக்கவோ எங்க மேலே கோபப்படவோ கூடாது”-னு பீடிகையோடு ஸ்டார்ட் பண்ணா. “என்ன ரியா? பெரிய குண்டு ஏதாவது போடப் போறீங்களா?”-னு கேட்டான் ரிஷிநந்தன். “பேசாம இருங்க ரிஷி”-னு அதட்டினா கிருத்திகா. “ரியா… இங்கே வா.. வந்து இப்படி உட்கார்”-னு கூப்பிட்டாங்க நீலவேணி. “பாட்டீ..”-னு இழுக்கவும், “ஏன்? வல்லி கிட்டே தான் மடியிலே சாய்ஞ்சு உட்காருவியா? நான் பாட்டி இல்லையா?”-னு அதட்டினாங்க. 

மறு நிமிஷம் யோசிக்காம கற்பகவல்லி கிட்ட உட்கார்றது போலவே கீழே உட்கார்ந்து மடியிலே கை வைச்சுக்கிட்டா. தோளை சுத்தி கையை போட்டு “இப்போ சொல்லு..”-னு கேட்டாங்க. எல்லாரோட முகத்துலேயும் சிரிப்பு. “மூர்த்திப்பா… அந்த கௌதம் இன்வெஸ்டர்ஸ் காண்டிராக்ட்லே இருந்த குளறுபடி மொத்தமும் கண்டுப்பிடிச்சாச்சு. ரொம்ப அழகா பீனா பில்டர்ஸ் கூட சேர்ந்து ப்ளான் பண்ணி விதுவை அதுலே சிக்க வைச்சிருக்காங்க”-னு சொல்லவும், “என்னம்மா சொல்றே? அப்துல்லாவா அப்படி? இருக்காதும்மா.. 25 வருஷமா எனக்கும் வாசுவுக்கும் அப்துல்லாவை தெரியும்”-னு சொன்னார் வேதமூர்த்தி. “இல்லேப்பா… இப்போ பிசினஸ் பார்க்கறது அவரோட பையன் சாதிக்”-னு சொன்னா மதுரியா. “அவர் பையனா அப்படி?”-னு அதிரவும், “ம்ம்ம்ம்.. பன்னிங்க கூட சேர்ந்து இருக்கான்லே?? அதான்..”-னு பல்லை கடிச்சான் விதுரன்.

“விது.. ப்ளீஸ்..”-னு கெஞ்சவும், முகம் இறுகி வாயை மூடினான் விதுரன். “யாரு அந்த பன்னிங்க?”-னு கூர்மையா கேட்டான் ரிஷி. “அது விக்கியும் ரிதேஷும்.. அவங்க தான் எல்லாத்துக்கும் காரணம்”-னு வருத்தமா சொல்லவும், “என்னது???”-னு வந்த அத்தனை குரல்ல எதுலே அதிர்ச்சி அதிகம்-னு சொல்ல முடியாத நிலைமை. “ஆமாப்பா.. எங்க எங்கேஜ்மெண்ட் ப்ரேக் ஆனப்போ ஏறக்குறைய எட்டு மாசம் நான் சென்னை வரவே இல்லே. முதல் தடவையா வந்தப்போ ப்ரதீப் என்னை எங்க சீனியர் வீட்டு ஃபங்க்‌ஷனுக்கு கூட்டிட்டு போனப்போ தான் விக்கியும் அசோக்கும் பேசினதைக் கேட்டேன். இதோ கேளுங்கப்பா”-னு அந்த ரெகார்டிங்கை போட்டுக் காமிச்சா. “ஐயோ..”-னு அலறினாங்க சங்கரி. “அன்னிக்கு தான்-பா தெரியும் இவங்க ரெண்டு பேரும் விதுரனையும் ப்ரதீப்பையும் நண்பர்களாவே நினைச்சது இல்லே-னு.. வெறும் பொறாமை.. அதனால வந்த பழிவெறியிலே நேரம் பார்த்து முதுகுலே குத்தி குழியிலே தள்ளிட்டாங்க”-னு சொல்லவும் மேலே மேலே அதிர்ச்சியானாங்க எல்லாரும். “ப்ரதீப்புக்கு என்னாச்சு? அவனை என்ன பண்ணினாங்க”-னு கேட்டார் வேதமூர்த்தி. “நானே பரவாயில்லேங்கற நிலைப்பா அவனோடது.. அவன் வைஃப்.. ஐ மீன் எக்ஸ் வைஃபை ப்ரெயின் வாஷ் பண்ணி டைவோர்ஸ் பண்ண வைச்சு, அவளை அந்த அசோக் கல்யாணம் பண்ணிக்கிட்டான்”-னு விரக்தியா சொன்னான் விதுரன்.

“சே… என்ன ஜென்மம்”-னு கோபப்பட்டா கிருத்திகா. “இரு.. கிருத்தி! ரியா.. ப்ளீஸ் முழு விவரத்தையும் சொல்லும்மா”-னு கேட்டான் ரிஷிநந்தன். “ம்ம்ம்.. சொல்றேன் ரிஷிண்ணா…” அப்படின்னு முதல்லே இருந்து ஆரம்பிச்சு ஒண்ணு ஒண்ணா எப்படி தெரிஞ்சுகிட்டா-னு எல்லாம் சொன்னா. அவள் சொல்லாம விட்டது இன்னிக்கு நடந்த கடத்தல் டிராமா மட்டும் தான். “ஈஸ்வரா! இவ்வளோ மோசமானவனா அந்த விக்கி?”-னு கேட்டாங்க சங்கரி. “அப்போ இவங்களை பின் தொடர்ந்து போய் தான் அந்த ஏக்சிடெண்ட் ஆச்சா?”-னு கேட்டார் வேதமூர்த்தி. “அது… அன்னிக்கு நான் ஹாஸ்பிடல்லே இருந்து திரும்பி வரும் போது, சுவாதியும் விக்கியும் ஒண்ணா பார்த்தேன். சம்பந்தமில்லாம எப்படீ-னு தான் பின் தொடர்ந்து போனேன்-பா. அங்கே அவங்க பேசறதை ரெகார்ட் பண்ணேன். அப்போ சாதிக் வெளியே வந்தான். என்னை பார்த்துட்டான்-னு நினைச்சு வேகமா கீழே வர்றப்போ ஜன்னலுக்கு வைக்கற மர நிலவு என் முதுகுலே இடிச்சு நான் படிக்கட்டுலே உருண்டுட்டேன்-பா.. அப்போதான் இந்த அடி பட்டுச்சு”-னு சொன்னா. விதுரனுக்கும் இப்போதான் முழு விஷயம் தெரிஞ்சதால, “மடச்சி… அறிவிருக்காடி? படிச்சிருக்கே தானே? இப்படியா ரிஸ்க் எடுப்பே? ஏதாவது பெரிசா ஆயிருந்தா? அப்படியே விட்டேன்னா கன்னம் திரும்பிடும்”-னு கோபத்துலே வீடே அதிர்ற மாதிரி கத்தினான் விதுரன்.

மதுரியா ஒண்ணும் பேசாம அவ முகத்தை நீலவேணி மடியிலே மறைச்சுக்கிட்டா. “செய்யறதெல்லாம் செஞ்சுட்டு பூனை மாதிரி பாட்டி மடியிலே முடங்கினா என்னடி அர்த்தம்?”-னு கோபம் அடங்காம கத்தினான் விதுரன். “விடுப்பா… கோபப்படாதே… நல்லதுக்குத் தானே செஞ்சா? ஆபத்தை பார்க்கலே”-னு சமாதானம் பண்ணார் வேதமூர்த்தி. “ஆமா தம்பி… இப்போ தான் எதுவும் ஆகலியே? ஆபரேஷனும் முடிஞ்சு நல்லா ஆயிட்டாளே?”-னு கேட்டாங்க நீலவேணி. “இல்லே பாட்டி.. எனக்கு..எனக்கு..”-னு அவங்க மடியிலே முகம் புதைச்சு அழுதா மதுரியா. “என்னம்மா சொல்றே?”-னு பதறினாங்க சங்கரி. “எனக்கு குழந்தையே பிறக்காது-னு சொல்லிட்டாங்க.. நான் விது லைஃப்லே அவருக்கு பாரமா உட்கார்ந்து இருக்கேன்”-னு அழவும் வேகமா அவ கிட்ட வந்து அவளை தூக்கி நிறுத்தி கையை ஓங்கினான். ஆனா அடிக்கலே. 

“விதுரா… வேண்டாம்”-னு பெரியவங்க எல்லாரும் அலறிட்டாங்க. மதுரியாவும் பயந்துப் போனா. “மது.. என்னை கொலைகாரனாக்காதே.. பயங்கர கோபம் வருது.. உனக்கு பிள்ளையே பிறக்காதுன்னா சொன்னாங்க.. ஒரு வேளை டிரீட்மெண்ட் பண்ண வேண்டி வரலாம்-னு தானே சொன்னாங்க? இதுவும் இல்லாமலும் போகலாம், நார்மலாவே ஆகலாம்-னு தானே சொன்னாங்க? ஏன் மது.. பாரமா இருக்கேன்-னு சொல்லி என்னை மட்டும் இல்லாம எல்லாரையும் ஹர்ட் பண்றே?”-னு கோபத்துலே ஆரம்பிச்சு ஆற்றாமையிலே முடிச்சான் விதுரன்.

நீலவேணி கிருத்திகாக்கிட்ட தண்ணி கொண்டு வரச் சொல்லி ஜாடை பண்ணாங்க. “ரியாம்மா… இந்தா.. முதல்லே தண்ணியை குடி. அப்புறம் பேசலாம்”-னு குடிக்க வைச்சாங்க. “இப்போ நான் கொஞ்சம் பேசலாமா? ஏன் ரியா? தனியாளா நின்னு உன் புருஷனை பெரிய பிரச்சினையிலே இருந்து மீட்டெடுத்த தைரியம் எங்கேப் போச்சு? வாழ்க்கையில பரஸ்பர அன்பு அப்படின்னா குழந்தை மட்டும் இல்லே.. புரிதல், விட்டுக் குடுக்கறது, குறைகளை ஏத்துக்கறது எல்லாம் தான்.. உன்னோடது குறை-னு கூட சொல்ல முடியாது… குறையாவே இருந்தாலும் என்ன இப்போ? பிள்ளை இல்லேன்னா ரெண்டாம் தாரம் கட்டறது நம்ம ரெண்டு வீட்டுலேயும் பழக்கம் கிடையாது. பிள்ளை இல்லேன்னா காழியூர் சிவன் குடுக்கலே-னு நினைச்சுப்பாங்க. சும்மா பாரம் அது இது-னு பேசக் கூடாது. என்ன பாரம்? நீ இல்லேன்னா, அவனை காப்பாத்தலேன்னா அவன் எப்படி சிக்கி இருப்பான்? அவன் அப்படி சீரழிஞ்சா பரவாயில்லையா? நீ செஞ்சது உதவி-னு காலம் பூரா டெய்லி வந்து உனக்கு நன்றி சொன்னா ஒத்துப்பியா? மாட்டே தானே? நம்ம எல்லாம் ஒரே குடும்பம். சந்தோஷம் வந்தா கொண்டாடுவோம்.. வருத்தம் வந்தா தோள் குடுப்போம். இனிமேல் இப்படி அசட்டுத்தனமா பேசக் கூடாது புரிஞ்சுதா?”-னு கண்டிப்பா சொன்னாங்க நீலவேணி.

சரி-னு கண்ணை துடைச்சுட்டு, “எனக்குக் குழந்தைப் பிறக்குமா பாட்டி?”-னு பாவமா கேட்டவளைப் பார்த்து எல்லாருக்கும் கண்ணுலே தண்ணி. ஆனா வெளிக் காட்டிக்கலே. “ரியா… உங்க கல்யாணம் நடக்க வாய்ப்பே இல்லே-னு நினைச்சப்போ உங்க தாத்தா நடத்தினார். நீ எங்களை கேட்காதே. அவரையே கேளு.. நேரம் வர்றப்போ கண்டிப்பா குடுப்பார்”-னு சொன்னாங்க பாட்டி. “ஆமா… கை நிறைய குடுக்க போறார்… பார்த்துக்கறதுக்கு நீயும், விதுரனும் திண்டாட போறீங்க”-னு கிருத்திகா சொல்லவும், எல்லாரும் மனசு லேசாகி சிரிச்சாங்க. அதே நேரம், “மது… மது.. டிராயிங் வரைஞ்சு தா ப்ளீஸ்”-னு விவான் வந்தான். “ஏன் டா? அது என்ன? மட்டு மரியாதை இல்லாம கூப்பிடறே?”-னு பாய்ஞ்சா கிருத்திகா. “அக்கா.. ப்ளீஸ் விடுங்க. வீ!! நீ என் ரூமுக்கு போ.. நான் இதோ வர்றேன்”-னு அனுப்பினா மதுரியா. “ரிஷியண்ணா, அந்த சாதிக் நம்ம கம்பெனியை கவிழ்க்க வழி தேடறான்… கேர்ஃபுல்லா இருங்க”-னு சொல்லவும், “ரியாம்மா நான் அப்துல்லா கிட்ட பேசறேன். அவர் ரொம்ப நல்லவர். டோண்ட் வொர்ரி”-னு சொன்னார் வேதமூர்த்தி. அதோட சபை கலைஞ்சுது.

****************************************************************************************

ராத்திரி 10 மணி…

அவன் பெட்லே சாய்ஞ்சிட்டு பெண்டாட்டியை ‘வெட்டவா குத்தவா’-னு பார்த்திட்டு இருந்தான் விதுரன். ஆனா இது தெரியாம பெட்லே அவன் பக்கத்துலே உட்கார்ந்துகிட்டு சித்தியும் பையனும் அவன் டிராயிங் புக்லே வேலையெல்லாம் முடிச்சுட்டு சீரியஸா ‘டிக்-டேக்-டோ’ விளையாடிட்டு இருந்தாங்க. “மதும்மா… படுக்கலாமா?”-னு பொறுமையை இழுத்துப் பிடிச்சுட்டு கேட்கவும், “இன்னும் டூ கேம்ஸ் இருக்கு விது… நான் ‘வீ’யை ஜெயிக்க ரெண்டு பாயிண்ட்ஸ் தான் வேணும்”-னு அவன் முகத்தைக் கூடப் பார்க்காம சொன்னா. “இவளை என்ன தான் பண்றது? இவ தான் இன்னிக்கு அவங்க பெண்டை கழட்டினா-னு சொன்னாலோ… இல்ல பாட்டிக் கிட்ட சாய்ஞ்சு ஒப்பாரி வைச்சா-னு சொன்னா யார் நம்புவாங்க?”-னு பெருமூச்சு கலந்த சிரிப்போட அவளையே பார்த்துட்டு இருந்தான். அந்நேரம் பையனை கூப்பிட வந்த கிருத்திகாவுக்கு இந்த காட்சியை பார்த்து நமுட்டு சிரிப்பு. வந்தவ விவானோட முதுகுலே தட்டி, “ஏன் டா? டிராயிங் புக் வேலை முடிஞ்சா வர வேண்டியது தானே? எப்போ பார் விளையாட்டு!! வாடா”-னு கூப்பிட்டா. 

“அக்கா.. முகம் பள பள-னு ஆகி க்ளேமர் கூடியிருக்கோ? என்னக்கா பாசிடிவ் போல இருக்கு?”-னு கிண்டலா கேட்கவும், அழகா கன்னம் சிவந்து, “போ… சரியான வாலு..”-னு சிரிச்சுட்டே பையனை கூட்டிட்டுப் போனா கிருத்திகா. “குட் நைட் வீ… நாளைக்கு கண்டின்யூ பண்ணலாம்”-னு சொன்னா மதுரியா. “மது.. நீ போய் நைட் டிரெஸ் மாத்திட்டு வா”-னு சொல்லிட்டுப் போய் அவங்க ரூம் கதவை சாத்தினான். மதுரியாவும் பெட்லே இருந்து அவங்க விளையாடின குப்பை எல்லாம் எடுத்துப் போட்டுட்டு, உடை மாத்தப் போனா. விதுரன் முகத்துலே பெரும் யோசனை.. அவனுக்கு இன்னிக்கு மதுரியா கிட்டே நிறையப் பேசணும் போல இருந்துச்சு. ஆனா எப்படி ஸ்டார்ட் பண்ணணும்-னு புரியலே. ஆனா அவன் மனசுலே என்னவெல்லாம் இருக்கோ அத்தனையும் சொல்லிடணும்-னு நினைச்சான். 

விதுரனுக்கு அவன் அன்பு மேலே முழு நம்பிக்கை இருந்துச்சு. அவனால மதுரியாவை தங்களுக்கு குழந்தையில்லை அப்படீ-னு ஏக்கம் வராம பார்த்துக்க முடியும். ஆனா அதுக்கு முக்கியம் அவனோட அன்பை அவ புரிஞ்சுக்கறது. அதை எப்படி செய்யறதுனு தான் அவனுக்கு யோசனையே. அவன் யோசனை கலைஞ்சு மதுரியா படுக்கையில உட்கார்ற அசைவுலேதான். “மது… விவான் மேலே உன் அன்பு எனக்கு புரியுது… ஆனா பேம்பர் பண்ணி ஸ்பாயில் பண்றாப் போல ஆகிடக் கூடாது”-னு தணிவா சொன்னான். “நான் என்ன பண்ணேன் விது?”-னு கேட்கவும், அவன் ஒண்ணும் சொல்லலே. “ம்ம்ம்… சொல்லுங்க”னு கேட்கவும், “மது… நீ டெய்லி அவன் கூட விளையாடறது, எல்லார் கிட்டேயும் அவனுக்கு சப்போர்ட் பண்றது இதெல்லாம் நானும் பார்த்தேன். அதனால உனக்கும் அவனுக்கும் சந்தோஷம்… ஏன் வீட்டுலே கூட தான். ஆனா அவனை கவனிச்சியா உன்னை பேர் சொல்லி கூப்பிட்டா கூட பரவாயில்லே… ஆனா மரியாதையே இல்லாம பேசறான்”-னு சொன்னான் விதுரன். “சே.. இவ்வளோ தானா? சின்ன பையன் விது அவன்… வளர்ந்தா தானே ரியலைஸ் பண்ணிப்பான்”-னு மதுரியா சொல்லவும், “அஞ்சுலே வளையாதது ஐம்பதுலே வளையாது மது… அது மட்டுமில்லே… அவன் உன் சப்போர்ட்லே அண்ணியவே எதிர்த்து பேசறான். அண்ணி நல்லவங்க தான். ஆனா தன் பையன் தன்னையே எதிர்த்துப் பேசினா சும்மா இருக்க மாட்டாங்க. வேண்டாம் மது. லிமிட்டோட இரு. உன்னை ஏதாவது சொன்னா என்னால… எனக்கு தாங்காது”-னு சொன்னான் விதுரன்.

மதுரியா முகத்துலே வருத்தமான சிரிப்பு. “சரி விது… அளவோடவே இருக்கேன்… எனக்கும் தெரியும் விது. எனக்கு நிகுவோட இடத்தைத் தான் வீ ரீப்ளேஸ் பண்றானே தவிர, நான் அவனை என் பிள்ளையா நினைக்கலே. அவனை வளர்த்தணும் அப்படி இப்படி-னு பேராசையும் கிடையாது. தாயும் பிள்ளையும்னாலும் வாயும் வயிறும் வேறே-னு எனக்கு நல்லா தெரியும். அதோட இந்த டைம்லே கிருத்தி அக்காவுக்கு ஒரு ஹெல்ப்பா தான் செய்யறேன்”-னு சொன்னா. “என்ன மது சொல்றே?”-னு புரியாம கேட்கவும், “அக்கா ரெண்டாவது கன்ஸீவ் ஆகிருக்காங்க விது.. அதான் பேசிட்டு இருந்தோம்”-னு சந்தோஷமா சொன்னா. 

ஏனோ விதுரனால கொஞ்சம் கூட சந்தோஷப் பட முடியலே. அதுக்கு மாறா ஆரம்பத்துலேயிருந்து நம்மனால இவளுக்கு எவ்வளோ கஷ்டம்… எவ்வளோ இழப்பு.. இப்போவும் தன்னால தான், தனக்கு உதவ போய்த் தான் அவளுக்கு பிள்ளை பெத்துக்கறதுலே கஷ்டம்-னு தெரிஞ்சும், தன் வாழ்க்கையை விட்டு விலக சித்தமா தானே இருந்தா. அண்ணி ரெண்டாவது கன்ஸீவ் ஆகியிருக்காங்க-னு தெரிஞ்சு, தனக்கில்லை-னு தெரிஞ்சு எவ்வளோ வலிச்சிருக்கும்னு தோணவும், கழிவிரக்கம் மேலோங்க, “மது..”-னு கூப்பிட்டே அவ மடியிலே முகம் புதைச்சு அழுதான். மதுரியாவும் அவனை தடுக்கலே. அவளுக்கு புரிஞ்சுது மதியம் விக்கி, ரிதேஷ் சாயம் வெளுத்ததுலே இருந்து அவனுக்குள்ளே உருவான அழுத்தத்தோட வெளிப்பாடு-னு. ஈகோ பார்த்து இவ்வளோ நேரம் அடக்கினதே பெரிய விஷயம்-னு அவளுக்கும் புரிஞ்சுது. விதுரனும் சரி, ப்ரதீப்பும் சரி, தங்களை ரொம்ப தைரியமாகவும் கம்பீரமாகவும் காட்டிக்கிட்டாலும் உள்ளூர ரொம்பவே காயப்பட்டு போயிட்டாங்கன்னு புரிஞ்சிருந்திருந்துச்சு.

“ஐ அம் வெரி சாரி மது.. என்னால நீ நிறைய கஷ்டப் பட்டுட்டே. ரொம்ப சாரி”-னு இதையே அரட்டிட்டே அழுதான். அவளும் வார்த்தையிலே எந்த சமாதானமும் சொல்லலே. தலையை தடவி, முதுகை தடவி ஆறுதல் படுத்தினா. கொஞ்ச நேரம் பொறுத்து உட்கார்ந்த வாக்குலே அவன்  தலை மேலே தன் தலையை வைச்சு படுத்தா. “இட்ஸ் ஓகே விது.. எல்லாம் முடிஞ்சுது. விடுங்க.. பாஸ்ட் ஈஸ் பாஸ்ட். நீங்க நட்புலே உண்மையா தான் இருந்தீங்க. லீவ் இட்”-னு சொல்லவும் டக்-னு அவ தலையை உதறிட்டு அவ மடியிலே இருந்து நிமிர்ந்தான். “நீ என்ன சொல்றே?”-னு கேட்டான். “இன்னிக்கு ஈவினிங் நடந்ததை நினைச்சு ஃபீல் பண்றீங்க-னு புரிஞ்சுது. பட் இன்னொருத்தர் நடத்தைக்கும் குணத்துக்கும் நம்ம என்ன பண்ண முடியும் விது? விடுங்க… உங்க ஃப்ரெண்ட்ஸ் திரும்பவும் உங்களைத் தேடி வருவாங்க”-னு சொல்லவும், விதுரனுக்குள்ளே அவ்வளோ வலிச்சுது.

“மது… ஏன் மது? என்னை எப்போவுமே புரிஞ்சுக்க மாட்டியா? நான் எதையோ நினைச்சு ஃபீல் பண்ணா நீ எதையோ பத்தி யோசிக்கிறே? நான் போயும் போயும் அந்த துரோகிங்களை பத்தி நினைச்சு அழறேன்னா நினைக்கிறே? நான் உன்னை நினைச்சு, உனக்காக ஃபீல் பண்ணி அழறேன்டீ. எனக்கு அழத் தெரியும்-னு காட்டினவளே நீ தானேடீ. அதே மாதிரி நான் இது வரைக்கும் அழுதது எல்லாம் உனக்காக மட்டும் தான்டீ. உனக்குப் புரியுதா இல்லையா?”-னு அழுத்தமா சொன்னான். “எனக்காகவா? என்னாலேயா?”-னு அதிர்ந்துப் போனா மதுரியா. “என் அன்பை நீ உணரவே இல்லே-னு புரியுது. ஏதோ கல்யாணம் ஆயிடுச்சு.. அதனால ஒரு புருஷனா மனைவியை நேசிக்கிறேன்-னு நினைச்சு இருக்கே இல்லே?”-னு நேரா பார்த்து கேட்டான். “அ… அது… அதுவே எனக்கு போதுமா இருக்கு”-னு தடுமாறி சொல்லவும், “ம்ம்ம்.. கரெக்ட் தான். ஏன்னா எதிர்பார்ப்பில்லாத லைஃபுக்கு அது போதும் தான். ஆனா ஒரே ஒரு கேள்வி. என்கிட்ட கூட எதிர்பார்ப்பில்லாம வாழ போறேன்னா, அப்போ எதிர்ப்பார்க்கிற இடத்துலே யாரை வைக்க போறே?”-னு கேட்டுட்டு விறு விறு-னு எந்திரிச்சு குளியலறைக்குப் போயிட்டான்.

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top