அசுரன் 110

அசுரன் 110

 

கண்ணாடி முன்னாடி போய் நின்றவள்… தன் கணவனுக்காக ஆசை ஆசையாக அலங்காரம் செய்து கொண்டதை..  அவன் கவனிக்க கூட இல்லை என்று நினைக்க மனது வலிக்கத்தான் செய்தது.. வாய் விட்டு புலம்ப ஆரம்பித்தாள்… அவருக்காக ஆசையா ரெடி ஆனேன்… என்ன சரியா பாக்க கூட இல்ல… வர வர என் மேல இன்ட்ரஸ்டெ அவருக்கு இல்ல… என்று சலித்தபடி…

தனது தலையில் இருந்த பூவை அவிழ்க்க போக.. வேகமாய் அறைக்குள் நுழைந்தவன்… அவளை இழுத்து வைத்து இதழில் ஆழ்ந்த முத்தமிட்டான்… பின் முகம் எங்கும் அழுத்த முத்தங்கள்..  இன்னைக்கு ரொம்ப அழகா இருக்கடி… வச்ச கண்ணு எடுக்க முடியல..   ஆனா எனக்கு தான் முழுசா சாப்பிட கொடுப்பினை இல்லை… அதுவும் இன்னைக்கு உன்னோட கண்ணு என்ன கொல்லுது… இதழ்கள் ஒருபுறம் முத்தமிட்டு கொண்டிருக்க கைகள் ஒரு புறம்… மேடு பள்ளங்களை  ஸ்பரிசித்துக் கொண்டிருந்தது… அந்த முதுகுல இருக்க மச்சம் இன்னைக்கு என்ன தூங்க விடாது… என்று புலம்பினான்… அவள் முகத்தை கைகளால் தாங்கியவன்..  கண்ணில் தீட்டி இருந்த கண் மையை சுண்டு விரலால் சிறிது எடுத்து காதுக்கு பின்னால் திருஷ்டி பொட்டு வைத்தான்…   அவளின் மூக்குடன் தனது மூக்கை உரச விட்டு… நிஜமா என் மேல கோவம் இல்லையே… என்றான்…

 

இல்லை என்று தலையசைத்தவள்..  சிரித்தபடியே பழகிடுச்சு என்றாள்…

 

அது சாதாரண வார்த்தையாய் தெரிந்தாலும்… எதிர்பார்த்து ஏமாந்ததின் வலி அதிலிருந்தது.. 

 

என்ன சொல்றதுன்னு எனக்கும் தெரியலடி… எனக்கு மட்டும் ஆசை இல்லைனு நினைக்கிறயா… என்று கேட்டுவிட்டு ஒரு கணம் அமைதியாக அவள் முகத்தை பார்த்தவன்…

 

நான் போய் அவனுக்கு ஏதாவது சமைக்கிறேன் நீ ரெடியாகிட்டு வா… என கூறிவிட்டு சென்றான்…

 

அறைக்குள் படுத்து இருந்த அருண்..  தலையின் மேல் ஒரு கையை வைத்து விட்டத்தை பார்த்தபடி மலரை பற்றி தான் யோசித்துக் கொண்டு இருந்தான்..  அவள் இன்று வேகமாய் வந்து சிரிப்புடன் கதவை திறந்ததும்… உண்மையில் அவன் மனம் பூரித்து போனது அந்த நிகழ்வில்…. அவள் முகத்தில் இருந்த புன்னகை அவனைக் கண்டதும் மறைந்து போனதை பார்த்தவனுக்கு செருப்பால் அடித்தது போல்  நிகழ்காலத்தை புரிந்து கொண்டான்… அந்த முகத்தில் இருந்த பூரிப்பும் சிரிப்பும் அவனுக்கானதாய் தான் இருந்திருக்க வேண்டும்… அதைக் கெடுத்துக் கொண்டது அவன் தானே..  அசிங்கப்படுத்தி ஒதுக்கி வைத்தது அவன் தானே.. பல நாட்கள் அவன் அசிங்கப்படுத்திய போதும் எத்தனையோ நாட்கள் அவனுக்காய் காத்திருந்து கதவு திறந்து உணவை சூடு பண்ணி பரிமாறி இருக்கிறாள்…. அப்பொழுதெல்லாம் அவனை மயக்குவதற்காக ஏமாற்றுவதற்காக நடிப்பது போல் தோன்றியது..  இன்று அந்த முகத்தில் இருந்த பூரிப்பு அடுத்தவனுக்கு சொந்தமாகிய பின் ஏங்கி என்ன பயன்… உனக்காக ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்வாள்… அதில் உண்மையான அக்கறையும் அன்பும் நிறைந்து இருக்கும்.. 

மருத்துவமனையில் இருந்து ஆதியின் வீட்டுக்கு அழைத்த பொழுதே அருண் மறுத்தான்… 

 

நான் வரல…

 

மிதி வாங்குவ… நைட் ஃபீவர் அதிகமான… மயக்கம் போட்டு விழுந்தா..  வாமிட் பண்ணா என்ன பண்றது… யாரு பாக்குறது…

 

நான் வீட்டுக்கு போறேன் ரித்துவ பாக்கணும்…

 

இத்தனை நாள் ரித்து உன்கூட தான் தூங்குகிறானா… இல்லல அப்ப மூடிட்டு வா… மோர் ஓவர் நீ பீவரோட  போய் குழந்தையை தொட்டா குழந்தைக்கும் காய்ச்சல் வரும்.. 

 

நான் விக்ரம் வீட்டுக்கு போறேன்…

 

விக்ரம் வீட்டிலேயே ஆள் இல்லடா அகி மட்டும் தான் இருக்கா அவளுக்கு எதுக்கு சிரமம்… அப்புறம் நான் எதுக்கு தான் இருக்கேன்… இல்ல என் உறவே வேணாம்னு முடிச்சுக்கலாம் நினைச்சிட்டியா…

 

அது அவ்வளவு கம்பேர்டபிளா இருக்காது டா… என்றான் சலிப்பாய் கழுத்தை திருப்பி…

 

மலர் எதுவும் சொல்லுவா நினைக்கிறியா… அவ எதுவும் சொல்ல மாட்டா… அவ எப்பவும் நம்ம மூணு பேருக்குள்ள வரமாட்டா… என்று கூறி அருண் கையை பிடித்து தரதரவனை இழுத்து வந்து விட்டான்…

 

திருமணமான ஒரு மூன்று மாத காலத்தில், மலர் எப்படி நடந்து கொண்டாள் என்பதை எல்லாம் யோசித்துப் பார்த்துக் கொண்டுதான் இருந்தான்..  இரவு அவனுக்காக வாசப்படியில் காத்திருப்பாள்… இப்படி எல்லாம் பண்ணி என் மனசுல இடம் பிடிக்கலான்னு பாக்குறியா என்று எரிந்து விழுந்து விட்டு செல்வான் 

 

அவனுக்கான உணவை அவள் தான் சமைத்து வைப்பாள்… அதுவும் அது அவனுக்கு பிடித்த உணவாக இருக்கும்… என்ன மயக்குறத்துக்கு இந்த மாதிரி ஐடியா எல்லாம் உனக்கு யார் கொடுக்கிறது….  என்று விஷத்தை கக்கினான்…

 

ஒருபோதும் அவன் படுக்கை விரிப்பு கலைந்து இருக்காது அவன் குளித்து வருகையில் அவனுக்கான ஆடைகள் காத்துக் கொண்டிருக்கும் அவன் காலணியில் கூட அழுக்கு இருந்து அவன் பார்த்ததில்லை அப்பொழுதெல்லாம் அவன் நினைத்தான் சம்பளம் கொடுத்தால் வேலைக்காரர்கள் இதை எல்லாம் செய்யப் போகிறார்கள் என்று இப்பொழுதும் அவன் வீட்டில் வேலைக்காரர்கள் இருக்கிறார்கள் ஆனால் அவள் செய்யும்போது இருந்த அக்கறையும் அன்பும், இப்பொழுது உணரப்படுவதில்லை… 

 

இன்னும் பல பல வேலைகள் அவை அனைத்திற்கும் பரிசாக அவளுக்கு கிடைத்தது அவமானம் மட்டுமே..  நீண்ட பெருமூச்சு எடுத்து விட்டுக்கொண்டாள்.. 

 

இந்த மலர் அருண் வீட்டிலிருந்து இருந்தால் உடம்பு சரியில்லாத நிலையில் அவனுக்கு ராஜ மரியாதை கிடைத்திருக்கும்… நேரத்திற்கு உணவு ஜூஸ் மருந்து அனைத்தும் அவனை தேடி வரும்…

 

இதெல்லாம் அவளை வேலைக்காரியாய் நடத்தும் பொழுதே நடக்கும்… ஒருவேளை அவளை ஒரு கண்ணியமான மனைவியாய் நடத்தி இருந்தால்… அவன் வாழ்வு எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துப் பார்த்தான்.. 

 

வாழ்க்கை சக்கரம் பின்னால் சுழலாதா என்ற ஒரு எண்ணம்…  கைவிட்டுப் போன பொருளை எண்ணி காலம் கடந்து யோசித்து என்ன பயன்..  நண்பனின் மனைவியாய் பார்க்கும் போது மனம் வலிக்க தான் செய்கிறது…

 

இப்பொழுது யாரும் இல்லாமல் அனாதையாய் ஆகிப்போனது போல் உணர்வு…

யானை தன் தலையில் தானே மண்ணள்ளி போட்டு கொள்ளுமாம்… மொத்தமாய் அள்ளிப் போட்டுக் கொண்டான்…

 

என்ன பண்றீங்க… உடை மாற்றி விட்டு வந்தவள்… சமையலறையில் உருட்டி கொண்டு இருந்த ஆதியிடம் கேட்க…

 

காய்கறிகள் நறுக்கி கொண்டு இருந்தான்… வெஜிடபிள் சூப் வைக்கலாம் பார்த்தேன்…

 

விலகுங்க நான் பண்றேன்… 

 

வேணாம் நானே ட்ரை பண்றேன்…

 

அவருக்கு ஏற்கனவே உடம்புக்கு முடியாம இருக்கு நீங்க ட்ரை பண்றத சாப்பிட்டு மேலும் ஏதாவது ஆயிட போகுது… என்று சமையல் திட்டில் சாய்ந்து கைகட்டியபடி குறும்பு புன்னகை செய்தாள்…

 

உங்க அண்ணன் ஊர்ல இருந்து வந்த பிறகு அவன் கிட்ட கேட்டு பாரு… என்னோட சமையல் பத்தி சொல்லுவான்…

 

ம்..  அவர் வந்த பிறகு கேட்டுக்கலாம்… இப்ப தள்ளுங்க என்று கூறி… சூப் தயாரிக்கலானாள்.

 

என்னடி என்ன என்னமோ செய்ற..  அவ செய்வதை கவனமாக கற்றுக் கொண்டான்…

 

இதெல்லாம் செஞ்சா தான் அது பேர் சூப்… என்று கூறியபடி ஒரு கிண்ணத்தில் ஊற்றி… அவன் கையில் கொடுத்தாள்…

 

தேங்க்ஸ் டி..  என்று கூறிவிட்டு நகர போனவனை நிறுத்தி…

 

ஃபர்ஸ்ட் நீங்க குடிங்க..  

 

அவன் பசியோட இருப்பான் அவனுக்கு கொண்டு போறேன்டி…

 

காய்ச்சல் இருக்கவங்களுக்கு வாய்ப்புண்ணா இருக்கும்…  கொஞ்சம் ஆறிப்போய் இருக்கிறது நல்லது..  நீங்க சூடா குடிச்சிட்டு அவருக்கு எடுத்துட்டு போங்க… 

 

அவனுடையதை எடுத்துக் குடித்தான்.. ம்ம்..  யம்மி… நீ கொஞ்சம் குடி என்று ஊதி ஊதி அவளுக்கும் ஊட்டி விட்டான்…

 

ஆழ்ந்த யோசனையில் இருந்தவனை.. எழுப்பி கையில் சூப்பை கொடுத்தான்… 

உணவின் மணமே அவனது பசியை தூண்டியது… கூடவே பழைய நினைவுகளையும் கிளறியது…

சூப்பை ஒருவாய் எடுத்து ருசித்தான்…  கண்கள் மெல்ல கலங்கியது… மற்றொரு வாய் எடுத்து குடிப்பதற்கு முன்… கொஞ்சம் பெப்பர் இருந்தா எடுத்துட்டு வா டா… என்று ஆதியை அனுப்பி வைத்தான். அவன் சென்ற பிறகு..  கொஞ்சம் சுதந்திரமாய் கண்கள் கலங்க முடிந்தது.. ஒவ்வொரு வாயும் குடிக்க குடிக்க..  கண்ணீர் நீர் வடிந்து கொண்டே இருந்தது.. தோள்பட்டையில் முகத்தை துடைத்துக்கொண்டே சூப் குடித்தான்… அழுகை முட்டிக்கொண்டு வந்தது…  சூப்புடன் சேர்த்து அழுகையையும் முழுங்கிக் கொண்டான்…

 

ஆதி பெப்பர் எடுத்து வரும் பொழுது… அவன் சூப்பை காலி செய்து இருந்தான்.. 

 

என்னடா கண்ணு இப்படி சிவந்து இருக்கு முகமெல்லாம் கூட ரொம்ப சிவந்து இருக்கு என்னடா என்ன பண்ணுது… அவன் தலையை தடவி நெத்தியை தொட்டுப் பார்த்து..  நாடியை நிமிர்த்தி ஆதி கேட்க…

 

ஒன்னும் இல்ல நான் நல்லா இருக்கேன்…

 

சொல்லித் தொலைடா… என்ன பண்ணுதுன்னு,  ஏன்டா… உயிரை வாங்குற..  என்று முகத்தை குரு குரு என்று பார்த்து கேட்க..

 

ஆதியின் வயிற்றை மெல்லமாய் கட்டிக் கொண்டான் அருண்… சிறிது நேரம் முகம் புதைத்திருந்தான்…

 

பின் பக்க தலையை மெல்லமாய் தடவி… என்னடா அருண்.. என்ன பண்ணுது… ஏதாவது சொன்னா தானே தெரியும்… என்று தன்மையாய் கேட்க… 

 

மெல்ல அருணின் உடல் குலுங்கியது… 

 

டேய்..  என்னடா அழ்றீயா… என்று பதட்டமாய் அவன் தலையை நிமிர்த்த பார்க்க.. மேலும் ஆதியின் வயிற்றை இறுக கட்டிக் கொண்டான்… 

சிறிது நேரம் அவன் அழுவதற்காக நேரம் கொடுத்து பொறுமை காத்தவன்… எதுக்குடா அழுகுற… வீட்ல எதுவும் பிரச்சனையா…. என்று பொறுமையாய் கேட்டான்.. 

தப்பு… (திக்கி.. திணறி)… தப்பு… பண்ணிட்டேன் டா ஆதி… அடக்க முடியாத மன துயரத்தில் மூக்கில் இருந்தும் தண்ணீர் வடிந்தது…  லைஃப் ஃபுல்லா நிறைய தப்பு பண்ணிட்டேன் டா… அவன் திக்கி திக்கி பேச பேச அவனது உடலும் நடுங்கியது.. காய்ச்சலின் காரணமாக கொஞ்சம் பலவீனமாய் இருந்தான்.   எல்லாரையும் நிறைய ஹர்ட் பண்ணிட்டேன் டா… நானெல்லாம் மனுசனே கிடையாது… டெவில்… 

என்ன தப்புன்னு சொல்லுடா சரி பண்ணலாம்…

முடியாது எனும் விதமாய் தலை அசைத்தவன்… நான் பண்ண எந்த தப்பையும் இனிமேல் சரி பண்ண முடியாது டா… எல்லாமே கையை மீறி போயிடுச்சு… நான் யாரையும் குறை சொல்ல விரும்பல… எல்லாமே என்னோட தப்பு தான்… ஐ ஃபீல் கில்ட்டி… அன்னைக்கு கூட உன்ன ரொம்ப தப்பா பேசிட்டேன்டா…  சாரிடா ஆதி… என்று அழுகையுடனே பேசியவனை… தட்டிக் கொடுத்து சமாதானம் செய்தான்…

அத பத்தி எல்லாம் எதுக்குடா பேசுற… இப்போ உனக்கு என்ன பிரச்சனைன்னு சொல்லு… அதை சரி பண்ணலாம்…

நான் என்ன தப்பு பண்ணி இருந்தாலும் அதை சரி பண்ணி தருவியா… 

உன்னோட சந்தோசமான வாழ்க்கைக்காக நான் என்ன வேணா பண்ணுவேன்டா, சொல்லு…

சத்தியமா… 

அவன் தலையில் அடித்து சத்தியம் செய்தான்… போதுமா?…  இப்ப சொல்லு என்ன பிரச்சனை..  எதுக்கு இப்படி அழுகுற…

கேள்வி கேட்பவனின் முகத்தை தான் ஆழ்ந்து பார்த்துக் கொண்டு இருந்தான் அருண்.

 

❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்.. 

      ஊக்கபடுத்த கருத்துகளையும் பகிருங்கள் .

      நன்றி!❤️

❤️ Loading reactions...
2 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top