அத்தியாயம் -45

மதுரியா அவன் வார்த்தைகள்லே ஆடிப் போயிட்டா. எதுவுமே யோசிக்க தோணாம தேங்கி நின்னுட்டா. அவ மனசுல இருந்த உண்மையை சொல்லிட்டானே! மதுரியாவுக்கு விதுரன் மேலே எவ்வளோ அன்பு இருக்கோ அதே அளவு பாதுக்காப்பிண்மையும் இருக்கு. அவன் தன்னை மட்டும் முதன்மை படுத்தணும்-னு நினைச்சதே இல்லை. ஆனா, தன்னோட இடத்துக்கு சுவாதி வர இருந்ததும், தங்களோடப் பிரிவுக்கு விக்கியோட பெரும் பங்கு இருந்ததும், தன்னை விட அவங்க தான் முக்கியம்-னு பதிஞ்சுப் போச்சு. அதனாலேயே அவன் மன மாற்றத்தையும் அன்பையும் அவ முழுசா உணர முடியலே. ஒரு வேளை ஏதாவது புரியற மாதிரி இருந்தா கூட தேவை இல்லாத எதிர்பார்ப்பு வேண்டாம்-னு சொல்லி சொல்லி அவ மனசைப் பொறுத்த வரைக்கும் அவன் அவளோட ஹஸ்பெண்ட், அதுக்குரிய கடமையை அவன் செய்யறவரைக்கும், வேறே எதுவும் எதிர்ப்பார்க்கக் கூடாது-னு முடிவு பண்ணிக்கிட்டா. கணவன் கிட்டேயிருந்து காதலை எதிர்பார்க்கலே-னு வெளியே தெரியாம பார்த்துக்கிட்டா. ஆனா ஒரு உணர்ச்சிவசப்பட்ட நிலையில அவ வார்த்தைகள்லே இருந்தே அதைக் கண்டுப்பிடிச்சான் விதுரன்.

விதுரன் எந்திரிச்சு போயி அவன் முகத்தை கழுவி துடைச்சு, தண்ணியும் குடிச்சு, தன்னை நிலைப் படுத்திக்கிட்டான். அவன் அதை எல்லாம் செஞ்சுட்டு திரும்பி படுக்க வரும் போது கூட மதுரியா அப்படியே தான் இருந்தா. “மது… மதும்மா..”-னு அவ கன்னத்தை தடவவும் “ஹாங்.. விது.. நீங்க என்னை சந்தேகப்படறீங்களா?”-னு அதிர்ந்துப் போனா மதுரியா. விதுரன் கட கட-னு சிரிச்சு, “உன் புருஷன் இன்னும் பைத்தியமாகலேடி! மது! நம்ம நிறைய பேசணும். நீ என் அன்பை உணரலேங்கறதை விட, நான் உனக்கு உணர்த்தி இருக்கணும். ஆனா எனக்கு ஒரே வருத்தம், கல்யாணத்துக்கு அப்புறம் என் செய்கையும் பேச்சும் என் அன்பை உணர்த்தி இருக்கும்-னு நினைச்சேன்… அதனால தான் நான் பழைசைப் பத்தித் தேவைக்கு அதிகமா பேசவே இல்லை. ஆனா அதெல்லாம் பேசி சரி பண்ணியிருக்கணும்-னு இப்போ உணர்றேன்… நான் எல்லாம் சொல்றேன். நாம எல்லாம் பேசலாம்.. ஆனா நம்ம பேசறதுலே சிலது உனக்கு பிடிக்காம கஷ்டமா இருக்கலாம். அதுக்காக கோவிச்சுக்கிட்டு பாதியிலே போயிடாதே.. நம்ம வாழ்க்கை மது… ப்ளீஸ்”-னு அமைதியா கேட்டான். வார்த்தைகள் சத்தமா வராதோங்கற பயத்துலே தலையை மட்டும் ஆட்டினா மதுரியா.

கட்டில்லே சாய்ஞ்சு அவ பக்கத்திலே உட்கார்ந்து, அவ கையை எடுத்து தன் கைக்குள்ளே வைச்சு பேச ஆரம்பிச்சான். தன் கைக்குள்ளே இருந்த அவ கையை எதுவும் பேசாம தடவிக் கிட்டே இருந்தான். “எல்லாம் லக்ஸ் சோப் தான்.. சொல்ல வந்ததை சொல்லுங்க. இல்லை விடுங்க. நான் தூங்கறேன்”-னு நக்கலும் கோபமுமா சொன்னா. “மது.. நம்ம ரெண்டு ஃபேமிலியும் ரொம்ப க்ளோஸ்னாலும் நான் பத்தாவது க்ளாஸ் போனதுலே இருந்து என் உலகம் வேறே-னு ஆயிடுச்சு. ட்யூஷன், ஸ்கூல், ஃப்ரெண்ட்ஸ்-னு போயிடுச்சு. நான் நல்லா படிச்சதால பத்தாவது, பன்னிரண்டாவதுலே எல்லாம் ஃபர்ஸ்ட் ரேங்க். அதனால பயங்கர ஹெட்வெயிட், ஏட்டிட்யூட் எல்லாம் கூடவே வந்துச்சு. வீட்லே அப்பா, அம்மா யாரும் எதுவும் சொல்லலே. அதனால அப்படி இருக்கறதுதான் சரி-னு கர்வம் திமிரோடவே வளர்ந்தேன்.. அப்போ அதுதான் சரி-னு தோணுச்சு.. உங்க எல்லாரையும் சுத்தமா மறந்துட்டேன். உங்கக் கூட டைம் ஸ்பெண்ட் பண்ணவே தோணலே. என் ஹேப்பினெஸ், என் டெசிஷன்-னு இருந்துட்டேன்”-னு சொல்லவும் கையை வெடுக்-னு உருவி, “இப்போ இந்த பெத்த ப்ரதாபம் எல்லாம் எதுக்கு எனக்கு?”-னு கடுக்-னு கேட்டா மதுரியா. “என்னை நீ புரிஞ்சுக்கணும்-னு தான்”-னு சொன்னான் விதுரன். “கண்டிப்பாப் புரியாது.. ஏன்னா நானும் ஸ்கூல் டாப்பர் தான். அந்த ஏட்டிட்யூடெல்லாம் எனக்கு வரலியே”-னு சொல்லவும், சிரிச்சு “என்ன பண்றது? அப்போ நீ என் கூட இருக்கலியே..”-னு சொன்னான்.

“சொன்னா புரிஞ்சுக்க அறிவும் வேணும்”-னு மதுரியா குத்தலா சொல்லவும், “அடிங்க… யாருக்குடி அறிவில்லே? ஏதோ இறங்கி வர்றேன்னு ஓவரா போனே அவ்வளோ தான்”-னு கோபப்பட்டான் விதுரன். “நான் சொன்னேனா இறங்கி வா. ஏறி வா-னு.. போங்களேன். என்னவோ நான் தடுத்தா மாதிரி”-னு கையை உருவப் போனா மதுரியா. “ப்ளீஸ் கண்ணா..”-னு கெஞ்சவும், கோபத்தை கை விட்டா மதுரியா. “அப்புறம் காலேஜ்லே தான் இவங்க மூணு பேரும் ஃப்ரெண்ட் ஆனாங்க. விக்கி அப்படியே என்னை மாதிரி.. ரிதேஷ்க்கு எப்போவும் விக்கியோட ஒபீனியன் தான். எனக்கும் விக்கிக்கும் இருக்கற ஒரே வித்தியாசம், நான் ரொம்ப டெஸிசிவ்.. அவன் அப்படியில்லே. விக்ரம் தான் கம்போஸ்ட்.. கால்ம்… அதே சமயம் புத்திசாலி. லாக் அண்ட் கீ மாதிரி எனக்கு அவன் கூட செட் ஆச்சு. ஆனா எனக்கு மூணுப் பேரும் நெருக்கம் தான்.. சத்தியமா விக்கி மனசுல இவ்வளவு கருப்பா ஒரு பக்கம் இருக்கும்-னு கனவுலே கூட நினைச்சதில்லே மது… அவனுக்கும் என்னோட நேச்சரே இருந்ததால அவன் என்னோட ஏட்டிட்யூடை எனக்கு எதிரா யூஸ் பண்ணுவான்-னு எனக்கு தோணினதே இல்லை. நான் படிச்சு முடிக்கும் போதுதான் ரிஷிக்கும் தியாவுக்கும் கல்யாணம் பேசலாம்-னு முடிவு பண்ணாங்க.. அப்போக் கூட இதுலே பெரிய இண்டரஸ்ட் எல்லாம் வந்து இன்வால்வ் ஆகலே.. அப்போ அம்மா சொன்னாங்க தியா ரொம்ப அமைதி.. அதிர்ந்தேப் பேச மாட்டானு… அப்போ மனசுலே நினைச்சேன் மது… எனக்கு வர்ற மனைவி அப்படி சொல் பேச்சு கேட்டு தலையாட்டறவளா இல்லாம, பட பட-னு பேசி தைரியமானவளா இருந்து, அவளுக்குனு ஒரு இலக்கு வைச்சு, சுய சிந்தனை உள்ளவளா இருக்கணும்னு” -னு அவன் நிறுத்தவும், மதுரியா “இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு”-னு அவனைப் பார்த்தா.

அவன் லேசா சிரிச்சுட்டு, “நம்பலேன்னாலும் அது தான் உண்மை”-னு அவ மூக்கு நுனியிலே மட்டும் படாம முத்தம் குடுத்தான். “ஹேய்.. என்ன இது? மேலே சொல்லுங்க..”-னு கடுப்பான மாதிரி நடிச்சா மதுரியா. “நடிகையர் திலகம்..”-னு மூக்கை பிடிச்சு ஆட்டிட்டு, “அந்த ஒபீனியனை நான் விக்கிக் கூட ஏதோ பேசும் போது சொன்னேன். அவன் அதுக்கு அப்படி எல்லாம் இருந்தா நீ அவளுக்கு அடிமை ஆயிடுவே. வைஃபுன்னா நம்ம கட்டை விரலுக்குக் கீழே இருக்கணும் நம்ம தான் அவங்க உலகமா இருக்கணும். நமக்கு அப்புறம் தான் எல்லாம்.. நமக்குக் கீழ் படியணும்.. அப்படி இருந்தாத் தான் நமக்கு கெத்து. அப்போ தான் ஃபேமிலி ஹேப்பியா இருக்கும்”-னு சொன்னான். “என்னால ஏத்துக்க முடியலே மது. ஆனா வீட்லே அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி இவங்களை பார்த்து அது தான் சரி-னு நினைச்சு என் நினைப்பை மாத்திக்கிட்டேன். அதாவது மாத்திட்டதா நினைச்சு என்னை நானே ஏமாத்திக்கிட்டேன்”-னு நிறுத்தவும், மதுரியா அடக்க முடியாம சிரிச்சா. “என்னடா… ஏன் சிரிக்கறே?”-னு அவன் புரியாம கேட்கவும், “இல்லே, உங்க ஃப்ரெண்ட் பொய் பேசுவார்-னு தெரியும்.. ஆனா இப்படி ஏக்கர் கணக்குலே பேசுவார்-னு தெரியாம போச்சு.. எப்படி எப்படி… மிஸஸ்.வசுந்தரா தேவியை அம்மாவா வைச்சுக்கிட்டு.. பொண்டாட்டிப் புருஷன் கட்டை விரலுக்குக் கீழே இருக்கணுமா? கடவுளே…”-னு சிரிக்கவும், விதுரன் முகம் விழுந்துப் போச்சு. அதைப் பார்த்து, “என்ன விதூ?”-னு கேட்டா மதுரியா. “இல்லை மது.. தவறிப் போய் கூட எனக்கு நல்ல குணம் எதுவும் வந்துடக் கூடாதுன்னு ப்ளான் பண்ணி இருக்கான். அவன் தான் அப்படீன்னா எனக்கு கூட ரொம்ப ஆப்வியஸா இருக்கறது புரியலியே. எவ்வளவுப் பெரிய முட்டாள் நான்”-னு வருத்தப்பட்டான் விதுரன். 

“விது.. ப்ளீஸ்.. தமாஷுக்கு சொன்னேன். உண்மையிலேயே வசுந்தரா ஆண்டியோட நேச்சர்னாலேயே விக்கிக்கு அந்த மாதிரி எண்ணம் வந்திருக்கலாம். நம்ம சங்கரிம்மா, பாட்டியை எல்லாம் பார்த்து அது சரி-னு கூட நினைச்சிருக்கலாம். இப்படி ஒவ்வொண்ணுலேயும் தப்புக் கண்டுப்பிடிச்சு உங்களை நீங்களே காயப் படுத்திக்காதீங்க”-னு ஆதரவா சொல்லவும், “உனக்கு விக்கி மேலே கோபம் இல்லே-னு சொல்லாதே மது… ஆனா நான் ஒவ்வொரு வாட்டியும் என் மனக்கசப்பை சொல்றப்போ ஏன் தடுத்து அதுக்கு ஏதாவது சமாதானம் சொல்றே?”-னு காட்டமாக் கேட்டான் விதுரன்.

“விது.. ரிலேஷன்ஷிப்.. அது எப்படிப்பட்டதா இருந்தாலும், சந்தர்ப்பவசத்துலே பிரியும் போது அதை நம்மளே தப்பாப் பேசக் கூடாது. அப்படி பண்ணா அவ்வளோ வருஷம் ஒண்ணா இருந்ததுக்கும் நம்ம உணர்வுக்கும் எந்த மீனிங்கும் இல்லாம போயிடும். உங்க விஷயத்துலேயே விக்கியோட நட்பு தப்பா போயிருக்கலாம்.. ஆனா உங்க நட்பு உண்மை தானே? அப்புறம் ஏன் நிந்திக்கணும்? அப்படி அதை நிந்திக்கறதுனால உங்களுக்குத்தான் ரணம் ஜாஸ்தி… வேண்டாம் விது.. அதை அப்படியே விட்டுடுங்க”-னு சொல்லி முடிக்கவும், அவளை இழுத்து இறுக அணைச்சுக்கிட்டான் விதுரன். எந்த பேச்சும் இல்லை. ரெண்டுப் பேரோட மூச்சு சத்தமும், இதயத் துடிப்பும் மட்டுமே கேட்டுச்சு அந்த ரூம்லே. கொஞ்ச நேரம் பொறுத்து அவளை விடுவிச்சு, “நீ ரொம்ப நல்லவ மது.. உன் வேல்யூ புரிய எனக்குத்தான் டைம் ஆச்சு”-னு சொல்லவும், “முழுக் கதையையும் சொல்லி முடிங்க… அப்போத்தான் தெரியும் நான் நல்லவளா.. ராட்சசியா”-னு சொன்னா மதுரியா. “உன்னை..”-னு அவ தலையை பிடிச்சு உலுக்கினான்.

அதுக்கப்புறம், “விக்கி விதைச்ச விஷ விதை வளர ஆரம்பிச்சுது. நான் படிச்சு முடிச்சு பிசினஸ்லே சேர்ந்த கொஞ்ச நாள்லே தான் நம்ம கல்யாண பேச்சு ஸ்டார்ட் பண்ணாங்க. என் முதல் வார்த்தையே அந்த பூனைக்குட்டியவான்னு தான்”-னு சிரிக்கவும், “என்னை பார்த்தா பூனைக்குட்டி மாதிரியா இருக்கு?”-னு சண்டைக்கு வந்தா மதுரியா. “இப்போ இல்லேடா… இதைப் பாரு”-னு பர்ஸ்-ல இருந்து ஒரு போட்டோவை காட்டினான். “இது.. எப்படி உங்கக் கிட்ட?”-னு இழுக்கவும், “நம்ம வீட்டுலே நடந்த ஏதோ ஒரு ஃபங்க்‌ஷன்லே நீ ரெண்டு குடுமி பாவாடையிலே இருந்தே.. ஏன்-னு தெரியலே… நான் எட்டாவது படிக்கறப்போ ஒரு ஆல்பம்லே இருந்து எடுத்து வைச்சேன். லவ்-னு ரியலைஸ் பண்ண உடனே என் வேலட்டுக்கு வந்துடுச்சு.. உன்னை இப்படி எதிர்பார்த்து வந்தா, அஞ்சரை அடியிலே தேவதை மாதிரி இருந்தே. உன் பேச்சு, புத்திசாலித்தனம், அழகு எல்லாத்துலேயும் மொத்தமா விழுந்தேன் மது. ஆனா புத்தி விஷ விதையை செடியா வளர்த்ததால முரண்டுப் பண்ணிடுச்சு. அதுலே விக்கியோட போதனையும் சேரவும், நீ எனக்கு அடங்காதவளா தெரிஞ்சே. அதனாலேயே நான் கூப்பிடற இடத்துக்கு நீ வரணும்.. நீயா போன் பண்ணணும்-னு உன்னை செய்ய வைச்சேன். அப்போ தான் விக்கி பொண்ணுங்களை வழிக்கு கொண்டு வரணும்னா அவங்களை நம்ம தொடுகைக்கு வசியம் பண்ணணும்-னு சொன்னான்”-னு இழுத்து நிறுத்தவும் மதுரியா கண்ணுலே கனல் பறந்துச்சு.

கோபத்துலே கையை வெடுக்னு உருவி எந்திரிச்சு நின்னா. “மதும்மா சாரிடா.. உட்கார்… ப்ளீஸ்”-னு கெஞ்சவும், “எனக்கு இது எவ்வளோ இன்சல்ட் தெரியுமா?? சே..”-னு கோபம் அடங்காம சொல்லவும், “எனக்கும் தான்டா.. ப்ளீஸ் உட்காறேன்”-னு சொன்னான் விதுரன். “தேவையில்லே… அப்படியே சொல்லுங்க.. எனக்கு காது கேட்கும்”-னு சள்னு விழுந்தா. “ம்ம்ம்.. ஆனா எனக்கு நீ இங்கே இருந்தாத் தான் பேச்சு வரும்”-னு இழுத்து மடியிலே உட்கார வைச்சான். அவன் தாடையை அவ தோள்லே வைச்சு பேச ஆரம்பிச்சான். “அந்த நேரத்துலே தான் மது, சுவாதி நம்ம கம்பெனியிலே வேலைக்கு சேர்ந்தா. ஃப்ரெண்ட்லியா பழகினா. விக்கி வைஃப் எப்படி எல்லாம் இருக்கணும்-னு சொன்னானோ அப்படி எல்லாம் இருந்தா. அவ யார்-னு தெரியாதப்போ இவ தான் உனக்கு சரி-னு விக்கி எப்போவும் சொல்லுவான். அப்போ கூட நீ எனக்கு அடிப் பணியணும்-னு நினைச்சேனே தவிர சுவாதியை வேறே எப்படியும் நினைக்க முடியலே. அப்போ தான் எல்லாரும் சேர்ந்து ஊதின மகுடியிலே நான் உன் கிட்டப் பிரச்சினை பண்ணேன். என் ஈகோனால என் கோபத்தை விட்டு வர முடியலே.. சண்டையை தொடர்ந்தேன். ஆனா மனசுலே முழுக்க முழுக்க நீ என்னை தேடி வந்து சமாதானம் பண்ணணும்-னு தான் எதிர்பார்த்தேன். அப்போ தான் உன் மெசேஜ் வந்துச்சு. நிறைய எக்ஸ்பெக்டேஷன்ஸ் இருந்துச்சு. ஆனா நீ வரவே இல்லை. அது என் கோபத்தை இன்னும் அதிகப் படுத்துச்சு”-னு நிறுத்தவும், “நான் வந்தேன்… வந்து…. எல்லாம்.. எல்லாம் பார்த்தேன்”-னு கண்ணுலே தண்ணி வழிய சொன்னா. “தெரியும்.. நீ வந்தது… பார்த்தது… எல்லாம் தெரியும்”-னு கர கரத்த குரல்லே சொல்லிட்டே அவளை இறுக்கி கட்டிப்பிடிச்சு கழுத்துலே முகம் புதைச்சான்.

“சத்தியமா சொல்றேன்டா மதும்மா. நீ வந்தது எனக்குத் தெரியாது.. அவ என்னை திடீர்-னு கட்டிப்பிடிப்பான்னும் எதிர்பார்க்கலே..”-னு அன்னிக்கு அவ ஹாஸ்பிடலே சுய நினைவுலே இல்லாதப்போ சொன்னதை எல்லாம் சொன்னான். மதுரியா கண்ணுலே நிக்காம தண்ணி வந்தாலும், “நம்பியிருப்பேன்… ஒரு வேளை நீங்க ஜோடியா அவளோட ஊரை சுத்தாம இருந்திருந்தீங்கன்னா”-னு அழுதிட்டேச் சொன்னா. “மதும்மா அழாதேடி.. தாங்க முடியலே… கஷ்டமா இருக்கு”-னு அவ கழுத்துலே இருந்து முகத்தை எடுக்காம சொன்னான். “நான் இப்படி அழணும்னு தானே அப்படியெல்லாம் பண்ணீங்க? பாருங்க.. இப்படித் தான் இருக்கேன் நீங்க உதறிட்டு போனதிலேயிருந்து”-னு அழுதுட்டே சொன்னா. அவன் அணைப்பை இன்னும் இறுக்கினான். 

“இல்லே மது.. அப்போ நீ என்னை பிரிஞ்சப்புறம் தான் எனக்குள்ளே உன்னோட பாதிப்பை உணர்ந்தேன். அதுவே எனக்கு தாளமுடியாதக் கோபம்.. அதனாலேயே நான் சுவாதிக்கு எந்த கமிட்மெண்டும் குடுக்காம பழகினேன். ஆனா அவ என்னை லாக் பண்ண என்னோட நெருங்க ஆரம்பிச்சா. நான் அவளை விலக்கி நிறுத்தாம அதை உன்னை என் கால்லே விழ வைக்க யூஸ் பண்ணேன். எனக்கு கீழ் படியாத உனக்கு நான் ஏன் உண்மையா இருக்கணும்-னு நினைச்சேன்”னு சொல்லவும், “டேய், இதுக்கு என்னை கொன்னிருக்கலாமேடா.. சே”-னு கத்தினா மதுரியா. அவன் கிட்டேந்துத் துள்ளி விலக முயற்சிப் பண்ணா.

ஆனா விதுரன் பிடிச்ச பிடியை தளர்த்தவே இல்லே. “ஆமா மதும்மா அது உயிர் வலிதான்.. செத்துடறது மேல்-னு தோணற வலி தான். நானும் தான் ரெண்டு வாட்டி அனுபவிச்சிருக்கேனே. ஒண்ணு நிகேஷ் பர்த்டேலே, உனக்கும் உன் கசின் அபிக்கும் நிச்சயம்-னு அண்ணி சொன்னப்போ…. என்னால தாங்கவே முடியலேடா மது… அந்த கோபத்துலே தான் அப்படி பேசி அடிச்சு எல்லாம் பண்ணேன்.. சாரிடா… இன்னொரு வாட்டி அந்த ஆட்டோலே நீ மயங்கி சரிஞ்சப்போ ப்ரதீப் உன்னை தோளோட ஏந்தினானே அப்போ.. அப்புறம் பரத்தண்ணா உனக்கும் ப்ரதீப்புக்கும் பேசி முடிக்கணும்-னு சொன்னப்போ.. உயிரோட எனக்குள்ள எல்லாம் மரிச்சுப் போச்சு மது.. உனக்கு எப்படி வலிச்சிருக்கும்-னு புரிஞ்ச தருணங்கள் அதெல்லாம். நிகேஷ் பர்த்டேக்கு அப்புறம் தாத்தா பேர்லே டிரஸ்ட் ஸ்டார்ட் பண்ணப்போ இனி எப்போவுமே உன்னை பார்க்க முடியாது-னு தெரிஞ்ச அந்த நிமிஷம், உன்னை நான் எவ்வளோ லவ் பண்றேன்-னு புரிஞ்சுக்கிட்டேன் மது. எல்லாத்தையும் சரி பண்ணணும்-னு நான் யோசிக்கும் போது தான் கௌதம் இன்வெஸ்டர்ஸ் ப்ராஜெக்ட் வந்துச்சு. உனக்கும் கோபம் குறையணும். எனக்கும் எல்லாம் ஆறணும். முதல்லே இந்த ப்ராஜெக்ட்லே ஃபோகஸ் பண்ணலாம்-னு முடிவு பண்ணி இறங்கினேன். பை தி வே.. டிரஸ்ட் ஸ்டார்ட் பண்றதுக்கு முன்னாடியே சுவாதி கிட்ட நமக்குள்ளே நட்புக் கூட சாத்தியமே இல்லை-னு சொல்லி க்ளோஸ் பண்ணிட்டேன். நான் பண்ண ஒரே தப்பு உன்னை வெறுப்பேத்த அவ கூட நெருங்கிப் பழகினது தான். நீயே யோசிச்சு பாரு.. அவளைக் கூட்டிட்டு நீ எங்கே எல்லாம் இருப்பியோ அங்கே மட்டும் தான் வந்தேன். உன்னைத் தவிர நான் யாரையும் லவ் பண்ணலே. நீ பேரடைஸுக்கு வந்த நாள்லே இருந்து உன் மேலே பைத்தியமா சுத்தறேன்”-னு முடிச்சான்.

அதுக்கப்புறம் கொஞ்ச நேரம் பேச்சே இல்லை. ஒரே அமைதி தான். அந்த அமைதி கூட விதுரனுக்குப் புயலுக்கு முன்னே இருக்கற அமைதியாத் தான் தெரிஞ்சுது. “மதும்மா… ஏதாவது பேசுடி… இப்படி அமைதியா இருந்து என்னை கொல்லாதே.. ப்ளீஸ்”-னு கழுத்துலே இருந்து தன் முகத்தை நிமிர்த்தி சொன்னான். அப்போ மதுரியா அவ கண்களை அழுத்தி துடைச்சா. அப்புறம், “உங்க கையை கொஞ்சம் எடுக்கிறீங்களா?”-னு எந்த உணர்ச்சியும் இல்லாம சொன்னா. “ஏதே? என்ன சொன்னே?”-னு திகைச்சு போனான் விதுரன். “இதுல புரியாம போக என்ன இருக்கு?. தமிழ்லே தானே சொன்னேன்? கையை விடுங்க”-னு அழுத்தமா மதுரியா சொல்லவும், “என்னடி முதல்லே இருந்து ஸ்டார்ட் பண்றே? இவ்வளோ சொன்னேனேடி.. புரியலியா?”-னு ஆதங்கமா கேட்டான் விதுரன். “கையை எடுங்க! நான் எந்திரிக்கணும்”-னு அதுலேயே நின்னா மதுரியா. “மதும்மா.. ப்ளீஸ்டா இப்படிப் பழசையே உருட்டிட்டு இருந்தா எப்போ தான்டா நாம வாழறது? என்னால முடியலேடா”-னு இறங்கி வந்தான் விதுரன். ஒரு ரியேக்‌ஷனும் இல்லே. கடுப்பான விதுரன், அவளை விட்டு, “போ… போய்த் தொலை.. என்ன பண்ணணுமோ பண்ணு போ”-னு எரிஞ்சு விழுந்தான்.

மதுரியா எந்திரிச்சுப் போனவ, தண்ணி குடிச்சுட்டு, “எனக்கு தூக்கம் வருது”-னு படுக்கவும், “வரும்… வரும்.. ஏன் வராது?”-னு எரிச்சலா முணுமுணுத்தான் விதுரன். அவன் உட்கார்ந்த நிலையிலேயே இருந்து எழும்பவே இல்லை. “விது உங்களுக்கு காது கேட்கலியா? தூக்கம் வருது-னு சொல்றேன்லே? வாங்க! வந்து கால் பிடிச்சு விடுங்க”-னு சிரிச்சுட்டே சொல்லவும்… “அடி.. ராஸ்கல்.. இதோ வர்றேன்”-னு சிரிச்சுக்கிட்டே அவ பக்கம் சரிஞ்சான்.

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top