அசுரன் 120

அசுரன் 120

 

ஒரு மனிதன் தொடர்ந்து தவறுகள் செய்யும் பொழுது கடவுள் அவனை தண்டிப்பதே இல்லை… முழுதாய் ஆடி முடிக்கும் வரை காத்துக் கொண்டு இருப்பார்… எப்பொழுது அவன் ஆடியது போதும் தான் செய்தது தவறு என்று அடங்கி உட்காருகிறானோ… அன்றிலிருந்து கடவுள் தன் ஆட்டத்தை ஆரம்பிப்பார்… நீ நல்லவனா இருக்கும் பொழுது தான் உன் கடந்த கால பிழைக்கான தண்டனைகள் உனக்கு கசக்கும்…

 

காபி ஷாப்பில் உச்சகட்ட பதட்டத்தில்… விக்ரம் உடன் அமர்ந்திருந்தான் அருண்.

 

என்னடா ஆச்சு அருண்… உடனே வா எமர்ஜென்சினு சொல்லி போன் பண்ண… இப்ப நாம யாரை மீட் பண்ண வந்திருக்கோம்… ஆமா… நீ ஏன் இவ்ளோ நர்வசா இருக்க..

 

விக்ரம் கேட்ட எந்த கேள்விக்கும் பதில் கூறாமல் அருண் கலவரத்தில் பேசினான்.. ஆதிக்கு போன் பண்ணேன் எடுக்கவே இல்ல…

 

ஆதி எனக்கு டுடேஸ் முன்னாடி  போன் பண்ணி இருந்தான்டா… புல்லட் பட்ட இடத்தில் இன்னும் பெயின் இருக்கு ஒன் வீக் ரெஸ்ட் எடுத்துட்டு… பிசியோதெரபி கம்ப்ளீட் பண்ணிட்டு வரேன்னு சொன்னான்டா… ( ஆஹான் 😆) ஒன் வீக் எந்த ஆபீஸ் வேலையும் வீட்டுக்கு கொண்டு வர வேண்டாம்னு சொல்லிட்டான்… Full ரெஸ்ட்ல இருக்க போறேன் டிஸ்டர்ப் பண்ணாதீங்க ன்னு சொல்லிட்டான்…

அதனால நான் போன் கூட பண்ணல டா என்று கூறினான் விக்ரம். பாவம் நிம்மதியா ரெஸ்ட் எடுத்துட்டு வரட்டும்… ( பச்ச பிள்ளைய, ஆதி எப்படி ஏமாத்திருக்கான் பாருங்க 😂)

 

இவர்களின் பேசிக் கொண்டு இருக்கையிலே அந்த காபி ஷாப்பிற்குள்  புதிதாய் நுழைந்தான் ஒருவன்…  கண்களை சுழல விட்டு இவர்கள் இருக்கும் டேபிளில் எதிர் இருக்கையில் வந்து அமர்ந்தான்.

 

இவனை எங்கேயோ பார்த்திருக்கோமே என்று அருண் மூளையை கசக்கி யோசித்து கொண்டு இருக்க…

 

விக்ரம் அடையாளம் கண்டு கொண்டான்…

 

டேய் இவனத்தான் பாக்க வந்தியா?… என்று அருணின்  காதில் கிசுகிசுத்து விட்டு.. 

 

ஹாய் ப்ரோ..  எப்படி இருக்கீங்க? காயம் எல்லாம் ஆறிடுச்சா? என்று சாதாரணமாய் விசாரித்தான் விக்ரம்.

 

புருவத்தை உயர்த்தி யோசனையில், யாருடா இவன்?.. என்றான் அருண்.

 

டேய் இவன யாருனு தெரியலையா அன்னைக்கு பார்ல ரதி போதையில் கிஸ் பண்ண போக..  நீ கிளாஸ் வெச்சு மண்டையில் அடிச்சது இவனை தான்டா… என்று விக்ரம் விளக்கினான்.

 

அப்பொழுதுதான் அருணுக்கு ஞாபகம் வந்தது… அவன் அடித்த இடது நெற்றியில் ஒரு தழும்பு இருந்தது…

 

சார் நான் சொன்ன எதுவும் பொய் இல்லை அதுக்கு முன்னாடி நான் சொல்றத முழுசா கேளுங்க அப்பதான் உங்களுக்கு புரியும் என்று பொறுமையாக பேசினான் எதிரே இருந்தவன்…

 

நானும் என்னோட ஏஞ்சலும்..  சின்சியரா லவ் பண்ணிக்கிட்டு இருந்தோம் சார்… கிட்டத்தட்ட நாங்க லிவிங்ல இருந்தோம் சார்…

என்ன பேபி பேபின்னு சொல்லி தாங்குவா சார்… 

 

இதெல்லாம் எதுக்கு ப்ரோ எங்க கிட்ட சொல்லிட்டு இருக்கீங்க… எங்களுக்கு நிறைய வேலை இருக்கு நாங்க கிளம்புறோம்…

 

கொஞ்சம் பொறுமையா கேளுங்க ப்ரோ… அப்பதான் என்ன நடந்துச்சுன்னு புரியும்..  ஆனா போகப்போக எங்களுக்குள்ள நிறைய சண்டை வந்துச்சு… என்ன நிறைய டாமினேட் பண்ண ஆரம்பிச்சா… 

எங்களோட சிக்ஸ் மந்த் லவ் ஆனிவர்சரி செலிப்ரேஷன் முடிஞ்சதும்… எங்களுக்குள்ள பெரிய ஆர்கியூமென்ட் வந்துச்சு ப்ரோ…

கோவத்துல உன்ன மாதிரி ஒரு சைக்கோவை என்ன தவிர வேற எவனும் வெச்சு வாழ மாட்டான் அப்படின்னு சொல்லிட்டு போய்ட்டேன்…

 

என்னோட ஆளும் என் மேல இருந்த  கோபத்துல… என்று அவன் சொல்வதற்கு தயங்கியபடியே நிற்க…

 

சூசைட் பண்ணி செத்துட்டாங்களா ப்ரோ..  என்றான் விக்ரம்.

 

இல்ல ப்ரோ… பார்ல குடிச்சிகிட்டு இருந்த ஒருத்தனை கூட்டிட்டு நாங்க இருந்த ரூமுக்கு போயிட்டா ப்ரோ…

 

வாவ்… வாட் எ ட்விஸ்ட்… இந்த மாதிரி பழி வாங்குற ஐடியா எல்லாம் நான் இப்பதான் ப்ரோ கேட்கிறேன்… என்று மெச்சுதலாய் கையை உயர்த்தி காட்டினான் விக்ரம்.

 

அருண் எதுவும் சொல்லவில்லை அவனுடைய கவனம் முழுவதும் அவன் போனில் கேட்ட விபரத்திலேயே இருந்தது…

 

ஆக்சுவலி ட்விஸ்ட் இன்னும் வரல ப்ரோ…

 

இன்ட்ரஸ்டிங்… அப்போ இன்னும் கதை இருக்கா சரி சொல்லுங்க கேட்போம்…

 

என்ன பிரேக்கப் பண்ணி ஒரு த்ரீ மன்த்ல என்னுடைய ஏஞ்சலுக்கு மேரேஜ் ஆயிடுச்சு ப்ரோ… 

அவ நல்லா இருந்தா போதும்னு நான் டிஸ்டர்ப் பண்ணல… பட் ஐ ஸ்டில் லவ் ஹேர்…

 

சரி ப்ரோ இப்ப அதுக்கு நாங்க என்ன பண்ணனும்… உங்களோட லவ் ஸ்டோரி கேட்க நல்லாத்தான் இருக்கு ஆனா பாவப்பட்டு உங்களுக்கு கல்யாணம் கூட பண்ணி வைக்க முடியாது இப்போ அவ புருஷன் சண்டைக்கு வருவான்.. 

 

இப்ப கொஞ்ச நாளைக்கு முன்னாடி என் ஆளோட குழந்தைய பாத்தேன் ப்ரோ… என்று ஒரு கணம் நிறுத்தியவன்.. அது… அது… வந்து…  

 

என்ன ப்ரோ சொல்லுங்க… 

 

குழந்தை அப்படியே என்ன மாதிரி இருக்கான் ப்ரோ… அதனால அது என் குழந்தையா இருக்குமோ அப்படின்னு சந்தேகமா இருக்கு…

 

சூப்பர் ப்ரோ இது தான் அந்த ட்விஸ்ட் அஹ.. இது உங்க ஏஞ்சலோட புருஷனுக்கு தெரியுமா ப்ரோ… தெரிஞ்சா மனுஷன் ஷாக் ஆயிடுவான்… என்று சொல்லியபடியே விக்ரம் கேலி செய்து சிரித்துக் கொண்டிருக்க..

 

அருணும் அந்த நபரும் ஒருவரை ஒருவர் அமைதியாய் பார்த்துக் கொண்டு இருந்தனர்…

 

சரி எங்க உன் ஏஞ்சல் ஓட போட்டோ காமிங்க பாக்கலாம்… என்று விக்ரம் வினவ…

 

தனது மொபைலில் தனது காதலியுடன் இருந்த புகைப்படத்தை எடுத்து விக்ரமிடம் நீட்ட…

 

யதார்த்தமாய் வாங்கி பார்த்தவன்… அதிர்ந்தான்… அப்பொழுதுதான் கலவர முகத்துடன் அருணை நிமிர்த்து பார்க்க… அருண் எதிரில் இருந்தவனை தான் பார்த்துக் கொண்டு இருந்தான்… இந்த டுவிஸ்ட்டை விக்ரம் எதிர்பார்க்கவில்லை… இப்போதுதான் புரிந்தது இவ்வளவு நேரம் அவன் கேட்டுக்கொண்டு இருந்தது தன் நண்பனின் வாழ்வில் நடந்த நிகழ்வை என்று… அந்த புதிய நபரின் ஏஞ்சல் வேறு யாருமல்ல…”ரதி” தான். என்ன ரியாக்ஷன் குடுப்பது என்றே தெரியவில்லை…

 

ரதிக்கு நீங்க எத்தனாவது பேபி… 

 

மூணாவது ப்ரோ…

 

அப்போ நம்ம மச்சான் நாலாவது பேபியா.. என்று மனதிற்குள்ளே கணக்கு போட்டவன்..

இப்பொழுதுதான் அந்த புதிய நபரை ஆராய்ச்சி பார்வை பார்த்தான் விக்ரம்..

 

பிரவுன் நிற முடியுடன்… ஆங்கிலோ இந்தியன் தோரணையில் இருந்தான்… வேகமாய் தன் மொபைலில் இருந்த ரித்துவின் போட்டோவை எடுத்து..  ஜூம் செய்து அவன் பக்கத்தில் வைத்து பார்க்க… டிஎன்ஏ டெஸ்டே தேவையில்லை… ரித்து அவனை போலவே உரித்து வைத்திருந்தான்…

 

படபடக்கும் இதயத்துடன்… கலவரமாய் அருணை பார்க்க… இப்பொழுது புரிந்தது அருணின் அதிர்ச்சிக்கும் படபடப்பிற்கும் என்ன காரணம் என்று…

 

ஒரே மாதிரி ஏழு பேர் உலகத்துல இருப்பாங்க ப்ரோ நீங்க கேள்விப்பட்டது இல்லையா… உங்க கூட பிரேக் அப் ஆயி மூணு மாசம் கழிச்சு தானே ரதிக்கு கல்யாணம் ஆச்சு.. அப்புறம் எப்படி?  என்று விக்ரம் ஏதோ சொல்ல வர.. 

 

எங்களோட லவ் அனிவர்சரி டேட் கால்குலேட் பண்ணி பார்த்தா ரித்தனோட பர்த்டே கரெக்டா வரும் ப்ரோ… எதுக்கும் நம்ம கன்ஃபார்மா டிஎன்ஏ டெஸ்ட் ஒன்னு எடுத்து பார்த்திரலாம்… மே பி என்னோட குழந்தையா இருந்தா என்கிட்ட கொடுத்துடுங்க… நான் என்ன ஆனாலும் என்னோட குழந்தையை யாருக்கும் விட்டு தர மாட்டேன் ப்ரோ… ஸ்டில் நான் மேரேஜ் பண்ணிக்காம ரதிய நினைச்சுகிட்டு தான் இருக்கேன்…  என்று அருணை பார்த்துக்கொண்டே உறுதியாய் பதிலளித்தான் அந்த நபர்…

 

ஒருவேளை குழந்தை உங்க குழந்தையாவே இருந்தாலும் வாங்கிட்டு போய் நீங்க எப்படி தனியா வளர்ப்பீங்க ப்ரோ.. அதுவும் நீங்க கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாம பார்ல ஒக்காந்து தண்ணி அடிச்சிட்டு பொண்ணுங்களோட சுத்திட்டு இருக்கீங்க உங்களை நம்பி எப்படி குழந்தை ஒப்படைக்கிறது… அதனால குழந்தை எங்க கிட்டயே இருக்கட்டும்… என்று ஏதோ ஒரு காரணம் சொல்லி சமாளித்தான் விக்ரம்.

 

ப்ரோ… வார்த்தையை அளந்து பேசுங்க.. நீங்க சொல்றபடி பார்த்தா அருண் கிட்ட குழந்தை இருக்கவே கூடாது..  ஏதோ உங்க பிரண்டு ரொம்ப உத்தமர் மாதிரி பேசுறீங்க… என்னோட ஃபேமிலி ரொம்ப பெருசு அம்மா அப்பா தாத்தா பாட்டி எல்லாரும் இருக்காங்க… நான் ஒரே பையன்… எங்க ஃபேமிலி பார்த்துப்பாங்க அத பத்தி நீங்க கவலைப்பட வேண்டாம்… அப்புறம் நான் ஒன்னும் குடிகாரன் கிடையாது ப்ரோ.. நீங்க என்ன பார்ல பார்த்த அன்னைக்கு தான் என்னோட பிரேக் அப் டே அத நினைச்சு தான் குடிச்சிட்டு இருந்தேன்…. அன்னைக்கு கொஞ்சம் ஓவர் ஆயிடுச்சு… அப்பவும் என்னுடைய ஏஞ்சல் என்ன கிஸ் பண்ண வரும்போது.. ஈசியா நான் ஒத்துக்கிட்டேன்… வேற பொண்ணா இருந்தா கண்டிப்பா அந்த இடத்துல நான் இருந்திருக்கவே மாட்டேன்… ஐ ஹேவ் டிசிப்ளின்…

குழந்தையை  வளர்க்கறதுக்கு எனக்கு தெரியும்… 

நாளைக்கு டிஎன்ஏ டெஸ்ட் எடுத்தரலாம் ப்ரோ… ரிசல்ட் எனக்கு ஃபெவரா வந்தா ப்ளீஸ் குழந்தையை என்கிட்ட ஒப்படைச்சிடுங்க… 

 

கொடுக்க முடியாதுன்னா நீ என்னடா பண்ணுவ என்றான் கோபமாய் அருண்… அவன் என்னோட பையன் எனக்கு மட்டும்தான் சொந்தம்… இத்தனை நாள் கழிச்சு நீ வந்து கேட்டா உடனே தூக்கி கொடுத்துடுவாங்களா… மரியாதையா போயிடு இல்லனா உயிரோட இருக்க மாட்ட…

 

இருக்கையில் இரு கைகளையும் விரித்து தளர்வாய் அமர்ந்தவன்… உங்க பையன ஒரு நாளும் நான் கேட்க மாட்டேன் ப்ரோ… அதே மாதிரி என்னோட பையன நீங்க வச்சு என்ன பண்ண போறீங்க… காலம் முழுக்க அவன் உங்களோட பையன்னு நினைச்சு நினைச்சு உங்களை நீங்களே ஏமாத்திக்க போறீங்களா… 

நான் கஷ்டப்பட்டு உருவாக்கினது எனக்கு வேணும்… உங்களுக்கு வேணும்னா நீங்க கஷ்டப்பட்டு ஒன்னு உருவாக்கி வச்சு கொஞ்சுங்க அதுக்காக அடுத்தவனுடைய பொருளை ஆட்டைய போடலாம்னு நினைக்காதீங்க… என்று அவன் அழுத்தமாய்க் கூற…

 

அருண் வேகமாய் எழுந்து அவன் சட்டையைப் பிடித்தான்…

 

அமைதியாய் சட்டையை பிடித்திருந்த கையை விலக்கி விட்டவன்… நம்ம ரெண்டு பேரும் மட்டும் பேசி சத்தம் இல்லாம இந்த டீலிங் முடிக்கலாம்னு நான் நினைக்கிறேன் இல்ல கோர்ட்டு கேஸ் நியூஸ் போய் அசிங்கப்பட்டு தான் என்கிட்ட குழந்தையை ஒப்படைக்கனும்னு நீங்க நினைக்கிறீங்க போல… என்று அவன் சற்று நிதானமாகவே கூறினான்…

 

இத்தனை நாள் குழந்தையை ஆசையா வளர்த்துட்டு இப்ப வந்து அது என்னோட குழந்தை அப்படின்னு சொன்னா எப்படி உடனே அவன் தூக்கி கொடுப்பானா.. என்று விக்ரம் கேட்க…

 

வளர்த்த அவருக்கே இவ்ளோ பாசம் இருக்கும் பொழுது அது என்னோட குழந்தை… என்னோட ரத்தம்… அப்படின்னு தெரிஞ்ச பிறகு எனக்கு பாசம் இருக்க கூடாதுன்னு ஏன் நினைக்கிறீங்க… அதுவும் இல்லாம… ரித்துவ பத்தி நான் விசாரிச்சேன்.. அவன பத்தி முழுசா தெரிஞ்சுகிட்டு தான் உங்ககிட்ட வந்து கேட்கிறேன் … கேர் டேக்கர் கிட்ட தானே குழந்தை வளர்றான்.. ஏதோ பெருசா இவர்தான் பார்த்து பார்த்து வளர்க்கற மாதிரி பேசுறீங்க… அவன் பேச்சில் இளக்காரம் கூடியிருந்தது…

 

நாளைக்கு சரியா 10 மணிக்கு இந்த ஹாஸ்பிடல் வந்துடுங்க ஒரு டிஎன்ஏ டெஸ்ட் எடுத்திடலாம்… அப்படி வரலைனா பதினோரு மணிக்கு போலீஸ் ஓட உங்க வீட்டில நான் இருப்பேன்… அப்புறம் ப்ரோ என்று முன்னேற்றியை விரலால் தேய்த்தவன்… குழந்தை என்னோடது தான் அதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.. DNAடெஸ்ட் உங்களுக்காக தான் எடுக்கிறேன்… என்று கூறிவிட்டு வேற ஏதாவது என்கிட்ட பேசணும்னா என்னோட விசிட்டிங் கார்டு, கையோடு ஹாஸ்பிடல் கார்டையும் டேபிளில் வைத்துவிட்டு எழுந்து சென்றான் அவன்.

 

உங்க பேரு என்னன்னு சொல்லாமலே போறீங்களே… என்றான் விக்ரம்.

 

உடைந்து போய் இருக்கும் அருணை ஒரு முறை பார்த்துவிட்டு… நிதானமான மூச்சுடன் “மிதுன்” என்றான்.

ஒருவேளை எங்களுக்கு குழந்தை பிறந்தால்… ரதியுடன் மிதுன் சேர்த்து ரித்துன் அப்படின்னு பெயர் வைக்கணும்னு நாங்க பேசி வச்சிருந்தோம்… என்று மேலும் ஒரு அதிர்ச்சி தகவலை கூறிவிட்டு சென்றான்…

 

தான் எல்லா வகையிலும் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பதை அறிந்து சிலை போல் அமர்ந்திருந்தவனை கையை பிடித்து காரில் ஏற்றி வந்தான் விக்ரம்.

 

இருவரும் அமைதியாய் காரில் வர… உடைந்து போய் இருக்கும் அருணை சமநிலைக்கு கொண்டு வர.. காரில் பாடலை ஆன் செய்தான்… அவனை சோதனை செய்யவே…

 

ஊரே அவளைப் பார்த்தா… 

அவ என்ன மட்டும் பார்த்தா…..

ரதியை முதன் முதலில் பார்த்துவிட்டு வரும் பொழுது மிகவும் ரசித்து கேட்ட பாடல் இதுவே…. இந்தப் பாடலைக் கேட்டதும் அமைதியாக இருந்த எரிமலை வெடித்து சிதறியது…  பார்த்தான்னு பாடக்கூடாது… *த்தான்னு பாடணும்… என்று கத்திவிட்டு தனது கையால் காரில் இருந்த பிளேயரை ஓங்கி பல அடிகள் அடிக்க அது சுக்கு சுக்களாய் உடைந்து நொறுக்கியது… அவன் மனதைப் போலவே…

 

❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்.. 

      ஊக்கபடுத்த கருத்துகளையும் பகிருங்கள் .

      நன்றி!❤️

 

❤️ Loading reactions...
2 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top