அசுரன் 122
மிதுனுக்கும் ரித்துவுக்கும் இடையே இருந்த அந்த அச்சு அசலான ஒற்றுமை, அங்கிருந்தவர்களின் பார்வையில் ஒரு மின்னலைப் போலப் பாய்ந்தது.
ஒவ்வொருத்தரும் அவர்கள் இருவரையும் ஒப்பிட்டுப் பார்க்கத் தொடங்க, அந்த அமைதி அருணின் அடிவயிற்றில் பயத்தை உண்டாக்கியது. தன் உலகம் தன்னை விட்டு நழுவுவதை உணர்ந்தவன் முகம் கலவரமானது.
அங்கே நிலவிய சங்கடமான மௌனத்தை, சோபாவில் அமர்ந்திருந்த அந்தப் பெரியவர் தன் அதிகாரக் குரலால் கலைத்தார். “என்ன பழக்கம் இது? அடுத்தவங்க குழந்தையை இப்படிப் போட்டு ஒப்பிட்டுப் பார்க்கிறது?” என்று அவர் அதட்ட,
மிதுன் அங்கிருந்த அத்தனை முகங்களிலும் வெடியைப் போட்டான்.
”அது அடுத்தவங்க குழந்தை இல்ல பெரியப்பா… என்னோட குழந்தை!”
அடுத்த நொடி, அந்தப் பெரிய வீடே சுடுகாட்டு அமைதியைத் தத்தெடுத்தது.
என்னடா சொல்ற.. என்று மிதுனின் அம்மா அதிர்ச்சியாய் கேட்க..
அம்மா… இவன் ரித்துன்… எனக்கும் ரதிக்கும் பிறந்தவன்.
சொல்லி முடித்த அடுத்த கணம், “சப்” என்ற சத்தம் அந்த அறையையே அதிர வைத்தது. மிதுனின் கன்னத்தில் அவன் தாயின் கை பதிந்திருந்தது.
சோபாவில் அமர்ந்திருந்த மிதுன் தாத்தா எழுந்து வந்து தன் தடியால் அவன் முதுகில் இரண்டு சாத்து சாத்தினார்…
கன்னத்தில் கை வைத்தபடியே நடந்ததை தன் தாத்தாவிடம் சுருக்கமாக கூறினான் மீதுன்…
தான் காதலித்த ரதி தன்னால் கர்ப்பமானது தெரியாமல் அருணை திருமணம் செய்து கொண்டதால் வந்த குழப்பம் என்று. இப்பொழுதுதான் குழந்தையின் உருவத்தை கண்டு சந்தேகித்து ரித்துவை பத்தி விசாரித்து அறிந்து கொண்டதாகவும் கூறினான்.
என்னடா பண்ணி வச்சிருக்க மிதுன்… எல்லாரோட வாழ்க்கையும் நாசம் பண்ணி வச்சிருக்க… உன்னோட வாழ்க்கையை முடிவெடுக்க உனக்கு உரிமை இருக்கு… இப்படி அருணோட வாழ்க்கையையும் ரித்துவோட வாழ்க்கையையும் குழப்பம் பண்ண உங்களுக்கு என்ன உரிமை இருக்கு…
உங்களுடைய இந்த ஒழுக்கம் இல்லாத வாழ்க்கையால.. மத்தவங்க பாதிக்கப்பட்டு நிக்கிறாங்களே அதுக்கு என்ன பதில் சொல்ல போற…
சின்ன வயசுல இருந்து நான் உங்களுக்கு சொல்லிக் கொடுத்ததே….
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.
இப்படி சொல்லிக் கொடுத்ததெல்லாம் காத்துல பறக்க விட்டுட்டு… எங்களோட நம்பிக்கையே மொத்தமா செதச்சிட்டு வந்து நிக்கிறியே… எங்க கண்ணு முன்னாடி நிக்காத மிதுன்… என்று கோவமாய் கூறினார்…
பின்னர் அருணின் பக்கம் திரும்பியவர், தன் நடுக்கமுற்ற கைகளை ஏந்தி, “தம்பி மன்னிச்சிடுங்க” என்று கையெடுத்து கும்பிட்டவர்… எங்க வீட்டுப் பையனால உங்க வாழ்க்கையில நடந்த குழப்பத்துக்கு நான் மன்னிப்பு கேட்கிறேன்… இத்தனை நாள் இந்த குழந்தையை உங்க குழந்தையா நினைச்சு வளத்து இருப்பீங்க… உங்க வாழ்க்கையில ஏற்பட்ட குழப்பத்துக்கு பிரதிபலனா…
“இந்தக் குழந்தையை நீங்க வளர்த்தாலும் சரி, இல்லை எங்ககிட்ட ஒப்படைச்சாலும் சரி… நீங்க என்ன முடிவெடுத்தாலும் நாங்க அதுக்குக் கட்டுப்படுறோம், குழந்தையோட விஷயத்துல முடிவெடுக்கிற உரிமை எங்க மிதுனுக்கு இனி இல்ல…” என்று தீர்மானமாகச் சொன்னார்.
தாத்தா நீங்க என்ன பேசுறீங்க.. அவன் நம்ம வீட்டு குழந்தை… என்று மிதுன் கூற…
“வாயை மூடு மிதுன்! சுயநலமா யோசிக்காதே, அடுத்தவனோட உணர்வுக்கு மதிப்பு குடு!” என்று பெரியவர் அதட்டினார். அந்த வார்த்தைகள் அருணுக்கு ஒரு நிம்மதிப் பெருமூச்சைத் தந்தது. தன் குழந்தையைத் தன்னிடமிருந்து யாரும் பிரிக்க முடியாது என்ற தைரியத்தில், குழந்தையை வாரி அணைத்துக்கொண்டு வேகமாகக் காரை நோக்கி நடந்தான்.
இந்த வார்த்தையை கேட்டதும்… நிம்மதி பெருமூச்சு விட்டவன்… குழந்தையை கையில் வாங்கிக் கொண்டு வேகமாக காரை நோக்கி புறப்பட்டான்… அருண்.
போகும் நண்பனை பார்த்தவர்கள்.. வீட்டில் இருந்த அனைவரிடமும் விடை பெற்று விட்டு காருக்கு வந்தனர்..
குழந்தையை கட்டி அணைத்து முகம் எங்கும் முத்தமிட்டு தோளில் சாய்த்து கொண்டான் அருண்.
சரி விடுடா.. அதுதான் இப்ப எல்லாம் நல்லபடியா முடிஞ்சதே… ரித்து நம்ம கிட்ட வந்துட்டான்… இப்போ உனக்கு ஹாப்பி தானே… என்று விக்ரம் அருணை பார்த்து கேட்க…
ம்ம்ம்… என்று தலையசைத்தவன்.
நான் கூட ஆதி நேரா வீட்டுக்கு கூட்டிட்டு வந்ததும் பயந்து போயிட்டேன் டா… நவ் ஐ அம் ஹாப்பி… என்றான் அருண்.
ஆதி பதில் ஏதும் கூறாமல் அமைதியாய் இறுகி இருந்தான்..
என்னடா ஒண்ணுமே சொல்லாம அமைதியா இருக்க என்று விக்ரம் கேட்க…
என்ன சொல்ல சொல்ற… அருணோட கைக்கு குழந்தை வந்துட்டான்னு சொல்லி சந்தோஷப்பட சொல்றியா… இல்ல இந்த மாதிரி ஒரு நல்ல குடும்பத்தை அந்த குழந்தை இழக்க போகுதே… அத நினைச்சு என்னை கவலைப்பட சொல்றியா… இந்த மாதிரி ஒரு குடும்பம் நமக்கு இல்லை என்று நினைத்து நிறைய நாள் நான் ஏங்கி இருக்கேன் டா… அந்த மாதிரி ஒரு குடும்பம் நம்ம ரித்துக்கு கிடைக்கும் போது… அதை தடுக்க மனச வரல டா.. என்று ஆதியின் குரல் தழுதழுத்தது.
இப்ப என்னடா சொல்ல வர குழந்தையை அவங்க கிட்ட விட்டுட்டு வர சொல்றியா என்றான் அருண் கோபமாய்…
எனக்கு சொல்ல தெரியல டா… உன் கூட அவன் இருந்தா நீ சந்தோஷமா இருப்ப… ஆனா அவன் அதே மாதிரி சந்தோஷமா இருப்பானா… இந்த வீட்ல கிடைக்கிற அன்பையும் பாசத்தையும் தள்ளி வச்சிட்டு நம்ம வீட்டுல பாசம் காட்ட ஆள் இல்லாம அவன் ஏங்கணுமா?..
என்று கூறிவிட்டு காரை ஸ்டார்ட் செய்து கிளம்பலானான்…
அருண் எதுவும் கூறவில்லை அமைதியாய் குழந்தையை நெஞ்சோடு அணைத்த படி அமர்ந்திருந்தான்.
சிறிது தூரம் சென்றதும்…
“காரை திருப்புடா… மிதுன் வீட்டுக்கு போ ” என்றான் அருண்.
எதுக்கு எனும் படியாக இருவரும் அருணை பார்க்க…
போன் அங்க வச்சுட்டு வந்துட்டேன்… என்றான் அருண் முகத்தில் எந்த ஒரு உணர்ச்சியும் இல்லாமல்.
கார் மீண்டும் வீட்டு வாசலில் வந்து நிற்க… குழந்தையுடன் இறங்கி சென்றான் அருண்.
“அம்மா சாரிம்மா… தெரியாம தப்பு பண்ணிட்டேன்… நான் அவளை உண்மையா தான் லவ் பண்ணேன்… ஆனால் அவ இப்படி செய்வான்னு நான் கனவுல கூட நினைக்கலம்மா… ஐ ஸ்டில் லவ் ஹேர்… என்னோட காதலோட பரிசா என் குழந்தை எனக்கு வேணும்மா… ” என்று அவனது அன்னையை காட்டிக் கொண்டு அழுது கொண்டு இருந்தான் மீதுன்.
அவன் அன்னை ஏதோ ஆறுதல் கூற வர சரியாய் அவர்கள் முன்வந்து நின்றான் அருண்.
குழந்தையை அவர்கள் கையில் கொடுத்து விட்டு… ஒரு நிமிடம் அமைதியாய் தலை குனிந்தவன் மனதை நிதானப்படுத்திக் கொண்டு தழுதழுத்து குரலை சரி செய்து கொண்டு.. என்னோட பையன நல்லா பாத்துக்கோங்க.. ஒருவேளை உங்கள மாதிரி எங்க அம்மா ரெண்டு அடி என்ன அடிச்சிருந்தா… நானும் ஒழுக்கமா வளர்ந்திருப்பேனோ என்னவோ… என்கிட்ட வளர்ந்து என்னோட பையனும் என்னை மாதிரி வளர வேண்டாம்.. நீங்க எல்லாரும் அவன நல்லா பாத்துப்பீங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு… அவன் வளர்ந்து விவரம் தெரியும்போது அவன்கிட்ட ஒன்னே ஒன்னு மட்டும் சொல்லுங்க… தொண்டைக்குழி அடைக்க, கண்களில் வழிந்த நீரைத் தன் தோள்களில் துடைத்துக் கொண்டே தொடர்ந்தான்… அருண்னு உனக்கு ஒரு அப்பா இருக்கார்… அவர் உன்ன ரொம்ப லவ் பண்ணாருன்னு சொல்லுங்க.. தனது போனில் சிரிக்கும் குழந்தையை இறுதியாக ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டு.. அவன் உச்சந்தலையில் முத்தமிட்டு விட்டு.. நல்லா பாத்துக்கோங்க என்று கரகரத்த குரலில் கூறிவிட்டு… குழந்தைக்கு டாடா காண்பிக்க… தன்னை விட்டுப் பிரியப்போகிறான் என்பது தெரியாமல், அந்தப் பச்சைக் குழந்தையும் மழலைச் சிரிப்போடு கை அசைக்க… அந்தச் சிரிப்பு அருணின் நெஞ்சில் ஈட்டியாய்ப் பாய்ந்தது. பின்னால் திரும்பாமல், பாரமான கால்களை இழுத்துப் போட்டுக்கொண்டு அவன் நடந்து வர, அங்கே ஆதியும் விக்ரமும் சிலையாய் உறைந்து போயிருந்தனர்..
காருக்குள்…
கதவைத் தள்ளி மூடிய வேகத்தில், ஆதி அருணைத் தன் மார்போடு சேர்த்து இறுக்கக் கட்டியணைத்துக் கொண்டான். அதுவரை கல்லைப்போல் இருந்த ஆதி, இப்போது குழந்தையாய் கதற ஆரம்பித்தான். சாரிடா!… அருண் நீ உடைஞ்சு போவான்னு எனக்கு தெரியும்… ஆனா நம்ம பட்ட கஷ்டம் வேற எந்த குழந்தைக்கும் வேணாம் டா…. DNAரிசல்ட் வந்துடுச்சுடா… அவன் உன் குழந்தை இல்லை… காலம் முழுக்க அவன் முகத்தைப் பார்க்கும்போதெல்லாம் நீ ஏமாந்த அந்த ரணம் உன் நெஞ்சைக் கீறிக்கிட்டே இருக்கும்டா. நாளைக்கு இந்த உண்மை ரித்துக்குத் தெரிஞ்சா, அந்தப் பிஞ்சு உயிர் வாழ்க்கை முழுதும் அவமானத்துல கூனிக் குறுகிப் போயிரும். அவன் இந்த வீட்ல, இந்த அன்பான மனுஷங்க மத்தியில வளர்றதுதான் உங்க ரெண்டு பேருக்குமே நல்லதுடா…” என்று அருணை அணைத்த படியே கூற…
ஆதியின் கண்ணீர் அருணின் தோள்களை நனைக்க, அருண் எதுவுமே பேசவில்லை. கண்ணீருடன் வெறுமையாய் தலையசைத்தான். அந்த மௌனம் ஆயிரமாயிரம் வார்த்தைகளை விட அதிக வலியைத் தந்தது.
பின் சீட்டில் இருந்த விக்ரம், முன்னால் எக்கி இருவரையும் சேர்த்து அணைத்துக் கொண்டான். அந்தச் சிறிய காருக்குள் மூன்று உடல்கள் ஒன்றாக இணைந்திருக்கவில்லை; மாறாக மூன்று ஆன்மாக்கள் ஒருவருக்கொருவர் அரணாக நின்றனர்.
நட்பின் காதல் அங்கு அழகாய் வெளிப்பட்டது… எந்த சூழ்நிலையிலும் ஒருவரை ஒருவர் விட்டு தராமல் தாங்கி பிடித்து… தங்களது நட்பினை உறுதியாக்கிக் கொண்டனர்…
உதிரத்தால் இணையாத பந்தம் ஒன்று, கண்ணீரால் தன் புனிதத்தை நிரூபித்துக் கொண்டிருந்தது.
நாட்கள் கடந்தன…
ரித்துவின் பிரிவு, ஏமாற்றம் துரோகம் அனைத்தும் சேர்ந்து அருணை வாட்டி வதைத்தது.. பெரும்பாலும் தனிமையில் இருப்பதை தவிர்த்தான்… நண்பர்கள் கூடயே இருந்தான்.. சில நாட்களில் மிதுனின் வீட்டு வாசல் வரை சென்று காரிலேயே அமர்ந்து விட்டு பின் உள்ளே செல்ல மனம் இல்லாமல் திரும்பி வந்த நாட்களும் உண்டு…
இடைப்பட்ட ஒரு நாள் ருத்ர அவனை நிறுத்தி, குழந்தையை எங்கே என்று கேட்க…
ரொம்ப சீக்கிரமா கேட்டுட்டீங்க என்று மனதில் நினைத்தவன் நடந்ததை கூறினான்…
ஓ.. ஷிட்.. டோட்டலி டைம் வேஸ்ட்… நம்ம வேற பொண்ணு பாக்கலாம் அருண்.. என்று அருணுக்கு ஆறுதல் மொழி கூற…
அவர் பதிலை கேட்டு திடுக்கிட்டவன், பெரும் மூச்சுடன் தலையசைத்து விட்டு.. சத்தியமாய் அன்று ரித்துவை அந்த குடும்பத்தில் விட்டு வந்ததை நினைத்து சந்தோஷப்பட்டான்.. அவனாவது அங்கு நிம்மதியா இருக்கட்டும்… என்று அவனுக்கு அவனே ஆறுதல் அளித்துக் கொண்டான்.
ஏனோ ஒரு சில நாளில் வாழ்க்கையில் இருந்த வெறுமையை எண்ணி மன அழுத்தம் கூடிக் கொண்டே சென்றது… இனி நான் இருந்து என்ன பயன்… பூமியில் இருக்கும் தேவையில்லா பிண்டம் என தோன்றியது…
பிரிவின் வேதனையில் கெட்ட பழக்கத்திற்கு அடிமையாகாமல் இருக்க நண்பர்கள் பொதுவாக அவனை தனித்து விடுவதில்லை…
ஆனால் இன்று ஏனோ… மனம் மீள முடியாத துயரில் நண்பர்களே ஏமாற்றிவிட்டு தனியாக பார் சென்றவன்… போதும் என்று மட்டும் மூக்கு முட்ட குடித்து விட்டு போதையில் தள்ளாடியபடியே காரை எடுத்துக்கொண்டு பயணிக்க..
உயிரை வெறுத்த தாறுமாறான பயணத்திற்குப் பிறகு கார் ஓரிடத்தில் நிதானம் இழந்து மரத்தில் மோதியது…
கண்களில் தெரிந்த சிறிய ஒளியும் மெல்லமங்கி மயங்கி விழுந்தான் அருண்.
சிறிது நேரம் சென்று இருக்கும்…
மயங்கியவன் முகத்தில் தண்ணீர் “சடார்” என்று அடிக்கப்பட்டது…. மூளை மெல்ல சுயநினைவை எட்டிப் பார்க்க… அரை மயக்கத்தில்… கண்கள் திறக்க முடியவில்லை.. ஆனால் காதுகள் சத்தத்தை உள்வாங்கிக் கொண்டு இருந்தன… கன்னத்தில் இடியென அடி விழுந்தது… டேய் அருண்… அருண்.. கண்ண தெறடா… குடிகார நாயே…. நீ எல்லாம் எவ்வளவு அடிபட்டாலும் வாழ்க்கையில திருந்தவே மாட்டியா டா.. உன் வாழ்க்கைல பிரச்சனைனா நீ மட்டும் போய் சாக வேண்டியது தானடா… எதிர்ல வர்றவனை ஏண்டா சாவடிக்க பாக்குற… பொறுக்கி நாயே… என்று கன்னத்தில் “பொளீர்” “பொளீர்” என்று வைத்து எழுப்பி கொண்டு இருந்தாள்.
❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்..
ஊக்கபடுத்த கருத்துகளையும் பகிருங்கள் .
நன்றி!❤️