அவந்திகா ஏற்கனவே தன் மேல் கோபத்தில் இருக்கிறாள் மேலும் மேலும் அவளை சங்கடப்படுத்த வேண்டாம் என்று அறையை விட்டு வெளியே வந்திருந்தான் அதிரூபன்…
சுற்றிலும் பரந்து விரிந்து இருந்த கடலினை பார்த்தவாரு வந்தவன் முன்பு அவனையே இமைக்காது பார்த்துக் கொண்டு நின்று இருந்த ரேவந்த்தை கண்டதும் திடுக்கிட்டு நின்று விட்டான் அதிரூபன்…
அவனை அங்கு கொஞ்சமும் எதிர்பார்க்கவே இல்லை அதிரூபன்..ரேவந்த்துமே எதிர்பார்க்கவில்லை போல…
தன்னைக் கண்டதும் அதிரூபன் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து ஓடி வந்து தன்னை கட்டி அணைத்துக் கொள்வான் என எதிர்பார்த்த ரேவந்த்திற்கு அதிரூபன் தன்னை கண்டதும் திகைத்துப் போய் நிற்பதை கண்டதும் உள்ளுக்குள் ஏமாற்றம் பரவி வலியை உண்டாக்கியது…
. நிதானமாக அதிரூபனின் முன்பு சென்று நின்றவன்,
“ஹாய் ரூப்…என்ன ஷாக் ஆகி நிக்கிற?” … என முயன்று தன்னை உற்சாகமாக காட்டிக் கொண்டான் ரேவந்த்…
அவனது பேச்சில் தடுமாறிய அதிரூபன் ,
“ஹே…ரே…ரேவந்த்… நீ எப்படி இங்க ..??” என எடுத்ததும் கேட்டதும் முகம் கருத்து விட்டது ரேவந்த்திற்கு …
ரூபனின் விழிகளை மாறி மாறி பார்த்து,
“ஏன் அதி… நான் வரக்கூடாதா..?? என்னை விட்டுட்டு உன் பொண்டாட்டி கூட ஹனிமூன் செலபிரேட் பண்ணலாம்னு கிளம்பி வந்துட்டியா..??? நான் டிஸ்டர்ப் ஆயிட்டேன் பண்ணிட்டேன்ல சரி …இனி நான் உன் கண்ணு முன்னாடியே வரமாட்டேன்..” என தளும்பிய குரலில் கோபித்துக் கொண்டு செல்ல முற்பட்டவன் கையை பிடித்து தடுத்து நிறுத்திய அதிரூபன்,
” அப்படி சொல்ல வரல.. உனக்கு எப்படி நாங்க இங்க இருக்கிற இடம் தெரியும்.??”என விழிகள் சுருக்கி கேட்டதும் அலட்சியமாக அவனை பார்த்த ரேவந்த்,
” அது என்ன அவ்வளவு பெரிய விஷயமா..??
உங்க அப்பா உனக்கான ஹனிமூன் டிக்கட்ஸ்ஸை அவரோட மேனேஜர் கிட்ட போட சொல்லி இருந்தாரு..
அன்னைக்கு ஆபீஸ் விஷயமா அவரை பார்க்க போயிருந்தேன் அப்போ தான் அவர் தான் சொன்னாரு…” என்றதும் தலையசைத்துக் கொண்ட அதிரூபன்,
“ம்ம்ம்… ஆமா நீ எங்க ஸ்டே பண்ணி இருக்க..??” என கேட்டதும் இடுப்பில் கரம் வைத்து அதிரூபனை முறைத்துப் பார்த்த ரேவந்த் ,
“நான் ஸ்டே பண்ணி இருக்கறது இருக்கட்டும்.. நீ என்ன அவ கூட ஜாலியா ஹனிமூன்க்கு கிளம்பி வந்துட்ட??…அதுவும் என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாமா..?” என பற்களை கடித்துக் கொண்டு கேட்டதும் சுருக்கென்று இருந்தது அதிரூபனுக்கு …
“அப்படிலாம் எதுவும் இல்லை ரேவந்த்… அவள் ஏற்கனவே என் மேல காண்டுல இருக்கா …”
“ஓஓஓஓ…காண்டுல இருக்கிறவளை தான் அன்னிக்கு அத்தனை பேர் முன்னாடி கிஸ் பண்ணியா அதிரூபன்…??” என இப்போது ரேவந்த் வெளிப்படையாகவே அதிரூபனை பார்த்து கேட்டதும் முகம் மாறிவிட்டது அதிரூபனுக்கு…
“ப்ச்…நீ நினைக்கிற மாதிரிலாம் இல்லே….அது பார்ட்டிக்காக பண்ணது…”
“ம்ஹூம்….எனக்கு சந்தேகமா இருக்கு ரூப்…”
“பைத்தியம் மாதிரி உளறாத ரே…” என சற்று கோபமாக கூறியதும்,
“அப்போ ச..ரி நீ வா எவ்வளவு நாளாச்சு நம்ம டைம் ஸ்பென்ட் பண்ணி..” என அவனை அழைத்துக்கொண்டு அங்கு
அவன் தங்கி இருந்த அறைக்கு அழைத்துச் சென்றான் ரேவந்த்…
ஏனோ ஒருவித நெருடல் அதிரூபனுக்குள் இருந்தது .…
ரேவந்த் ரூபனை கவனித்தவாறு கதவைத் திறந்து உள்ளே வந்தவன்,
” இங்க தான் தங்கி இருக்கேன்.. அவசர அவசரமா புக் பண்ணதால இது மாதிரி ஒன்னு தான் கிடைச்சது ..” என ஏதோ பழைய குடிசையில் தான் தங்கியிருப்பது போல பாவ்லா செய்தான் ரேவந்த்..
இதுவும் நல்ல உயர்தர அறை தான் அதற்கே சலித்துக் கொண்டு பதில் அளித்து இருந்தான் ரேவந்த் …
அதிரூபன் பெருமூச்சுடன் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து,
” நீ இங்க வந்தது வேற யாருக்காவது தெரியுமா..??” என கேட்டதும் ரேவந்த்தும் மற்றொரு நாற்காலியில் அமர்ந்து கொண்டு,
” இல்ல அதி…யாருக்கும் தெரியாது.. ஆமா என்ன??… நானும் பார்த்துக்கிட்டே இருக்கேன் ஏன் வந்த..?? எதுக்கு வந்த??.. எப்படி வந்தேனு இப்படித்தான் நீ கேட்டுகிட்டே இருக்க..
என்னை நீ மிஸ் பண்ணவே இல்லையா ரூப்? நான் மட்டும் தான் உன்னை மிஸ் பண்றேன் போல..” என முகத்தை பாவமாய் வைத்து கூறியதும் அவனது பேச்சில் அதிரூபன் சட்டென பார்வையை திருப்பிக் கொண்டு பின்னந்தலையை கோதிக் கொண்டான் …
அவனது அந்த செயலில் முகம் செத்துவிட்டது ரேவந்த்திற்கு… வேகமாக இருக்கையில் இருந்து எழுந்து அவனுக்கு பின்னே நின்று அதிரூபனின் தோள்பட்டையை மெல்ல அழுத்தி விட்டுக் கொண்டு,
” எனக்கு தெரியும் அதி… உன் மனசுல நான் மட்டும் தான் இருக்கேன்னு… கட்டாயத்தினால தான் அந்த அவந்திகாவை கல்யாணம் பண்ண வேண்டியதா ஆயிடுச்சு.. நீ கவலைப்படாத அவளை பொம்மை மாதிரி வச்சுக்கிட்டு எப்பவும் போல நாம நம்ம வாழ்க்கை வாழ்வோம் …யாரைப் பத்தியும் கவலைப்பட வேண்டாம்.. எதுக்காகவும்..” என வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல அதிரூபனிடம் மெல்ல பேச்சு கொடுத்தான் ரேவந்த்…
அவனுக்கு பயம் எங்கு அதிரூபன் தன் கையை விட்டு சென்று விடுவானோ என்று …
அதிரூபன் ஒருவனே தன் உலகம் என வாழ்ந்து வருகிறான் ரேவந்த்…அவனது காதல் பிரிந்து விடுமோ என்கிற தவிப்பும் அவனுக்கு இருந்தது…
அதிரூபனும்,
” எனக்கும் அவந்திகாவுக்கு ஒன்னும் இல்ல ரேவந்த்… அவ வழியை பார்த்துட்டு இருக்கா அவ இருக்க… நான் என் வழியை பார்த்துட்டு இருக்கேன்.. அவ்வளவு தான்…!” என்ற பின்னர் தான் ரேவந்த்திற்கு நிம்மதியாக இருந்தது …
அதன் பின் இருவரும் சிரித்து பேசி நேரத்தை செலவழித்தனர்..
ரேவந்த் தானே அதிரூபனுக்கான மதுவை கொண்டு வந்து கையில் கொடுத்திட ..அதைக் கண்டதும் சற்று யோசித்த அதிரூபன்,
“இப்ப வேண்டாம் ரேவந்த்…” என்று மறுப்பு தெரிவிக்கவும் அவனை கட்டாயப்படுத்தி குடிக்க சொல்லிவிட்டான் ரேவந்த்…
வேறு வழி இல்லாது அவன் தந்த மதுவை குடித்து விட்டான் அதிரூபன்…
அதிரூபனின் விழிகளில் போதை அப்பட்டமாய் தெரியவும் இதற்கு மேல் இங்கிருந்தால் தேவையில்லாமல் பிரச்சனை வந்துவிடும் என எண்ணிய ரேவந்த்,
” சரி வா நான் உன்னை உன் ரூம்ல விட்டுடுறேன் ..” என அவனை அழைத்துக்கொண்டு அவன் அறை இருக்கும் திசையை நோக்கி சென்றான் ரேவந்த்…
அங்கு இருக்கும் வசதிகளை கண்டு ரேவந்த் சற்று அசந்து தான் போனான் ..
அதிரூபனிடம் இருக்கும் இன்னொரு சாவியைக் கொண்டு கதவை திறந்து உள்ளே சென்ற ரேவந்த் அறையில் இருக்கும் ஆடம்பரத்தை கண்டு பிரம்மித்துப் போனான் …
இவை அனைத்தும் அவந்திகா அனுபவிப்பதை எண்ணி எண்ணி உள்ளுக்குள் புகைந்து போனது ரேவந்த்திற்கு… அவனது கைகளில் அதிரூபன் தடுமாறச் செய்தான்..
அவனை படுக்கையறைக்கு அழைத்துச் செல்ல.. அங்கிருந்த அலங்காரமும் மனம் கமிழும் அந்த அறை வாசமும் ரேவந்த்தை இன்னொரு உலகத்திற்கு அழைத்துச் சென்றது ..
அதிரூபனின் பனியன் களைந்து சற்று தடுமாற்றத்துடன் நின்று கொண்டிருந்தான் ..
அவனை மோகமாக பார்த்த ரேவந்த் மெல்ல நெருங்கி அவனது கழுத்தை தன் இரு கரங்களால் வளைத்து,
” எவ்வளவு நாளாச்சு நீயும் நானும் ஒன்னா இருந்து… உனக்கும் அவந்திகாக்கும் தான் ஹனிமூன் நடக்கப்போறது இல்லையே ..நம்ம வாழ்க்கை வாழ்வோம் அதி…!” என ஆசையாய் கூறி கொண்டே அவனை இறுக அணைத்துக் கொண்டான்..
அதிரூபனும் ரேவந்த்தும் இறுக அணைத்துக் கொண்டிட.. அக்கணம் தான் அவந்திகா தன்னிடம் இருக்கும் சாவியை கொண்டு உள்ளே வந்தவள் படுக்கையறையில் ஏதோ சத்தம் கேட்கவும் என்னவென்று அங்கு கதவை திறந்து பார்த்தவளவது விழிகள் இரண்டும் அதிர்ச்சியில் விரிந்து கொண்டன..