அத்தியாயம் 14
என்ன மதிரியான நினைப்பு இது.
அவர் எனக்கானவர் இல்லை அவரது காதல் எனக்கானது இல்லை அவர் இன்னொருவருக்கு சொந்தமானவர்.
ஆனால் எதற்கு இந்த மாதிரியான நினைப்பு வரனும்.
“வேணாம் இத்தோட நிறுத்திக்க இன்னொரு பொண்ணுக்கு நீ துரோகம் பன்னுற”
அவளது மனசாட்சி எடுத்துரைக்க கடினப்பட்டு அந்த நினைவை ஒதுக்கியவள் தேவிப்பிரியாவுடன் பேசினாள்.
“சரி வா கொஞ்ச நேரம் நடப்போம்”
தேவிப்பிரியா எழும்ப அவளும் எழுந்து நடக்கலானாள்.
“ஏய் தேவி இது யாரு”
அவர்கள் இருவரும் நடை பயின்றுக் கொண்டிருக்க முன்னால் வந்த ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மனி தேவிப்பிரியாவிடம் நேத்ராவைக் காண்பித்துக் கேட்டார்.
“இது அக்ஷரன் அண்ணாவோட வைஃப்”
தேவிப்பிரியா அறிமுகப்படுத்தி வைக்க நேத்ரா அவரைப் பார்த்து புன்னகைத்தாள்.
அப்பெண்மனி நேத்ராவை தலை முதல் கால் வரை ஆராய்ச்சிப் பார்வைப் பார்த்து வைக்க நேத்ராவிற்குத் தான் புரியவில்லை.
“ம்க்கும் சரி நா போய்ட்டு வரேன்”
நேத்ராவிடம் பதில்க்கு புன்னகைக் கூட செய்யாமல் அவளை பார்த்து முகத்தைத் திருப்பி விட்டு தேவிப்பிரியாவிடம் கூறிவிட்டு அப்பெண்மனி அகன்றாள் அவ்விடத்தை விட்டு.
“எதுக்கு அவங்க அப்பிடி பார்த்தாங்க”
அப்பெண்மனியின் பார்வைக்கான அர்த்தம் புரியாமல் தேவிப்பிரியாவிடமே கேட்டாள் நேத்ரா.
“அது வேற ஒன்னுமில்ல அவங்களோட மகள அக்ஷரன் அண்ணாக்கு செட்டாக்கி விட எவ்ளவோ ட்ரை பன்னாங்க அக்ஷரன் அண்ணா அந்த பொண்ண திரும்பி கூட பார்க்க மாட்டாரு அந்த பொண்ணு மட்டுமல்ல வேறு எந்த பொண்ணையும் மறந்தும்கூட திரும்பி பார்க்க மாட்டாரு அதான் பொறாமையின் உச்சக்கட்டம் அந்த ஆன்ட்டியோட அந்த பார்வ”
தேவிப்பிரியாக் கூறி சிரித்தாள்.
“ம்க்கும் நீ தான் அவர மெச்சிக்கனும் பார்க்காமலா ஶ்ரீஜாக்கு வயித்துல புள்ளைய கொடுத்திருப்பாரு”
நினைத்தது என்னவோ மனதில் தான் வெளியே புன்னகைத்து வைத்தாள்.
“சரி போகலாம் வா இதுக்கப்புறம் நடந்தா நைட்ல கால் ரொம்ப வலிக்கும்”
தேவிப்பிரியாக் கூறினாள்.
“தாய்மைங்குறது வரம் தான்ல”
நோத்ரா புன்னகைத்துக் கொண்டேக் கூற.
“ம்ம் அந்த வரத்தையும் கடவுள் எல்லாருக்கும் குடுத்திட மாட்டாரு அப்பிடி குடுத்தாஅந்த வரத்தையே கொஞ்ச பேரு சபமாக்கிக்குவாங்க”
தேவிப்பிரியாக் கூறினாள்.
“ம்ம் அதுன்னா உண்ம தான்”
நேத்ராக் கூறினாள்.
“அந்த வரம் நம்ம வாழ்க்கைல எப்பவுமே கிடைக்காது”
தனக்குள்ளே எண்ணியவள் வெளியே விரக்தியாகப் புன்னகைத்துக் கொண்டாள்.
“சரிடா நா போறேன் ஃப்ரஷ்ஷாகனும் அப்புறம் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கனும்”
தேவிப்பிரியா கூறி விட்டு தனது வீட்டைத் திறந்துக் கொண்டு உள்ளே நுழைந்தாள்.
இவளும் தனது வீட்டைத் திறக்க கைப்பிடியில் கை வைக்க பின்னால் ஒரு குரல் கேட்டது.
“நேத்ரா”
எங்கோ கேட்ட குரலாக இருக்க புருவங்கள் முடிச்சிட திரும்பினாள்.
அங்கு முப்பத்திரண்டு பற்களும் வெளியே வந்து விழுமளவு புன்னகைத்துக் கொண்டிருந்தான் அவளுக்கு ஞானவேல் பார்த்திருந்த மாப்பிள்ளை மருது.
“எப்பிடி இருக்க நேத்ரா இங்கனையா தங்கியிருக்க”
அவன் கேட்க இவள் விழித்தாள்.
அவனை அங்கே எதிர்ப்பார்க்கவில்லையே.
“நீ.. நீங்க எப்பிடி”
வார்த்தைகள் வேறு திணறியது.
“உங்க மாமாக்கிட்ட வீட்டு விலாசத்த கேட்டுக்கிட்டு வந்தேன்”
ஏதோ மலையை நகர்த்தியது போல் பெருமையாகக் கூறினான் அவன்.
“ஐயோ அவர் மட்டும் இவர பார்த்தா என்னாகும் சும்மாவே அன்னைக்கு தாண்டவம் ஆடினாரு அதோட இந்தாள லவ் பன்னியிருந்தா மறக்கனும்ன்னு மிரட்டினாரு இந்தாளோட முகத்தையே இப்போ தான் பாக்குறேன் கடவுளே”
மனதுக்குள் அலறினாள் தன் கணவனின் அன்றைய அவதாரத்தை எண்ணி.
“ஓஹ் சரி”
கத்தரித்தது போல் பேசினாலும் அந்த மருது அங்கிருந்து ஒரு அடி கூட நகரவில்லையே.
“என்ன நேத்ரா வெளிய நிறுத்தி பேசுற உள்ள கூப்ட மாட்டியா”
அவன் கேட்க என்ன சொல்வதென்று தெரியாமல் விழித்தாள்.
“அது..”
தயங்கி நிற்க.
“தாராளமா உள்ள வரலாம்”
பின்னால் கேட்டது அக்ஷரனது குரல்.
இவள் எட்டி அவனைப் பார்க்க அவனும் அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
இல்லை உக்கிரமமாக முறைத்துக் கொண்டிருந்தான்.
“எதுக்கு முறைக்குறாருன்னே தெரிலயே”
உள்ளுக்குள் உதறல் எடுத்தது.
“எப்பிடி இருக்கப்பா”
மருது அக்ஷரனிடம் விசாரிக்க அழுத்தமாக அவனைப் பார்த்தானே தவிர வாய் திறந்து எதுவும் பேசவில்லை.
அவனது பார்வையில் மருதுவின் விழிகள் தடுமாறினாலும் வெளியேக் காட்டிக் கொள்ளாமல்.
“அது நா இந்த பக்கம் வேலையா வந்தேன் அதான் நேத்ராவ”
அவன் கூற வந்த வார்த்தைகள் அக்ஷரனது முறைப்பில் உள்ளடங்கிப் போனது உள்ளுக்குள்.
“இப்போ அவ என் பொண்டாட்டி இனிமே அவள தேடி வரமாட்டேன்னு நினைக்குறேன்”
அவன் அழுத்தும் திருத்துமாக பற்களைக் கடித்துக் கொண்டுக் கூற மருதுவின் தலை தானாக ஆடியது.
“இப்போ வந்த வழியப் பார்த்துக்கிட்டு ஊருக்குப் போய் சேரு”
அவனை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளாத குறையாக சொல்ல திரும்பி நேத்ராவைக் கூட பார்க்காமல் அங்கிருந்து சென்றான்.
அடுத்து அக்ஷரன் நேத்ராவைப் பார்க்க அவன் தன்னைப் பார்க்கும் முன்னே தலையை குனித்துக் கொண்டாள்.
அவளது மணிக்கட்டை இறுகப்பிடித்தவன் கதவைத் திறந்துக் கொண்டு உள்ளே சென்றான்.
அவனது பிடி அவளுக்கு உச்சக்கட்ட வலியைக் கொடுத்தாலும் அவனது கோவத்தின் உச்சத்தில் வாயில் இருந்து வார்த்தைகள் வெளி வர மறுத்தது.
பற்களைக் கடித்து வலியைப் பொறுத்தவள் அவனுக்குப் பின்னாலே சென்றாள்.
அவனது பிடியின் அழுத்தமே உணர்த்தியது கோவத்தின் அளவை.
வீட்டிற்குள் சென்றவன் அவளது கையை விட்டு மார்புக்குக் குறுக்காகக் கைகளைக் கட்டிக் கொண்டு அவளையேப் பார்க்க அவள் தவிர்த்தும் அவனைப் பார்க்கவில்லை.
“எங்க உன்னோட துப்பட்டா”
அவனது கேள்வியில் சட்டென தலையை உயர்த்தி அவனைக் கேள்வியாகப் பார்த்தாள்.
அவளைப் பார்த்துக் கொண்டே ஒவ்வொரு அடியாக அவளை நெருங்க அவனது ஒவ்வொரு அடிக்கும் இரண்டடி பின்னால் நகர்ந்தாள் இவள்.
“எங்க உன்னோட துப்பட்டான்னு கேட்டேன்”
மீண்டும் பற்களுக்கிடையில் அறைப்பட்டு வெளிவந்தது வார்த்தைகள்.
“அது.. போட..ல்ல”
அவனது நெருக்கத்தில் பாவைக்கு வார்த்தைகள் வெளிவராமல் முரண்டு பன்னியது.
“அந்த நாயோட கண்ணு எங்க போகுதுன்னு பார்க்க முடியாத அளவுக்கு காதல் மயக்கமோ”
அவளை உரசியபடி கேட்டான்.
அவனது கேள்வி புரியவில்லை இவளுக்கு.
“எ..ன்ன என்ன”
கண்களால் அவளது மார்புப் பகுதியை சுட்டிக் காட்டியவன்.
“அந்த பன்னியோட கண்ணு இங்க தான் இருந்துச்சு இதக் கூட புரிஞ்சிக்க முடியாத அளவுக்கு சின்னக் கொழந்தையா நீ”
அவனது மார்பில் இவளது தலை முட்டியது.
அவளுக்கு நகரமுடியவில்லை.
ஏனெனில் இரண்டு பக்க சுவரிலும் கைகள் இரண்டையும் அணைக்கட்டு போல் சுற்றியிருந்தான்.
அவன் சுட்டிக் காட்டிய இடத்தைப் பார்த்ததும் வியர்த்தது அவளுக்கு மேலும்,
அவனது உடல் தன் மேல உரச சிலிர்த்தாள்.
அவனது பார்வை மாத்திரம் தான் இருந்தது இங்கு இவனோ உரசிக் கொண்டல்லவா உள்ளான்.
அதை அவனிடம் கூறத் தான் தைரியம் கொஞ்சமும் இல்லை.
“சொல்லு உனக்கு தெரியல்லையா”
அவன் கேட்க இவள் அமைதியாக இருந்தாள்.
வார்த்தைகள் எங்கு வந்தது பேசுவதற்கு
அவனது ப்ர்ஃபியூம் வாசமும் அவனுக்கே உரித்தான வாசமும் இவளை இம்சித்தது.
“சொல்லு”
வார்த்தைகளில் ஏதோ ஒரு மாற்றம் இவ்வளவு நேரமும் இருந்த கடினம் மறைந்ததோ.
இருவரும் அதை உணரவில்லை.
“நா பார்க்கல்ல”
வெறும் காற்று தான் வெளிவந்தது.
“கேக்கல்ல”
அவளது வாயருகே குனிய அவனது முன்னுச்சி முடி அவளது மூக்கில் உரசியது.
மொத்தத்தில் அவள் மேல் மொத்தமாகத் தன் பாரத்தை இறக்கி இருந்தான்.
அவன் தனக்கு மிக அருகில் குனிந்ததும் இவளது இதயம் எக்குத்தப்பாக எகிறிக் குதித்தது.
தூரத்தில் இருந்து பார்த்தால் இருவரும் இதழுடன் இதழ் சேர்த்து முத்தம் வைப்பது போல் தோன்றும்.
இவள் எச்சில் விழுங்கியது.
ஏறியிறங்கிய அவளது தொண்டைக் குழியைப் பார்த்தவனது பார்வை இன்னும் கீழிறங்கியது.
“அவங்க பார்க்குறத நா பார்க்கல்ல”
அவனைப் பார்க்காமலே தலையைக் குனித்துக் கொண்டு இம்முறை சற்று வெளிவந்த குரலில் மெதுவாகக் கூறினாள்.
அவளது கூற்றில் நிமிர்ந்து அவளைப் பார்த்தான்.
“ஓஹ்… இனி துப்பட்டா இல்லாம வீட்டுல இருந்து ஒரு அடி கூட வெளில போகக் கூடாது”
கட்டளையாக வெளிவந்த குரலில் தலையை நாலா பக்கமும் ஆட்டி வைத்தாள் அவள்.
“அப்போ வீட்டுக்குள்ள”
அவளது மனசாட்சி தான் அவனிடம் கேள்வி எழுப்பியது.
அது நிச்சயமாக அவனுக்குக் கேட்டிருக்காது.
இன்னும் அவன் விலகவில்லை.
இவளுக்கும் அவனை விலக்க தோன்றவுமில்லை.
நேற்று இரவு விவாகரத்து பத்திரத்தில் கையப்பொமிட்டது இருவருக்கும் நினைவில் இல்லையோ என்னவோ..??
ஒரு நொடி அவ்வாறே இருக்க அவனாக விலகினான்.
“ஸோரி ”
தலை முடியை கோதியவன் மறுபக்கத்திற்குத் திரும்பி பெருமூச்சொன்றை விட்டான்.
இவளோ குனிந்த தலை நிமிரவில்லை உடல் வேறு லேசாக நடுங்கியது.
“இந்தா”
அவனது குரலில் நிமிர்ந்து பார்த்தாள்.
அவன் ஆடைப் பை ஒன்றை இவளிடம் நீட்டினான்.
“ஈவினிங் ஒரு ஃபங்ஷன் இருக்கு ரெடியாகு”
அவன் கூற அமைதியாக அதை வாங்கிக் கொண்டாள்.
“சாப்டியா”
அவன் கேட்க தலையை மறுப்பாக ஆட்டினாள்.
“வா”
அவன் டைனிங் டேபளை நோக்கி நடக்க அவளும் அமைதியாக அந்த பையை அங்கே வைத்து விட்டு அவனுடன் நடந்தாள்.
இருவரும் அமைதியாக சாப்பிட்டனர்.
அவள் எழுந்து செல்ல இவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
“அத்த ஃபோன் பன்னியிருந்தாங்க”
அவள் சமயலலறையில் இருந்து வெளிவந்து சொல்ல.
“என்ன விஷயம்”
“நாளன்னைக்கு வாரன்னு சொன்னாங்க”
அவளது குரலில் இருந்த ஆர்வமே உணர்த்தியது அவளது மகிழ்ச்சியின் அளவை.
“ம்ம்”
அவன் அமைதியாக சாப்பிட்டு விட்டு எழுந்து சென்றான்.
இவளும் அவன் சாப்பிட்ட தட்டை எடுத்துச் சென்றாள் கழுவி வைப்பதற்கு.
அவன் அறைக்குள் இருக்க இவள் அறை பக்கமே செல்லவில்லை.
பால்கனியில் சென்று நின்றாள்.
அவ்வீட்டிலே விருப்பமான இடம் என்றால் அது பல்கனியாகத் தான் இருக்கும்.
அமைதியாக வானத்தை வெறித்தாள்.
அவளது எண்ணங்கள் முழுக்க சற்று முன்னர் நடைபெற்றது தான் ஓடியது.
அவனது அருகாமையில் தன்னிலை இழந்து தான் போனாள்.
“எதுக்கு இப்பிடி நினைக்குறேன் இதெல்லாம் தப்பு தப்பு தப்பு”
வாய்விட்டே கூறிக் கொண்டாள்.
பின் ஓர்கிட் மலர்களைப் பார்த்தாள் அவை தலையசைத்து இவளை அழைப்பது போல் இருக்க அவற்றுக்கு அருகில் சென்றாள்.
“எதுக்கு பொறந்தேன்னு இருக்கு உங்கள போல பூவா பொறந்திருக்கலாம்.. எதுக்கு பொறந்தேன்னு இருக்கு அதுவும் பொண்ணா”
கண்களை மூடித் திறந்தவள் அமைதியாகி விட்டாள்.
இங்கு அறைக்குள் நிலையில்லாமல் தவித்தான் அக்ஷரன்.
பின் தனது அழைப்பேசியை உயிர்ப்பித்தவன் அதில் இருந்த ஒரு புகைப்படம் ஒன்றை பார்த்தவன் அதை விரல் கொண்டு வருடி விட்டான்.
“ஹனி…”
அவ்வளவு காதல் அக்குரலில். கண்களிலும் கூட.
முகமோ இவ்வளவு நேரம் இருந்த இறுக்கத்திற்கு ஒட்டுமொத்த நேரெதிராக கனிந்திருந்தது.
பின் அழைப்பேசியில் இருந்த அப்புகைப்படத்திற்கு ஒரு முத்தம் வைத்தான்.
அப்பொழுது தான் கொஞ்சம் தணிந்து போனது அவனது தடுமாற்றம்.
பின் யாருக்கோ அழைப்பை எடுத்தவன்.
“ஹெலோ.. எஸ் ஓகே”
மூன்று வார்த்தைகள் தான் கூறி விட்டு அழைப்பேசியை வைத்தான்.
இவ்வளவு நேரம் இருந்த கனிவு தொலைந்து போய் கடுமை பரவியது முகத்தில்.
இடது பக்கமாக இதழ் வளைத்து சிரித்தவன்.
குளியலறைக்குள் நுழைந்தான்.
சிறிது நேரத்தில் அவள் காஃபி தயாரித்துக் கொண்டு அறைக் கதவைத் தட்டினாள்.
கொஞ்சமாக தயக்கங்கள் அவளை விட்டு நீங்கியது.
“கம்மிங்”
அவன் கூறவே உள்ளே நுழைந்தாள்.
அவனோ கட்டிலில் சாயந்தமர்ந்து மடிக்கணினியில் ஏதோ வேலை செய்து கொண்டிருந்தான்.
இவள் சென்று அவனிடம் காஃபி கப்பை நீட்ட ஒரு நொடி அவளது முகத்தைப் பார்த்தவன் அதை வாங்கிக் கொண்டான்.
“இப்போவே ரெடியாகு கெளம்பனும்”
அவன் கூற.
“எங்க”
மெதுவாக வந்தது வார்த்தைகள்.
“ஒரு ஃபங்ஷன்”
அவன் கூற அதற்கு மேல் கேட்கமுடியவில்லை.
அமைதியாக வெளியே வந்தவள் மற்றைய அறைக்கு சென்றாள் தயாராவதற்கு.
அவள் காட்டிய அதே சேலை தான்..
முழு வெள்ளை நிற சேலையில் போர்டரும்,இன்னும் சில அலங்கார வேலைப்பாடுகளும் கறுப்பு நிறத்தில் இருந்தது.
ரவிக்கையை எடுத்துப் பார்த்தாள்.
அவளுக்காகவே அளவு எடுத்து தைத்தது போல் இருந்தது அவ்வளவு கணக்கச்சிதமாகப் பொறுந்தியது அவளுக்கு.
“இவங்களுக்கு எப்பிடி தெரியும் என்னோட அளவு எனக்கே தெரியாது அத்த தான் அளவெடுத்து தைப்பாங்க”
இவள் வாய் வார்த்தை கூறினாலும் ஆசையாக கைகள் அந்த சேலையையும் ரவிக்கையையும் வருடிக் கொடுக்கத் தவறவில்லை.
இன்னொரு பை இருந்தது இதைத் திறந்து பார்த்தாள்.
அதில் வெள்ளை நிற நெக்லஸ்,காதணி மற்றும் வளையல்கள் இருந்தன.
“இது கவரிங் நகையா ஆனா அழகா இருக்கே”
பின் தயராகி விட்டு வெளியே வர அவனும் தயாராகி இருந்தான்.
அவன் வெள்ளை மற்றும் கறுப்பு நிறத்தில் கோர்ட் சூர்ட் அணிந்து ஆணழகானவே இருந்தான்.
அறையில் இருந்து வெளியே வந்த அவளை விழியெடுக்காமல் பார்த்தான்.
இணைந்திருக்கும் இரு புருவத்திற்கும் சற்று மேல் கறுப்பு நிற பொட்டு வைத்து.
அச்சேலையில் அழகாக இருந்தாள் அவள்.
முழு நீண்ட கை கறுப்பு நிற ரவிக்கை.
முடியை போனிடோல் போட்டிருந்தாள்.
எந்தவித ஒப்பனையும் இன்றி அழகியாகத் தான் இருந்தாள்.
அவளை தலை முதல் கால் வரைப் பார்த்தவன் தலையசைத்துக் கொண்டான்.
இவளும் அவனைப் பார்த்தாள்.
கறுப்பு நிறத்தில் கோர்ட் அணிந்து உள்ளே வெள்ளை நிற ஷேர்ட் அணிந்து.
பேன்ட்டும் கறுப்பு நிறத்தில் அணிந்து கறுப்பு நிற ஷூ அணிந்திருந்தான்.
அவளது ஃபோன் அலறியது.
எடுத்துப் பார்த்தாள்.
அவளது அத்தை தான் அழைத்திருக்கிறார் புன்னகைத்துக் கொண்டே அழைப்பேசியை எடுத்து காதில் வைத்தாள்.
“சொல்லுங்க அத்த எனக்கு எதுவும் வேணாம் ம்ம் அப்போ நீங்க செய்ற ஊறுகாய் கொண்டு வாங்க ம்ம் சரி அத்த”
எனப் பேசியவள் மறுபக்கத்தில் தேவகி சொன்ன அடுத்த செய்தியில் அதிர்ந்தாள்.
“என்… என்ன சொல்றிங்க அத்த எப்போ ஹ்ம் சரி அத்த”
அழைப்பேசியை வைத்து விட்டு அதிர்ந்த முகத்துடனே கணவனைப் பார்த்தாள்.
“என்ன”
அவளது பார்வையை உணர்ந்து புருவம் உயர்த்தினான்.
“இங்க வந்திருந்த மருது அவங்க ஊருக்குப் போற வழில அவர யாரோ வழிமறிச்சு அடிச்சிருக்காங்க அதோட அவரு கண்ணுக்கு நல்லா அடி விழுந்திருக்கு போல பார்வைய இழந்துட்டாராம்”
அவள் பதட்டத்துடன் கூற.
“ம்ம்… சரி வா போலாம்”
அவனோ தோளை உலுக்கி விட்டு சாதாரணமாகக் கூறிக் கொண்டு வெளியேறினான்.
இவள் தான் மருதுவிற்காக கவலைப்பட்டாள்.
******
தொடரும்..❤
💜அஷு💜