அத்தியாயம் 16
மைக்கை வலது கையால் பிடித்துக் கொண்டு இடது கையை பேன்ட் போக்கெட்டில் விட்டபடி தனது முழு உயரத்திற்கும் நிமிர்ந்து நின்று பேசிக் கொண்டிருக்கும் கணவனையே விழியெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவனது அந்தஸ்த்தைப் பார்த்ததும் அதிர்ச்சியடையாமல் இருக்க முடியவில்லை.
“அத்த கூட சொல்லல்லயே அவங்க சினிமால தான் வேல பாக்குறாங்கன்னு”
அவள் அவ்வாறு நினைத்துக் கொண்டு அவனையேப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அநாவசியமாக அங்கு அமர்ந்திருந்த இரு இளம்பெண்களின் உரையாடல் வேறு இவளது காதில் விழுந்தது.
“அங்க பாரே செம்ம ஹொட்டா மேன்லியா இருக்காருல்ல”
ஒரு பெண் கிறக்கமாகக் கூற.
“ஆமாடி செம்ம்மயா இருக்காரு இந்த படத்தோட ஹீரோவ விட ஹென்ட்ஸமா இருக்காரு”
“ம்ம்ம் எத்தன பேர் ரூட்டு போட்டிருப்போம் யாருகிட்டயும் மயங்கல்லையே எந்த பொண்ணையும் திரும்பி கூட பார்க்கல்லயே”
“ஆமாடி அவர்கூட வந்த அந்த பொண்ணு அவரோட வைஃபா இருக்குமோ”
மற்றைய பெண் தோழியிடம் கேட்க முகத்தை சுழித்தவள்.
“ச்ச்சச்ச அவரோட பெர்ஸனாலட்டி எங்க அந்த பொண்ண அவரோட வைஃப்ன்னு நினைக்கவே முடியல”
முகத்தை அஷ்டகோணலாகா மாற்றிக் கூற.
“அப்போ அந்த பொண்ணு யாரா இருக்கும்”
அவள் நேத்ராவைத் திரும்பி பார்த்து விட்டு கேட்க.
அவர்களது உரையாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்த நேத்ரா தலையைக் குனித்துக் கொண்டாள்.
“யாருக்குத் தெரியும் பட் ஷுவரா வைஃபா இருக்க மாட்டா”
உறுதியாகக் கூறினாள் மற்றைய பெண்.
இவர்கள் இருவரது உரையாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்த நேத்ராவிற்கோ மனம் வெம்பிப் போனது.
அவர்கள் மேல் கோவம் வரவில்லை.
அவர்கள் கூறுவது நூற்றுக்கு இருநூறு சதவீதம் உண்மை அல்லவா??
தான் அவருக்கு எந்தவிதத்திலும் தகுதியில்லை என்ற எண்ணம் இன்னும் வலுப்பெற்றது அவள் மனதில்.
கண்கள் வேறு கலங்க கடினப்பட்டு கட்டுப்படுத்தினாள் கலங்கும் கண்களை.
“ஹேய் ஹாய் ட்ரடிஷனல் ப்யூட்டி”
ஓர் அந்நிய ஆண் குரல் கேட்க திடுக்கிட்டு விழித்தவள் நிமிர்ந்து பார்த்தாள்.
அங்கு அவளது தோளில் கையை அழுத்தமாகப் பதித்து கோர்ட் ஷூட் அணிந்து ஒரு ஆடவன் இவளைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டிருக்க இவள் புன்னகைக்கவில்லை மாறாக விழித்தவள் பின்னால் நகர்ந்தாள்.
அவனும் புன்னகைத்துக் கொண்டே கையை எடுத்தான்
“என்ன பாக்குற நா ஹீரோ ரித்விக்”
பெருமையாகக் கூற இவளோ பேந்த பேந்த விழித்தாள்.
“உனக்குத் தெரியாதா”
புருவத்தை சுருக்கி அவன் கேட்க மறுப்பாகத் தலையசைத்தாள்.
“ஓஹ் இட்ஸ் ஓகே உன் பேர் என்ன”
அவன் ஒருமையில் அழைத்தான்.
“நேத்ரா”
மெதுவாக அவள் கூற அங்கு மேடையிலும் நேத்ரா என அழைத்தான் அக்ஷரன்.
இருவரும் மேடையைப் பார்க்க முகம் இறுகிப் போய் மைக்கை அவன் பிடித்திருக்கும் அழுத்தமே உணர்த்தியது அவளுக்கு அவனது கோவத்தின் அளவை.
“என்னோட வைஃப் நேத்ராவ இங்க இன்ட்ரோ கொடுக்க நினைக்குறேன்”
அழுத்தமாக அவன் கூற அவனது பார்வையோ அவளை விட்டும் இம்மியளவும் நகரவில்லை.
“கண்டிப்பா ஸர் ப்ளீஸ் கம் டூ ஸ்டேஜ் நேத்ரா மேடம்”
தொகுப்பாளினி நேத்ராவை மேடைக்கு அழைக்க இவள் அதிர்ந்தாள்.
அவளுக்கு இதெல்லாம் புதிதல்லவா??
“ஏய் நீ அக்ஷரன் ஸரோட வைஃபா உன்ன கூப்ட்றாங்க போ”
அவளது முதுகைப் பிடித்துத் தள்ள இவளோ மெதுவாக அடியெடுத்து வைத்து மேடையை நோக்கி சென்றாள்.
அவள் வரும் வரை விழியை அகற்றவில்லை அவளை விட்டும் அக்ஷரன்.
மெதுவாக மேடை ஏறி வந்தவள் அக்ஷரனுக்கு ஒரு அடி விட்டு நிற்க அவளுக்கு அருகில் சென்றவன் அவளது தோளை சுற்றி கையைப் போட்டுக் கொண்டு மேடையைப் பார்க்க.
இவள் நெளிந்தாள்.
“வாவ் சூப்பர்ல”
தொகுப்பாளினிக் கூற அங்கிருந்தவர்கள் ஓஓஓஓ எனக் கத்தினார்கள்.
“ஷீ ஈஸ் மை வைஃப் நேத்ரா அக்ஷரன்”
அவளை அறிமுகப்படுத்தினான் அனைவரிற்கும் முன்னால்.
“செம்ம ஸர் சூப்பர் ஜோடி உங்களோட வெடிங்க பத்தி எந்த ஓஃபிஷியல் நியூஸும் வரல்லயே ஸர்”
தொகுப்பாளினிக் கேட்டாள்.
சிறு புன்னகை ஒன்றை சிந்தியவன்.
“இல்ல அது ஃபெமிலி மெம்பர்ஸ்க்கு மட்டும் தான் தெரியும் இன்னும் ஓஃபிஷியலா அனௌன்ஸ் பன்னல்ல கண்டிப்பா ரிசப்ஷன் வைப்போம்”
அவன் கூற அனைவரும் கைத்தட்டி வாழ்த்தினர் இத்தனைக்கும் அவளை அணைத்தபடி தான் நின்றிருந்தான்.
அவளும் குனிந்த தலை நிமிராமல் நின்று கொண்டிருந்தாள்.
இதனைப் பார்த்த மேடைக்குக் கீழே அமர்ந்திருந்த நேத்ராவைப் பற்றி பேசிய அந்த இளம் பெண்கள் இரண்டு பேரும் வாயில் ஈ போவது கூடத் தெரியாமல் வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
“ஓகே மேடம் உங்க ஹஸ்பன்ட பத்தி ஓரிரண்டு வார்த்த பேசலாமே”
தொகுப்பாளினிக் கூற நேத்ரா நிமிர்ந்து தலையை இடம்வலமாக ஆட்டினாள்.
“ப்ளீஸ் மேடம்”
தொகுப்பாளினிக் கூற அவள் தலையை இல்லை என ஆட்டினாள்.
“இன்னொரு நாளைக்கு கண்டிப்பா இந்த மேடைல அவ பேசுவா”
அக்ஷரன் கூறினான் அவனது அருகாமையில் இவளுக்குத் தான் இம்சையாகியது.
“ஓகே ஷுவர் ஸர் கண்டிப்பா”
தொகுப்பாளினிக் கூறினாள்.
பின் இருவரும் மேடையில் இருந்து இறங்கினார்கள்.
அக்ஷரன் அவளது கையைப் பற்றிக் கொண்டு தான் இருந்தான் விடவில்லை மேடையை விட்டு இறங்கிய போதும் விடவில்லை.
ரித்விக் அவளைப் பார்த்து புன்னகைக்க இவள் தலையைக் குனித்துக் கொண்டாள்.
பின் அப்படத்திற்கான பாடல்கள் படக்குழுவினரால் வெளியிடப்பட்டது.
அனைத்தும் சூப்பர் ஹிட்டாகப் போவது உறுதி.
பின் இயக்குனர் ராகவ் அக்ஷரனுக்கு நன்றிக் கூறி ரசிகர்களுக்கும் நன்றிகளைக் கூறி விட்டு படம் வெளியீடப்போகும் திகதியையும் அறிவித்தான்.
நிகழ்ச்சிகள் இனிதே நிறைவேற நேத்ரா தான் பிரம்மித்துப் போனாள் அவளது கணவன் சினிமாவில் இருக்கும் அந்தஸ்த்தை எண்ணி.
இதற்கிடையில் அந்த ஐட்டம் பாடல் நாயகி வேறு அக்ஷரனையே விழியகற்றாமல் கிறங்கடிக்கும் பார்வை பார்க்க அக்ஷரன் அவளது பார்வையை பார்த்தானோ இல்லையோ அவன் மனையாள் பார்த்தாள்.
இருந்தும் அவளது மனதில் அழுத்தமாக பதிந்து போனது என்னவோ.
“அவங்க தகுதிக்கு நா கொஞ்சம் கூட பொருத்தமில்ல ஶ்ரீஜாவையே அவங்களுக்கு கல்யாணம் பன்னி வைக்கனும்”
என்ற நினைப்பே.
“வா போகலாம்”
அனைவரிடமிருந்தும் விடைபெற்று அக்ஷரன் நேத்ராவிற்கு அருகில் வந்து கூற அங்கு கலர் கலராக அடுக்கி வைக்கப்பட்டிருந்த பீர் போட்டிலையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
“என்ன குடிக்க வேணுமா”
அக்ஷரன் கேட்க
“ம்ஹும் இல்ல இல்ல”
“சரி வா போகலாம்”
அவன் கூற.
“நீங்க குடிக்கல்லயா”
அங்கிருந்தவர்கள் கையில் பீர் கிளாசுடன் சுற்றுவதைப் பார்த்து விட்டு அவனிடம் கேட்க.
“என்ன என்னைய பார்த்த குடிகாரன் போல இருக்கா”
புருவம் உயர்த்தி அவன் கேட்டான்.
அவனுடன் நடந்தவள் நின்று தலையை இடவலமாக ஆட்டினாள்.
அவனும் சென்று கார்க்கதவை திறந்து விட முன்னிருக்கையில் அமர்ந்தாள்.
அவனோ கோர்ட்டை கலட்டி பின்னிருக்கையில் போட்டவன் ட்ரைவர் சீட்டில் சென்றமர்ந்து காரை எடுத்தான்.
இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை.
அவன் ப்ளேயரை போட அதில் நா முத்துகுமாரின் வரிகளில் உத்தாரா உன்னி கிருஷ்ணனின் குரலில் அழகான பாடல் ஓடியது
ச ச ச ச ரிச ரிச ப
ம ம க த த ச ரி ப ப
ச ச ச ச ரிச ரிச ப
ம ம க த த ச ரி ப ப
கமதனிச ரிரிச
அழகே அழகே எதுவும் அழகே
அன்பின் விழியில் எல்லாம் அழகே
மழை மட்டுமா அழகு சுடும் வெயில் கூட ஒரு அழகு
மலர் மட்டுமா அழகு விழும் இலை கூட ஒரு அழகு
புன்னகை வீசிடும் பார்வைகள் அழகு
வார்த்தைகள் தீர்கையில்
மௌனங்கள் அழகு
நன்மைக்கு சொல்லிடும் பொய்களும் அழகு
உண்மையில் அதுதான் மெய்யாய் அழகு
கமதனிச ரிரிச
கமதனிச கரிச
குயில் இசை அது பாடிட ஸ்வர வரிசைகள் தேவையா
மயில் நடனங்கள் ஆடிட ஜதி ஒலிகளும் தேவையா
நதி நடந்து சென்றிட வழி துணை தான் தேவையா
கடல் அலை அது பேசிட மொழி இலக்கணம் தேவையா
இயற்கையோடு இணைந்தால் உலகம் முழுதும் அழகு
கவலை யாவும் மறந்தால் இந்த வாழ்க்கை முழுதும் அழகு
கமதனிச ரிரிச
அழகே அழகே எதுவும் அழகே
ஜணு தக தீம் …
இதயம் ஒரு ஊஞ்சலே இடம் வலம் அது ஆடிடும்
இன்பத்தில் அது தோய்ந்திடும்
துன்பத்தில் அது மூழ்கிடும்
நடந்ததை நாம் நாளுமே நினைப்பதில் பொருள் இல்லையே
நடப்பதை நாம் எண்ணினால் அதைவிட உயர்வில்லையே
பூக்கும் பூவில் வீசும் வாசம் என்ன அழகு
அதையும் தாண்டி வீசும் நம் நேசம் ரொம்ப அழகு
கமதனிச ரிரிச
கமதனிச கரிச
அழகே அழகே எதுவும் அழகே
அன்பின் விழியில் எல்லாம் அழகே
மழை மட்டுமா அழகு சுடும் வெயில் கூட ஒரு அழகு
மலர் மட்டுமா அழகு விழும் இலை கூட ஒரு அழகு
புன்னகை வீசிடும் பார்வைகள் அழகு
வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு
நன்மைக்கு சொல்லிடும் பொய்களும் அழகு
உண்மையில் அதுதான் மெய்யாய் அழகு
கமதனிச கரிச
கமதனிச கரிச
அப்பாடல் வரிகளில் லயித்திருந்தவள் கார் நின்றதை அப்பொழுது தான் உணர்ந்து திரும்பி அவனைப் பார்த்தாள்.
அவளது கணவனோ இறுகிப் போன முகத்துடன் இருக்கையில் அமர்ந்திருந்தவன்.
காரை விட்டு கீழிறங்கிச் சென்றான் இவளோ புரியாமல் அவனைப் பார்த்தாள்.
“எதுக்கு போறாங்க”
நினைத்துக் கொண்டு முன்னால் திரும்ப அங்கு ஒரு கார் நின்றிருந்தது.
இவள் புருவங்கள் முடிச்சிட பார்த்துக் கொண்டிருந்தாள்.
அக்ஷரனோ அந்த கார்க் கதவைத் திறக்க குடி போதையில் காரை விட்டு கீழிறங்கினான் பிரபல நடிகர் ரித்விக்.
“யா.. யாரு”
நாக்கு குழற வார்த்தைகள் திணற முன்னால் இருப்பவனைப் பார்த்துக் கேட்டான்.
அக்ஷரனோ இறுகிப் போய் முகத்தில் கடுமை பரவியிருக்க முன்னால் இருப்பவனைப் பார்த்தவன்.
அவனது வலது கையை ஒரே ஒரு முறுக்கு முறுக்க.
“ஐயோ அம்மாஆஆஆ”
எனக் கதறினான்.
இவனோ அவனது கதறலைக் காதுக் கொடுத்துக் கூட கேட்காதவன் இன்னும் கொஞ்சம் கையை அழுத்தப் பிடித்தான்.
மொத்தமாக அவனது கை எழும்பு முறிந்து விட்டது வலியில் கதறினான்.
அவனது கதறல் காளையவனின் மனதை கரைக்கவில்லை போலும்.
இடது புறமாக இதழ் வளைத்து சிரித்தவன் தலையை இடவலமாக ஆட்டி விட்டு கை மீண்டும் ஒரு முறை அழுத்திப் பிடிக்க அப்படியே அங்கையே அமர்ந்து கதறினான் கையைப் பிடித்துக் கொண்டு.
பின் சட்டையின் கையை முட்டி வர மடக்கி விட்டுக் கொண்டே வர நேத்ரா அகல விரித்த இமைகளை மூட மறந்து வாயில் கை வைத்து அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
உள்ளே வந்தமர்ந்தவனது முகம் சற்று இதமாகியிருந்தது.
பின் காரை ஸ்டார்ட் செய்ய இவளோ அதிர்ச்சி விலகாமல் அவனையேப் பார்த்தாள்.
******
தொடரும்..❤
💜அஷு💜
ஹிந்தி சீரியல் போல ரொம்ப இழுக்குறேனா…🤣
கதை மெதுவாகத் தான் நகரும்ங்குறத மீண்டும் அழுத்திக் கூறிக் கொள்கிறேன்..😝