அத்தியாயம் 38

அத்தியாயம் 38

“அப்போ அவங்கள நம்பல்லன்னா அவங்களுக்கு கோவம் வருமா”

நேத்ரா அத்தையிடம் கேட்க,

“அவன் இல்ல யாருக்குன்னாலும் நம்பல்லன்னா கோவம் வரும் தானே கண்ணு”

தேவகிக் கூற நேத்ரா அமைதியாக தலையசைத்தாள்.

“இப்போ எதுக்குடா அத பத்தி கேக்குற”

தேவகி யோசனையாக வினவிட.

“இல்ல அத்த சும்மா தான்”

மழுப்பி விட்டாள்.

****

அந்த பங்களாவில் முட்டிப் போட்டு அமர்ந்திருந்த அம்மூவரது கண்களும் கலங்கியிருந்தது.

ஆண்கள் அழலாமா?

என்ற கோட்பாட்டை தகர்த்தனர் அம்மூன்று இளைஞர்களும்.

அவர்களுக்கு முன்னால் இருந்த மடிக்கணிணியில் ஓடிக் கொண்டிருந்தது ஒரு காட்சி.

அதைப் பார்த்ததும் தான் கண்கள் கலங்கியது.

அவர்களது முகத்தையே தாடையில் கைப் பதித்து பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.

என்றும் போல் அவனது முகம் உணர்வுகளைத் தொலைத்திருந்தாலும் கண்களில் மாத்திரம் திருப்தியின் சாயல்.

“ஸேர்.. இத ஓஃப் பன்னுங்க ஸேர்..”

ஒருவன் அவனிடம் கெஞ்ச அவன் எதுவும் பேசவில்லை.

அம்மடிக்கணிணியில் ஓடிக் கொண்டிருந்த காட்சியோ ஏதோ இறப்பு ஒன்று நடைபெற்ற வீட்டில் சில பெண்கள் ஒப்பாரி வைத்து அழுதுக் கொண்டிருந்தனர்.

அங்கு மூன்று பொணங்களுக்கு அருகில் தான் அப்பெண்கள் அமர்ந்து தலையிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழுது கொண்டிருந்தனர்.

“ம்ம்ம்மாஆஆஆ”

இங்கு ஒருவனது கலங்கிய குரலால் அழைத்தது இரும்பைக் கூட உருக்கி விடும் ஆனால் இரும்பிலாலான இதயத்தைக் கொண்ட இவனை அசைத்துக் கூடப் பார்க்கவில்லை.

“நான் உயிரோட தான்ம்மா இருக்கேன் அழாதேம்மா”

இங்க இருந்து கதறுவது அந்த மடிக்கணிணி வழியாகக் கேட்டிருக்க வாய்ப்பில்லை.

அம்மூவரதும் அழுத முகத்தைப் பார்த்தவன் இரு பக்கம் தலையாட்டி இடது பக்கமாக உதட்டை வளைத்துப் புன்னகைத்தவன் இடது கரத்தால் தொடைக்கு தாளமிட்டுக் கொண்டிருந்தான்.

அம்மூவரது கறல்களையும் ரசித்துக் காதில் ஏற்றிக் கொண்டிருந்தானோ..!

பின் அம்மடிக்கணிணியில் ஓடிக் கொண்டிருந்த வீடியோவை நிறுத்தி விட்டு எழுந்து நின்றான் தனது முழு உயரத்திற்கும்.

“படம் முடிஞ்சிருச்சு”

இடது பக்கம் தலை சாய்த்து இரண்டு கைகளையும் பேன்ட் போக்கெட்டில் போட்டுக் கொண்டு உதட்டைப் பிதுக்கி அவன் கூறிய விதம் முன்னால் இருந்த மூவரதும் இரத்த அழுத்தத்தை ஏற்றியது பயத்தால்..

“ஸேர்.. என்னோட அம்மாகிட்ட சொல்லுங்க ஸேர் நா உயிரோட இருக்கேன்னு”

கண்ணீருடன் ஒருவன் கெஞ்ச மற்ற இருவருமும் அதை அமோதிக்கும் விதமாகக் கை கூப்பினார்கள்.

உலகத்தில் கொடுமையிலும் கொடுமை தான் உயிரோடு இருக்கும் போதே தனக்கானவர்கள் தான் உயிரோடு இல்லை என எண்ணி வேதனைப்படுவதைப் பார்ப்பது தான்..

அது அம்மரணத்தை விட கொடியதிலும் கொடிது.

“ப்ப்ச்.. எப்பிடியும் நீங்க மூனு பேரும் இன்னும் கொஞ்ச நாள்ல செத்துப் போவிங்க.. அப்போ உங்களுக்காக யாரு அழுதாங்கன்னு தெரியாம தான் இருக்கும்.. அதான் இப்போ உங்களுக்காக கஷ்டப்பட்டு உங்களோட ஷேப்லயே மூனு டெத்போடிய தேடி நீங்க செத்துட்டதா உங்க ஊருக்கு அனுப்பிட்டேன் இப்போ உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்ல உங்க சாவுக்காக யாரு அழுதாங்க.. யாரு வந்தாங்கன்னு”

அவன் பின் கழுத்தை நீவி விட்டுக் கொண்டு இவர்களைப் பார்த்துக் கண்ணடித்துக் கூற அவன் முதலில் கூறிய ‘இன்னும் கொஞ்ச நாள்ல செத்துப்போவிங்க’ என்ற வார்த்தையிலே அதிர்ந்துப் போயினர் அம்மூவரும்.

 

“ஸேர் எங்கள விட்டுடுங்க ஸேர்..”

ஒருவன் ஆர்வக்கோளாறில் முன்னோக்கி வந்து அவனது காலைப் பிடித்துக் கெஞ்சினான்.

சற்றுக் குனிந்து அவனது முகத்தைப் பார்த்தவன்.

அடுத்த நொடி அட்டகாசமாக சிரித்தான்..

“ஹாஹஹா.. செம்ம ஜோக்”

சிரித்து முடித்து புருவத்தை நீவி விட்டுக் கொண்டுக் கூறியவன்.

“இப்போ தான் ட்ரைலர காண்பிக்க ஆரம்பிச்சிருக்கேன்… மெய்ன் பிக்சர் ஆன் தி வே..”

அவன் குனிந்து காலைப் பிடித்துக் கெஞ்சியவனது தாடையை இறுகப் பற்றிப் பிடித்துக் கூறியவன் பின்னால் பயத்தால் அஞ்சிக் கொண்டிருந்த அவ்விருவரையும் அழுத்தமாகப் பார்த்தான்..

“இதெல்லாம் பத்தாது.. இன்னும் உங்ககிட்ட இருந்து எதிர்ப்பார்க்குறேன்..  நா கொடுக்குற டாச்சர் பத்தல்லயோ..”

அவன் யோசனையாக நெற்றியை நீவி கொள்ள அம்மூவருக்கும் மயக்கம் வராத குறை தான்.

நேற்று தான் சூடாக்கிய ஆணியை தரையில் முழுதாகப் பரப்பி விட்டு இவர்கள் மூவரையும் கட்டிப் போட்டு அத்தரையில் ஆடைகளற்று படுக்கப் போட்டிருந்தான்.

இவர்கள் கதறியதை என்றும் போல் ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தானே.

இன்று என்ன செய்யக் காத்திருக்கிறானோ என்ற பீதியில் மூவரும் அவனைப் பார்த்தனர்.

“ப்ப்ச்ச்.. இன்னைக்கு உங்க மூனு பேருக்கு எந்த டாச்சரும் கொடுக்க மனசே இல்ல”

இடது பக்க நெஞ்சை நீவி விட்டுக் கொண்டு அவன் கூற அவனை நம்பாமலே பார்த்தனர் அம்மூவரும்.

“அட நம்புங்கடா தம்பிங்களா.. இவ்ளோ காலம் உங்ககூட ஒன்னுக்கு ஒன்னா ரெண்டு ரெண்டா பழகியிருக்கேன் இப்பிடி சந்தேகமா பார்த்தா என்ன அர்த்தம்.. இதுவா நீங்க மூனு பேரும் என்னோட மேல வெச்சிருக்குற நம்பிக்க”

அவன் ஆதங்கமாகக் கேட்டான்.

அம்மூவரும் விழித்துப் போய்ப் பார்த்தனர்.

“சரி இன்னைக்கு என்னோட சார்பா உங்க மூனு பேருக்கும் பிரியாணி வாங்கிக் கொடுக்கப் போறேன்”

அவன் கூறி விட்டு அங்கு இருந்த பார்சலை எடுத்து மூனு பேருக்கும் நீட்ட அவர்கள் அதை வாங்காமல் இருந்தனர்.

“அட வாங்குங்க தம்பிகளா”

அவன் சற்று இதழ் விரித்துக் கூற தலையை மறுப்பாக ஆட்டினார்கள் அம்மூவரும்.

“வாங்குங்கன்னு சொன்னேன்”

பற்களைக் கடித்துக் கொண்டு சிவப்பேறிய விழிகளுடன் அவன் கூறிய விதத்தில் அவர்களது அனுமதியின்றியே அவர்களது கரங்கள் அவன் நீட்டிய பார்சலை வாங்கியிருந்தனர்.

“ம்ம் சாப்டுங்க”

அங்கிருந்த இருக்கையில் சாய்ந்தமர்ந்து காலுக்கு மேல் கால் போட்டுக் கொண்டுக் கூற ஒருவருக்கொருவர் முகத்தைப் பார்த்துக் கொண்டே அப்பார்சலைப் பிரித்தனர்.

கமகமவென மணம் வீசி நாசியினை நச்சரித்தது போதாதற்கு லெக் பீஸ் ஒவ்வொன்றும் முட்டை ஒவ்வொன்றும் அந்த பிரியாணி பார்சலின் நடுவில் ஒய்யாரமாக அமர்ந்திருக்க தொண்டைக் குழியில் எச்சிலை விழுங்கிக் கொண்டே அச்சாப்பாட்டைப் பார்த்தனர்.

அவனோ அவர்களையேப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அடுத்த நொடி மூவரும் அச்சாப்பாட்டை சாப்பிட ஆரம்பித்தனர்.

இரண்டு வாய் சாப்பிட்டிருப்பர் கண்களில் கண்ணீர் வடிய இவனைப் பார்த்து சைகையால் தண்ணீர் கேட்டனர்.

“தண்ணி..”

வாயசைத்துக் கேட்க இதழ் விரித்துப் புன்னகைத்தவன் 

“ப்ச் சாப்பாட்டு பார்சல் எடுக்குறப்போ வாட்டர் போட்டல் எடுக்க மறந்துருச்சு..”

அவன் உச்சுக் கொட்டிக் கூற அந்த சாப்பாட்டின் காரத்தினால் கண்கள் கலங்கி தண்ணீருக்காக ஏங்கினர்.

“சரி சாப்ட்டு முடிங்க தண்ணிக் கொண்டு வந்து கொடுக்குறேன்”

அவன் கூற.

“இல்ல.. வேணாம்”

ஒருவன் கூற அங்கிருந்த சூடாகிய இரும்புக் கம்பியைப் பார்த்து விட்டு திரும்பி இவர்களைப் பார்க்க அவனது பார்வையின் அர்த்தத்தில் அவசர அவசரமாக சாப்பிட்டனர்.

கண்களோ காரத்தினால் சிவந்து போயின.

சாப்பாட்டிற்கு காரத்தைப் போட்டு சமைத்தார்களோ  காரத்தில் சாப்பாட்டை போட்டு சமைத்தார்களோ அப்படி உறைத்தது.

ஒருவனுக்கு விக்கல் வர அவன் அசைந்தானில்லை.

“சாப்டு”

அழுத்தமாகக் கூற விக்கிக் கொண்டே சாப்பிட்டான் அவன்.

மூவரும் ஒரு சோறுப் பருக்கைக் கூட இல்லாமல் சாப்பிட்டு முடித்து விட்டு இவனைப் பார்த்தனர்.

“தண்ணி…”

இன்னுமொருவன் கேட்க.

“அட இருங்கடா”

எனக் கூறியவன் எழுந்து சென்று மூன்று போத்தல்களை எடுத்துக் கொண்டு வந்து மூவரிடமும் நீட்ட கண்கள் மின்ன அதைப் பெற்றுக் கொண்டனர்.

அதைத் திறந்து ஒரு மிடர் அருந்த.

“ஆஆஆஹ்ஹ்..”

மூவரும் கதறினர்.

அவனோ சலனமின்றி அவர்களைப் பார்த்து.

“ம்ம் குடி..”

கண்களைக் காட்ட மறுப்பாக தலையசைத்தனர் அம்மூவரும்..

கையில் இருந்த அந்த பொருளை எடுத்துக் காட்ட அதைப் பார்த்ததும் பயத்தில் அந்த தண்ணீரை அருந்தினர்.

“ஆஹ்ஹ்ஹ்….”

வாயை ஊதிக் கொண்டேக் குடித்தனர்.

கொதிக்கும் நீரிற்கு மிளகாய்த்தூளை இட்டு காரத்தால் உறைத்துக் கொண்டு இருந்தவர்கள் குடித்தால் எவ்வாறு இருக்கும்.

நாக்கு காரத்தாலும் நீரின் வெப்பத்தாலும் சுருண்டு போனது.

மூவரும் அந்த நீரை முழுதாக அருந்தி முடித்தனர்.

“ம்ம் குட்”

அவன் கூறி விட்டு எழ அந்த மூன்று இளைஞர்களும் தரையில் பிரண்டு பிரண்டு அழுதனர்.

“இப்போ தான் திருப்தியா இருக்கு உங்க மூனு பேருக்கும் பிரியாணி வாங்கிக் கொடுக்கனும்ன்னு ரொம்ப நாளா வேண்டிக்கிட்டேன்.. இப்போ ஓகே”

அவன் கூறினான்.

“ஆஆஆஆஆஹ்ஹ்ஹ்ஹ்”

அம்மூவரும் வாயை ஊதி அழுதனர்.

அதைப் பார்த்ததும் திருப்தியாகப் புன்னகைத்துக் கொண்டே அங்கிருந்து சென்றான் அவன்.

******

தேவகி நீட்டிய நகைப் பெட்டியைப் பார்த்ததும் விழித்தாள் நேத்ரா.

“அத்த என்ன இது”

அவள் கேட்க.

“இத தான் போடனும் கண்ணு”

அவளிடம் கூறினார் தேவகி.

இன்று தான் அக்ஷரனதும் நேத்ராவினதும் வரவேற்பு.

அதற்குத் தயாராக நேத்ரா அறைக்குள் வந்தாள்.

“இந்தா”

அக்ஷரன் ஒரு பார்சலை நீட்டிட.

அதைப் புரியாமலே வாங்கிப் பிரித்துப் பார்த்தாள்.

விழிகள் ஆச்சரியத்தில் விரிந்தது.

அவள் ஒரு நாள் தொலைக்காட்சியில் ஒரு பாடலில் நடிகை ஒன்று முழு நீளமான வெள்ளை நிறத்திலாலான கிறிஸ்துவ மணப்பெண்கள் அணிவது போலானா கவுன் ஒன்றை அணிந்துக் கொண்டு பாடலில் நடிக்க அந்த நடிகையினது முகம் பார்த்தாளோ இல்லையோ அவள் அணிந்திருந்த அந்த ஆடையை ரசித்துப் பார்த்தாள்.

மிகவும் பிடித்துப் போனது அவளுக்கு.

அவளறியாமலே அவளது மனதில் அந்த ஆடை ஆணித்தரமாகப் பதிந்து போனது.

இப்பொழுது கணவனும் அவள் விரும்பி ரசித்த அதே ஆடையை நீட்டியதும் ஆச்சரியத்தில் விழிகளில் விரிந்தது பேதைக்கு.

“இது.. எப்பிடி”

அந்த ஆடையை கை விரலால் வருடியவள் அவனிடம் கேட்க அவளது முகபாவனைகளையேப் பார்த்துக் கொண்டிருந்தவன்.

“அது அப்பிடி தான்”.

நக்கலாகக் கூறி விட்டு அவன் அறையில் இருந்து  சென்றான் இவள் எங்கு அதை உணர்ந்தாள் அந்த ஆடையையே கண்வெட்டாமல் ரசித்துப் பார்த்தாள்.

பின் அவரசமாக அதை அணிந்துக் கொண்டு வந்து கண்ணாடி முன் நின்றவளுக்கோ மகிழ்ச்சி தாங்கவில்லை.

அவ்வளவு நேர்த்தியாக அவளுக்கு கனக்கச்சிதமாகப் பொருந்திருந்தது அவ்வாடை.

“ரொம்ப அழகா இருக்கேன்”

முதல் தடவையாக அவளாக உணர்ந்துக் கூறினாள்.

“ம்ம் இன்னும் கொஞ்சம் கலரா இருந்தா நல்லா இருந்திருக்கும்.. கலரானவங்களுக்கு அழகா இருக்கும்”

அடுத்த நொடி நினைத்துக் கொண்டாள்.

 

பின் கதவுத் தட்டப்பட இவள் சென்று திறந்தாள் தேவகி தான் உள்ளே வந்தார்.

“ஐயோ.. கண்ணு ரொம்ப அழகா இருக்கே.. என் கண்ணே பட்டுடும் போல இருக்கே.. மகலாட்க்ஷிமி மாதிரி இருக்கே”

அவளை திருஷ்டிக் கழித்துக் கொண்டுக் கூறினார்.

“அத்த எந்த மகலாட்க்ஷிமி வெள்ளைல உடுத்திருப்பாங்க”

அவள் புன்னகைத்துக் கொண்டுக் கூற அவளது புன்னகை தேவகிக்கு நிறைவைக் கொடுத்தது.

“சரி டா கண்ணு இந்தா இத போட்டுக்க”

தனது கையில் இருந்த நகைப் பெட்டியை நீட்டியதும் தான் இவள் விழித்தாள்

 

அது அக்ஷரனுடன் இவள் சென்று எடுத்த நகை ஆகும்.

“அத்த இது அவங்க”

ஏதோ சொல்ல வர.

“அவன் தான் உனக்கு போட்டு விட சொன்னான்”

அவர் கூறி விட்டு அந்த நெக்லசை அவளது கழுத்தில் அணிவித்து அடுத்து அதே டிசைனில் காதணி இரண்டையும் அணிவித்தவர்.

“கைய நீட்டு கண்ணு”

அவர் கூற புரியாமலே கையை நீட்டினாள்.

அவளது கையில் அவள் ஏக்கமாகப் பார்த்த அதே வளையல்கள் அணிவிக்கப்பட்டது.

“அத்த இது அவங்களோட”

என மறுக்க வர.

“அட இப்போ தான் நிறைவா இருக்கு ரொம்ப ரொம்ப அழகா இருக்கே..”

எனக் கூறி மீண்டும் ஒரு முறை திருஷ்டி கழித்தார்.

அவள் கையில் இருக்கும் வளையல்களையே பார்த்தாள்.

அவளது கைக்கு அவ்வளையல்கள் அழகாக இருந்தது.

“இந்த நகை அவரோட லவ்வர்க்குன்னு சொன்னாரே.. அத்த கட்டாயப்படுத்திதனால கொடுத்துட்டாரா..”

அவள் நினைத்துக் கொள்ள அழகு நிலையத்தில் இருந்து இருவர் வந்தனர்.

“மேம் கொஞ்சம் உட்காருங்க”

எனக் கூற அவள் அமர்ந்தாள்.

அப்பெண்கள் இருவரும் அவளை சற்று ஒப்பனைகள் செய்து. முடியை  போனிடொல் போட்டு இரண்டு முடிக்கற்றைகளை முன்னால் எடுத்து விட்டனர்.

“ஓகே மேடம்”

அவளை எழ வைத்து கண்ணாடி முன் நிறுத்த அவளாலே நம்ப முடியவில்லை.

ஏதோ நடிகை ஒன்றைப் போல் இருந்தாள்.

அந்த பெண்கள் இருவரும் வெளியேறி விட உள்ளே நுழைந்தான் அவளது கணவன்.

கறுப்பு நிறத்தில் கோர்ட் ஷூட் அணிந்து அடங்காத கேசத்தை ஜெல் விட்டு அடக்கி.

என்றும் போல் படு கம்பீரமாக உள்ளே வந்தவனை ஏறிட்டுப் பார்த்தன காரிகையினது விழிகள்.

அவனும் அவளை தனது நிதானமான பார்வையால் தலை முதல் கால் வரை அளவெடுத்தான் என்றும் போல் அவனது பார்வை  பேதையின் உடலிலுள்ள மயிர்க்கணுக்களை சிலிர்க்க வைத்தது.

“ம்ம் குட்”

தலை சாய்த்து அவன் கூறியது இவளது காதிற்கும் விழ இதழ்க் கடித்துப் புன்னகைத்தாள்.

ஏதோ ஒரு மோன நிலையில் தான் இருந்தனர் நேத்ராவினது அழைப்பேசி அதிரும் வரை.

அதில் தலை நிமிர்த்தி அழைப்பேசியில் ஒளிர்ந்த எண்ணைப் பார்த்ததுமே முகம் சுருங்கியது.

ஶ்ரீஜா தான் அழைத்திருந்தாள்.

இவ்வளவு நேரமும் அவளையும் தங்களது விவாகரத்தையும் மறந்திருந்தவளுக்கு ஒவ்வொன்றாக நினைவில் வர மனம் கனத்தது.

அவளது ஒவ்வொரு பாவனையையும் உன்னிப்பாக உள் வாங்கியது காளையினது விழிகள்.

 

*****

சைலன்ட் ரீடர்ஸ் கொஞ்சம் கருண காட்டி கமன்ட் பன்னுங்கபா.. உங்க சொத்தையா எழுதி கேக்குறேன் ஒரு ரெண்டு வரி கமன்ட் தானே.. ப்ளீஸ்ப்பா கமன்ட் பன்னுங்க.. அப்போ தானே எனக்கும் இன்னும் எனர்ஜியோட எழுத வரும்..

தொடரும்..❤

💜அஷு💜

 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top