Episode 14 — கண்கள் பேச ஆரம்பித்த காதல்

மாலை நேரம்.

அலுவலகத்திலிருந்து வெளியே வந்ததும், ஆதித்யா வழக்கம்போல காரை எடுத்தான்.

நிலா அவன் பக்கத்து இருக்கையில் வந்து உட்கார்ந்ததும், இருவருக்கும் நடுவில் ஒரு சின்ன அமைதி.

நேத்து வரை இருந்த அந்த தயக்கம் இப்போது கொஞ்சம் குறைந்திருந்தது.

ஆனா இன்று ஆதித்யாவின் முகத்தில் ஏதோ மாற்றம் இருந்தது.

“என்னாச்சு? ஏன் ரொம்ப அமைதியா இருக்கீங்க?”

அவன் சின்ன சிரிப்புடன்,

“இன்னைக்கு உங்ககிட்ட சில விஷயம் சொல்லணும்.”

“என்ன விஷயம்?”

“என்னைப் பற்றி.”

நிலா அவனைப் பார்த்தாள்.

“சொல்லுங்க.”

கார் மெதுவாக நகர்ந்தது.

சில நொடிகள் கழித்து அவன் பேச ஆரம்பித்தான்.

“எனக்கு அம்மா அப்பா கிடையாது.”

நிலாவின் முகம் உடனே மாறியது.

“என்ன?”

“சின்ன வயசுலேயே இருவரையும் இழந்துட்டேன்.”

அவன் குரலில் பெரிய சோகம் இல்லை.

ஆனா அந்த சோகத்தை பல வருடங்களாக உள்ளே வைத்து பழகிய ஒருத்தனுடைய அமைதி இருந்தது.

“அதுக்கப்புறம் உறவினர்கள் வீட்டுல வளர்ந்தேன். யாருக்கும் நான் பாரமா இருக்கக்கூடாதுன்னு ரொம்ப சின்ன வயசுலேயே புரிஞ்சுக்கிட்டேன்.”

நிலா அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தாள்.

“படிக்கணும்… வேலைக்கு போகணும்… எனக்குன்னு ஒரு வாழ்க்கையை உருவாக்கணும்… அதுதான் என் ஒரே குறிக்கோள்.”

“ரொம்ப கஷ்டப்பட்டிருப்பீங்க…”

அவன் சிரித்தான்.

“ஆமாம். கஷ்டப்பட்டேன்.”

“அப்போ இவ்வளவு சந்தோஷமா இருக்க எப்படி கத்துக்கிட்டீங்க?”

அவன் அவளை ஒரு நொடி பார்த்தான்.

“நான் சந்தோஷமா இருந்ததே இல்லை.”

அவள் அதிர்ச்சியாக அவனைப் பார்த்தாள்.

“உண்மையாவா?”

“ம்.”

சிறிது நேரம் அமைதியாக ஓட்டிக்கொண்டிருந்தான்.

பிறகு மெதுவாக,

“எனக்கு வாழ்க்கைன்னா வேலை, பணம், பொறுப்பு… அவ்வளவுதான்.”

அவன் பார்வை மீண்டும் சாலையில் சென்றது.

“ஆனா…”

அவன் குரல் மெதுவானது.

“நீங்க என் வாழ்க்கைக்குள் வந்ததுக்கப்புறம் தான்… நான் ரொம்ப நாளைக்குப் பிறகு சந்தோஷமா இருக்கேன்னு எனக்கே புரிஞ்சது.”

நிலாவின் மனசு ஒரு நொடி நின்றது போல இருந்தது.

“ஆதித்யா…”

“நீங்க என்னை மாற்றிட்டீங்க.”

அவள் எதுவும் பேசவில்லை.

அவன் காரை ஓரமாக நிறுத்தினான்.

சில நொடிகள் இருவரும் அமைதியாக இருந்தார்கள்.

பிறகு அவன் அவளை நேராகப் பார்த்தான்.

“நிலா…”

“ம்?”

“நான் உங்களை காதலிக்கிறேன்.”

அவளுடைய கண்கள் அசையாமல் அவனைப் பார்த்துக்கொண்டிருந்தன.

அவன் சிரிக்கவில்லை.

விளையாட்டாகவும் சொல்லவில்லை.

முழு மனசோட சொன்னான்.

“ரொம்ப நாளா சொல்லணும்னு நினைச்சேன். ஆனா பயமா இருந்தது.”

“எதுக்கு?”

“நீங்க என்னை மறுத்துட்டீங்கன்னா… நான் மீண்டும் அந்த பழைய வாழ்க்கைக்குத்தான் போயிடுவேன் போல இருந்தது.”

நிலாவின் கண்களில் ஒரு சின்ன ஈரம்.

“நான் உங்களை அப்படி பண்ண மாட்டேன்.”

அவன் அவளைப் பார்த்தான்.

“அப்போ?”

அவள் மெதுவாக சிரித்தாள்.

“எனக்கும் உங்களை பிடிக்கும்.”

அவன் கண்களில் அந்த நொடி தெரிந்த சந்தோஷத்தைப் பார்த்ததும், நிலாவுக்கே சிரிப்பு வந்தது.

அவன் மெதுவாக அவளுடைய கையைப் பிடித்தான்.

அவள் கையை விலக்கவில்லை.

இருவருக்கும் நடுவில் இருந்த தூரம் மெதுவாக குறைந்தது.

ஆதித்யா அவளைப் பார்த்தான்.

நிலாவும் அவனைப் பார்த்தாள்.

அந்த நொடியில் இருவரும் எதுவும் பேசவில்லை.

அவன் இன்னும் கொஞ்சம் அருகில் வந்தான்.

நிலா கண்களை மெதுவாக மூடிக்கொண்டாள்.

அந்த நேரத்தில்தான்—

கைபேசி சத்தம்.

இருவரும் திடுக்கிட்டு விலகினார்கள்.

நிலா கைபேசியைப் பார்த்தாள்.

அம்மா.

“அய்யோ…”

அவள் உடனே அழைப்பை எடுத்தாள்.

“சொல்லும்மா…”

அந்தப் பக்கம் பார்வதி ஏதோ கேட்டுக்கொண்டிருந்தாள்.

“ம்… வந்துட்டு இருக்கேன். இன்னும் கொஞ்ச நேரத்துல வீட்டுக்கு வந்துடுவேன்.”

அழைப்பை முடித்ததும் அவள் ஆதித்யாவைப் பார்த்தாள்.

அவன் சிரித்துக்கொண்டிருந்தான்.

“உங்க அம்மா சரியான நேரத்துல தான் call பண்ணிருக்காங்க.”

நிலா முகம் சிவந்தது.

“போதும்…”

“நான் எதுவும் சொல்லலையே.”

“நாளைக்கு பார்க்கலாம்.”

“இப்போ போகணுமா?”

“ம்.”

அவள் கதவைத் திறக்கப் போனாள்.

“நிலா…”

அவள் திரும்பிப் பார்த்தாள்.

“நாளைக்கு இதே மாதிரி ஓடிடாதீங்க.”

அவள் சிரித்துவிட்டு,

“பார்க்கலாம்.”

என்று சொல்லிவிட்டு இறங்கினாள்.

அவன் காருக்குள் இருந்தபடியே அவள் வீட்டுக்குள் போகும் வரை பார்த்துக்கொண்டிருந்தான்.

 

அன்று இரவு.

நிலா படுக்கையில் இருந்தாள்.

கைபேசி ஒலித்தது.

ஆதித்யா.

அவள் உடனே எடுத்தாள்.

“ஹலோ…”

“என்ன பண்ணிட்டு இருக்கீங்க?”

“தூங்கப் போறேன்.”

“இவ்வளவு சீக்கிரமா?”

“ஆமாம்.”

“இன்னைக்கு என்னை பாதியில விட்டுட்டு போயிட்டீங்க.”

அவள் சிரித்தாள்.

“அம்மா call பண்ணிட்டாங்கன்னா நான் என்ன பண்ண?”

“அது சரி.”

சில நொடிகள் அமைதி.

“நிலா…”

“ம்?”

“நான் சொன்னது உண்மையா இருந்துச்சுன்னு தெரியும் இல்ல?”

“எது?”

“Love you.”

அவள் சிரித்துக்கொண்டே,

“தெரியும்.”

“நீங்களும் சொல்லுங்க.”

“எதுக்கு?”

“நான் மட்டும் சொல்லிட்டு இருக்கேனே.”

“நீங்க சொல்லிட்டே இருங்க.”

“அப்படியா?”

“ம்.”

“சரி… Love you.”

அவள் சிரித்தாள்.

“Love you too.”

அந்த வார்த்தையைச் சொன்னதும் இருவருமே சில நொடிகள் அமைதியாக இருந்தார்கள்.

“சரி… தூங்குங்க.”

“நீங்களும்.”

“Good night.”

“Good night.”

அழைப்பு முடிந்தது.

நிலா கைபேசியை அருகில் வைத்துக்கொண்டு சிரித்தாள்.

அவளுடைய வாழ்க்கையில் பல வருடங்களுக்குப் பிறகு…

அவளுக்காக யாரோ ஒருவர் இருக்கிறார் என்ற உணர்வு வந்திருந்தது.

 

அடுத்த நாள்.

அலுவலகம்.

நிலா தன் மேசையில் உட்கார்ந்திருந்தாள்.

ஆதித்யா உள்ளே வந்தான்.

அவன் அவளைப் பார்த்தான்.

அவளும் அவனைப் பார்த்தாள்.

ஒரு சின்ன சிரிப்பு.

அவ்வளவுதான்.

ஆனா அந்த ஒரு பார்வைக்குள்ளேயே—

“காலை வணக்கம்.”

“நேத்து நல்லா தூங்கினீங்களா?”

“உங்களை பார்க்கணும்னு இருந்தது.”

என்று சொல்லப்படாத எத்தனையோ வார்த்தைகள் இருந்தன.

மதிய நேரத்தில் அவன் தூரத்தில் இருந்து அவளைப் பார்த்தான்.

அவள் அவனைப் பார்த்து சின்னதாக புருவத்தை உயர்த்தினாள்.

அவன் சிரித்தான்.

அருகில் இருந்தவர்கள் எதையும் கவனிக்கவில்லை.

ஆனா அவர்களுக்குள் மட்டும்…

ஒரு புதிய மொழி பிறந்திருந்தது.

வார்த்தைகள் இல்லாமல் பேசும் காதல்.

அந்த நாளிலிருந்து,

அவர்கள் அதிகமாக பேசவில்லை.

ஆனால்…

ஒருவருடைய கண்கள் இன்னொருவரைத் தேடாமல் இருந்ததே இல்லை.

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top