Usk-2

அத்தியாயம் 2 :

 

அன்றைய காலைப் பொழுது ‘ராயல் குரூப் ஆஃப் கம்பெனீஸ்’ அலுவலகத்தில் வழக்கம்போலச் சில்லென்ற ஏசி காற்றுடன் அமைதியாகத் தொடங்கவில்லை. கம்பெனியின் ஐந்தாவது மாடியில், ஒரு பிரம்மாண்டமான அணுகுண்டு வெடிப்பதற்குத் தயாராக இருந்தது!

காரணம் வேறு யாருமில்லை… நம்ம பச்சையப்பன்தான்!

கையில் ஒரு பெரிய பிளீச்சிங் பவுடர் கேன், தோளில் ஒரு சாக்குப்பை, கக்கத்தில் வழக்கம்போல அந்தத் தேசியக்கொடி ரேஞ்சுக்கு உயர்த்தப்பட்ட துடைப்பம் (Wiper).

பச்சை தன் தலையில் கட்டியிருந்த சிவப்புத் துணியைச் சரிசெய்து கொண்டே, பக்கத்திலிருந்த பளிங்குச் சுவரில் தெரிந்த தன் பிம்பத்தைப் பார்த்துக் கொண்டான்.

“பச்சை… நேத்து அந்த ஃபாரின் மேடம்கிட்ட நீ பண்ண காரியம் சாதாரணமானது இல்லடா. அவ உன்னைப் பார்த்து பயந்து நடுங்கிட்டா! ஆனா ஒரு ஆன்டி-ஹீரோனா ஒரே இடத்துல நிண்டுடக் கூடாது. இன்னைக்கு அவளை இன்னும் கொஞ்சம் ‘கவர்’ பண்ணனும். அதுக்கு ஒரு மாஸ் பிளான் வேணும்!” என்று தனக்குத்தானே கம்பீரமாகப் பேசிக் கொண்டான்.

அப்போது அவனது நண்பன் வடிவேலு, கையில் சுடச்சுட இரண்டு டீ கிளாஸ்களுடன் மூச்சு வாங்க ஓடிவந்தான்.

“டேய் பச்சை! ஆபத்துடா! பெரிய ஆபத்துடா!”

பச்சை டீ கிளாஸை வாங்கி ஒரே மடக்கில் குடித்துவிட்டு, “என்னடா வடிவேலு? அந்த ஃபாரின் மாப்பிள்ளை ஸ்டீபன் மறுபடியும் வந்திருக்கானா? அவன இந்தத் தடவை பல்லி இல்லடா… பெரிய மரவட்டையை வச்சு மிரட்டுறேன்!” என்றான் கெத்தாக.

“அட அவன் இல்லடா! நேத்து நீ அந்த மேடம் அறைக்குள்ள பண்ண கலாட்டால, அந்தம்மா உன்னை வேலை விட்டுத் தூக்கச் சொல்லி ஹெச்.ஆர் (HR) மேனேஜருக்கு உடனே ஆர்டர் போட்டாச்சுடா! இப்போ இன்னைக்குக் காலையில உனக்கு டிஸ்மிஸ் லெட்டர் வரப்போகுது!”

பச்சை தன் மீசையை லேசாக முறுக்கிவிட்டான். அவனது கண்கள் கொடூரமாக, அதே சமயம் ஒரு நக்கல் புன்னகையோடு மின்னின.

“என்னது? என்னையே வேலை விட்டுத் தூக்கப் போறாங்களா? இந்த பச்சையப்பனை இந்த கம்பெனியை விட்டுத் தூக்குற அளவுக்கு அந்த ஊர்ல இன்னும் எவனும் பொறக்கலடா! அவ என்னை வேலை விட்டுத் தூக்குனா… நான் அவளை வாழ்க்கையை விட்டே தூக்கிடுவேன்! வாடா வடிவேலு, அந்த ஹெச்.ஆர் ஆபீஸை ஒரு கை பார்ப்போம்!”

கம்பெனியின் ஹெச்.ஆர் மேனேஜர் சுந்தரம், தன் பிரம்மாண்டமான அறையில் அமர்ந்து நிம்மதியாகக் காபி குடித்துக்கொண்டிருந்தார். அவர் மேஜை மீது பச்சையை வேலையை விட்டுத் தூக்குவதற்கான டிஸ்மிஸ் லெட்டர் தயாராக இருந்தது.

திடீரென கதவு ‘டமார்’ என்று திறக்கப்பட்டது!

பச்சை உள்ளே நுழைந்து, சுந்தரத்தின் மேஜை மீது தன் சோப்புத் தண்ணீரால் நனைந்த துடைப்பத்தை ‘ஓங்கி’ அடித்தான். சோப்பு நீர் சுந்தரத்தின் வெள்ளைச் சட்டையிலும், மூக்கிலும், கண்ணாடியிலும் ‘சப்’பென்று தெளித்தது.

சுந்தரம் பதறிப்போய், “ஹேய்! பச்சை! என்னடா பண்ற? அறிவில்ல உனக்கு? இது மேனேஜர் ரூம்டா!” என்று கத்தினார்.

பச்சை நக்கலாகச் சிரித்துக்கொண்டு, சுந்தரத்தின் எதிரே இருந்த சுழல் நாற்காலியில் காலின் மேல் கால் போட்டு அமர்ந்தான்.

“யோவ் சுந்தரம்! நேத்து நைட் நீ அந்த விஐபி லவுஞ்ச்ல ஒரு பொண்ணோட உக்காந்து சரக்கு அடிச்சுட்டு இருந்த போட்டோ என் போன்ல இருக்குடா! அதை இப்போவே உன் பொண்டாட்டி வாட்ஸ்அப்புக்கு அனுப்பவா? இல்ல சைலண்ட்டா அந்த டிஸ்மிஸ் லெட்டரைக் கிழிச்சுப் போடுறியா?”

சுந்தரத்தின் முகம் அப்படியே பயத்தில் வெளுத்துப் போனது!

“டேய்… டேய் பச்சை! நீ… நீ ஆன்டி-ஹீரோ மாதிரி ஏன்டா இப்படி மிரட்டுற? நான் கம்பெனி மேனேஜர்டா!”

“எனக்கு மேனேஜரும் ஒன்னுதான், கம்பெனி கூட்டிப் பெருக்குறவனும் ஒன்னுதான்டா! ஒழுங்கா அந்த லெட்டரைக் கிழி! அதுமட்டும் இல்ல… இன்னையில இருந்து என்னை ‘டைல்ஸ் துடைக்கிற வேலை’யிலிருந்து ‘டயானா மேடமோட பர்சனல் செக்யூரிட்டி’யா புரமோஷன் போட்டு ஒரு ஆர்டர் காப்பி குடு!”

“என்னது? பர்சனல் செக்யூரிட்டியா? அவங்க ஃபாரின் காரிடா! இங்கிலீஷ்ல பேசுவாங்க!”

“அவ இங்கிலீஷ்ல பேசுனா என்ன, உருதுல பேசுனா என்ன? எனக்குத் தமிழ் தெரியுமல்ல? ஒழுங்கா ஆர்டர் லெட்டரைக் குடுடா, இல்லனா உங்க வீட்டில் இன்னைக்குப் பெரிய ரத்தக் களறிதான்!” என்று போனை எடுத்துக் காட்டினான் பச்சை.

சுந்தரம் பயத்தில் நடுங்கி, கை குலுங்க, பச்சைக்கு ‘பர்சனல் அசிஸ்டென்ட் & செக்யூரிட்டி’ என்று புது ஐடி கார்டையும் ஆர்டர் லெட்டரையும் அடித்துக் கொடுத்தார்.

பச்சை அந்த ஐடி கார்டைக் கழுத்தில் மாட்டிக்கொண்டு, கெத்தாக வெளியே வந்தான்.

வெளியே காத்துக்கொண்டிருந்த வடிவேலு வாயைப் பிளந்து நின்றான். “டேய் பச்சை! நீ நிஜமாவே பெரிய வில்லன்டா! ஒரே வாட்ஸ்அப் பிளாக்மெயில்ல செக்யூரிட்டி ஆகிட்ட!”

“இதுக்கு பேருதான்டா ஆன்டி-ஹீரோ! நல்லவனா இருந்தா இந்த உலகம் நம்மள மிதிக்கும்… நாம கெட்டவனா இருந்தாத்தான் இந்த உலகமே நமக்குக் கீழ இருக்கும்! வாடா, அண்ணியைப் பார்க்கப் போவோம்!”

டயானா தன் பிரம்மாண்டமான அறையில் அமர்ந்து, தன் மடிக்கணினியில் (Laptop) ஏதோ தீவிரமாக வேலை பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் அணிந்திருந்த கருப்பு நிற கார்ப்பரேட் உடை அவளுக்குத் தனி கம்பீரத்தையும் அழகையும் கொடுத்தது.

திடீரென கதவு திறக்கப்பட்டு, நம்ம பச்சை கோட்-சூட் போட்டுக்கொண்டு உள்ளே நுழைந்தான். (அது சுந்தரம் மேனேஜரின் பழைய பெரிய கோட்-சூட்! இவனுக்கு லூஸாகத் தொங்கிக்கொண்டிருந்தது).

அவனைக் கண்டதும் டயானா அதிர்ச்சியில் தன் லேப்டாப்பை மூடினாள்.

“யு அகைன்?! வாட் ஆர் யு டூயிங் ஹியர்? ஐ டோல்ட் சுந்தரம் டு பயர் யு!” (தமிழ் அர்த்தம்: மறுபடியும் நீயா?! இங்கே என்ன பண்ணிட்டு இருக்க? உன்னை வேலையை விட்டுத் தூக்கச் சொல்லி நான் சுந்தரம்கிட்ட சொன்னேனே!)

பச்சை தன் கையில் இருந்த புது ஐடி கார்டை எடுத்துக் காட்டி, தன் மீசையை முறுக்கினான்.

“மேடம் டயானா! இனிமே நான் வெறும் கிளீனர் இல்லை… உங்களோட பர்சனல் பாடிகார்டு! சுந்தரம் சார் எனக்கு புரமோஷன் குடுத்துட்டாரு!”

டயானாவுக்கு அவன் சொல்வது புரியவில்லை. ஆனால் அவனது கோட்-சூட் அசிங்கமாகத் தொங்குவதையும், அவன் கழுத்தில் இருந்த ஐடி கார்டையும் பார்த்து விஷயம் ஏதோ தவறாக நடப்பதைப் புரிந்துகொண்டாள்.

அவள் கோபத்துடன் மேஜையில் இருந்த தொலைபேசியை எடுத்து சுந்தரத்தை அழைக்க முயன்றாள்.

பச்சை நைஸாகச் சென்று, தொலைபேசி வயரை ‘டக்’கென்று கையாேடு பிடுங்கி எறிந்தான்!

டயானா பயந்துபோய் நாற்காலியை விட்டு எழுந்து பின்வாடினாள்.

“வாட் இஸ் திஸ் நான்சென்ஸ்?! ப்ளீஸ் லீவ் மை ரூம்! ப்ளீஸ்!” (தமிழ் அர்த்தம்: என்ன முட்டாள்தனம் இது?! தயவுசெய்து என் அறையை விட்டு வெளியே போ! ப்ளீஸ்!)

பச்சைக்கு அந்த ‘ப்ளீஸ்’ என்ற வார்த்தை மட்டும் தெளிவாகக் கேட்டது!

அவன் தன் நெஞ்சில் கை வைத்துக்கொண்டு, ஒரு மாதிரி ரொமாண்டிக்காகச் சிரித்தான்.

“அடடா… ‘ப்ளீஸ்’னு எவ்வளவு ஆசையா கூப்பிடுறா என் செல்லம்! வடிவேலு சொன்னான் இவளுக்குத் தமிழ் வராதுனு. ஆனா இவ ‘ப்ளீஸ்’னு சொல்லி என்னைக் கொஞ்சுறாளே!” என்று மனதிற்குள் உருகினான்.

பச்சை தன் போனை எடுத்தான். மீண்டும் கூகுள் டிரான்ஸ்லேட்டர் ஆப்பை ஓபன் செய்தான்.

பச்சை பேசிய தமிழ்: “டயானா! நீ ‘ப்ளீஸ்’னு சொன்ன உடனே என் மனசு ஜில்லுனு ஆயிடுச்சுடி! இனிமே உன்னை விட்டு நான் ஒரு அடி கூட நகர மாட்டேன். உனக்குக் காவல் காக்கப்போறதே இந்த பச்சையப்பன்தான்! ஒழுங்கா என்னைக் கல்யாணம் பண்ணிக்கோ, இல்லனா உன்னை இந்த ரூம்ல வச்சே லாக் பண்ணிடுவேன்!”

போன் அதை ஸ்பீக்கரில் சத்தமாக மொழிபெயர்த்தது:

Google Voice Output: “Diana! When you said please, my heart became ice cream! I will not move a foot from you. I am your dog guard! Marry me properly, or I will lock you inside this room with a big padlock!”

(ஆப் செய்த அசிங்கமான மொழிபெயர்ப்பின் தமிழ் அர்த்தம்: டயானா! நீ தயவுசெய்து என்று சொன்னபோது என் இதயம் ஐஸ்கிரீம் ஆகிவிட்டது! உன்னை விட்டு நான் ஓரடி கூட நகர மாட்டேன். நான் உன்னுடைய நாய் காவலன்! என்னை ஒழுங்காகக் கல்யாணம் பண்ணிக்கொள், இல்லையென்றால் ஒரு பெரிய பூட்டால் உன்னை இந்த அறைக்குள் பூட்டிவிடுவேன்!)

இதைக்கேட்ட டயானா அலறியே விட்டாள்!

“டாக் கார்டா?! லாக் பண்ணுவியா?! யு பிளடி சைக்கோ! ப்ளீஸ் டோன்ட் கம் நியர் மீ! ப்ளீஸ் ஹெல்ப்!” (தமிழ் அர்த்தம்: நாய் காவலாளியா?! பூட்டி வைப்பியா?! நீ ஒரு ரத்தக் காட்டேரி சைக்கோ! தயவுசெய்து என் பக்கத்துல வராதே! யாராவது வந்து காப்பாத்துங்க!)

அவள் மீண்டும் மீண்டும் “ப்ளீஸ்… ப்ளீஸ்…” என்று கத்துவதைப் பார்த்த பச்சை, அவளுக்கு ஏதோ பெரிய ஆபத்து என்று தப்பாகப் புரிந்துகொண்டான்!

“அடடே! என் ஆளு யாரையோ பார்த்துப் பயந்து ‘ப்ளீஸ் ஹெல்ப்’னு கதறுறாளே! யாருடா அது?” என்று சுற்றிலும் பார்த்தான்.

அப்போது, கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தான் ஸ்டீபன்!

நேற்று பல்லி போட்ட கலாட்டாவில் ஓடியவன், இன்று பெரிய இரண்டு ரவுடிகளுடன் வந்திருந்தான்.

“டயானா! டோன்ட் வர்ரி! ஐ வில் சேவ் யு ஃபிரம் திஸ் லோக்கல் பிளடி ஸ்வீப்பர்!” (தமிழ் அர்த்தம்: டயானா! கவலைப்படாதே! இந்த லோக்கல் சாக்கடைப் பயலிடம் இருந்து உன்னை நான் காப்பாற்றுவேன்!)

ஸ்டீபன் தன் அடியாட்களைப் பார்த்து, “கேட்ச் ஹிம் அண்ட் பீட் ஹிம்!” என்று கத்தினான். (தமிழ் அர்த்தம்: அவனைப் பிடிச்சு அடிங்கடா!)

இரண்டு பெரிய ரவுடிகள் பச்சையை நோக்கிப் பாய்ந்தார்கள்.

டயானா பயத்தில் கண்கள் மூடிக் கத்தினாள், “நோ! ப்ளீஸ் ஸ்டாப் இட்!” (தமிழ் அர்த்தம்: வேணாம்! தயவுசெய்து இதோடு நிறுத்துங்க!)

நம்ம ஆன்டி-ஹீரோ பச்சை சும்மா இருப்பானா? அவனுள் இருந்த கரடுமுரடான ரவுடி விழித்துக்கொண்டான்!

ஒரு ரவுடி பச்சையின் சட்டையைப் பிடிக்க வந்தான். பச்சை அவனது கையைப் பிடித்து அப்படியே பின்னுக்கு மடக்கி, ‘டமார்’ என்று அவன் வயிற்றிலேயே மிதித்தான்! அவன் போய் சுவரில் மோதி விழுந்தான்.

இன்னொரு ரவுடி கத்தியை எடுத்தான். பச்சை தன் கோட்டை வேகமாகக் கழற்றி, அவனது முகத்தில் வீசி, அவன் கண்ணை மறைத்து, அவனது காலிலேயே ஓங்கி மிதித்தான்! அவன் அலறிக்கொண்டு தரையில் சுருண்டு விழுந்தான்.

கடைசியாக நின்ற ஸ்டீபனைப் பச்சை ஒரு கொடூரமான பார்வையால் பார்த்தான்.

ஸ்டீபன் பயத்தில் நடுங்கி, “ஹேய்… ஹேய்… ப்ளீஸ் டோன்ட் டச் மீ!” என்று பின்வாங்குவதற்குள்… (தமிழ் அர்த்தம்: ஹேய்… தயவுசெய்து என்னை எதுவும் பண்ணிடாதே!)

பச்சை அவனை சட்டையைப் பிடித்துத் தூக்கி, ஒரே அறை!

‘பளார்!’

ஸ்டீபனின் உதட்டிலிருந்து ரத்தம் வர, அவன் நிலைதடுமாறிப் போய் டயானாவின் மேஜை மீது விழுந்து, மயக்கமடைந்தான்!

இதைப்பார்த்த டயானா கைவிரல்களை வாயில் வைத்துக்கொண்டு, அதிர்ச்சியில் உறைந்து போனாள்.

ஒரே ஆளாக மூன்று பேரை நொடியில் போட்டுத் தள்ளிய பச்சையின் அந்த கொடூரமான ஆக்‌ஷன் அவளுக்குப் பயத்தையும் அதே சமயம் ஒருவித வியப்பையும் கொடுத்தது.

பச்சை தன் கோட்டைச் சரிசெய்து கொண்டு, சுவரில் இருந்த ரத்தக் கறையைத் தன் கைகுட்டையால் துடைத்தான்.

அப்புறம் டயானாவை நோக்கி மெதுவாக நடந்தான். அவளது அருகில் சென்று, அவளது மேஜை மீது தன் இரு கைகளையும் ஊன்றி, அவளது முகத்தை உற்றுப் பார்த்தான்.

அவனது மூச்சுக்காற்று டயானாவின் முகத்தில் பட்டது.

டயானா பயத்தில் நடுங்கிக் கொண்டே, “வாட்… வாட் டு யு வான்ட் ஃபிரம் மீ? ப்ளீஸ்…” (தமிழ் அர்த்தம்: உனக்கு… உனக்கு என்கிட்ட இருந்து என்னதான் வேணும்? தயவுசெய்து சொல்லு…)

பச்சை அவளது உதடுகளின் அருகில் தன் முகத்தைக் கொண்டு சென்று, மிகத் தாழ்ந்த, கம்பீரமான குரலில் தமிழில் சொன்னான்:

“டயானா… நீ எத்தனை தடவை இங்கிலீஷ்ல ‘ப்ளீஸ்… ப்ளீஸ்…’னு கெஞ்சினாலும் எனக்குப் புரியாதுடி! ஆனா ஒன்னு… உன்னைத் தொடுறதுக்கு எந்தக் நாயாவது வந்தா, அவனைக் கொன்னுடுவேன்! நீ எனக்குத்தான் பொண்டாட்டி! உன்னை அடைய நான் எந்த எல்லைக்கும் போவேன்!”

டயானாவுக்கு அவன் பேசிய தமிழ் புரியவில்லை என்றாலும், அவனது கண்களில் இருந்த அந்த வெறித்தனமான காதலும், ஆபத்தான காவலும் அவளது இதயத்தை ஏதோ செய்தது.

பச்சை அவளுக்கு ஒரு நக்கல் புன்னகையைக் கொடுத்துவிட்டு, மயங்கிக் கிடந்த ஸ்டீபனின் உடலைத் தன் காலால் இழுத்துக்கொண்டு, அறையை விட்டு வெளியேறினான்.

வெளியே நின்ற வடிவேலு, “டேய் பச்சை! என்னடா ஆச்சு உள்ள? சத்தம் பயங்கரமா கேட்டுச்சு?”

பச்சை தன் மீசையை முறுக்கிக்கொண்டு, “மச்சான்… அண்ணி என்கிட்ட ‘ப்ளீஸ் ப்ளீஸ்’னு கெஞ்சி காதலை வெளிப்படுத்திட்டாடா! இன்னைக்கு நைட்டு அவளுக்கு ஒரு ஸ்பெஷல் டேட் பிளான் பண்ணப் போறேன்!”

“டேய்! அவ இங்கிலீஷ்ல ‘ப்ளீஸ் கெட் அவுட்’னு திட்டியிருப்பாடா லூசு!”

“போடா லூசு வடிவேலு! எனக்கு இங்கிலீஷ் தெரியாது… ஆனா அண்ணியோட கண்ணு எனக்குப் புரியுதுடா! பார்த்துட்டே இரு, இன்னைக்கு நைட் நடக்கப்போற கூத்தை!”

பச்சை தன் சட்டைப் பையிலிருந்த கூகுள் டிரான்ஸ்லேட்டர் ஆப்பை ஓபன் செய்து, அடுத்த கட்ட வில்லத்தனத்திற்கு பிளான் போடத் தொடங்கினான்!

 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top