அத்தியாயம்-32

மதுரியாவோட பிடிவாதமே ஜெயிச்சுது. இதுலே வேடிக்கை என்னன்னா ப்ரதீப் வீட்டுலேயும் சரி, ரீனா வீட்டுலேயும் சரி சந்தோஷமாவே ஒத்துக்கிட்டாங்க. அவங்கவங்க படிப்பு வேலையினால தான் அவசரப்படுத்தறாங்க-னு நினைச்சாங்க. பையன் மனசு மாறினதே சந்திரனுக்கு சந்தோஷம்-னா, நல்ல வரன், டாக்டர் வேறே-னு  ரீனாவோட அப்பா-அம்மாவுக்கு சந்தோஷம். அதே சமயம் மதுரியா–விதுரன் வீட்லேயும் சந்தோஷம். ஒரு மாதிரி எல்லாம் சமாளிச்சு ஒரு மாசத்துலே மதுரியா – விதுரன் கல்யாணம் முடிவாச்சு. ஏறக் குறைய ஒரு வார வித்தியாசத்துலே ப்ரதீப் ரீனாவுக்கும் கல்யாணம். ப்ரதீப்பும் சரி, விதுரனும் சரி கல்யாணம் சிம்பிளா நடக்கணும்-னு நினைச்சாங்க. ஆனா ப்ரதீப் அதுல ஜெயிக்கலே. மண்டபம் பார்த்து ஆடம்பரமாதான் பண்ணாங்க. முதல்லே ப்ரதீப் – ரீனாவுக்குத் தான் கல்யாணம் நடந்துச்சு. அசோக்கோட இதயம் நின்னு அவன் சாகாமயிருந்ததே பெரிய விஷயம். அவ்வளோ அதிர்ச்சி. அவனுக்கு இன்னும் பெரிய அதிர்ச்சி அந்த கல்யாணத்துலே மதுரியா ஓடி ஓடி வேலை செஞ்சது தான். ரெண்டுப் பேரையும் கலாட்டா பண்ணிக்கிட்டு கலகல-னு வளைய வந்தா மதுரியா.

“என்னடா இது?”-னு திரும்பினா இன்னொரு பக்கம் சந்திரன் – நித்தியவாசன் சந்தோஷமா பேசிட்டிருந்தாங்க. அது மட்டுமில்லாம விதுரனும் எல்லாரோடவும் சந்தோஷமா பேசிட்டுருந்தான். உண்மையிலே அசோக்க்கு எதுவும் புரியலே. அவன் இதான் பூமியா-னு முழிக்கும் போதே, ரீனா கழுத்துலே தாலியை கட்டினான் ப்ரதீப். இதுக் கட்டாய கல்யாணமோ-னு நினைச்சுப் பார்த்தா ரீனா கண்ணுலேயும் ப்ரதீப் கண்ணுலேயும் அவ்வளோ காதல். “ஆத்தீ..”-னு கிறுகிறு-னு வந்துச்சு அசோக்குக்கு. நேரா விக்கிக்கு போன் பண்ணி எல்லாத்தையும் சொன்னான். “என்னடா உளர்றே? வேற பொண்ணு கூட கல்யாணமா? அதுக்கு விதுரன் வந்திருக்கானா?”-னு அதிர்ந்தான். “ஆமா விக்கி.. அது மட்டும் இல்லே.. ஒரு வாரத்திலே அவளுக்கும் கல்யாணமாம்”-னு சொல்லவும், “நல்லதா போச்சு. அந்த விதுரன் தனியாளாவான்.. நல்லது.. டேய் க்ளாஸ் ஆரம்பிக்க போகுது… அப்புறம் பேசலாம்”-னு கட் பண்ணான். 

மதுரியா தான் கல்யாணப் பொண்ணு-னு கேட்க முடியாதது விக்கியோட வீழ்ச்சியோட ஆரம்பம். விதி வசத்துலே விக்கிக்கு விதுரன் கல்யாணம் தெரியாமலே போச்சு. விக்கி சொன்ன வேலையெல்லாம் முடிச்சு அவனுக்கு போன் பண்ணி அவனுக்கு அப்டேட் பண்றதை பார்த்துட்டார் கோபாலன் – விக்கியோட அப்பா. அவருக்கு எப்போவுமே பிள்ளைக்கு பிசினஸ் மூளையில்லே, சாமர்த்தியம் இல்லே-னு அபிப்ராயம். பொண்டாட்டி ரொம்ப செல்லம் குடுத்துட்டா, அதனால நாம் கொஞ்சம் கண்டிப்பா இருக்கணும்-னு நினைச்சார். “காசு தண்டம் அழுது யூஎஸ்க்கு போயிருக்கறப்போ இங்கே ஃப்ரெண்ட்ஸ் கிட்ட வெட்டியா பேசிட்டிருக்கான்?”-னு கடுப்பாகி விட்டார். அதனால ரிதேஷ்க்கு நிறைய வேலைக் குடுத்து அவனுக்கு மூச்சுவிட நேரமில்லாம பண்ணார். விக்கி படிக்கற காலேஜ்லேயும் தெரிஞ்சவங்கக் கிட்ட சொல்லி அவனுக்கு வர்க்-லோட் அதிகம் பண்ணார். விதுரனும் கல்யாணத்துக்கு கூப்பிட முயற்சி பண்றப்போ அவங்களை ரீச் பண்ண முடியலே. கடைசியிலே அவன் பிசியானதால விக்ரம் கிட்ட அந்த வேலையை குடுத்தான். விக்ரம் எல்லா வழியிலேயும் அவங்களுக்கு தெரியாம பார்த்துக்கிட்டான். விக்ரமுக்கு ரொம்ப சந்தோஷம். விதுரன் முகத்துலே பழைய சிரிப்பு, சுறுசுறுப்பை எல்லாம் பார்த்தப்போ மதுரியா தான் அவனுக்கான உயிர்-னு புரிஞ்சுது.

ஒரு மாசத்துலே கல்யாணம்னால எல்லாருக்கும் நிறைய வேலை. விதுரன் கல்யாணம் சிம்பிளா பண்ணவும், அப்புறம் ரிசப்ஷன் க்ராண்டா பண்ணிக்கலாம்னும், கல்யாணம் முடிஞ்சு திரும்பி வந்ததும் வீட்டை மாத்திக்கலாம்-னு சொன்னான். வேறே எந்த சாங்கியம் சடங்கு-னு வைக்கக் கூடாது, எல்லாம் நானே பார்த்துக்கறேன்-னு சொல்லிட்டான். அதனால சொந்த பந்தம் முன்னிலையில் ஆடம்பரம் இல்லாம காழியூர் கோயில்லே ரெண்டு குடும்பத்தோட குலதெய்வம் முன்னிலையிலே கல்யாணம் ஏற்பாடாகியிருந்தது. அதுக்கப்புறம் பத்து நாள் கழிச்சு ஒரு ஸ்டார் ஹோட்டல்லே வரவேற்பு. மறுக்கறதுக்கு யாருக்குமே காரணமில்லை. ரெண்டு வீட்டுலேயும் வேதாசலம் போனப்புறம், அதுக்கப்புறம் நடந்த குழப்பங்கள், சங்கடங்கள் எல்லாம் மறைஞ்சு பழைய கலகலப்பு திரும்பி வந்துச்சு. ஏற்பாடுகள் பண்றது, ஜவுளி வாங்கிறதுன்னு விதுரனும் மெல்ல மெல்ல அவன் குடும்பத்தோட மனசளவுலே சேர சந்தர்ப்பம் அமைஞ்சுது. முழுசா சரியாகலேன்னாலும் தினப்படிக்கு ஏதோ முன்னேற்றம் இருந்துச்சு. 

விதுரனுக்கு இந்த கல்யாணத்துலே ரொம்ப சந்தோஷம். அவனோட மது அவன் கிட்டேயே தான் இருக்க போறா-னு குதிக்காத குறை. அது முகத்துலேயும் தெரிஞ்சுது. வேலையிலேயும் தெரிஞ்சுது. இப்போதெல்லாம் மதுரியா அவன் ஆபீசுக்கு போறதில்லே. போன்லேயும் பேசறதில்லை. ஆனாலும் அவனுக்கு உற்சாகம் குறையவே இல்லை. அவன் ஆபிசுலே, ‘வேதம்’லே, ‘நித்தியம்’லே மூணு ஆபிசுலேயும் விதுரன்-மதுரியா கல்யாணம் பத்தி தெரிவிச்சிருந்தாங்க. நித்தியானந்தம் அவர் தொழில் வட்டத்துலேயும் சொல்லிட்டார். எல்லா விதத்துலேயும் எல்லாருக்கும் சந்தோஷம். ஆனா ஒரே ஒரு ஆளைத்தவிர!! மதுரியா தான் அது!

மதுரியாவுக்கு இந்த கல்யாணத்துலே கொஞ்சம் கூட விருப்பம் இருக்கலே. அவளுக்கு விக்கி–அசோக் பேசிட்டிருந்ததைக் கேட்டப்போ விதுரனை எப்படியாவது ரெண்டுப் பேர் கிட்டயிருந்து அவனை காப்பாத்தி பழைய நிலைமைக்கு கொண்டு வந்து இவங்க முகத்துலே கரியை பூசணும்-னு வைராக்கியம் வந்துச்சு. அது மட்டும் இல்லாம ப்ரதீப்-விதுரன் ரெண்டு பேரு வாழ்க்கையிலேயும் விளையாடற இவங்களை சும்மா விடக்கூடாது-னு கோபமும் இருந்துச்சு. அந்த வைராக்கியத்துலே அவனுக்கு உதவும் போது பின் விளைவுகளை யோசிக்கலே. இப்போ அவ செஞ்சது காதல்னால தான்னும் இதுக்கு தீர்வு கல்யாணம் தான்னும் பெரியவங்க நினைச்சது அவளால ஏத்துக்க முடியலே. பழைய பிரச்சினை, கோபம், வருத்தம், வெறுப்பு எல்லாம் மேலே வந்துச்சு. அதுக்கு விதுரனும் சரி-னு சொல்லவும் கோபத்தீ தக தக-னு எரிய ஆரம்பிச்சுது. எல்லாரும் சந்தோஷமா இருந்தா மதுரியா மட்டும் யார் வீட்டு விருந்தோ-னு இருந்தா. கடைக்கு வா-னு கூட்டிட்டு போனா போவா. இதை போட்டுப் பாரு-னு சொன்னா பண்ணுவா. வீட்டுலே எல்லாரும் போட்டோ புரளினால வருத்தம்! கல்யாணம் முடிஞ்சா சரியாகிடும்-னு நினைச்சாங்க. அவங்களுக்கு தெரியலே அவங்க மேலேயும் கோபம்-னு.

இப்படியேப் போக ப்ரதீப் – ரீனா கல்யாணம் வந்துச்சு. அதுலே தான் விதுரன் மதுரியாவை ஏறக்குறைய 15 நாள் கழிச்சு பார்த்தான். ஒரு ஹாய் சொல்லிட்டு அவளும் போயிட்டா. அவனும் போயிட்டான். ப்ரதீப் கல்யாணம் நல்ல விமரிசையா நடந்துச்சு. அவனுக்குத் தங்கையா மதுரியா தான் எல்லாம் செஞ்சா. எல்லாருக்கும் மனசுக்கு திருப்தியா அமைஞ்சுது. காதல் கொண்ட உள்ளங்களும் அன்னியிலே இருந்து அவங்க தாம்பத்யத்தைத் தொடங்கினாங்க. ப்ரதீப் கல்யாணம் முடிஞ்சப்புறம் மதுரியா – விதுரன் கல்யாண வேலை சரியா இருந்துச்சு. ப்ரதீப் ஃபேமிலிக்கு மட்டும் தனி அழைப்பிருந்துச்சு. மொத்த குடும்பமும் காழியூர் போய் அங்கேயே 5-நாள் தங்கி ஏற்பாடுப் பண்ணாங்க. அப்போவும் மதுரியா எங்கேயும் போகாம ரூம்லேயே அடைஞ்சுக் கிடந்தா. “என்ன ரியா? உன் கல்யாணம்டீ.. ஏன் இப்படி எந்நேரமும் உர்-னு இருக்கே?”-னு பொறுக்க முடியாம கேட்டா ரீனா.

ஒரு பெருமூச்சு விட்டு “என் மனசார சம்மதத்தோடவா நடக்குது? சவால்லே ஜெயிக்கணும் கௌரவத்தை காப்பாத்தணும்-னு நடக்குது. இதுலே நான் சிரிக்கலேன்னா என்ன? யார் கவலைப் படப்  போறாங்க?-னு விரக்தியா சொல்லவும், “ரியா, நீ எல்லாரையும் தப்பாப் புரிஞ்சுட்டு இருக்கே. எல்லாருக்கும் உன் சந்தோஷம் தான் முக்கியம். நீ நல்லா இருக்கணும்-னு நினைக்கறாங்க”-னு எடுத்து சொன்னா ரீனா. “அப்படித் தான் ரீனா நானும் நினைச்சு ஏமாந்தேன்”-னு சொன்னா மதுரியா. “ரியா, எனக்கும் ப்ரதீப்புக்கும் இப்போ கல்யாணத்துலே இஷ்டம்-னு நினைக்கிறியா? இல்லே ரியா. ஆனா அக்செப்ட் பண்ணோம் முழு மனசோட.. ஏன்னா சொன்னது நீ. நீ எது சொன்னாலும் அது எங்க நல்லதுக்குத் தான்-னு நம்பறோம்.. அதே மாதிரி இந்தக் கல்யாணம் உன்னோட நல்லதுக்குன்னு நான் சொல்றேன். என் வார்த்தைக்காக இதை ஓப்பன் மைண்டெடா அக்செப்ட் பண்ணிப்பியா? ப்ளீஸ்..”-னு கேட்கவும் சரி-னு மண்டையை உருட்டறதைத் தவிர வேறு வழி இருக்கலே.

அதுக்கப்புறம் கல்யாணவேலை வேகமா நடந்துச்சு. மதுரியாவும் சிரிச்சு சந்தோஷமா இல்லேன்னாலும் ரொம்ப விட்டேத்தியாவும் இருக்கலே. ஒரு புன்னகையோட வலம் வந்தா. துரித கதியிலே எல்லாம் ஓடி குறிச்ச முகூர்த்தத்துல மதுரியா நித்தியவாசன்-ல இருந்து மதுரியா விதுரனா மாறினா. தாலி கட்டும் போது அவளுக்கு மட்டும் கேட்கிறா மாதிரி “லவ் யூ மது!! ஆல்வேஸ்!!”-னு சொன்னான் விதுரன். முகத்துலே இருந்த புன்னகை மறைஞ்சு கோபக் கனல் பறந்துச்சு. “ஹேய்… போட்டோ எடுக்கறாங்க. லைஃப் டைம் ஈவண்ட்”-னு விதுரன் சொல்லவும், கஷ்டப்பட்டு முகத்தை மாத்திக்கிட்டா. ஒருப் புன்னகையோட “ஆமா லைஃப் டைம் ஈவண்ட் தான். இனி வாழ் நாள் பூரா என்கிட்ட சிக்கிக்கிட்டீங்க”-னு பல்லை கடிச்சா. “இட்ஸ் மை ப்ளெஷர் பேபி”-னு அதோட உள்ளர்த்தம் புரியாம காதலோட சொல்லி வைச்சான். “வில் யூ ஷட் அப்?”-னு அடிக் குரல்லே சீறவும் தான் அவ முகத்தை யோசனையோட பார்த்தான். “ஏன்டா? கல்யாணத்துக்கு அப்புறம் பேசிட்டுத் தானே இருக்கப் போறீங்க? அங்கே பார்.. எல்லாம் வர்றாங்க”-னு அந்த சமயம் கவனத்தை கலைச்சான் ரிஷி.

அதோட கல்யாணம் முடிஞ்சு அறைக்குப் போய் தூங்கி, அடுத்த நாள் கோயில், பூஜை எல்லாம் முடிஞ்சு ரெண்டு நாள்லே ஊர் திரும்பினாங்க. அதோட வேதமூர்த்தி வீட்டுக்கும் போயிட்டா மதுரியா. கண்ணுலே தண்ணி விட்ட சுபத்ராவைக் கூட, “ஒண்ணா கல்யாணம் ஆகலே-னு அழறது.. இப்போ கல்யாணம் ஆயிடுச்சு-னு அழறது.. என்னம்மா வேணும் உனக்கு?”-னு அலுப்பா கேட்டு அவளோடக் கோபத்தை வெளிக்காட்டினா. அவ கோபம் புரிஞ்சாலும் என்ன ஏதுன்னு கேட்டு பெரிசு பண்ண வேண்டாம்-னு விட்டுட்டாங்க. வேதமூர்த்தி வீட்டுலே ஒன்றிப்போகிறதும் மதுரியாவுக்கு கஷ்டமா இருக்கலே. எல்லாம் முன்னாடியே கட்டிவைச்சதால விதுரன் வீடு காலி பண்றதும் சுலபமா தான் இருந்துச்சு, டிரெயினிங் போறதாலே கல்யாணத்துக்குன்னு ஒரு வாரம் தான் விடுமுறை கேட்டிருந்தா மதுரியா. அதனால காழியூர்லே இருந்து வந்த அடுத்த நாளே ஹாஸ்பிடல் போக ஆரம்பிச்சா. 

அந்த வீட்டுலே விதுரனை சுத்தமா தவிர்த்தா. ஆனா மத்தவங்க கிட்ட நல்லா பேசினா. அங்கே கற்பகவல்லி மாதிரி இந்த வீட்டுலே நீலவேணி கிட்டேயும் சங்கரி கிட்டேயும் ஒட்டிக்கிட்டா. விதுரன் கிட்ட பேசறதே இல்லை. அவனை தவிர்க்கிறா-னு புரியறதுக்கே அவனுக்கு மூணு நாளாச்சு. சரி விட்டு பிடிக்கலாம்-னு பொறுமையா இருக்க நினைச்சு தோத்துப் போனான். வரவேற்புக்கு 5-நாள் இருக்கற நிலையிலே அன்னிக்கு ராத்திரி அவ, அவங்க அறைக்கு தூங்க வந்தப்புறம், “என் முகத்தை கூட பார்க்கக் கூடாத அளவுக்கு என் மேலே என்ன கோபம் மது?”-னு நேரடியாவே கேட்டான். “ஒரே கோபம் தான். இந்த கல்யாணம். கொஞ்சம் கூட என் சம்மதம் இல்லாம நடந்துச்சு”-னு அலட்சியமா சொல்லவும் விதுரனுக்கு அதிர்ச்சி தான். 

“ஏன் மது? நீ என்னை விரும்பறே-னு எனக்கு நல்லா தெரியும். அப்புறம் ஏன்?”-னு ஆதங்கமா கேட்டான். “நான் விரும்பினா போதுமா? நீ விரும்ப வேண்டாமா? அதோட வேண்டும்னா கட்டிக்குவே. வேண்டாம்னா வெட்டிக்குவே. நீ வான்னா வர்றதுக்கும் போன்னா போறதுக்கும் என்னை என்ன நாய்க்குட்டி-னு நினைச்சியா?”-னு ஏக வசனத்துலே எகிறி விதுரனோட இதய துடிப்பை எகிற வைச்சா. “மது… ப்ளீஸ்… ஏதேதோ பேசறே.. நீ நினைக்கற மாதிரி நான் இல்லே”-னு தன்னிலை விளக்கம் குடுக்க முற்படும் போது, “ஓ.. நான் நினைக்கற மாதிரி இல்லைன்னா? அதை விட மோசமாவா? அந்த சுவாதி கோத்தி மட்டும் தானா இல்லே வேறே யாராவதுமா?”-னு எகத்தாளமா கேட்கவும் “மது, மைண்ட் யுவர் வர்ட்ஸ். வார்த்தை எல்லை மீறுது”-னு சீறினான் விதுரன்.

“அடடா… உங்க லட்சணத்துக்கு கோபம் வேறேயா? என் கூட நிச்சயமாகி அவ கூட சுத்தி, கூத்தடிச்சு, அந்த சனி…. அவளுக்காக தானே என் கூட ப்ரேக்-அப் பண்ணீங்க? இப்போ எதுக்கு என்னோட கல்யாணம் பண்ணீங்க? என்னை பழிவாங்கணும்-னும் என் திமிரை அடக்கணும்-னும் அப்புறம் என்னை ஜெயிக்கணும்னும் தானே? நடந்துடுச்சே? நவ் வாட்?”-னு சண்டைப் பிடிச்சா. “ஏய்… ஏன் டீ? இப்படி லூசு மாதிரி பேசிட்டேப் போறே? என்ன வீம்பு, பிடிவாதம் இது? நான் உன் புருஷன் டீ. உன்னை மனசார விரும்பி கல்யாணம் பண்ணவன். உன்னைத் தவிர என் மனசுலே, எண்ணத்துலே யாரும் இல்லே”-னு ஆதங்கமும் கோபமுமா சொன்னான். “அப்போ அவ கூட கையை கோர்த்துட்டு சுத்தினது? கொஞ்சி, சிரிச்சு பேசினது? கட்டிப்.. சே.. என்னை அழ வைச்சுப் பார்க்கணும்-னு தானே எல்லாம் சொல்ல வைக்கிறே? ஆமா… அழறேன்… பார், ரசிச்சு பார். ஏன்னா உன்னை உண்மையா நேசிச்சேன்.. அதான் நீ என்னை ஏமாத்தினப்போ எனக்கு வலிச்சுது.. வலிக்குது”-னு கண்ணுலே குபுக்-னு வழிஞ்ச தண்ணியை துடைச்சா.

அவ பக்கத்துலே வந்து அவ தோளை பிடிச்சு குலுக்கி, “மது… மது.. ப்ளீஸ் உன் கண்ணுலே இந்த வலியும், ரண வேதனையும் இல்லாம போனா, வீம்புக்கு-னு கூட ஒத்துப்பேன். ஆனா இப்படி வலிக்கற அளவு என்ன நினைக்கிறே மது? சொல்லு மது… எதையோ தப்பா புரிஞ்சு இருக்கே.. நான் ஒரு நாளும் சுவாதியை விரும்பலேடீ. அவ நெருங்கி வந்ததை உன்னை வெறுப்பேத்தணும்-னு அனுமதிச்சேன்”-னு சொல்லவும், “நம்பற மாதிரி இல்லை.. என்னை லவ் பண்ணிட்டு அவ கூட சுத்தினதுக்கு இப்படி ஒரு விளக்கமா. சரி… அப்போ பதினாறாம் தேதி நடந்துச்சே அதுக்கு என்ன விளக்கம்?”-னு கேட்டா மதுரியா. “பதினாறா? 16ம் தேதி என்ன நடந்துச்சு?”-னு கேட்கவும், “செஞ்சது நீங்க தானே? உங்களுக்கே தெரியணுமே? நான் ஏன் சொல்லி திரும்ப காயப்படுத்திக்கணும்?”னு முறுக்கிட்டுப் போனா. இவகிட்ட மிஞ்சினா சொல்லமாட்டா-னு புரிஞ்சு, “ப்ளீஸ் மது, என் சைட் விளக்கத்துக்கு ஒரு சான்ஸ் குடேன்மா”-னு கெஞ்சவும் இறங்கி வந்தா. “ஓகே சிக்ஸ்டீன்த் அன்னிக்கு ஒரு ஹாப்பி நியூஸோட உங்களை மீட் பண்ண வர்றேன்-னு குடுத்த இந்த மெசேஜ் உங்களுக்கு வந்துச்சா? நீங்க பார்த்தீங்களா?”னு அவ போன்லே ஒரு மெசேஜ் காமிச்சா. “பார்த்தேன்..”னு சொல்லவும், “ஸோ, நான் வரேன்-னு தெரிஞ்சும் அப்படி பண்ணீங்களா?”-னு கேட்டா மதுரியா.

விதுரன் “என்ன பண்ணேன் மது?”-னு கேட்க ஆரம்பிக்கவும் கொந்தளிச்சா மதுரியா, “இனஃப்… பேசாதீங்க. எனக்கெதுவும் கேட்க வேண்டாம்.. யூ ஆர் எ சீட். லையர். நான் உங்களை எப்போவும் நம்ப மாட்டேன். அதனாலே தான் நீங்க அந்த சுவாதி பின்னாடியோ இல்லே வேறே எவ பின்னாடியோ போகக்கூடாது-னு தான் இங்கே மூவ் ஆக சொன்னேன். மத்தபடி வேறே எதுவும் இல்லை”-னு கத்தினா. “அப்புறம் எதுக்குடீ கல்யாணம் பண்ணிக்கிட்டே?”-னு விதுரனுக்கு கோபம் வரவே கத்தினான். “நானா விருப்பப்பட்டா ஒத்துக்கிட்டேன்? எல்லாரும் கார்னர் பண்ணி என்னை உங்க தலையிலே கட்டிட்டாங்க. சே… நீங்க கஷ்டப் பட்டப்போ ஒரு நட்பால தான் வந்தேன். இப்போ கல்யாணத்துக்கு அப்புறம் எனக்குள்ளே இருக்கறது மரிச்சு போன காதலும் குறைஞ்சு போன நட்பும் தான். மத்தபடி இந்த கல்யாணம் ஒரு ஆயுள் தண்டனை. நம்ம வெறும் ரூம்-மேட்ஸ். அவ்வளோ தான்”-னு சொல்லிட்டுப் போய் படுத்திட்டா. விதுரன் பேயடிச்ச மாதிரி ஆயிட்டான். அவனுக்கு அடுத்து என்ன செய்யறதுன்னே புரியாத நிலை. அவன் மேசையில சாய்ஞ்சு அப்படியே கண்ணை மூடி உட்கார்ந்துட்டான்.

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top