அத்தியாயம் -41

விதுரனுக்கும் மதுரியாவுக்கும் அன்னிக்கோட எல்லாம் சரியாயிடுச்சான்னா கண்டிப்பா இல்லை. சில நெருடல்களும் உறுத்தல்களும் இருந்துச்சு. அதைத் தவிர அவங்கவங்க மனசுக்குள்ளே இருந்தப் பிரச்சினைகள், யோசனைகள் அதுபாட்டுக்கு இருந்துச்சு. ஆனா ரெண்டுப் பேருக்கும் நடுவிலே எல்லாம் சரியாயிடும்-னு நம்பிக்கை வந்துச்சு. ரெண்டு பேரும் ரெண்டுப் பேர் கிட்டேயும் உரிமை எடுத்துப் பழக முடிஞ்சுது. முக்கியமா மதுரியாவுக்கு பெரிய பயமாயிருந்த விக்கியை பத்தி தெரிஞ்சா எப்படி உடைஞ்சுப் போவானோ-னு கலக்கம் இல்லை. அதனாலேயோ என்னமோ முழு மூச்சா இது எல்லாம் ஏன் செய்யறாங்க-னு கண்டுப்பிடிக்கறதைப் பத்தி யோசிக்க ஆரம்பிச்சா. நாட்களும் வாரங்களாகி ஓடி, மதுரியாவும் திரும்ப வேலைக்குப் போக ஆரம்பிச்சா. அதுக்குள்ளே டாக்டர்.ஆகாஷும் கேஸ் விவரம் படிச்சு, கற்பகவல்லிக்கு சிகிச்சைப் பண்ணலாம்னும், அதுக்கு முதல்லே சில மருந்துகள் குடுத்து அவங்க உடல்நிலையை பலப்படுத்தணும்-னு சொன்னார். வெற்றி வாய்ப்புக் கம்மின்னாலும் முயற்சிப் பண்றதுலே எந்த பிரச்சினையும் வராது-னு சொன்னதால அதுவும் ஒரு பக்கம் நடந்துச்சு.

ஒரு நாள் காலையிலே வேலைக்குக் கிளம்பும் போது, விதுரனும் காலை உடற்பயிற்சிக்குத் தயாரானான். மதுரியா வழக்கமா எடுத்து வைக்கற பொருள் கூட இன்னொரு பைய்யும் எடுத்து வைக்கவும், “ஏய்.. இது என்ன?”-னு கேட்டான் விதுரன். அதுக்குள்ளேயிருந்து ஒரு பெட்டி எடுத்து, “இது வாய்ஸ் ரெகார்டர்.. டிக்டஃபோன்-னு சொல்லுவாங்க.. சில காம்ப்ளிகேடெட் சர்ஜரீஸ்லே டாக்டர் சொல்றதை ரெகார்ட் பண்ணி, அப்புறம் டிரான்ஸ்க்ரைப் பண்ணிக்கலாம்”-னு சொல்லவும், “ஓ… கார்டியாலஜி ரொம்ப கஷ்டமா இருக்கோ?”-னு கேட்டான் விதுரன். விதுரன் அவ படிப்பை பத்தி முன்னாடிப் பேசவே மாட்டான். இப்போ அதோட மதிப்புத் தெரியவும் நிறையப் பேசறான். ஆனா அவளுக்கு எப்படி உதவி பண்றது-னு மட்டும் தெரியாம இருக்கான். “இல்லை விது… இது என் கனவு.. அதனாலேயே கஷ்டம் பெரிசா தெரியலே”-னு சொன்னா மதுரியா. “பெரும்பாலும் ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட்ஸ் ஆண்களாத்தான் இருப்பாங்க. யூ வில் பி யுனிக்”-னு விதுரன் சொல்லவும், “அதெல்லாம் கிடையாது… லேடீஸும் இருக்காங்க. சரி விது.. இன்னிக்கு வேலை முடிஞ்சு ரீனாவை மீட் பண்ணிட்டு வருவேன். கொஞ்சம் லேட் ஆகும்”-னு அவ மூட்டை முடிச்சை கையிலெடுத்தா.

“மேடம்… கிளம்பறதுக்கு முன்னாடி எங்களை கொஞ்சம் கவனிக்கறது”-னு கண்ணடிக்கவும், “உங்களை…. வேலைக்குக் கிளம்பும் போது.. பேச்சைப் பாரு”-னு சலிச்சாலும் கன்னம் அவளை மீறி சிவந்துச்சு. “வேறே என்ன செய்ய சொல்றே? காலையிலே எனக்கு முன்னாடிக் கிளம்பறே.. ராத்திரி எனக்கு முன்னாடியே தூங்கிடறே.. ம்ம்ம்… இன்னிக்கு ஃப்ரைடே. சீக்கிரம் தூங்காதே”-னு அவ நெத்தியோட நெத்தி முட்டினான் விதுரன். “அது என் கையிலே இல்லை… சீனியர் தான் சொல்லணும்.. நாளைக்கு சர்ஜரி இருந்தா என்ன பண்றது?”-னு குறும்பா ஒத்த புருவத்தை தூக்கவும், பொறுக்க முடியாம அவ உதடுகளை சிறைப் பிடிச்சான். அப்புறம் விடுவிச்சு, “மிச்சத்தை ராத்திரி வாங்கிக்கறேன்.. இப்போ கிளம்பு”-னு கண்ணடிக்கவும் ஒரு வெட்க சிரிப்போட அவ கிளம்பினா. ஆனா அன்னிக்கு ராத்திரி அவங்கக் கூடலுக்கு முன்னாடி பல சோதனைகளை ரெண்டுப்பேரும் கடக்க வேண்டி இருக்கும். அவங்க உறவு திரும்ப வாழ்வா? சாவா?-ன்னு பார்த்துட்டு வரப் போகுது.

நாள் அதுப் பாட்டுக்கு ரெக்கைக் கட்டிட்டு ஓடிடுச்சு. ஒரு பதினொரு மணி போல விக்கி, விதுரனுக்கு போன் பண்ணான். “விதுரா.. இன்னிக்கு ஈவினிங் என் கூட ஒரு இடத்துக்கு வரணும்”-னு கூப்பிட்டான். “என்னடா திடீர்-னு?. நான் மது கிட்ட சொல்ல வேறேயில்லை”-னு விதுரன் சொல்லவும், “ஏன்? பர்மிஷன் கேட்கலேன்னா மேடம் விட மாட்டாங்களோ? எனக்கு பொண்ணு பார்த்திருக்காங்க. அவ கூட இன்னிக்கு பேசறேன்”-னு சொன்னான் விக்கி. விதுரனுக்கு நண்பனுக்கு நல்லது நடக்குது-னு சந்தோஷம்னாலும் மதுரியா கிட்ட அவன் நடந்துக்கற விதம் ஏற்புடையதா இல்லை. “வெர் குட் டா… நான் மது கிட்ட கேட்டுட்டு சொல்றேன்”-னு சொல்லவும், “ஓஹோ… பர்மிஷன் குடுத்தாத் தான் வருவீங்களோ? அடேங்கப்பா.. என்னை விட அவ தான் முக்கியமா?”-னு கோபமானான் விக்கி. “உனக்கும் மதுவுக்கும் என்ன பிரச்சினை விக்கி? நீ இவ்வளோ வெறுக்கற அளவு அவ என்ன பண்ணா?”-னு நேரடியா கேட்கவும் திணறித்தான் போனான் விக்கி. “எனக்கென்ன? உன் வைஃபுக்குத் தான் என்னை பிடிக்காது.. நான் என் நண்பனோட வைஃப்-னு ரெஸ்பெக்ட் குடுக்கத் தான் செய்யறேன்”-னு அலட்சியமா சொல்ல டிரை பண்ணான் விக்கி.

“ஓஹோ… அதனால தான் தி.நகர் ‘பீனா பில்டர்’ஸோட பில்டிங் வாசல்லே அவளுக்கு ஏக்சிடெண்ட் ஆனப்போ அவளுக்கு ஹெல்ப் பண்ணாம என்னவோ ஆகட்டும்-னு விட்டியா? அரவிந்த் அவளை என் மேரேஜ் ரிசப்ஷன்லே மட்டும் பார்த்தை ஞாபகம் வைச்சுட்டு ஹெல்ப் பண்ணான்… ப்ளீஸ்… நினைப்பில்லே… பார்க்கவும் இல்லே-னு மட்டும் சொல்லாதே”-னு கடுக்-னு சொன்னான் விதுரன். “விதுரா! 25ம் தேதி அந்த ஏக்சிடெண்ட்… அடிப்பட்டது மதுரியாவுக்கா?”-னு திகைச்சு போனான் விக்கி. அவனுக்கு என்ன-னு புரியாம இருந்த பல விஷயம் புரிய ஆரம்பிச்சுது. “அப்போ இவளுக்கு எல்லாம் தெரியுமா? ஷிட்.. விட மாட்டேன். ஐ வில் எண்ட் இட் டுடே… மதுரியா… இது எப்படி திரும்பினாலும், முடிவு என் எண்ணப்படி தான்”-னு நினைச்சவன், “விதுரா.. ஒரு இம்பார்டண்ட் கால் வருது.. வில் பி ரைட் பேக்”-னு காலை கட் பண்ணான் விக்கி.

அன்னிக்கு ரீனாவுக்கும் மதுரியாவுக்கும் ஷிஃப்ட் முடிஞ்சுப் பேச நிறைய விஷயம் இருந்துச்சு. மதுரியாவுக்கு அவ வாங்கினதை எல்லாம் கடை பரப்பி எல்லாம் சொன்னா. “இனியும் வெயிட் பண்ணி யூஸ் இல்லே ரீனா… கையும் களவுமா ரீசனோட பிடிக்கணும். அதுக்குத்தான் இதெல்லாம்”-னு சொல்லவும், “சரி தான் ரியா.. ஆனா நம்ம போயி பேச்சுக் குடுத்தாலும் சொல்லுவாங்களா? எந்த திருடன்டீ திருட்டை ஒத்துக்குவான்?”-னு சலிப்பா கேட்டா ரீனா. “கண்டிப்பா ஒத்துக்க மாட்டாங்க.. அது நம்ம சாமர்த்தியத்தைப் பொறுத்தது”-னு மதுரியா சொல்லவும், “அப்போ அவசரப்பட முடியாதுடீ. நல்லா ப்ளான் பண்ணித் தான் இறங்கணும்”-னு ரீனா சொல்லும் போதே, மதுரியாவோட அலைப்பேசி அடிச்சுது. அதுல ‘ப்ரைவேட் நம்பர்’-னு வரவும், “யார் ரியா?”-னு  கேட்டா ரீனா. “தெரியலியே..”-னு சொல்லிட்டே எடுத்துக் காதுலே வைச்சா. “டாக்டர் மதுரியா?”னு அந்த குரல் சொல்லவும், “யெஸ் ஸ்பீக்கிங்..”-னு சொன்னா. “நான் விக்கி! என்னம்மா நீயும் உன் ஃப்ரெண்டும் சேர்ந்து என்னையும் என் ஃப்ரெண்டையும் பத்தி மொத்தமா தெரிஞ்சுகிட்டீங்க போல?”-னு நக்கலா கேட்டான்.

மதுரியா அதிர்ந்துப் போனா. உடனே போனை ஸ்பீக்கர்லே போட்டா. “அது… அது..”-னு தடுமாறவும், “அதே தான். அதைப்பத்தி உன்கிட்ட பேசணும்.. கொஞ்சம் நீயும் உன் உயிர் நட்பும் வேளச்சேரி தாண்டி, பஸ் ஸ்டாண்ட் ஒட்டி இருக்கற நித்தியமோட அண்டர் கன்ஸ்டிரக்‌ஷன் பில்டிங்க்கு வாங்க”-னு சொன்னான். “நான் ஒண்ணும் உன் வேலைக்காரி இல்லே”-னு மதுரியா சீறவும், “தற்சமயம் உன் நிலைமை அதை விட மோசம்.. உன் அக்கா பையன்… அவன் ப்ளே ஸ்கூல்லே தானே இருக்கான்? அவனை என்ன பண்ணா வருவே?”-னு சாவதானமா கேட்கவும், ரெண்டுப் பொண்ணுங்களும் மிரண்டுப் போனாங்க. “ஹேய் என்ன சொல்றே? அவங்களை நீ என்ன பண்ணே?”-னு பயந்து அலறவும், “ரிலேக்ஸ்… இன்னும் ஒண்ணுமே பண்ணலே.. ஏதாவது பண்ணாத்தான் வருவீங்கன்னா தயங்க மாட்டேன். யூ நோ மீ வெல். எனக்கு எமோஷனே கிடையாது”-னு அலட்சியமா சொன்னான் விக்கி. “சரி… சரி… வர்றேன்.. இதுக்கும் ரீனாவுக்கும் சம்பந்தம் கிடையாது. அவளை விடு”-னு மதுரியா சொல்லவும், “அதை நான் தான்மா முடிவு பண்ணனும். ரெண்டு பேரும் சொன்ன இடத்துக்கு வந்து சேருங்க.. பை தி வே.. ரொம்ப சாமர்த்தியமா உங்க ஹஸ்பெண்ட்களுக்கு போன் பண்ணி சொல்லி ஏதாவது காமெடி நடந்துச்சு, அப்புறம் ஐய்யோ ‘என் வீ, என் நிக்கு’ன்னு அழுது பிரயோஜனம் இல்லை”-னு இரக்கமே இல்லாம சொன்னான்.

“வேண்டாம்… நோ… ப்ளீஸ்.. நாங்க உடனே வரோம்… பட் நம்ம ஏதாவது ஒரு ஹோட்டல்லே பேசலாம்.. பப்ளிக் ப்ளேஸ்லே.. ப்ளீஸ் அண்டர்ஸ்டாண்ட்.. உன்னை காட்டிக் குடுக்கற நோக்கம் இருந்தா எப்போவே பண்ணி இருப்பேன்”-னு மன்றாடினா மதுரியா. “அஃப் கோர்ஸ் அது உன் நோக்கம் இல்லே.. அதுக்கும் மேலே வேறே ஏதோ… லுக்.. சொன்னதை செய்”-னு அதிகாரமா சொல்லிட்டு போனை கட் பண்ணிட்டான். மதுரியாவும் ரீனாவும் வேறே வழியில்லாம பலியாடுப் போல கிளம்பினாங்க.

விக்கி இவங்களை வரச் சொன்ன கட்டிடம் ஒரு மாதிரி தூசி படிஞ்சு பராமரிப்பில்லாம இருந்துச்சு. அங்கே ஆட்கள் வந்து போறதுக்கோ, வேலை நடக்கறதுக்கோ எந்த அறிகுறியும் இல்லை. “என்னடீ இது? இப்படி இருக்கு?”-னு ரீனா கேட்கவும் “இதுலே ஏதோ சட்ட சிக்கல் ரீனா.. கன்ஸ்டிரக்‌ஷனை நிறுத்த சொல்லி ஸ்டே வாங்கி இருக்காங்க. கோர்ட்லே கேஸ் நடக்குது.. பரத்தப்பா சொன்னார்.. இங்கே வா-னு சொன்னப்போ அதான் ரொம்ப யோசிச்சேன்”-னு சொன்னா மதுரியா. கட்டிடத்தோடப் பின்னாடி யாரோ காலடி கேட்கவும், “சரி வா… அவங்க சொன்ன நாலாவது மாடிக்கு போகலாம்.. இங்கே அதிக நேரம் நிக்கறது நமக்கு சேஃப்டி இல்லை”-னு ரெண்டுப் பேரும் மெதுவா படியேறி நாலாவது மாடிக்கு போனாங்க. “இந்த ஓநாயின் சமஸ்தானத்திற்கு புள்ளி மான்களை வரவேற்கிறோம்”-னு கண்ணடிச்சு சொன்னான் அசோக். ரெண்டுப் பேரும் திகைச்சு போனாங்க. ஒரு நிமிஷம் பயத்துலே அவங்க உடம்பே ஆடுச்சு.

“என்னை இங்கே எதிர்பார்க்கலே தானே?”-னு அசோக் கேட்கவும், “நீங்க… நீங்க.. ரெண்டுப் பேரும் எப்படி ஒண்ணா?”-னு தந்தி அடிச்சா மதுரியா. “நாங்க ரெண்டு பேரும் டியரெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ்… அப்புறம் கசின்ஸ்.. ஏன்னா எங்க ரெண்டுப் பேரோட அப்பாக்களும் கசின்ஸ்”-னு தோளை குலுக்கினான் அசோக். “என்ன அங்கேயே நின்னுட்டீங்க? வாசலோட பேசிட்டு அப்படியே ஓடிடலாம்-னு ப்ளானா? வாய்ப்பே இல்லேம்மா. பேசவும், கொள்ளவும் நிறைய விஷயம் இருக்கு.. ஒரு டீல் பேசலாமா? உங்களுக்குத் தான் ரொம்ப பிடிக்குமே?””-னு விக்கி சொல்லவும் இன்னும் அதிர்ந்தாங்க. அந்நேரம் வீங்கின கன்னத்தோட உள்ளறையிலே இருந்து சுவாதி வந்தா. “நீயா?”-னு சத்தமே வராம கேட்டா மதுரியா. “ஆமா… இவ பெரிய எட்டப்பீ… இவ உன்கிட்ட விஷயத்தை சொன்னா பயந்துப் போயிடுவோமா? உனக்கு எல்லாம் தெரியும்-னு தெரிஞ்சதுமே இவ மேலே டவுட்.. விட்டேன் ஒரு அறை…. அப்புறம் இவன் இருக்கானே பெரிய மன்மதன்.. மானத்துக்கு பங்கம் வந்துடுமோ-னு நடுங்கி மொத்தமா உளறினா”-னு ஹா..ஹா-னு சிரிச்சவன், “நீ இங்கே நிக்கறதுக்கு ரெண்டுப் பேரு காரணம்… ஒண்ணு உன் புருஷன். இன்னோன்னு இவ”-னு சொன்னான் விக்கி.

“அப்பப்பா.. என்ன ஒரு மாஸ்டர் ப்ரெயின் உனக்கு. அடேங்கப்பா.. என்ன ஒரு ப்ளானிங். பேச்சுலே நடத்தையிலே காரியத்துலே எல்லாத்துலேயும் அப்படி ஒரு நிதானம். புத்திசாலித்தனம். அதை ஒத்துக்கிட்டே ஆகணும். இல்லேன்னா நான் ஃபினிஷ்ட்-னு நினைச்ச விதுரனை முன்னே விட இன்னும் ஸ்டிராங்கா என் முன்னாடி நிறுத்தியிருப்பியா? அப்புறம் அந்த ப்ரதீப் லைஃபை சரி பண்ணி அவனை சந்தோஷமா நடமாட விட்டிருப்பியா? யார்டீ நீங்க? யார் நீங்க? நாங்க அழியணும்-னு ப்ளான் பண்ணி அவங்களுக்கு வைக்கற செக் எல்லாம் ராணிங்க மாதிரி குறுக்குலே வந்து தடுத்து எங்களுக்கே செக் வைக்கறீங்க? இனிமேல் க்ளோஸ். இட்ஸ் நவ் செக் அண்ட் மேட்”-னு கொந்தளிச்சான் விக்கி. “நீங்க ரெண்டுப் பேரும் அவங்களோட க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ்… இப்படி பண்ணலாமா?”-னு கேட்டா ரீனா. “அப்படீன்னு நாங்க ஒரு நாளும் சொன்னதில்லே. அவனுங்களா நினைச்சா.. நாங்க பொறுப்பா?”-னு அலட்சியமா கேட்டான் அசோக். “அதானே? நான் தான் சொன்னேனே எனக்கு எமோஷன்ஸே கிடையாது”-னு – ஒத்து ஊதினான் விக்கி. “ஆனா… ஏன் பண்ணீங்க? விதுவும் தீப்பும் உங்க ரெண்டுப் பேருக்கும் நல்லது தானே நினைச்சாங்க? பண்ணாங்க?”-னு எமோஷனலா கேட்டா மதுரியா. “மண்ணாங்கட்டி..”-னு ரெண்டு பேரும் ஒண்ணு போல சீறினாங்க அசோக்கும் விக்கியும்.

ரெண்டு பொண்ணுங்களும் அரண்டு போய் பின்னாடி போனாங்க. “ரிலேக்ஸ் ரியா… எனக்கு உங்க மேலே எந்த கோபமும் இல்லை. எங்களோட மொத்த கோபமும் உங்க பெட்டர் ஹாஃப்ஸ் மேலே தான். அவனுங்க தான் இந்த ஜென்மத்துக்கு எங்க விரோதிங்க.. அப்படியே அந்த ரெண்டு மூஞ்சியை பார்த்தா அடி வயித்திலே இருந்து கொலை வெறியே வரும்.. அவனுங்களால நாங்க ரெண்டு பேரும் ஒரு வேளை சோறு நிம்மதியா சாப்பிட்டதில்லே தெரியுமா? எப்ப பாரு கம்பேரிஸன்… எங்கப்பனுங்களுக்கு தெரிஞ்ச ஒரே பேர் விதுரன், ப்ரதீப். அம்மா இல்லாத பையன் எப்படி பொறுப்பா படிக்கிறான் பாரு… வசதி இருந்தாலும் படிக்கிறான் பாரு. இந்த தொழிலுக்குன்னே பிறந்தவன் பாரு… அப்படீ-னு எந்நேரமும் இவங்க புராணம் கேட்டு கேட்டு வெறுத்துட்டோம்”-னு சொன்னான் விக்கி. “எக்சாக்ட்லி… இவனுங்களை பத்தி பேசறதுலே, நாங்க என்ன பண்ணோம்னு பார்க்கவே இல்லை எங்களைப் பெத்தவங்க”-ன்னு அதே கோபத்தோட சொன்னான் அஷோக்.

“விக்கி படிப்பு முடிஞ்சு ரெண்டு வருஷத்துலே பிசினஸ் டேக் ஓவர் பண்ணான். அப்போ பிடிச்சு கண்ட்ரோல் தான்! ஜுராங் இன்வெஸ்டர்ஸ்… சிங்கப்பூர் பேஸ்ட் கம்பெனி, இன்னிக்கு வரைக்கும் கொழிக்குது.. அதை பாராட்டறதுக்கு பதிலா விதுரனைப் பார்.. விதுரனைப் பார் தான் எப்போவும். அதே மாதிரி நான்… எம் எஸ் ஃபைனல் ப்ராஜெக்ட் என்ன-னு தெரியுமா? இந்தியாவிலேயே நாலு பேர் தான் பண்ணி இருக்கோம். ஆனா எங்கப்பனுக்கு நான் பிறந்ததோ சாபக்கேடு மாதிரி.. நல்ல வேளை ப்ரதீப்போட அப்பனாச்சும் உயிரோட இருக்கான். இல்லேன்னா இந்த ஆள் என்னை விரட்டி விட்டுட்டு அவனை பிள்ளையா எடுத்திருப்பான்”-னு மாறி மாறி கொந்தளிச்சாங்க. இப்படி ஒரு காரணத்தை ரீனாவும் மதுரியாவும் எதிர்பார்க்கலே.

அவங்களே மேலே தொடர்ந்தாங்க. “அதான் கூட இருந்தே குழி பறிச்சோம்.. உன் கூட நிச்சயமானதை ப்ரேக் பண்ணேன்… சுவாதி – லூசு. என்னை லவ் பண்றேன்-னு வந்தவளை வைச்சு, அவன் மனசைக் கொழப்பி உன் கண்ணு முன்னாடி அவனோட கேரக்டரைக் கொன்னேன்.. அவனோட ஈகோவை தூண்டி விட்டு குளிர் காய்ஞ்சேன். இதெல்லாம் பண்ணியும் கூட தொழில்லே புலியா இருந்தான். அதுக்குத் தான் கௌதம் இன்வெஸ்டர்ஸ் ப்ராஜெக்ட்டுக்கு பொய் அறிவிப்பு ரெடி பண்ணி, அவனை அகலக்கால் வைக்க வைச்சு, அவன் கடன் வாங்கினவங்களை தூண்டி விட்டு, அவனை அன்னக்காவடி ஆக்கி செல்லாக் காசு ஆக்கினேன். அவன் பிச்சைக்காரன் மாதிரி தெருவுலே அலைஞ்சான். எங்கப்பா அவனைப் பத்தி பேசறதை நிறுத்தினார். என்னப் பத்தி யோசிச்சார். எனக்கு விருப்பப்பட்ட கோர்ஸ் படிக்க யூஎஸ் போக சரி-னு சொன்னார்…. ஜெயிச்சேன்”னு கொக்கரிச்சான் விக்கி.

“ப்ரதீப்பை இப்படி எல்லாம் பண்ண முடியாது டாக்டர் தொழில்லே. அதான் அவன் வைஃப், லவர் நந்தினியை கவர் பண்ணேன்.. அதெல்லாம் என்ன லவ்வோ? ஒன் வீக் ஆகலே எனக்கு அவளை க்ரேக்ட் பண்ணி ப்ரதீப் அவளுக்கு ஏத்தவன் இல்லே-னு நம்ப வைக்க.. அவ்வளோ தான். நாய்க்குட்டி மாதிரி என் பின்னால வந்தா. அவனுக்கு நான் குடுத்த உச்ச பட்ச தண்டனை – அவன் மனைவியா இருந்தப்போவே என்னோட சல்லாபிக்க வைச்சேன்! டைவோர்ஸ் வாங்கினா.. என் கணக்குலே மிஸ் ஆனது அவ கூட எனக்கு நடந்த கல்யாணம்”-னு தோளை குலுக்கினான் அசோக்.

மதுரியாவுக்கும் ரீனாவுக்கும் அவங்கப் பேசறதக் கேட்டு கழிவிரக்கத்துலே கண்ணுலே இருந்து மள மள-னு தண்ணி வழிஞ்சுது. “உங்க அப்பா மேலே இருந்த கோபத்துலே அவங்களை பழி வாங்கிட்டீங்களே? சே.. மனுஷங்களா இருந்தா புரியும்.. எமோஷன் இல்லாதவங்க எல்லாம் மனுஷன்னே சொல்லிக்க கூடாது… சரி இப்போ எதுக்கு எங்களை வரச் சொன்னீங்க?”-னு கேட்டா மதுரியா. “வெல்… நீங்க ரெண்டுப் பேரும் இங்கேயிருந்து எங்கேயாவது ஓடிப் போகணும்! கண்காணாம!!!! திரும்பியே வரக் கூடாது…. ஐ வில் ஹெல்ப் யூ ஃபினான்ஷியலி… விதுரனும் ப்ரதீப்பும் பொண்டாட்டி ஓடிப் போயிட்டாங்கற அவமானத்துலே சாகாம சாகணும்.. ஊரெல்லாம் அவங்க மூஞ்சியிலே காரி துப்பணும்.. இந்த அடியிலேயிருந்து அவங்க எந்திரிக்கவே கூடாது”-னு வன்மத்தோட சொன்னான் விக்கி. 

“வாட்… நான்சென்ஸ்!! இதெல்லாம் செய்ய முடியாது”-னு ரீனா கோபப்படவும், “செய்ய வைப்போம்… ஏன் இந்த சுவாதி மட்டும் தான் மானத்துக்கு பயப்படுவாளா? நீங்க பயப்பட மாட்டீங்களா? மொத்தமா முடிச்சு, நாங்களே பார்சல் பண்ணி சொன்னதை நடத்துவோம்”-னு இரக்கமே இல்லாம சொன்னான் அசோக். “லுக் ரியா… நீங்க ரெண்டுப்பேரும் எங்க கண்ட்ரோல்லே இருக்கீங்க..”-னு ஆரம்பிச்ச வரைக்கும் தான் ரெண்டுப் பேருக்கும் ஞாபகம் இருந்துச்சு.

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top